வெள்ளி, 19 மார்ச், 2021

குறும்படம் - The Leader - Sharing



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட சாப்பிட வாங்க பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


பணம் தான் உலகமென்று நினைக்கும் அந்தச் சிலரிடம் சொல்லுங்கள்… பூமியைத் தவிர வேறெங்கும் பணம் செல்லுபடியாகாது என்பதை.


******







சின்னக் குழந்தைகளிடமிருந்து கூட நாம் கற்றுக் கொள்ள முடியும் - கற்றுக் கொள்ள நாம் தயாராக இருந்தால்!  இந்தக் குறும்படம், உங்களுடைய பொன்னான நேரத்திலிருந்து சுமார் 9 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும் - அதனால் நேரம் வீணாகுமே என நினைக்கத் தேவையில்லை - எத்தனையோ அர்த்தமற்ற, பைசாவிற்குப் பிரயோஜனம் இல்லாத பல விஷயங்களை வாட்ஸப் வழியும், முகநூல் வழியும் பார்த்து, படித்து வீணாக்குவோர் உண்டு.  உங்களிடம் இருக்கும் நேரத்தில் சில நிமிடங்களை இந்த மாதிரி சில குறும்படங்களையும் பார்க்க ஒதுக்கலாம்!  எனது பொழுதுபோக்குகளில் ஒன்றாக இப்படியான குறும்படங்கள், விளம்பரங்கள் பார்ப்பதை வைத்திருக்கிறேன்.  அவ்வப்போது நான் ரசித்த குறும்படங்களை, விளம்பரங்களை உங்களுடனும் பகிர்ந்து கொள்வது வழக்கம்!  அந்த வரிசையில் இன்றைக்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு குறும்படம் - The Leader என்ற குறும்படம்.  Being a leader means sharing என்ற கருத்தைச் சொல்லும் இந்தக் குறும்படத்தினை நீங்களும் பார்த்து ரசிக்கலாமே!


இங்கே பார்ப்பதில் தடங்கல் இருந்தால் - யூவில் தான் பார்க்க வேண்டும் என வந்தால் கீழேயுள்ள சுட்டி வழியாகவும் பார்க்கலாம்! 


The Leader


******


நண்பர்களே, இந்த வெள்ளிக்கிழமையில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட இந்த குறும்படம் உங்களுக்கும் பிடித்திருக்கலாம்.  குறும்படம்/பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழியாக பகிர்ந்து கொள்ளலாமே!  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….

12 கருத்துகள்:

  1. குறும்படம் பார்த்தேன்.  எளிய பாடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எளிய பாடம் - உண்மை. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வாசகம் அருமை.
    குழந்தைகளிடமும் கற்றுக் கொள்ள நல்ல விஷயங்கல் இருக்கிறது.
    அருமையான குறும்படம்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. குறும்படம் - அரும்பாடம் - அதே கில்லர்ஜி. உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. மத்தியானமாப் பார்க்கணும். இந்த வாரப் பதிவில் கூட விளம்பரம் இன்னும் பார்க்கலை. இனித் தான் பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது பாருங்கள் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....