திங்கள், 22 மார்ச், 2021

ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள் - நல்லம்மா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


THE  DAY YOU PLANT THE SEED IS NOT THE DAY YOU EAT FRUIT.  BE PATIENT, BE HUMBLE, DON’T GIVE UP.


******சஹானா இணைய இதழின் சார்பில் ஃபிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட புத்தக வாசிப்புப் போட்டியில் இருந்த பதினைந்து நூல்களில் ஒன்றான நல்லம்மா என்ற நாவலுக்கு நானும் எனது இல்லத்தரசியும் முகநூலில் எழுதிய வாசிப்பனுபவத்தினை எனக்கான சேமிப்பாகவும், பதிவுலகில் இருக்கும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இந்தப் பதிவு. வாருங்கள் நல்லம்மா நுல்ல் குறித்த வாசிப்பனுபவத்தினைப் படிக்கலாம்!

#சஹானா_புத்தகவாசிப்புப்போட்டி_ஃபிப்ரவரி_2021

வாசிப்பனுபவம்: ஃபிப்ரவரி 2021 - போட்டி- 6/15 (12/2021)

நூல்: நல்லம்மா

வகை: நாவல்

ஆசிரியர்: ரா ராஜசேகர்

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 56

விலை: ரூபாய் 50

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:


நல்லம்மா


1800-களின் இறுதியிலிருந்து 1900களில் வாழ்ந்த தைரியமிக்க மனுஷி தான் நல்லம்மா. இந்த கதாபாத்திரம் நிஜம் + புனைவு என்று கதாசிரியர் சொல்கிறார்..அட்டைப்படத்திலிருக்கும் புலியின் படமே நல்லம்மா யார் என்று உணர்த்துகிறது.


பெண் என்பவள் இவளைப் போல இருக்க வேண்டும் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் வண்ணம் தைரியம், வைராக்கியம், தன்மானம், வீரம், அன்பு, கரிசனம், தாய்மை, சாதுர்யம் என இவளிடம் அனைத்து குணநலன்களும் பிரவாகமாக கொட்டிக் கிடக்கின்றன.


அக்காலத்திலேயே தன்னை திருமணம் செய்து கொள்ள நினைக்கும் நபரிடம் நிபந்தனைகளை சொல்லும் நல்லம்மா!! தன்னைத் தவறான நோக்கத்துடன் பார்த்த நபரை அந்தரத்தில் தொங்க விட்ட நல்லம்மா!


தாயாக தன் குழந்தைகளுக்கான மெனக்கெடல்கள்... பிரசவித்த சில நிமிடங்களிலேயே தன் கணவனுக்கு பசி தாங்காது என சோறு பொங்கும் நல்லம்மா.


இப்படி நல்லம்மாவைப் பற்றிச் சொல்ல ஏராளமான விஷயங்கள் இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன.. அவளின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகள்..அவள் அதை எதிர்கொண்ட விதங்கள். இதையெல்லாம் இந்த நூலின் வழியே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.


Amazon pen to publish போட்டியில் பங்கேற்றுள்ள இந்த நூல் நிச்சயம் வெற்றி பெறும் என்று நினைக்கிறேன்..மேன்மேலும் இதுபோன்ற பல படைப்புகளைத் தந்திட ஆசிரியருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்..


நட்புடன்


ஆதி வெங்கட்.


*****


நல்லம்மா - நிஜமும் புனைவும் சேர்ந்த ஒரு கதாபாத்திரம் - 1800-1900-களில் வாழ்ந்த ஒரு பெண்மணி குறித்த குறு நாவல் - 56 பக்கங்களே இருந்தாலும் படிக்கப் படிக்க ஸ்வாரஸ்யம் குறையாமல் எழுதி இருக்கிறார் நூலாசிரியர் ரா. ராஜசேகர்.  இவரது நூல்களுக்கான இவரது தொடர் அறிவிப்புகள் - மீம்கள் எல்லோருக்கும் பிடித்தவை என்று கூட சொல்லலாம்! ஒரு நூலை வாசகரிடம் கொண்டு சேர்க்க எத்தனை முயற்சிகள் செய்கிறார் - “படிக்கலைன்னா சாமி கண்ணைக் குத்திடும்” என்று மட்டுமே இதுவரை சொல்லவில்லை என நினைக்கிறேன்!  Jokes apart, இப்படி தொடர்ந்து தனது நூலை விளம்பரம் செய்யவும் திறமை வேண்டுமே! அவரிடம் நூல்களை எழுதுவதற்கான திறமை இருப்பதோடு, அவற்றை வாசகர்களிடம் கொண்டு செல்வதற்கான திறமையும் நிறையவே இருக்கிறது என்பது கண்கூடு - சஹானா மாத இதழின் ஜனவரி மாதத்திற்கான வாசிப்புப் போட்டியில் அதிகம் பேர் வாசிப்பனுபவம் எழுதியது இவரது நூலுக்குத் தான் என்று இன்று சஹானா இணைய இதழில் வெளியிட்டு இருப்பதிலிருந்தே நான் சொல்வது சரி என்று நீங்கள் சொல்லலாம்!  சரி நல்லம்மாவின் கதைக்கு வருவோம்!  


நல்லம்மாவை பெண் பார்க்க வரும் படலத்திலிருந்து கதையைப் பார்க்கலாமா?  தன்னை திருமணம் செய்து கொள்ள அவர் வைக்கும் ஒரு வேண்டுகோள் - வித்தியாசமான வேண்டுகோள் தான் - தான் வளர்க்கும் காளையான சின்ராசுவையும் தன்னுடனேயே அழைத்து வருவதற்கு அனுமதிக்க வேண்டும் - அப்படி அனுமதித்தால் மட்டுமே திருமணம்!  நல்லம்மாவிற்கு காளையான சின்ராசு மீது அப்படி ஒரு பாசம்.  என்னதான் ஐந்தறிவு மிருகம் என்று சொல்லி விட்டாலும் விலங்குகளுக்கு இருக்கும் பல பண்புகள் ஆறறவு ஜீவிகள் என்று பெருமை பேசும் மனிதர்களுக்கு இல்லை என்பதை இந்தக் கதையிலும் ஆங்காங்கே தெரிந்து கொள்ள முடிகிறது!  திருமணம் முடிந்து சின்ராசுவுடனேயே மாப்பிள்ளை பெருமாளின் வீட்டுக்குச் செல்கிறாள் நல்லம்மா.  


நல்லம்மா, பெருமாள் தம்பதிகளுக்கு இடையே இருந்த அன்னியோன்யம், நல்லம்மாவின் தைரியம், தனியாக இருந்தாலும் எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளக் கூடிய சாமர்த்தியம், கிராமத்து மனிதர்களில் சிலர் நல்லம்மாவிடம் வம்பு செய்ய, அவர்களுக்கு நல்லம்மாள் கொடுத்த தண்டனை என மிகவும் சிறப்பாக சொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.  நல்லம்மாவின் கடைசி ஆசையாக அவர் கேட்பதை அவரது குடும்பத்தினர் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள் - அப்படி என்ன ஆசை நல்லம்மாவுக்கு!  நூலை வாசித்து தான் தெரிந்து கொள்ளுங்களேன்!  நல்லதொரு நூலை எழுதி இருக்கும் நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.  இவரது இந்த நூல் அமேசான் கிண்டில் பென் டு பப்ளிஷ் போட்டியிலும் இருக்கிறது.  அதிலும் வெற்றி பெற அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். 


******


எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  


இதுவரை வெளியிட்ட எங்கள் மின்னூல்கள்


இந்த நாளின் வாசிப்பனுபவம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்
வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


16 கருத்துகள்:

 1. நல்லதொரு பகிர்வு.  எபி கே வா போ வுக்கு கதை எழுதுகிறாரா என்று கேட்கவேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   //கதை எழுதுகிறாரா என்று கேட்க வேண்டும்// - கேட்டுப் பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. இருவரது விமர்சனமும் சிறப்பு.
  நூலாசிரியருக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  இன்றைய பதிவு அருமை. நூலாசிரியர் பற்றிய செய்திகளும், அவர் எழுதிய புத்தகத்திற்கு தங்கள் இருவரது விமர்சனங்களும் மிக அருமையாக உள்ளது. நூலாசிரியருக்கும், உங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   பதிவு குறித்த உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. இரு விமர்சனங்களும் அருமை சார்.
  இன்றைய பெண்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை அந்த கால பெண் பாத்திரம் மூலம் சூசகமாக உணர்த்தியிருக்கிறார் போல.
  நூலை விரைவில் வாசிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த். முடிந்த போது வாசித்து விடுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. விமர்சனங்கள் அருமை
  ஆசிரியருக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 7. விமர்சனங்கள் மிக அருமை.
  இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 8. முகநூலிலும் இந்த விமரிசனங்களைப் படித்தேன். இங்கேயும் படித்தேன். இருவருக்கும் வாழ்த்துகள். விமரிசனத்திற்கு வெங்கட்டுக்குப் பரிசு கிடைச்சிருக்குனு நினைக்கிறேன். இது இல்லை/வேறே விமரிசனமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விமர்சனத்திற்கென்று தனியாக பரிசு இல்லை கீதாம்மா. ஃபிப்ரவரி மாதம் அதிக மின்னூல்களுக்கு வாசிப்பனுபவம் எழுதியதற்காக பரிசு அறிவித்திருக்கிறார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....