அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
வெற்றி என்பது புத்திசாலிகளுக்கு மட்டும் சொந்தமில்லை. அது தன்னம்பிக்கையுடன் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு உழைப்பாளிகளுக்கும் சொந்தம்.
இந்த முறை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வது ஒரு வெளிநாட்டு குறும்படம் தான். மொழி புரியவில்லை என்ற கவலை உங்களுக்குத் தேவையில்லை – ஆங்கிலத்தில் சப்டைட்டில் உண்டு. ஒரு பள்ளி – மாணவி ஒருத்தி வேகவேகமாக ஓடி வருகிறார் – வழமை போல! அதில் பள்ளியின் பெயர் கொண்ட பட்டை வேறு அணிய மறந்திருக்கிறாள். பார்த்தவுடன் ஆசிரியர் இருபது முறை தோப்புக்கரணம் போடச் சொல்கிறார். வகுப்பிலும் பெரும்பாலும் தூங்குகிறார் அந்த மாணவி! எதிர்காலத்தில் என்னவாக ஆசை என ஒவ்வொரு மாணவியாகக் கேட்கும் ஆசிரியர் அந்த மாணவியிடமும் கேட்க, மற்ற மாணவ, மாணவிகள் ஒன்றாகக் குரல் கொடுக்கிறார்கள் – “தூங்கிக் கொண்டே இருக்க ஆசைப்படுவார்” என! அந்த மாணவிக்கு அப்படி என்ன தான் பிரச்சனை! அடுத்த நாள் வீட்டிலிருந்து வரும்போது நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டு வரவேண்டும் எனச் சொல்லி அனுப்புகிறார் அந்த ஆசிரியர். மாணவியும் எழுதிக் கொண்டு வருகிறார்! படித்த பிறகு தான் ஆசிரியருக்கு, அந்த மாணவியுடைய பிரச்சனை தெரிகிறது. அவர் தெரிந்து கொண்டது என்ன? நீங்களும் தெரிந்து கொள்ள குறும்படத்தினைப் பாருங்களேன்!
காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என இணையம் அடம் பிடிக்கலாம்! அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்!
நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
நல்லதொரு வாசகம்.
பதிலளிநீக்குவாசகத்தில் ஓரிரு எழுத்துகள் மட்டும் ஷேட் அடித்தது போல இருக்கக் காரணம் என்ன?!!
சஸ்பென்ஸ் வைத்துவிட்டீர்கள். பின்னர் வந்தாவது குறும்படம் பார்க்கவேண்டும். இல்லை, பார்த்தவர்கள் யாராவது அப்படி என்ன காரணம் என்று சொல்லுங்கப்பா...!
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குஓரிரு எழுத்துகள் - “எ” மற்றும் “கு” மட்டும் அப்படி வந்திருக்கிறது! ஏனென்ற காரணம் அறியேன்! எல்லாம் ஒரே மாதிரியாகவே தட்டச்சு செய்திருக்கிறேன்.
சஸ்பென்ஸ் - :) முடிந்த போது குறும்படத்தினை பாருங்கள் ஸ்ரீராம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
குறும்படம் பார்த்து ரசித்தேன்.
நீக்குகுறும்படம் - பார்த்து ரசித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இனிய காலை வணக்கம் அன்பு வெங்கட்.
பதிலளிநீக்குவழக்கம் போல, இல்லை வழக்கத்தை விட நல்ல படம்.
அந்தக் குழந்தையின் அப்பா நல்ல படியாகத் தேறினார் என்றும் சொல்லி இருக்கலாம். எப்படித்தான் இவ்வளவு திறமையாக நடித்துப்
படமும் எடுக்கிறார்களோ.
மிக மிக நன்றி மா.
இனிய காலை வணக்கம் வல்லிம்மா.
நீக்குஇந்தக் குறும்படமும் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி.
அப்பா நல்லபடியாகவே இருப்பார் என நம்பிக்கை கொள்வோம்! இந்த மாதிரி படங்கள் பார்க்கும்போதே நமக்கும் பிடித்திருக்கிறது. இப்படி நிறைய படங்கள் யூவில் பார்க்க முடிகிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் அருமை ஜி
பதிலளிநீக்குஅந்தச்சிறுமி இயல்பாக நடித்து இருக்கிறார்.
வறுமை என்பது உலகம் முழுவதும் உள்ளதுதான் அதேபோல் அன்பும், பாசங்களும்...
வாசகம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குசிறுமியின் நடிப்பு மிகவும் இயல்பாக இருக்கிறது! பள்ளியிலிருந்து வீடு திரும்பும் காட்சி எனக்குப் பிடித்திருந்தது.
வறுமை, அன்பு, பாசம் என அனைத்துமே - உலகம் முழுவதுமே இருப்பது தான். உண்மை தான் கில்லர்ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
குடும்ப பொறுப்பை உணர்ந்து தந்தைக்கு உதவும் குழந்தைகள் பள்ளியில் ஆசிரியர் மற்றும் சக மாணவர்களின் பார்வை, மற்றும் அன்பாகவும் ஆறுதலாகவும் நடத்துவதால் அந்தப் பெண்ணின் உண்மையான திறமை தெரிகிறது, வெளிப்படுத்திய விதம் மிக அருமை.
பதிலளிநீக்குஇன்றைய பதிவில் பகிர்ந்து கொண்ட குறும்படம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி ரங்கராஜன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படிப்பு முக்கியம் என நினைக்கும் தந்தைக்கு முதல் வணக்கம்...
பதிலளிநீக்குஆசிரியை தாய் ஆனதற்கு இரண்டாம் வணக்கம்...
இரண்டு பேருமே வணங்கத்தக்கவர்களே!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
வளரும் காலத்தில் எங்கள் குடும்ப சூழல் சற்றே சிரமமானதாக இருந்தது.எப்படியாவது படித்துவிடு என்று என்னை ஊக்குவித்த பெரிய இதயங்களை நான் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். எதுவுமே வேண்டாம் படிப்பு மட்டுமே போதும் என்றே படித்தேன். இப்படத்தில் வருகின்ற அக்குழந்தையாக நான் மாறினேன். அண்மையில்கூட இணையவழி கருத்தரங்கு ஒன்றில் என் ஆய்வு மற்றும் களப்பணி தொடர்பாக நான் உரையாற்றியபின் என் நண்பர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது இப்போது நினைவிற்கு வந்தது. "உங்கள் பேச்சில் இருந்த உறுதித்தன்மையும், அறிவுச்செருக்கும் இளமைக்காலத்தில் விதைக்கப்பட்ட விதையாகவே நான் நினைக்கிறேன். படிப்புக்காக சிரமப்பட்டு முன்னுக்கு வந்தவர்களில் ஒருவராக நீங்கள்இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்"அவர் சொன்னது உண்மைதான். (இவ்வாறாக நீங்கள் தேர்ந்தெடுக்கும் முறையை நான் பாராட்டுகிறேன். நன்கு சிறப்பாக தெரிவு செய்கின்றீர்கள்)
பதிலளிநீக்குகுறும்படம் உங்களின் இளைமப்பருவத்தினை மீட்டெடுத்திருக்கிறது என்று அறிந்தேன்.
நீக்குகுறும்ப்டம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவாசகம் அருமை. சிறந்த தன்னம்பிக்கை வரிகள். குறும்படம் நன்றாக இருந்தது. அதில் நடித்தவர்களும் மிகச்சிறப்பாக செய்திருந்தனர். தந்தையும், ஆசிரியரும் அந்தப் பெண்ணுக்குள் தன்னம்பிக்கையை விதைப்பது சிறந்ததாக இருக்கிறது. அந்தப் பெண்ணும் அப்பாவின் சிரமத்தைப் போக்க அவருடன் ஒத்துழைப்பாக இருப்பது குடும்ப அன்பு பரிமாற்றங்களை புரிய வைப்பதாக உள்ளது. சிறப்பான குறும்படத்தை பகிர்ந்த தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குவாசகம், குறும்படம் உங்கஆளுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.
பகிர்வுக்கு நன்றி. பிறகு வந்து பார்க்கிறேன்
பதிலளிநீக்குமுடிந்த போது பாருங்கள் நாகேந்திர பாரதி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமை
பதிலளிநீக்குநன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஅருமையான குறும்படம்
பதிலளிநீக்குகுழந்தையின் வீட்டு நிலைமை அறிந்து அன்புடன் பாடங்களை சொல்லி தரும் ஆசிரியருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
அப்பாவுக்கு உறுதுணையாக இருப்பாள் படித்து விட்டு.
குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்லதொரு குறும்படம்.
பதிலளிநீக்குஓர் ஆசிரியனாக மிகவும் ரசித்தேன்.
இப்போதும் கூட மாணவர்களில் பலர் என்னை நினைவு வைத்து அவர்களை ஊக்குவித்ததாச் சொல்லி நன்றி சொல்லும் போது மனம் மிகவும் மகிழும்.
துளசிதரன்
குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.
நீக்கு//ஆசிரியனாக மிகவும் ரசித்தேன்// நன்றி. பெருமிதம் கொள்ளும் நேரம் அமைவது மகிழ்ச்சியே.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஜி இப்படம் நான் ஏற்கனவே பல முறை பார்த்திருக்கிறேன். இப்போதும் என்னை அறியாமல் கண்ணில் நீர் வந்துவிட்டது.
பதிலளிநீக்குவறுமையிலும் குழந்தையைப் படிக்க ஊக்குவிக்கும் தந்தை! இப்படியான தந்தைகளுக்கும் அம்மாக்களுக்கும் ஹேட்ஸ் ஆஃப்.
ஆனால் யதார்த்தத்தில் அனைத்துக் குழந்தைகளுக்கும் அபப்டியான பெற்றோர் அமைவதில்லை. நான் ஒவ்வொரு ஊர் செல்லும் போதும் வறுமையில் வாடும் குடும்பங்களையும், குழந்தைகளையும் கண்டு வருகிறேன். நாம் என்னதான் ஊக்குவித்தாலும் அக்குழந்தைகளின் சூழல் நன்றாக இல்லாததால் அவர்களின் படிப்பு ஆர்வம் இல்லை. பெரும்பாலும் அப்பா குடிகாரர். அல்லது சோபேறிகள். அம்மா வீட்டு வேலை செய்து வருபவர்கள் அல்லது கூலி வேலை. ஒன்றா இரண்டா குழந்தைகள்? நிறைய பெற்று விடுகிறார்கள் ஆனால் அத்தனையும் படிப்பில்லாமல் மீண்டும் வீட்டு வேலைக்கு, கூலி வேலைக்கு அனுப்பப்படுகிறார்கள்...பார்த்து பார்த்து எனக்குச் சலித்துவிட்டது ஜி. மனம் கனத்துப் போகிறது. எத்தனைக் குழந்தைகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம். அதில் தேறுபவர்கள் எண்ணும் அளவில்தான்.
இப்படியான ஆசிரியர் அமைவதும் வரமே! எல்லா ஆசிரியர்களும் இப்படி இருப்பதில்லையே. நான் செல்லும் இடங்களில் காண்பதில் இதுவும் அடக்கம்.
என் சிறுவயதும் நினைவுக்கு வந்தது.
இது அருமையான படம் ஜி. நானும் பல குறும் படங்கள் கண்டு வருகிறேன். வெளிநாட்டுப் படங்கள்தான்.
கீதா
இந்தக் குறும்படம் நீங்கள் முன்னரே பார்த்திருப்பது அறிந்து மகிழ்ச்சி. மீண்டும் பார்க்க முடியும் குறும்படம் தான்.
நீக்கு//இப்படியான ஆசிரியர் அமைவதும் வரமே// உண்மை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் அருமை ஜி மிக அருமை.
பதிலளிநீக்குகீதா
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.
நீக்கு