செவ்வாய், 23 மார்ச், 2021

கதம்பம் - வாழை - சஹானா - புகை நமக்குப் பகை - ரேகை - பசுமஞ்சள் ஊறுகாய்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


PATIENCE WITH FAMILY IS LOVE; PATIENCE WITH OTHERS IS RESPECT; PATIENCE WITH SELF IS CONFIDENCE AND PATIENCE WITH GOD IS FAITH. 


******
நமக்கு நாமே - வாழை - 15 மார்ச் 2021:

எங்கள் குடியிருப்பில் புதிதாக பணிக்குச் சேர்ந்த வாட்ச்மேன் ஒருவர், இரண்டு நாட்களுக்கு முன் என்னை அழைத்து 'வாழக்கா வேணுமா மேடம்' என்று கேட்டார். என் தோட்டத்தில் விளைஞ்சது மேடம்! காய் அஞ்சு ரூபா தான் என்றார். 


வாழைக்காய்கள் பார்க்கவே கருமை இல்லா பச்சையாகவும், பெரிதாகவும் நன்றாக இருந்தது. 'ரெண்டு காய் குடுங்க' என்றேன். தாரோடு கொண்டு வந்திருந்ததால் அதிலிருந்து இரண்டை   பிய்த்துக் கொடுத்தார். 


'வேற என்னென்ன உங்க தோட்டத்தில் போட்டிருக்கீங்க?' என்றேன். வாழை மட்டும் பயிரிட்டிருப்பதாகச் சொன்னார். வேலைக்கு சேர்ந்த பதினைந்து நாட்களில் இங்கிருக்கும் எல்லோரும் வாசலில் வண்டியில் விற்பனைக்கு கொண்டு வரும் காய்களை வாங்குவதை பார்த்ததாகவும், அதனால் செகரட்டரியிடம் அனுமதி கேட்டு விற்பனை செய்வதாகவும் சொன்னார்.


வாழையிலை, வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம் என்று எது வேண்டுமானாலும் கொண்டு வந்து தரேன் மேடம் என்றார். நேற்றைய காரடையான் நோன்புக்காக வாழையிலையும், வாழைப்பழமும் கேட்டதும் கொண்டு வந்து கொடுத்தார்.


வாழைக்காய் ரொம்பவே நல்லா இருந்தது வாட்ச்மேன்! நாங்க பொதுவா கடையிலோ, வாசலிலோ வாங்கும் போது இப்படி ஃப்ரெஷ்ஷாக இருக்காது என்றேன். 'கெமிக்கல் எதுவும் போடமாட்டேன் மேடம்! இயற்கை உரம் தான், தோட்டத்து குப்பை அப்புறம் நம்ம கிட்ட நாலு மாடு இருக்கு, அதோட எரு எல்லாம் தான் போடறேன்' என்றார்.


வாழக்காய வீட்டுக்கு பக்கத்துல டீக்கடையிலும் போடுவேன். ஒருநாள் உங்களுக்கு கற்பூரவல்லி பூவும், தண்டும் கொண்டாறேன் மேடம்! சமைச்சிப் பாருங்க என்றார்.


பிழைக்கத் தெரிந்த மனிதர். மாத வருமானமும் ஆச்சு! தன் தோட்டத்து பொருட்களை விற்பனையும் செய்து கொள்ள முடிகிறது. அரசாங்கத்தை குறை சொல்வதைக் காட்டிலும் தன்னால் இயன்ற தொழிலையோ, பிழைப்பையோ ஏற்படுத்திக் கொண்டு முன்னேறலாம்.


******

அவளும் நானும் - சஹானா இணைய இதழில் - 18 மார்ச் 2021:


இந்த மாதம் மகள் வரைந்த ஓவியம் சஹானா இணைய இதழில் பிரசுரமாகியுள்ளது. அதற்கான இணைப்பு  .. 


https://sahanamag.com/rosedrawing-roshinivenkat/


இந்த மாதம் சஹானாவில்  என்னுடைய 'மாளிகைத் தோட்டத்தில்' பயணக்கட்டுரை பிரசுரமாகியுள்ளது.  ராஷ்டிரபதி பவன் உள்ளே இருக்கும் முகல் கார்டனை சுற்றிப் பார்க்க வருடத்தில் ஒருமுறை தான் பொதுமக்களுக்கு அனுமதி தரப்படும். அப்படிச் சென்று பார்த்த அனுபவங்களை அதில் எழுதியிருக்கிறேன்..


ttps://sahanamag.com/maaligaithottathil-travelogue.../


இரண்டு இணைப்பிற்கும் சென்று பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.


******

புகை நமக்குப் பகை - சிகரெட் - 19 மார்ச் 2021:

நேற்று இரவு உணவு எடுத்துக்  கொண்டிருந்த சமயம் வாசலில் அழைப்பு மணி! இந்த நேரத்துல யாராக இருக்கும்! என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறந்தேன். வழக்கமாக வரும் பூக்காரர் தான் வந்திருந்தார்.


என்னண்ணே! போன வாரம் வரவே இல்ல! உடம்பு எதும் சரியில்லையா! என்றேன். 


வரக்கூடாதுக்கா! அக்கா வீட்டுக்காரர் இறந்துட்டாரு! அடுத்த வியாழன் கூட வர மாட்டேன்..16 ஆம் நாள் காரியம் இருக்கு! என்றார்.


ஓ!! என்னாச்சு?? உடம்பு சரியில்லாம இருந்தாரா?? ஒண்ணும் இல்லக்கா! நல்லாத் தான் இருந்தாரு! போன மூணு மாசமா தான் அவரால சாப்பிட முடியல...தண்ணியாத் தான் குடிக்க முடிஞ்சது! 


அப்புறம் தான் தெரிஞ்சது..கேன்சர்னு! நாலாவது ஸ்டேஜ்ல இருக்கு! ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க! அதுவரைக்கும் ஒண்ணுமே தெரியலக்கா!


புகையிலை போடுவாரா? என்றேன்.


இல்லக்கா! புகையிலைலாம் போடற பழக்கமெல்லாம் அவருக்கு இல்ல! 


எப்பவும் சிகரெட் தான் பிடிப்பாரு! என்று பெருமையாக சொல்லிக் கொண்டார்!!

அப்புறம்!! அது தானே புகையிலை! என்றேன்.


புகையிலை வெச்சா செய்வாங்க?? 


அப்புறம்! என்னத்தில செய்வாங்கன்னு நினைச்சீங்க? சிகரெட் தொடர்ந்து பிடிச்சிட்டு வந்தா  இப்படித்தான் ஆகும்! போய் அக்காவுக்கு தைரியம் சொல்லுங்கண்ணே! என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.


இன்னும் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் இவரைப் போன்ற மனிதர்கள் இருக்கும் வரை  புற்றுநோய் என்னும் அரக்கனால் பாதிக்கப்படுவர்கள் எத்தனை பேரோ...🙁


******

குடும்பம் ஒரு கதம்பம் - 19 மார்ச் 2021:


சில நாட்கள் முன்பு...


பொண்ணுக்கு பப்ளிக் எக்ஸாம் வைக்கும் போது நீங்க இங்கே இருந்தா நல்லா இருக்கும்' 'அவ என்னை ஏய்ச்சிடுவா! அப்பா கிட்ட அப்படியெல்லாம் பண்ண முடியாது என்று 'என்னவரிடம்' சொல்லியிருந்தேன்...🙂 


தேதி சொல்லட்டும்! லீவ் கிடைக்குமான்னு பார்க்கிறேன்! என்று சொல்லியிருந்தார்.. 


கடைசியில் பப்ளிக் எக்ஸாமே நடக்கலை!


இன்று பேசும் போது...


லைஃப்ல முக்கியமான விஷயங்கள்ல தான் ஆஃபீஸ்ல லீவ் கிடைக்காது! என்னமோ போங்க!! என்று சொன்னதும்...


ஏய்! நீ மறந்துட்டியா?? என்றார்!!!


என்ன??


நான் அந்த முக்கியமான நாள்ல உன்  கூடவே இருந்தேனே!!


எப்போ???


உன் கல்யாணத்தில நான் இருந்தேனே!! என்கிறார்...:))))))


எப்படியிருக்கு பாருங்க...:)))


******

பள்ளி - ரேகை - மாவடு - 20 மார்ச் 2021:


இன்று இரண்டு மூன்று வேலையாக வெளியே சென்றிருந்தேன். இடைப்பட்ட சில நாட்களில் அரிதாக தென்பட்ட முகக்கவச விற்பனை இன்று திக்கெங்கிலும் காணப்பட்டது!! கொரோனா இப்போ திருச்சியிலும் பரவி வருகிறது என்று செய்திகளில் பார்த்தேன். முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் வாசித்தேன்..ஆனால் அணிபவர் யார்??? தைரியம் மனுஷ லட்சணம் என்று அர்விந்த்சாமி ஒரு நிகழ்ச்சியில் சொன்னது தான் நினைவுக்கு வந்தது..🙂


மகளின் பள்ளியில் 11th அப்ளிகேஷன் கொடுப்பதாகச் சொல்ல இன்று வாங்கி வந்தேன். பாடங்களும் ஆரம்பித்து விடுவார்கள் என்று நினைக்கிறேன். எல்லா வகுப்புக்கும் முன்கூட்டியே பாடத் துவக்கம்!!! இனி கருவுற்ற தாய் வயிற்றிலிருக்கும் குழந்தைக்காக ஆன்லைன் வகுப்பு அட்டெண்ட் செய்யும் காலமும் விரைவில் வரக்கூடும்..🙂


ரேஷன் கடைக்குச் சென்றால் இன்று ஏனோ என் விரல்களின் ரேகையை இயந்திரம் பதிவு செய்து கொள்ள மறுத்து விட்டது...🙂 இரண்டு கைகளிலுமே எந்த விரலின் ரேகையையும் ஏற்றுக் கொள்ளவில்லை..🙂 அப்புறம்! பாப்பாவ வந்து வாங்கிக்க சொல்லுங்க! என்று சொல்லி விட்டார் கடைக்காரர்!!


வழியில் வழக்கமாக வாங்கும் 'மாம்பழ அக்கா' ஹாய் சொல்லி நல்லா இருக்கியாப்பா' என்றார். 'வடு வாங்கிட்டு போடா' என்றார். இல்லக்கா! போன வருஷம் போட்டதே இருக்கு! ஏன்டா சாப்பிடலையா?? என்றார். எப்பவாவது தான் போட்டுப்பேன்! அபார்ட்மென்ட்ல யாராவது கேட்டா சொல்றேன்க்கா!  வரேன்! என்று கிளம்பி விட்டேன்.


******

பசுமஞ்சள் ஊறுகாய் - காணொளி - 20 மார்ச் 2021:


இங்கே திருவரங்கத்தில் பொங்கலில் இருந்து இரண்டு மாதங்கள் பசுமஞ்சள் விற்பனைக்கு வரும். எல்லோர் வீடுகளிலும் அதை நறுக்கி வெயிலில் காயவைத்து, மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்வார்கள். வருடத்திற்கும் சமையலுக்கு, கோவிலுக்கு கொடுக்க, பூசி குளிக்க என்று பயன்படுத்துவார்கள்.


மஞ்சளின் மருத்துவ குணங்கள் நமக்குத் தெரியும்! அந்த பசுமஞ்சளில் ஊறுகாயும் செய்யலாம். நன்றாக இருக்கும். சென்ற வருடமும் செய்தேன். இன்று Adhi's kitchen சேனலில் பசுமஞ்சள் ஊறுகாய் செய்முறை தான்..


பசுமஞ்சள் ஊறுகாய்


******

நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு குறித்த உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.  நாளை வேறு ஒரு பதிவின் வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்ஆதி வெங்கட்


28 கருத்துகள்:

 1. மாவடு வாங்கவில்லை.  போரூர் செய்து கொடுத்தார்.  நன்றாய் இருக்கிறது.  தஞ்சாவூர் குடைமிளகாய் வாங்கி இரண்டு மூன்று வருடங்கள் ஆகின்றன.  இந்த முறையும் விட்டுப்போய்விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போரூர் ? தஞ்சாவூர் குடைமிளகாய் ??

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. வணக்கம் சகோதரி

  கதம்ப பதிவு அருமை. தங்கள் குடியிருப்பில் பணியாளராக வேலை செய்தபடி, தனக்கென்று தனி வாழைத் தோட்டமைத்து வாழைக்காய் விற்பனைகள் செய்து வரும் அவரின் உழைப்பை பாராட்ட வேண்டும்.

  புகையிலையால் எவ்வளவு ஆபத்து என புரிய வைத்து விட்டீர்கள். பாவம்.. அந்த பூ விற்பவர்.. மரணம் என்பது எத்தனையோ வகையில் நடக்க கூடியது என்றாலும். புற்று நோயால் அவதிப்படுவது சிரமந்தான்.

  குடும்பம் ஒரு கதம்பம் நன்றாக உள்ளது. நல்ல ஜோக்காக கூறியிருக்கிறார் தங்கள் கணவர். என்னால் சிரிப்பை அடக்க இயலவில்லை. 😂😂

  பசுமஞ்சள் ஊறுகாய் நான் கேள்விபடாதது. தங்கள் மகளுக்கும் உங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். கதம்பத்தின் பல பகுதிகளும் இன்று அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. கதம்பம் அருமையாக இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மதுரைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. கதம்பம் வழக்கம்போல சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. வணக்கம் மேடம்.
  பொருமை குறித்த வாசகம் அருமை.
  மகளை அணிமேஶன் படிக்க ஊக்குவியுங்கள்.
  ஓவிய ஆர்வம் உள்ளவர்கள், அணிமேஶனில் ஜொலிகப்பது உறுதி என சமீபத்தில் உணர்ந்தேன்.
  இது போல் ஒவ்வொருவரின் ஆர்வத்திற்கேற்ப சமூகத்தில் இருக்கும் வாய்ப்புகள் குறித்த ஒரு நூல் அறிமுகம் விரைவில் வரும்.
  கல்லூரிகளுக்கும் ஆண்லைன் வகுப்புகள் உத்தரவு வந்திருச்சு.
  ஊருகாய் விரைவில் செய்து பார்க்கிறோம்.
  சென்ற வாரம் பைக் ரிப்பேர் செய்யும் புதுக்பேட்டைக்கு சென்றோம்.
  அங்கே ஜூஸ் குடிக்க கடைக்கு சென்றால் அருகிலேயே ஒரே கிங்க்ஸ் புகை.
  புகைப்பவரை விட எங்கள் மூக்கைத்தான் முகக் கவசத்தையும் விட பாதித்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அரவிந்த்.

   பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. கதம்பம் நன்றாக இருக்கிறது முகநூலில் படித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. விவசாயி வாட்ச்மேனுக்கு பாராட்டுகள்...

  // புகையிலை வெச்சா செய்வாங்க?? // என்னவொரு கேள்வி...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாவி தங்கமணி.

   நீக்கு
 10. டைரிக் குறிப்புகளாக அமைந்த கதம்பம் நன்று.

  /உன் கல்யாணத்தில நான் இருந்தேனே!! /

  ரசித்தேன் :).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. பதில்கள்
  1. கதம்பம் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. கதம்பம் ரசிக்கும்படி இருந்தது. வாழை...ஒரு செய்தி. 20 வருடங்களுக்கு முன் நடந்தது. கும்பகோணம் அருகே தாராசுரத்தில் என் நண்பர் வீட்டருகில் ஒருவருடைய வாழைத்தோப்பு புயலின்போது நாசமானது. அப்போது அவருக்கு ரூ.50,000க்கும் மேல் நஷ்டம் என பேசிக்கொண்டிருந்தார்கள். மரியாதை நிமித்தம் நானும் என் நண்பரும் அவரை விசாரிக்கச் சென்றோம். கோவணம் மட்டுமே கட்டியிருந்த அவர் மிக இயல்பாகக் கூறினார். "இது என்னப்பா. அடுத்ததுல இதையும் சேர்த்து சம்பாதிச்சுடுவேன். உடம்பு இருக்கு. தெடமா மனசு இதுக்கு. இதுக்கு மேல என்னப்பா வேணும்?". அவருடைய மன உறுதியைக் கண்டு வியந்தோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   தாங்கள் சொன்ன பெரியவருக்கு இருந்த மன உறுதி - பிரமிக்க வைக்கிறது. இவர் போன்றவர்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. மஞ்சள்/பச்சை மஞ்சள் தொக்கு நானும் போட்டு வைச்சிருக்கேன். சாப்பிடத் தான் யாரையும் காணோம்! மாவடு கிளிமூக்கு வடு வாங்கிக் கொஞ்சம் போல் போட்டிருக்கேன். ஊறிவிட்டது. சாப்பிட எடுக்கவும் ஆரம்பித்தாயிற்று. அதன் முன்னரோ அதன் பின்னரோ மாவடு கண்களில் படவே இல்லை. அதிலும் உருண்டை வடு இந்த வருஷம் கடைத்தெருவுக்கு வரவே இல்லை. பூவெல்லாம் மழையில் கொட்டிவிட்டதாகவும் மாங்காய் வரத்தே குறைவாக இருப்பதாகவும், சில மரங்கள் தாமதமாய்ப் பூப்பதாகவும் சொல்கின்றனர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாவடு மூலைத் தோப்பு பகுதியில் கிடைக்கிறது கீதாம்மா.

   பதிவின் வழி சொன்ன விஷயங்கள் குறித்த உங்கள் கருத்துரைக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....