அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
உனக்கு உதவியவரை ஒருபோதும் மறக்காதே; உன் மேல் அன்பு கொண்டவரை ஒரு போதும் வெறுக்காதே; உன்னை நம்பியவரை ஒருபோதும் ஏமாற்றாதே.
******
மகளிர் தினம் - 8 மார்ச் 2021:
தன்னம்பிக்கை, தைரியம், சகிப்புத்தன்மை, மன வலிமை, அன்பு, பாசம் கொண்டவள் பெண்! பல்வேறு துறைகளிலும் அன்றாடம் பலவிதமான தடைகளைக் கடந்து சாதித்துக் கொண்டிருக்கும் சக தோழிகள் அனைவருக்கும் பெரிய சல்யூட்!
இன்றும் குடும்ப வன்முறையாலும், பாலியல் தொல்லையாலும் ஆங்காங்கே பெண் என்பவள் சித்திரவதை செய்யப்பட்டு தான் வருகிறாள் என்பது மிகவும் வேதனையான விஷயம். இந்த நிலை மாறி பெண்ணுக்கு உண்டான பாதுகாப்பும், சுதந்திரமும் கிடைக்கும் நாளே உண்மையான மகளிரை போற்றும் தினம்!
சக தோழிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்.
இன்றைய நாள் - 8 மார்ச் 2021:
உலக மகளிர் தினமான இந்த நாளில் தான் என் வாழ்க்கைப் பயணத்தில் என்னுடன் பயணிக்கப் போகிற ஒருவரின் அறிமுகம் கிடைத்தது! ஏறக்குறைய இருபது வருடங்கள் ஆகப் போகிறது என்றாலும் இவரின் அருகாமையில் எப்போதும் பாதுகாப்பை தான் உணர்வேன். இவரின் பால் உள்ள ஈர்ப்பும் குறையவில்லை..🙂 ஒரு சில விஷயங்களைத் தவிர பெரும்பாலும் எங்களின் கருத்துகள் ஒத்துப் போகும்!!
பி.கு - இன்று மணநாள் அல்ல!
பின்னோக்கி - முகநூல் இற்றை - 10 மார்ச் 2020:
காலச்சக்கரம்!!!
(18 வருடங்களுக்கு முன்பு)
மனுஷன் காலைல ஆஃபீசுக்கு போயிட்டு இப்பத் தான் வரேன்..
இன்னிக்கு என்ன பண்ணினீங்க!!
லஞ்ச் சாப்பிட்டீங்களா!!
இன்னைக்கு நாள் எப்படி இருந்ததுன்னு ஏதாவது கேட்கறீயா!!!
ம்ம்ம்!! ம்ம்ஹூம்ம்! ஓ! அப்படியா! இதைத் தவிர வேற ஏதாவது உனக்கு பேசத் தெரியுமா!!!
(இன்று)
ஹலோ! ஹலோ!! லைன்ல இருக்கீங்களா???
இங்கயே தான் இருக்கேன்..🙂
ஏதாவது சொல்லக்கூடாதா?? லைன் கட் ஆகி நானே பேசிக்கிறேனோன்னு ஒரு டவுட்...🙂
எனக்கு எங்க வாய்ப்பு கெடைக்கறது!!!
என்ன????
அது வந்து!! அன்னிக்கு என் ஃப்ரெண்ட் கூடச் சொன்னார்!!
என்ன சொன்னார்???
நமக்கெல்லாம் இந்த ம்ம்ம்..ம்ம்ஹூம்ம்.. இதைத் தவிர பேச வாய்ப்பு கிடைக்கறதில்லைன்னு சொன்னார்!!
ஏன் அப்படிச் சொன்னார்??
உன்கிட்ட பேசும் போது அங்க தான் இருந்தார்!!
உங்களை யாரு அங்க இருந்து பேசச் சொன்னது!!!
_ _ _ _ _ _ _ _ _ _ ம்ம்ம்ம்...அது வந்து.....:))))
ஹா..ஹா..ஹா..ஹா...
முன்னூல் - சம்மர் ஸ்பெஷல் - விமர்சனம் - 10 மார்ச் 2021:
சமையல் செய்ய நினைப்பவர்களுக்கு உபயோகப்படக் கூடிய நூல். எளிய முறையில் சரியான அளவுகளுடன் விளக்கமாக எழுதியிருக்கிறார்.
ஃபலூடா செய்முறை நன்றாக உள்ளது. செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.
சீசன் உணவாக மாம்பழம், மாங்காய் வைத்து நிறைய ரெசிபிக்கள் இருக்கிறது.
எங்கம்மா செய்யக்கூடிய ஊறுகாய், வடாம் போன்றவைகளும் எழுதியிருக்கிறார். உபயோகமுள்ள குறிப்புகள்.
அடிக்கடி படிக்கும் புத்தகம் சமையல் புத்தகமாகத்தான் இருக்கும். வாழ்த்துகள் சகோதரி.
நண்பர்களே, இன்றைய பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன். மீண்டும் வேறொரு பதிவு வழி சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
பின்னோக்கியை மிகவும் இரசித்தேன்..
பதிலளிநீக்குபின்ன்னோக்கி - ரசித்தமைக்கு நன்றி ரமணி ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஜெயா சிங்காரவேலுவின் விமர்சனம் நன்று. டெலிபோன் உரையாடல் புன்னகைக்க வைத்தது. மார்ச் எட்டாம் தேதிதான் பெண் பார்க்க வந்தாரா? கதம்பத்தை ரசித்தேன்.
பதிலளிநீக்குமார்ச் எட்டாம் தேதி - நீங்கள் கேட்டதே தான் ஸ்ரீராம்.
நீக்குகதம்பம் பதிவின் பகுதிகளை ரசித்தமைக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பொன்மொழி அருமை.
பதிலளிநீக்குகணவன் மனைவி உரையாடல் ரசிக்க வைத்தது.
பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
காலச்சக்கரம் ஹா... ஹா...
பதிலளிநீக்குபதிவின் பகுதிகளை ரசித்தமைக்கு நன்றி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
//உலக மகளிர் தினமான இந்த நாளில் தான் என் வாழ்க்கைப் பயணத்தில் என்னுடன் பயணிக்கப் போகிற ஒருவரின் அறிமுகம் கிடைத்தது!//
பதிலளிநீக்குமுகநூலில் வாழ்த்து சொன்னேன் இங்கும் சொல்கிறேன்.
உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குவாழ்த்தியமைக்கு நன்றி.