எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, June 12, 2012

ஃப்ரூட் சாலட் – ஒன்று


[பட உதவி: கூகிள்]

அவியல், மொறுமொறு மிக்சர், கொத்து பரோட்டா, கதம்பம், கலவை, அஞ்சறைப் பெட்டி, வானவில், களஞ்சியம், இப்படி ஏகப்பட்ட பகுதிகள் பதிவுலகில் கலக்குகின்றன. இப்போது புதியதாக எனது பக்கத்திலும் ஃப்ரூட் சாலட் என்று... 

இந்த வார செய்தி:

சிலருக்கு படிக்க ஆசையிருந்தும் படிக்க முடியாது. அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் படிப்பார்கள். கேரளாவின் அதுல்யா மிஷன் சிறு வயதில் படிக்க வாய்ப்பில்லாதவர்களுக்கு படிப்பறிவு தருகிறார்கள். அவர்களது வகுப்பில் படிக்கும் ஒருவரைப் பற்றிய செய்தியைப் படித்ததும் ஆச்சரியமாக இருந்தது. 


சிறு வயதில் படிக்க முடியாத ஃபாத்திமா பீவி, இளமையிலேயே கல்யாணம் முடித்து, பின்னர் கணவரை இழந்து மூன்று குழந்தைகளையும் இறைச்சி கடை வைத்து காப்பாற்றியிருக்கிறார். அவர்கள் படித்து பெரியவர்களாக ஆகி வாழ்க்கையில் காலூன்றிவிட்டனர். இப்போது அதுல்யம் படிப்பறிவு சொல்லித்தருவது தெரிந்தவுடன் தானும் சேர்ந்து எப்படியாவது பத்தாவது முடித்து விடவேண்டும் என படிக்கத் தொடங்கி விட்டாராம். சென்ற வருடம் நான்காம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் அதிக வயதானவர் இவர் தான்! இந்த வருடம் நேரடியாக ஏழாவது தேர்வு எழுத முயற்சித்துக் கொண்டு இருந்திருக்கிறார்.

ஆனால் பாவம், பத்தாவது படித்து முடிக்கும் இவரது ஆசையை நிறைவேறவிடாமல் அவரது 93 - வது வயதில் அவரை அழைத்துக் கொண்டு விட்டான் காலன்! படிப்பதென்றாலே தூக்கம் வருகிறது எனச் சொல்லும் பலர் இருக்க, இப்படியும் ஒருவர்! அவரது முயற்சியைப் பற்றிப் படித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.  

அவரது பெயரைப் பார்த்ததும் இன்னொரு விஷயமும் நினைவுக்கு வந்தது! என் கல்லூரியில் என்னுடன் படித்த ஒரு பெண்ணின் பெயரும் ஃபாத்திமா பீவி! என்னுடன் படித்த நிறைய நண்பர்கள்/நண்பிகள் இப்போதும் தொடர்பிலிருக்கிறார்கள். 

**
இந்த வார முகப்புத்தக இற்றை [Update]:

முகப்புத்தகத்தில் நிறைய இற்றைகள் [வார்த்தை உதவி: தில்லி பதிவர் முத்துலெட்சுமி] வந்து கொண்டே இருக்கும்! அவற்றில் சில சுவையாகவும் சிறப்பாகவும் இருக்கும். அப்படி முகரக்கட்டை [மன்னை மைனர் வாக்கு! புத்தகத்தில் வந்த சில இந்த ஃப்ரூட் சாலட் - இல் வெளிவரும். இன்றைக்கு ஹிந்தியில் வந்த ஒரு இற்றையின் மொழிபெயர்ப்பு:

பெரியவர் [ஒரு சிறுவனைப் பார்த்து]: உன் வயது என்னப்பா?

சிறுவன்: வீட்டுல 14…
பள்ளியில் 12…
ட்ரெயினில் 7…
முகப்புத்தகத்தில் 18…  :)
**
இந்த வாரக் காணொளி:

**
இந்த வார குறுஞ்செய்தி: 

இந்த அலைபேசி வந்தாலும் வந்தது, கூடவே கணக்கற்ற குறுஞ்செய்திகளும் வந்து குவிகின்றன. அவற்றிலும் சில நல்ல விஷயங்கள்  கிடைக்கத் தவறுவதில்லை.. அப்படி வந்தவற்றை இந்த ஃப்ரூட் சாலட் பகுதியில் பகிர்ந்து கொள்கிறேன்.

”எப்போதும் சந்தோஷமாக இரு. கவலையும் உன்னைப் பார்த்து கவலைப்படும்.”

மீண்டும் சந்திப்போம்!
நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.30 comments:

 1. ப்ரூட் சாலட் தித்தித்தது.. காணொளியோ கலங்கடித்தது. எத்தனை பொருட்களை நாம் வீண்டிக்கிறோம் இங்கே.

  ReplyDelete
  Replies
  1. வெளியிட்ட சில நிமிடங்களிலேயே உங்களது பின்னூக்கம்... மிக்க நன்றி ரிஷபன் சார். காணொளி என்னையும் கலங்கடித்தது உண்மை....

   Delete
 2. படிப்பிற்கான முயற்சியைப் பற்றிப் படித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.
  கனமான காணொளி!

  ReplyDelete
  Replies
  1. கல்விக்கு வயது ஒன்றும் தடையேயல்ல என்பதற்கு இந்த மூதாட்டி ஒரு உதாரணம் தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

   Delete
 3. நல்ல தொகுப்பு. காணொளி சிந்திக்க வைக்கிறது. இந்த வயதிலும் படிப்பில் ஆர்வம் செலுத்திவருகிற பெண்மணி பாராட்டுக்குரியவர். இந்த ஈடுபாடு ஒரு புதிய தெம்பையும் கொடுக்கும் அவருக்கு என்பதில் சந்தேகமில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி. பெண்மணியின் ஆர்வம் நம்மையும் படிக்கத் தூண்டும்.....

   காணொளி - முதல் முறை பார்த்தபோதே அவ்வளவு அதிர்ச்சி.....

   Delete
 4. ஃப்ரூட் சாலட் அருமை.
  காணொளி கலங்கச்செய்தது.
  கல்விக்கு வயது ஒன்றும் தடையே அல்ல
  என்பதை செயலில் காட்டிய மூதாட்டியின்
  வாழ்க்கை நமக்கு ஓர் பாடம் தான்.

  ReplyDelete
  Replies
  1. //கல்விக்கு வயது ஒன்றும் தடையே அல்ல
   என்பதை செயலில் காட்டிய மூதாட்டியின்
   வாழ்க்கை நமக்கு ஓர் பாடம் தான்.//

   பாடம் கற்றுக்கொள்ளத் தான் வேண்டும் நானும்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. சார்.

   Delete
 5. புரூட் சாலட் இனிக்குது தலைவரே! நடுப்பா காணொளி போட்டு கசக்கிட்டீங்க மனசை... ' பீவி'க்களால் தான் மழை பெய்யுது சாரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்ஜி. காணொளி மனதைக் கலங்கடிக்கிறது தான்....

   ”“பீவி”க்களால் தான் மழை பெய்யுது சாரே/” அதே! :)

   Delete
 6. சாலட் சுவையாக இருக்கிறது. முகபுத்தக முகவரி தந்தால் அதிலும் உங்களை தொடர வசதியாய் இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு. முகப்புத்தகத்தில் நான் அவ்வளவாக வருவதில்லை. எப்போதாவது தான். :)

   Delete
 7. எத்தனை வயதானாலும் ஆர்வம் இருந்தால் படிக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணம் இங்கே. அருமை. ப்ரூட் சாலட் நல்ல டேஸ்ட். (மிக்ஸர் போட்டு நாளாச்சுன்னு இதைப் பார்த்ததும் நினைவு வந்துட்டுது. நன்றி) குறுஞ்செய்தி எனக்குப் பிடித்திருந்தது. (அதுசரி... உங்க துனைவியார் தளத்துல புதுசா எதுவும் காணோமே... பாத்து பாத்து ஏமாந்து திரும்பி வர்றேன்.)

  ReplyDelete
  Replies
  1. //மிக்ஸர் போட்டு நாளாச்சுன்னு இதைப் பார்த்ததும் நினைவு வந்துட்டுது.// ஆமாம் நானே கேட்கணும்னு நினைத்தேன்... :)

   //அதுசரி... உங்க துனைவியார் தளத்துல புதுசா எதுவும் காணோமே... // கொஞ்சம் நீண்ட விடுமுறை. சீக்கிரமே பதிவுகள் வரும்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 8. நல்ல விஷயம். பலவற்றை கலந்து தர இது உதவும் தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. வானவில் மன்னன் ஆயிற்றே நீங்கள்... நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்...

   தங்களது வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி மோகன். ஒவ்வொரு திங்களன்றும் வெளியிட நினைத்திருக்கிறேன்....

   Delete
 9. கோடிக்கணக்கான பணம் பல நூறு பேர்களின் கடின உழைப்பு கொண்ட இரண்டரை மணித்தியால சினிமா ஏற்படுத்த முடியாத உணர்வை
  இந்த இரண்டு நிமிட செயன்முறை விபரனம் ஏற்படுத்தியது.
  ஒன்றுமே தெரியாமல் இறப்பதை விட அறிந்து கொண்ட அறிவுடன் இறப்பது மேன்மைதாங்க.
  அருமையான பதிவு
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி Alkan.

   Delete
 10. ஹய்... இணையத்துல கலக்குற பதிவுகள்ல கதம்பமும் இருக்குதே... நன்றி. இத்தனை வயசுலயும் படிப்புல ஈடுபட்ட பாத்தீமா பீவி ஒரு நல்ல உதாரணம். இற்றை (புது வார்த்தை) நல்லாவே இருந்துச்சு. ப்ரூட் சாலட் டேஸ்ட் பிடிச்சுப் போச்சு. அடுத்த முறையும் சாப்பிட வந்துடறேன்.

  ReplyDelete
  Replies
  1. //ஹய்... இணையத்துல கலக்குற பதிவுகள்ல கதம்பமும் இருக்குதே...// கதம்பம் என்ற பெயரில் உங்களையும் சேர்த்து மூன்று - நான்கு நண்பர்கள் எழுதுகிறார்கள்.... வாழ்த்துகள்....

   தமிழில் நிறைய வார்த்தைகள் மறைந்து கொண்டே வருகின்றன, பயன்பாட்டில் இல்லாததால். அவற்றில் இந்த இற்றையும் ஒன்று.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிரஞ்சனா.

   Delete
 11. பழக்கலவை மிகவும் அருமை நண்பரே..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete
 12. பழச் சுவை நன்று! காணொளி கண்டேன்! கண்கலங்கி நின்றேன்

  சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவரே..

   கணொளி கலங்கத்தான் செய்தது.....

   Delete
 13. ப்ரூட் சாலட் இனித்தது. வரபோகிற புருட் சாலட் களும் இனிக்குமென நம்புகிறேன். வாழ்த்துகள்.

  விஜய்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி விஜயராகவன் சார்.

   Delete
 14. பழவகைகள் நிறைந்த ஃப்ரூட் ஸாலட் நல்லா இருக்கு!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டீச்சர்.....

   Delete
 15. படிப்பை தொடர முடியாமல் மூதாட்டி இறந்து போனது வருத்தமாய் இருக்கிறது.
  த்ர்பூசணி பழகூடை அழகு.

  காணொளி மனதை பிசைகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....