செவ்வாய், 9 மார்ச், 2021

கதம்பம் - மார்ச் வாசிப்புப் போட்டி - மின்னூல் விமர்சனம் - முகல் கார்டன் - நமக்கு நாமே - காணொளிஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


WHEN LIFE GETS BLURRY ADJUST YOUR FOCUS. 


******
சஹானா இணைய இதழ் வாசிப்புப் போட்டி - மார்ச் 2021 - 1 மார்ச் 2021:
சமையலில் புதிதாக ஏதேனும் முயற்சி செய்து பார்ப்பதில் எனக்கு எப்போதுமே விருப்பம். என் கணவருக்கு 'டாட்டா' போவதில் எப்போதுமே விருப்பம்...🙂 இந்த சமையலும், பயணமும் போட்டிப் போடப் போகிறது. 

இம்மாத சஹானா புத்தக வாசிப்புப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 15 நூல்களில் என்னுடைய புத்தகமும் (சம்மர் ஸ்பெஷல்), என் கணவரின் புத்தகமும் (ஹனிமூன் தேசம்) இடம்பெற்றுள்ளது.


இந்த வாசிப்புப் போட்டியில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இந்தப் போட்டியைப் பற்றிய தகவல்கள் இங்கே.


மின்னூல் விமர்சனம் - Adhi’s Kitchen Series - அகிலாண்டபாரதி சோமசுந்தரம் - 28 ஃபிப்ரவரி 2021:

Adhi’s Kitchen Recipes: குட்டிக் குட்டியாய் பல ரெசிபிக்கள். அனைத்தும் எளிமையானவை,  சுவையில் அருமையாக இருக்கும் போல.. புகைப்படங்களைப் பார்த்தாலே நாவில் எச்சில் ஊறுகிறது.. அனாவசியமான வார்த்தை அலங்காரங்கள் இல்லாத நறுக் சுறுக் குறிப்புகள். இப்போதே செய்து பார்த்தால் என்ன என்று தோன்ற வைக்கும் படியான குறிப்புகள். வாசித்துப்பாருங்கள்.. உங்களையும் உங்கள் சமையலறையில் என்ன இருக்கிறது என்று டப்பாக்களை திறந்து பார்க்க வைக்கும். நன்றி. வாழ்த்துக்கள்.


முகல் கார்டன் - கட்டுரை - 3 மார்ச் 2021


'பூக்கள் பூக்கும் தருணம்' என்ற பாடல் வரிகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். டெல்லியில் இது தான் பூக்களுக்கான  மாதம். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தான் எங்கும் மலர்கள் காணக் கிடைக்கும். அதுவும் ஜனாதிபதி மாளிகையின் உள்ளே உள்ள தோட்டத்தில் என்றால் சொல்லவே வேண்டாம். கொள்ளை அழகு!!! 


சில வருடங்களுக்கு முன் அங்கே சென்று வந்த அனுபவத்தைப் பற்றிய கட்டுரை இந்த மாதத்தின் சஹானா இணைய இதழில்! வாசித்துப் பாருங்களேன். வாய்ப்புக் கிடைக்கும் போது நிச்சயம் சென்று வாருங்கள்.


நமக்கு நாமே - 4 மார்ச் 2021:


கார் துடைக்க, வீட்டை க்ளீன் பண்ண, சமையல் வேலை செய்ய, பாத்திரம் துலக்க, வாஷிங் மெஷின் துவைத்த துணிகளை எடுத்து காயப்போட  என்று இப்படி எல்லாவற்றுக்குமே இன்னொருவரை சார்ந்திருக்கின்றனர்.


நம்ம வீட்டில் 'ஆல் இன் ஆல் அழகுராணி' நான் தான்..🙂 ஆறேழு வருடங்களாகவே இன்வெர்ட்டருக்கு Distilled water நிரப்புவதும் என் வேலை தான்! சில மாதங்களுக்கு முன் பேட்டரியை மாற்றியதில் Indicatorஐ கழட்டுவது இம்முறை சிரமமாக இருக்கவே கம்பெனியிலிருந்து வரவழைத்தேன்.


'எருமைமாட்டுக்கு பிரசவம் ஆனாற் போல' என்று ஒரு பழமொழி சொல்வார்களே! அது போல் வந்தவர் Distilled water நிரப்புகிறேன் பேர்வழி என்று அந்த இடத்தையே நாறடித்து விட்டார்..அதன் பின் அந்த இடத்தை துடைத்து சுத்தம் செய்வதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது...🙂


கடைத்தெருவுக்குச் செல்லும் போது  எலெக்ட்ரிக்கல் கடையில் 15 ரூபாய்க்கு வாங்கும் Distilled waterக்கு இன்று 150 ரூ கொடுத்தது போக இத்தனையும் சுத்தம் செய்யும் வேலை வேறு!!


இதுவரை எவ்வளவு பணத்தை மிச்சப்படுத்தி இருக்கிறேன் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது. இது போன்று கம்பெனியிலிருந்து வரும் நபர்களிடம் வோல்டேஜ் செக் பண்ணும் உபகரணமும், water அதிகமாகி விட்டால் அதை suck பண்ணி எடுக்கும் உபகரணமும் இருக்கும். இது எதுவும் இல்லாவிட்டாலும் ஒருமுறை கூட அதிகமாகி என்ன செய்வதென்று நான் முழித்ததில்லை..🙂


பெண்கள் எவ்வளவோ துறைகளில் சாதித்து வருகின்றனர். இந்த தொழிலையும் கூட எடுத்துச் செய்யலாம். மற்றவர்களை விட குறைவாக வாங்கி, வாடிக்கை பிடித்து விட்டால் இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூப்பிடுவார்கள் அல்லவா! வேலை சுத்தமாக இருக்க வேண்டும் அவ்வளவு தான். என் அனுபவம் யாருக்காவது பயன்பட்டால் நல்லது.


இந்த வாரத்தின் காணொளிகள் - 6 மார்ச் 2021:


சிறுவயதிலிருந்தே எனக்கு இந்த ஜன்னல் அருகே அமர்ந்து சாலையில் போவோர் வருவோரை வேடிக்கை பார்க்கப் பிடிக்கும்...🙂 யாரிடமும் பேச வேண்டாம்! வெறுமனே அமைதியாக  அமர்ந்தபடியே புத்தகம் வாசித்துக் கொண்டோ, சாப்பிட்டுக் கொண்டோ வேடிக்கை பார்ப்பேன். அதில் ஒரு மகிழ்ச்சி...🙂


டெல்லியிலும் எங்கள் வீட்டுக்கு பின்பக்கம் இருந்த குடியிருப்பில் இருப்பவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே என் வேலைகளை செய்து கொண்டிருப்பேன். அதில் இரு பெண்மணிகள் இப்போது வரை மனதில் உள்ளார்கள்! 


ஒருவர் பயங்கர சுறுசுறுப்பு! அவரைப் பார்த்தாலே நமக்கும் அந்த சுறுசுறுப்பும், உற்சாகமும் தொற்றிக் கொள்ளும்.  மற்றொருவர் அவர் செய்யும் வேலையில் அப்படியொரு சுத்தம்! பாத்திரங்களில் கீறல் கூட  விழக்கூடாது என்று பழைய சாக்ஸ் கொண்டு தேய்ப்பார்! 


இப்படி வேடிக்கை பார்த்ததில் நான் தெரிந்து கொண்ட விஷயங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை!! வடக்கில் எல்லார் வீட்டிலுமே பெரிய பெரிய டப்பாக்களில் நெய் வைத்திருப்பார்கள். ஃபுல்கா ரொட்டிக்கு தடவ, இனிப்புகள் செய்ய என்று Desi ghee எப்போதும் இருக்கும். 


குளிர்நாட்களில் நெய்யை உருக வைப்பதற்காக வெயிலடிக்கும் போது எடுத்து வெளியே வைத்திருப்பார்கள்..🙂 எருமைப்பாலில் எடுக்கும் நெய் என்பதால் வெள்ளையாகவும், மணல் மணலாகவும் இருக்கும். 


திடீரென்று நெய் பக்கம் தாவுவதேன்! என யோசிக்க வேண்டாம்..🙂 இந்த வாரம் Adhi's kitchen சேனலில் பகிர்ந்த காணொளியை பார்த்தால் தெரியும்..🙂


நெய் காய்ச்சுவது எப்படி


மகளின் சேனலிலும் இந்த வாரம் பகிர்ந்து கொண்டிருக்கிறாள்.


ரோஷ்ணி கார்னர் - ஓவியம்


இரண்டு காணொளிகளையும் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்.


நண்பர்களே, இந்த வாரத்தின் கதம்பம் பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவு வழி சந்திக்கும் வரை…


நட்புடன்ஆதி வெங்கட்


18 கருத்துகள்:

 1. சுவையான கதம்பம்.  பேட்டரிக்கு டிஸ்டில் வாட்டர் நீங்களே மாற்றுவது சிறப்பு.  மாற்றாமல் விட்டால்தான் ஆபத்து.  மற்ற தகவல்களும் சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. பதிவின் வழி சொன்ன தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. கதம்பம் அருமை மேடம்.
  என்னதான் ஆனாலும் வெளி ஆட்கள் செய்யும் வேலை திருப்தி அளிப்பதில்லை சில இல்லத்தரசிகளுக்கு.
  என் அம்மாவுக்கும் அப்படிதான்.
  வீட்டை சுத்தப்படுத்துவதுமுதல் எதுவும் அவர்கள் செய்யும் அளவு மற்றவர்களால் திருப்திசெய்ய முடியாது.
  டிஸ்டில்ட் வாட்டர் ஊற்ற வந்தவர் கம்பெனியில் புதுஸாக சேர்ந்தவராக இருக்கலாம்.
  சஹானா போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. கதம்பம் அருமை... நேரமில்லாத்தால் பல காணொளிகள் பார்க்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிவிடுகிறேன்.

  நம்ம நெய்யைத்தான் சேசி கீ என்று சொல்றாங்களா? இல்லை பசு நெய்யா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

   Desi Ghee - சேசி கீ அல்ல! பாராம்பரிய முறையில் தயாரிக்கும் நெய் தான் இந்த தேசி கீ!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. கதம்பம் அருமை.
  முகநூலில் படித்தேன், இங்கும் படித்தேன்.
  ஆதி உங்களின் திறமைகளுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. கதம்பம் அருமை..மிகக் குறிப்பாய் நமக்கு நாமே..வாழ்த்துகளுடன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. முக நூல்லில் படித்தேன். இங்கும் படிக்க நன்றாக இருந்தது.
  பன்முகத்திறமையாளி ஆதி. அன்பு வாழ்த்துகள் மா.
  முதல் வாசகமும் நலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....