வெள்ளி, 7 ஏப்ரல், 2017

ஃப்ரூட் சாலட் 200 – பெர்ஃபக்‌ஷன் மீன் – அனர்சா எனும் இனிப்பு - யாக்கை நிலையாமை



இந்த வார செய்தி:

இந்த வார செய்தி?  மத்த பகுதிகளை எல்லாம் பொறுமையா படிச்சுட்டு/பார்த்துட்டு வாங்க…. செய்தியை கடைசில சொல்றேன்!...  யாருப்பா அது Scroll பண்ணி முதல்லயே கடைசிக்கு போறது? இது அழுகுணி ஆட்டம்! இப்படி எல்லாம் பண்ணக்கூடாது!



இந்த வார காணொளி:

சமீபத்தில் பார்த்து ரசித்த ஒரு காணொளி! நீங்களும் பாருங்களேன்! தனது இணையை ஈர்க்க இந்த மீன் செய்யும் அற்புதம் பாருங்களேன்.  இந்த மீனுக்குப் பெயர் Puffer! ஆனா perfection மீன்னு பேர் வைக்கலாம்! என்ன ஒரு Perfection அதோட design!


இந்த வார குறுஞ்செய்தி:

ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே வித்தியாசம் தான்…. ஒருத்தன் நாயா அலைஞ்சா அவன் “ஏழை”… ஒருத்தன் நாயோட அலைஞ்சா அவன் “பணக்காரன்”!

இந்த வார முகப்புத்தக இற்றை:


இந்த வார WhatsApp:

”எவ்வளவு நேரம் தான் நிக்கறது… உட்கார்ந்து நிம்மதியா மொபைல நோண்டலாம்னா, இங்கே உட்கார ஒரு பெஞ்ச் கூட  இல்லை!”

”உனக்கு இப்ப உட்காரணும், அவ்வளவு தானே… யாமிருக்க கவலையேன்! என் மேலேயே உட்காரு!”

இவருக்குத் தான் Husband of the year title தரலாம்னு யோசனையா இருக்காம்!



இந்த வார குறும்படம்:

Bhook – இந்த ஹிந்தி வார்த்தைக்கு பசி என்று அர்த்தம்.  இப்போது உங்களுக்காக இந்த வார குறும்படமாக இணைத்திருக்கும் படத்தின் பெயரும் அதே தான்.  உணவை வீணாக்குவது எவ்வளவு கொடுமையானது என்பதை சொல்லும் குறும்படம்! பாருங்களேன்.


இந்த வார உணவு:

நேற்று ஒரு புதிய வகை இனிப்பு சாப்பிட்டு ரசித்தேன். பீஹார் மாநிலத்தின் இனிப்பு வகை இது! அலுவலகத்தில் எனது பிரிவில் இப்போது ஐந்து பீஹாரிகள். யாராவது ஒருவர் ஊருக்குச் செல்வதும் வருவதுமாகவே இருக்கிறார்கள்! நேற்று வந்தவர் இந்தச் சமயத்தில் அதாவது மார்ச் – ஏப்ரல் மாதங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒருவகை இனிப்பு எனக் கொண்டு வந்து கொடுத்தார். எண்ணையில் பொரித்த இனிப்பு. மேலே முழுவதும் எள் தூவியிருக்க, உள்ளே இனிப்பு! அரிசி மாவில் செய்தது - நன்றாகவே இருந்தது….

”யோவ்…. பொறுமையை சோதிக்காதய்யா! இனிப்பு, இனிப்புன்னு மட்டும் சொல்லி வெறுப்பேத்தற நீ!” என்று நீங்கள் சொல்வதற்குள் இனிப்பின் பெயரை மட்டுமாவது சொல்லி விடுகிறேன்! அதன் பெயர் “அனர்சா”! படம் கீழே!


நம்ம ஊர் அதிரசம் மாதிரி தான் செய்யறாங்கன்னு நெட்ல பார்த்து தெரிஞ்சுது!

படித்ததில் பிடித்தது:

யாக்கை நிலையாமை பற்றிய நாலடியார் ஒன்று!

நார்த்தொடுத்து ஈர்க்கிலென் நன்றாய்ந்து அடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால்.  

தோல் பையாகிய உடம்பிலிருந்து, தான் செய்ய வேண்டிய தொழில்களை முழுமையாகச் செய்து, அப்பயனைத் தானே அனுபவிக்கின்ற கூத்தாடியாகிய உயிர் உடலைவிட்டு அப்புறம் சென்றால், பின் அவ்வுடலைக் கயிற்றால் கட்டியிழுத்தால்தான் என்ன? நன்றாகச் சுத்தம் செய்து அடக்கம் செய்தால் தான் என்ன? கண்ட இடத்திலே போட்டால்தான் என்ன? பலரும் பழித்தால்தான் என்ன? (ஒரு செயலைச் செய்யத் தூண்டுவதும் உயிர்தான்; அந்தச் செயலின் பயனை அனுபவிப்பதும் உயிர்தான். அத்தகைய உயிர் இருக்கும்போது மேலான செயல்களைச் செய்க! என்பதாம். ஒவ்வொரு நேரமும் வெவ்வேறு சிந்தனைகளை, செயல்களையுடையதால் உயிரைக் கூத்தன் என்றார்.)

     தமிழ் சுரங்கம் தளத்திலிருந்து….

இந்த வார செய்தி:

இந்த வார செய்தி! இதோ வந்துட்டேன் விஷயத்துக்கு…..



ஜூன் 12, 2012 அன்று தான் எனது வலைப்பூவில் ஃப்ரூட் சாலட் என்ற தலைப்பில் ஒரு பதிவினை தொடங்கினேன். அந்த வாரத்தில் படித்த விஷயங்கள், பார்த்தவை என எனக்குப் பிடித்தவற்றைத் தொகுத்து “ஃப்ரூட் சாலட்” என்ற பெயரிட்டு பகிர்ந்து கொள்ளத் துவங்கினேன். வாரத்தில் ஒரு முறை, அதுவும் வெள்ளிக்கிழமை அன்று இந்தப் பதிவு தான் என்று எழுதாத சட்டமாக இருந்தது. தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் – தவிர்க்க முடியாத சமயங்கள் தவிர, பெரும்பாலான வெள்ளிக்கிழமைகளில் எனது பக்கத்தில் ஃப்ரூட் சாலட் பதிவு வந்திருக்கிறது…..

அவியல், மொறுமொறு மிக்சர், கொத்து பரோட்டா, கதம்பம், கலவை, அஞ்சறைப் பெட்டி, வானவில், களஞ்சியம், இப்படி பல பெயர்களில் பல தளங்களில் பதிவுகள் வந்து கொண்டிருக்க, எனது தளத்தில் ஃப்ரூட் சாலட் என்ற பெயரில் கதம்பமாக பதிவுகள் எழுதத் துவங்கினேன்.

இன்று 7 ஏப்ரல் 2017 – கிட்டத்தட்ட ஐந்து வருடம் முடியும் சமயத்தில் ஃப்ரூட் சாலட் பதிவுகள் வரிசையில் 200-வது பதிவு. வாரம் முழுவதும் எந்த விஷயம் படித்தாலும், பார்த்தாலும், இதை ஃப்ரூட் சாலட்-ல் போடலாம் என்று யோசித்து, சேமித்து பகிர்ந்து கொண்டதண்டு. அவ்வப்போது சில மாற்றங்கள் – பெரும்பாலான நண்பர்களுக்குப் பிடித்தது – இப்பதிவுகளில் எழுதும் “ராஜா காது கழுதை காது!” சிலர் இந்த வாரம் ராஜா காது பகுதி வரலையே என்று பின்னூட்டத்தில் கேட்கும் அளவுக்கு!

சில மாதங்களாக ஃப்ரூட் சாலட் பதிவுகளில் ஏனோ அந்த பிடிப்பு இல்லை! தொகுக்கும் முனைப்பும் இல்லை. எல்லா விஷயங்களும் ஒரு முடிவுக்கு வந்து தானே ஆக வேண்டும்.  ஆகவே ஃப்ரூட் சாலட் பதிவுகளை இனிமேல் எழுத வேண்டாம் என முடிவு எடுத்திருக்கிறேன். இந்த ஃப்ரூட் சாலட் பதிவுகளின் 200-வது பதிவு இது. இந்த ஃப்ரூட் சாலட்-உடன் ஃப்ரூட் சாலட் பதிவுகளை நிறுத்திக் கொள்ளலாம் என்பது என் எண்ணம்!  Let me give a break!

எல்லா வாரமும், ஃப்ரூட் சாலட் பதிவினை “மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..” என்று முடிப்பது வழக்கம். இன்றைக்கு அப்படி அல்ல!

வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

34 கருத்துகள்:

  1. வாழ்த்துகள்! முதலில்!! 5 வருடங்கள் மற்றும் 200 வது ஃப்ரூட்சாலட் பகுதி என்று கலக்கல் வெங்கட்ஜி!!

    மீன் வியக்க வைக்கிறது!! இயற்கையின் விந்தை விந்தைதான்...என்னமா கோட்டை கட்டுது தன் காதலிக்காக!!!பிரமித்துவிட்டோம்...

    இற்றையும், குறுஞ்செய்தியும் வாட்சப் செய்தியும் சிரிக்க வைத்தது...

    பூக் அருமை...

    அனர்சா சாப்பிட்டதில்லை...பார்த்ததும் இல்லை இப்போதுதான் உங்கள் வழி அறிகிறோம். (கீதா: நீங்கள் சொல்லுவது அதிரசம் போன்று என்பதால் அதான் அனர்சா என்று பெயர் வந்ததோ...இல்லை அங்கிருந்து இங்கு வந்ததோ....நானும் நெட்டில் பார்த்து செய்து பார்க்க வேண்டும்...)

    ஃப்ரூட் சாலட் இனி கிடைக்காது என்பதை அறியும் போது கொஞ்சம் வருத்தம்தான் இருந்தாலும் அது உங்கள் விருப்பம்....அதற்கு நீங்கள் மெனக்கெட வேண்டுமே...நேரம், உழைப்பு எல்லாம்..ஸோ லெட்ஸ் வெல்கம் த ஷார்ட்?!!!! ப்ரேக்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீனின் உழைப்பு வியக்க வைத்தது.... அதுவும் கொஞ்சம் அசந்தால் அலை அதன் உழைப்பைக் கெடுத்துவிடும் என்றபோதும்....

      ஷார்ட் ப்ரேக்! - பார்க்கலாம்.

      அனர்சா எப்படிச் செய்வது என்ற குறிப்புகள் இணையத்தில் உண்டு. பார்த்து செய்துவிட்டுச் சொல்லுங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  2. அனைத்தும் நன்று நகைச்சுவையை மிகவும் ரசித்தேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹென்றி.

      நீக்கு
  4. எல்லாம் ரசித்தேன். "ராஜா காது கழுதைக்காது"க்கும் கடைசி ஃப்ரூட் சாலடில் இடம் கொடுத்திருக்கலாம். அந்தப் பெண் கணவன் (?) மேல் உட்கார்ந்திருக்கும் மெட்ரோ ஸ்டேஷனை தாய்வானில் (தாய்பே) பார்த்தமாதிரி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசி ஃப்ரூட் சாலட்-ல் ராஜா காது கழுதைக்காது-க்கும் இடம் கொடுத்திருக்கலாம்! - லாம்!

      தாய்வான் ஸ்டேஷன் - இருக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. குறும்படம் மனதை பிசைந்து விட்டது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். பலர் உணவை வீணாக்குவது பார்க்கும்போது கோபம் தான் வருகிறது. அதைச் சொல்லும் இந்தப் படமும் மனதை பாதித்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  6. இந்த வார பழக்கலவையில் கடினமான ஆனால் நேர்த்தியான இருப்பிடத்தை அந்த ஆண் மீன் கட்டும் காணொளியும் பசி பற்றிய குறும் படமும் அருமை. ஏழைக்கும் பணக்காரனுக்கும் உள்ள வேற்றுமை பற்றிய குறுஞ்செய்தி சிந்தனையைத் தூண்டுகிறது.

    ஐந்து ஆண்டுகள் வெற்றிகரமாக ஒவ்வொரு வெள்ளியும் அருமையாக பழக்கலவை தயாரித்து தந்தமைக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். திடீரென நிறுத்துவது வருத்தத்தை தருகிறது. இனி அடுத்த வெள்ளியன்று ஒரு புதிய பகுதியை எதிர்பார்க்கலாமா.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வெள்ளியன்று ஒரு புதிய பகுதியை எதிர்பார்க்கலாமா? - இதுவரை அப்படி ஒரு எண்ணம் இல்லை ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  7. 200 ஆவது ஃபுரூட் சாலட் பதிவிற்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பல்சுவையாகத் தொகுக்கத் தக்கதான
    அருமையான தலைப்பு ஃபுரூட்சாலட்

    தலைப்பிற்கேற்ப நீங்கள் தொகுத்துத்
    தரும் விஷயங்களும் சுவாரஸ்யமாகவும்
    பயனுள்ளதாகவும் இருக்கிறது

    இதை நிறுத்த வேண்டியதில்லை என்பதே
    என் தனிப்பட்ட கருத்து...

    வாழ்த்துக்களுடன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி ரமணி ஜி! சில தவிர்க்க முடியாத காரணங்கள் - வேலைப்பளு அதிகம் - இப்படி சில விஷயங்களால் தொகுப்பது கடினமாக இருக்கிறது. அதனாலும் இந்த ப்ரேக்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  8. 24 மணிநேரமும் அந்த Puffer மீனுக்கு இதுதான் வாழ்க்கை என்றால், அந்த வாழ்க்கை ஒரு கொடுமைதான்.

    ஃப்ரூட் சாலட் பதிவுகளின் 200-வது பதிவு என்பது ஒரு சாதனைதான். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீனின் வாழ்க்கை கொடுமை தான்.... :) அதுவும் அதன் உழைப்பு சில நொடியில் காலியாகி விடும் எனும்போது இன்னமும் அதிகம் கொடுமை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  9. மீனின் காணொளி அருமை நண்பரே ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய் சுனில்கர் ஜோசப்....

      நீக்கு
  10. அஞ்சு, கீதா மாதிரி கீழே இருந்தெல்லாம் நான் வரமாட்டேன்ன்.. கடசியாத்தான் வாழ்த்துச் சொல்லுவேன்.

    மீனை ரொம்பவும் ரசிச்சேன்ன்.. எனக்கு மிக மிகப் பிடித்த இரண்டு விசயங்கள்..ஒன்று ஸ்பேஸ், அஸ்ரோனொமி புரோகிரம்ஸ் அடுத்தது இந்த சீ வேல்ட்... பார்க்கப் பார்க்க அலுக்காது.

    அந்த மீன் என்னா சூப்பரா கோலம் போட்டிருக்குது... இப்படி அறிவுள்ளதை கொல்கிறோமே என நினைக்க கவலையா இருக்குது... மீன் தானெ என சிம்பிளா நினைச்சிடுறோம்... நான் அவரைக் கூட்டி வந்து எங்கட கார்டின் வேர்க்ஸ் செய்ய யூஸ் பண்ணப்போறேன்.. ஆனா தனியாவே இருக்கிறார், பொதுவா மீன்கள் கூட்டமாகவே இருக்கும்.

    சரி அது போகட்டும், குறுஞ்செய்து, வட்ஸப் நியூஸ் ஆனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிவுள்ளதை கொல்கிறோமே என நினைக்க கவலையா இருக்குது.... - ஒவ்வொரு ஜீவனும் இப்படித்தான் எதோ விஷயத்தில் பெரிய சூப்பர் ஸ்டாரா இருக்கும். ஆனால் அதைக் கொன்று, தின்று கொண்டு தானே இருக்கோம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.....

      நீக்கு
  11. அந்த ஊர் எள்ளுருண்டை:) சூப்பரா இருக்குது. ஓ நீங்க ஃபுரூட் சலாட் ஃபேமஸ் ஓ? எனக்கேதும் தெரியாது... 200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.. நானும் இந்த வருசம்தான் என் 200 ஆவது பதிவை மிகவும் சிம்பிளாக:) கொண்டாடினேன்...

    மீண்டும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃப்ரூட் சாலட் பதிவு தான் 200-வது. மொத்த பதிவுகள் அல்ல! இந்தப் பதிவு எனது வலைப்பூவில் 1337-வது பதிவு! :) உங்கள் 200-வது பதிவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் - கொஞ்சம் லேட்டாகச் சொன்னாலும் ஏத்துக்கணும்!

      ஃப்ரூட் சாலட் ஃபேமஸ் - :) அப்படித் தெரியல!

      நீக்கு
  12. ஃப்ரூட் சாலட் வாரம் ஒரு முறை கூட இல்லைனா ரசிக்கவே ரசிக்காது! :) பார்ப்போம்! இந்த வார ஃப்ரூட் சாலட் வழக்கம்போல் அருமை! மேலே வைக்கும் செரி பழம் (ராஜா காது கழுதைக்காது) தான் இல்லை! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செரி பழம் - இந்த வாரம் கிடைக்கல! அதான் இங்கே இல்ல!

      வாரம் ஒரு முறை இல்லைன்னா ரசிக்கவே ரசிக்காது - நன்றி கீதாம்மா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு


  13. எனக்கு பிடித்த பகுதி அதை நிறுத்த வேண்டாம் என்பதுதான் என் கருத்தும் வார வாரம் போட முடியவில்லை என்றாலும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அதை வெளியிடலாம் இந்த பகுதியை பல முறை பார்த்து வியந்தது உண்டு நானும் பல மூறை இதைப் போல தொகுத்து வெளியிடலாம் என்று நினைப்பேன் ஆனால் உங்களை போல என்ன்னால் முடியாது என்பதால் விட்டுவிட்டேன் ஒருவேளை நீங்கள் வெளியிடவே மாட்டீர்கள் என்றால் மேலும் எனக்கும் நேரம் கிடைத்தால் பருட் சாலைட்டை நான் தொடர்வேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நல்ல ஐடியா மதுரைத் தமிழன். ஃப்ரூட் சாலட்-ஐ நீங்கள் தொடர்ந்தால் மகிழ்ச்சி. அடுத்த வெள்ளியே ஆரம்பியுங்களேன் - அடுத்த வாரம் என் பக்கத்தில் நீங்களே கூட எழுதலாம்.... என்ன சொல்றீங்க! நீங்க ரெடின்னா, என் பக்கத்தில் நீங்க எழுத அழைப்பு கொடுத்து விடுகிறேன்.....

      தேடித்தேடி தொகுப்பதில் சில சிரமங்கள் உண்டு. சில நாட்களாகவே வலைப்பூக்களை படிக்க முடிவதில்லை. தினமும் வீட்டிற்கு வருவதே எட்டு மணிக்கு மேலாகி விடுகிறது. கிடைப்பது ரொம்ப கொஞ்சம் நேரம் தான். பார்க்கலாம் கொஞ்சம் இடைவெளி விட்டு தொடர முடிந்தால் தொடர்கிறேன். அதற்கிடையே, நீங்கள் எழுதுவதென்றால் உங்கள் வலைப்பூவிலோ, அல்லது என் வலைப்பூவிலோ கூட எழுதுங்கள்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  14. அருமை
    இதோ காணொளியினைக் காணச் செல்கிறேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  15. மலைக்க வைக்கும் மீனின் உழைப்பு. குறும்படம் பிறகுதான் பார்க்க வேண்டும். 200 வைத்து ப்ரூட் சாலட் பதிவுக்கு வாழ்த்துகள். ஏப்ரல் 7 மறைந்த என் அம்மாவின் பிறந்த நாள்! எனக்கும் இந்த நாள் ஸ்பெஷல்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் இந்த நாள் ஸ்பெஷல்..... அம்மான்னா சும்மாவா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  16. இருநூறாவது ப்ரூட் சாலட் பதிவுக்கு வாழ்த்துகள்..

    பசி குறும்படம் - வேதனை..

    அதே சமயம் Food Carving & Garnish செய்து காய்களையும் பழங்களையும் அழகு என்ற பெயரில் செதுக்கி வீணடிப்பது மடமை..

    இங்கே எனது பணியிடத்திலும் இப்படித்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Food Carving என்ற பெயரில் காய்கறிகளையும்/பழங்களையும் வீணடிப்பதில் எனக்கும் உடன்பாடில்லை. அவற்றைப் பயன்படுத்துவது நல்லது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  17. ராமேஸ்வரத்தில் ஒரு உணவகத்தில் உணவை வீணாக்காதீர் என்று எழுதியதை படித்தநினைவு. வீணாக்கினால் அபராதம் கூட வசூலிப்பார்கள் போல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....