செவ்வாய், 2 மார்ச், 2021

கதம்பம் - ஆல் பாஸ் - விமர்சனம் - கிண்டில் தரவிறக்கம் - காணொளி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


NEVER BE A PRISONER OF YOUR PAST, IT WAS JUST A LESSON - NOT A LIFE SENTENCE. 


******ஆல் பாஸ் - மதிப்பெண்கள் - 25 ஃபிப்ரவரி 2021:


பத்தாவது மார்க் லைஃப்ல ரொம்ப முக்கியமானது டா செல்லம்! நல்லா படிக்கணும்! என்ன!


சரி! சரி! அவ நல்ல மார்க் தான் எடுப்பா! அப்படி 425 க்கு மேல எடுத்திட்டா உங்க செல்லப் பொண்ணுக்கு என்ன வாங்கித் தரப் போறீங்க??


என் செல்லப் பொண்ணுக்கு மோதிரம் வாங்கித் தரேன்!


சில மாதங்கள் கழித்து சொன்ன சொல்லைக் காப்பாற்ற தன் உண்டியல் காசில் மோதிரம் வாங்கித் தந்தார் அப்பா...🙂


எங்கள் மகளுக்கு இதெல்லாம் இருக்கப் போவதில்லை!


இன்று வரிசையாக அலைபேசியில் அழைப்பு..


என்ன! ஆல் பாஸாமே! 


தேர்வு எழுதி கிடைக்கும் தேர்ச்சியில் தான் என்றைக்கும் மகிழ்ச்சி இருக்கும். ஒரு அம்மாவாக எனக்கு இதில் உடன்பாடில்லை!!


மின்னூல் - Adhi's Kitchen Recipes - விமர்சனம் -26 ஃபிப்ரவரி 2021:

என்னுடைய மின்னூல்களில் ஒன்றான Adhi's Kitchen Recipes-க்கு தோழி சஹானா கோவிந்த் அவர்கள் முகநூலில் அளித்த விமர்சனம் இந்தப் பதிவில்!  அவருக்கு நன்றியுடன்!


******

சுவையான 25 ரெசிபிஸ் கொண்ட புத்தகம் இது. எனக்கு இதில் மிகவும் பிடித்த விசயம் என்று சொன்னால், எளிமையான விவரிப்பு. புதிதாய் சமைக்க கற்றுக் கொள்பவர்கள் கூட இதை பார்த்து செய்து விடலாம் என கூறும்படி விளக்கமாய் பகிர்ந்துள்ளார் ஆதி


சாக்லேட், மலாய் கேக், ஆட்டா கேக், தேங்காய் பன், ஜெல்லி போன்றவை எல்லாம் கடையில் வாங்கித் தான் சாப்பிட இயலும் என நினைப்போம். ஆனால் அதையும் வீட்டிலேயே சுகாதாரமான முறையில் தயாரிக்க சொல்லித் தருகிறார் இந்த நூலின் ஆசிரியர்


அனைத்திற்கும் மேலாய், நிறைய ரெசிபிகளுக்கு செய்முறை காட்டும் youtube link பகிர்ந்தது சூப்பர்


மொத்தத்தில், சுவை விரும்பிகள் கையில் இருக்க வேண்டிய ஒரு புத்தகம். விலை ரூபாய் 50 மட்டுமே. வாங்கி வாசித்து பயனடையுங்கள். 


இது Amazon pentopublish  போட்டிக்கான நூல் என்பதால் 5 ஸ்டார் ரேட்டிங் மற்றும் Review பகிர்ந்துள்ளேன். நீங்களும் வாசித்து பிடித்திருந்தால், அதேப் போல் பகிருங்கள். நன்றி.


சஹானா கோவிந்த்


******


இந்த வாரத்தின் காணொளி - 27 ஃபிப்ரவரி 2021:


Adhi's kitchen சேனலில் இன்றைக்கு நோ சமையல் பதிவு..🙂 சேனலில் மட்டும் தான் 'நோ சமையல் டே' எல்லாம் முடியும்..🙂 


சென்ற வாரத்தில் வெளியான என் மின்னூல் சம்மர் ஸ்பெஷல்! மெயின் பிக்சர் வருவதற்கு முன் ட்ரெய்லர் வருமே!! இது அப்படியே உல்ட்டா! இன்றைய காணொளியில் சம்மர் ஸ்பெஷல் ட்ரெய்லர்..🙂


மின்னூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதில் சிலருக்கு தடுமாற்றங்கள் வருகிறது. அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவ எடுத்த ஒரு முயற்சியாக சில டிப்ஸும் இதில் பகிர்ந்துள்ளேன்.


தன் அலுவலக பணிகளுக்கு இடையில் அதற்காக Power point-இல் சில Images செய்து அனுப்பினார் என்னவர்.


இவை எல்லாம் கலந்த பகிர்வாக இந்த வாரக் காணொளி.. பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்.நண்பர்களே, இந்த வாரத்தின் கதம்பம் பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.  மீண்டும் வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்ஆதி வெங்கட்

18 கருத்துகள்:

 1. ஆல்பாஸ் பேஸ்புக்கிலும் படித்தேன்.  கதம்பத்தை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 2. கதம்பம் நல்லா இருக்கு... ஆல் பாஸ் என்றால் மதிப்பெண் அரையாண்டு மதிப்பெண்ணாக இருக்குமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆல் பாஸ் - அரையாண்டு தேர்வே நடக்கவில்லை! term test, class test போன்றவை மட்டுமே நடந்தது நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. கிடைக்கும் தேர்ச்சியில் தான் மகிழ்ச்சியே - உண்மை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 4. வணக்கம் நன்பர்களே.
  கதம்பம் அருமை.
  ஆல் பாஸ் போட்டாலும் Continuous learning என்று ஒன்ரு செய்யப்போவதாக பேசினார்களே?
  அது சம்மந்தமாக ஏதேனும் விளக்கம் வந்ததா?
  நூல் விமர்சனம் படிக்க மகிழ்வை தந்தது.
  பெண்ட பப்ளிஷிங் போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆல் பாஸ் - மேற்கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் அரவிந்த். தகவல்கள் ஒன்றும் இல்லை.

   கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. பாஸ் - வாழ்த்துகள்
  கதம்பம் வழக்கம் போல் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 7. கதம்பம் முகநூலில் படித்தேன்.

  வாழ்த்துக்கள் இருவருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.

   நீக்கு
 9. இளைய தலைமுறையைப் பல வகையிலும் கெடுத்துக் கொண்டு வருகின்றனர். இப்படி ஆல் பாஸ் போட்டால் நன்கு படிப்பவர்களின் நிலைமை? இனிமேல் அனைவரும் இதைத் தான் எதிர்பார்ப்பார்கள். ஏற்கெனவே இலவச அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள் மூலமும் நூறு நாள் வேலைத்திட்டம் மூலமும் இலவச மிக்சி, கிரைண்டர் கொடுத்ததன் மூலமும் மக்கள் உழைப்பையே மறந்துவிட்டார்கள். இனி இளைய தலைமுறை படிக்கவும் படிக்காது. அரசை மிரட்டி ஆல் பாஸ் போட வைக்கும். கொரோனா சுறுசுறுப்பாக இருக்கும் கேரளத்தில் கூடத் தேர்வுகளை ரத்து செய்யவில்லை. இங்கே எல்லாம் ஓட்டுக்காக! இதன் மூலம் மாணாக்கர்களின் பெற்றோர்களின் ஓட்டுக்கள் கிடைக்கும் என்னும் எண்ணமோ என்னமோ! மொத்தத்தில் தமிழ்நாடு முற்றிலும் மாற வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆல் பாஸ் - அரசியல் அதிரடி! வேறென்ன சொல்ல.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....