வெள்ளி, 5 மார்ச், 2021

Tanya - குறும்படம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பதிவர் சந்திப்பு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


TAKE TIME FOR EVERYTHING BEFORE TIME TAKES EVERYTHING.


*****






ஞாயிறுகளில் நான் ரசித்த குறும்படங்களை, உங்களுடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தேன்.  சமீப நாட்களில் மீண்டும் ஞாயிறில் நிழற்படங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து விட்டதால் ரசித்த குறும்படங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஒரு இடைவெளி வந்து விட்டது.  இதோ இந்த வெள்ளியில் சமீபத்தில் பார்த்து ரசித்த ஒரு குறும்படம் - உங்களுக்காக!  வசனங்கள் இல்லாமல் வெறும் பின்னணி இசை மட்டுமே இந்தக் குறும்படத்தில் இருக்கிறது.  வெளிநாட்டு குறும்படம்!  மிகவும் நன்றாக இருக்கிறது - மனதைத் தொடும் விதமாக எடுத்திருக்கும் இயக்குனருக்கும், நடித்திருக்கும் குழந்தைக்கும் வாழ்த்துகள் - அவர்களுக்கு இந்த வாழ்த்து சென்று சேரட்டும்! வாருங்களேன், குறும்படத்தினைப் பார்த்து ரசிக்கலாம்!


******


நண்பர்களே, இந்த வெள்ளி அன்று உங்களுடன் பகிர்ந்து கொண்ட இந்தக் குறும்படம் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.  குறும்படம்/பதிவு குறித்த உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன்!  நாளை வேறு ஒரு பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


12 கருத்துகள்:

  1. குறும்படம் ரசித்தேன்.  நற்செயல் கூட தானாக செய்ய வருவதில்லை மக்களுக்கு.  

    ஒரு தூண்டுதல் தேவையாய் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. மனதை கவர்ந்த குறுஞ்செய்தி

    குறும்படத்தில் ஒரேயொரு வசனம் மட்டுமே உள்ளது பிலிப்பைன்ஸ் நாட்டு தகாலன் மொழி ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறுஞ்செய்தி - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தகாலன் மொழி - தகவலுக்கு நன்றி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. ஈகை இரக்கம் இல்லா உலகம்...

    நேர்மைக்கு பரிசு...?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஈகை இரக்கம் இல்லா உலகம் - வேதனை தான் தனபாலன். சில நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. குறும்படம் மிக நன்றாக இருந்தது.
    முதலில் ஒரு துண்டு ரொட்டி கொடுத்து இருக்கலாம்.

    அந்த குழந்தை நேர்மையாக தவற விட்ட பணத்தை எடுத்து கொடுத்தவுடன் உணவு கொடுக்கிறாள் அதுதான் மனது கஷ்டமாக இருக்கிறது.
    ஏழ்மையிலும் நேர்மையை கடைபிடிப்பதை கூற வந்த குறும்படம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. முதலிலேயே ஒரு துண்டு ரொட்டி கொடுத்திருக்கலாம் - லாம்! ஆனால் மனது வரவில்லையே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. பதிவினை/குறும்படத்தினை ரசித்தமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. எப்படியோ அந்தக் குழந்தையும் பசியாறியது. நல்ல படம். நன்றாய் எடுத்திருக்கிறார்கள். குழந்தையும் நன்கு நடித்துள்ளது. முதலிலேயே ஒரு துண்டு ரொட்டியைக் கொடுத்திருக்கலாமோ? மனசு வரலை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....