வெள்ளி, 26 மார்ச், 2021

PIAH - அப்பா செய்த பிஸ்கட் - குறும்படம்



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பயணம் போக ஆசை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


WHEN PEOPLE HURT YOU OVER AND OVER, THINK OF THEM LIKE A SAND PAPER.  THEY MAY SCRATCH AND HURT YOU A BIT, BUT IN THE END, YOU END UP POLISHED AND THEY END UP USELESS.


******







வழக்கம் போல, இந்த வெள்ளிக்கிழமையும் உங்களை ஒரு குறும்படப் பகிர்வுடன் சந்திக்கிறேன்.  பல சமயங்களில் அப்பா-மகனுக்குள் இருக்கும் உறவு ஒட்டாத ஒன்றாகவே இருக்கிறது.  சிறு மனஸ்தாபங்கள் கூட வாழ்நாளில் இருவருக்கும் ஒரு பிணைப்பே இல்லாமல் செய்து விடக்கூடும்.  தனது அம்மா செய்து கொடுத்த பிஸ்கெட் டப்பாவுடன் கீழே விழுந்து விட, அதிலிருந்து அப்பாவை பிடிக்காமலேயே போய்விடுகிறது அச்சிறுவனுக்கு!  அம்மா இறந்த பிறகும், என்னதான் அப்பா, தனது மகனுக்காகவே இருந்து எல்லா வேலைகள் செய்தாலும், ஏனோ முறிந்த உறவு மீண்டும் சேரவே இல்லை.  அவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்தார்களா, தந்தை தன் மீது வைத்திருக்கும் பாசம் அந்த மகனுக்குப் புரிந்ததா என்பதை மிகவும் அழகாகச் சொல்லி இருக்கிறார்கள் இந்தக் குறும்படம் வாயிலாக!  மனதைத் தொட்ட குறும்படம் - பாருங்களேன்.

மேலே உள்ள காணொளியைப் பார்க்க இயலவில்லை எனில் கீழேயுள்ள சுட்டி வழி யூட்யூபில் நேரடியாக பார்க்கலாம்!


PIAH


நண்பர்களே, இந்த நாளில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட இந்த குறும்படம் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். குறும்படம்/பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டமாக பகிர்ந்து கொள்ளலாமே!  நாளை வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


18 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. குறும்படம் கண்ணில் நீர் வரவழைத்து விட்டது.மிக அருமையான பாசபிணைப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. முடிவில் மகிழ்ச்சி... குறும்படம் மிகவும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் பிடித்த விதத்தில் முடிந்திருப்பது நல்லதே - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. பெற்றோர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத பிள்ளைகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி. நெகிழ்வாக இருந்தது.

      நீக்கு
    3. குறும்படம் உங்களுக்கும் பிடித்த விதத்தில் இருந்ததில் மகிழ்ச்சி ரங்கராஜன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    குறும்படம் நன்றாக உள்ளது. அன்னையின் பாசத்தைப் போல தந்தையின் பாசத்தை குழந்தைகள் உடனுக்குடன் உணருவதில்லை. ஏனோ தாமதமாகத்தான் உணர்கிறார்கள். குறும்படம் கடைசியில் நெகிழ்வாக இருந்தது. இதை கதையாக, ஒரு படமாக நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. உண்மையாகவே நினைக்கத் தோன்றியது. இறுதியில் சுபமாக முடித்திருப்பதில் மகிழ்ச்சியும் கூட. இனி வாழ்வில் தன் கடமை தவறாது நடந்து கொண்டிருக்கும் அந்த தந்தைக்கு மகிழ்ச்சியும், ஆனந்தமும் தவறாது கிடைக்கட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      குறும்படம் உங்களுக்கும் பிடித்த விதத்தில் இருந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. மிக அருமையான குறும்படம். அழகாகத் தேர்ந்தெடுத்த கரு.
    நேரே ஒரு குடும்பத்தைப் பார்க்கின்ற உணர்வு. தெரிமா காஷி"
    தாங்க் யூ இண்டோனீஷியாவிலும் இதைத் தான் சொல்வார்கள். உங்களுக்கும் தெரிமா காஷி.
    நல்ல தொரு பதிவுக்கும் வாசகங்களுக்கும் மிக மிக நன்றி
    அன்பு வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      பதிவும், வாசகமும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அருமையான குறும்படம். இருக்கும் இடங்கள் வேறு வேறாக இருக்கலாம், உணர்வுகள் ஒன்றுதான். நீரடித்து நீர் விலகாது என்பதை நெகிழ்ச்சியாக காட்டியுள்ள படம். பகிர்ந்ததற்கு நன்றி.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. குறும்படத்தைப் பின்னர் தான் பார்க்கணும். பார்த்துட்டுச் சொல்கிறேன். ஆனால் அனைவரின் விமரிசனங்களில் இருந்தும் நல்ல படம் எனத் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் - முடிந்த போது பாருங்கள் கீதாம்மா. நல்ல படம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. தலைப்பில் உள்ள வாசகம் எனக்காகவே உணர்ந்து சொல்லப்பட்டதாய் எடுத்துக் கொண்டேன். இதை எப்போதும் நினைவிலும் வைத்துக் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா. பல சமயங்களில் இந்த மாதிரி வாசகங்கள் நமக்கு உதவும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....