புதன், 26 ஆகஸ்ட், 2020

சீதா… கீதா… ராதா…

 


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பதிவை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் எப்போது நமக்குள் வருகிறதோ அப்போது தான் துன்பங்களை விரட்டி நாம் வெற்றிக் கனியை பறிக்க முடியும். 


***** 

சீதா – எப்போதும் பேசிக் கொண்டே இருக்கும் ஒரு கேரக்டர்! பல சமயங்களில் அவர் பேசிக் கொண்டே இருப்பது ரொம்பவே தொந்தரவாக இருக்கும். சில சமயங்களில் கொஞ்சம் நேரமாவது சும்மா இரு சீதா என்று சொல்லக் கூடிய அளவுக்கு இருக்கும் அவரது வளவள பேச்சு! ஒரு அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றுகிறார். ஒவ்வொரு மாதமும் பிடித்தம் போக சுமார் 15000 ரூபாய் சம்பளம் வரும். அவருடைய கணவர் மால் ஒன்றில் உதவியாளராக பணியாற்றுகிறார். அவருக்கும் சுமார் 18000 ரூபாய் வரை சம்பளம் கிடைத்துக் கொண்டிருந்தது. தீதுண்மி காலம் என்பதால் மால் மூடப்பட, முதல் மாதம் மட்டுமே வேலையில்லாமல் சம்பளம் கொடுத்தார்கள். பிறகு தற்காலிகாகமாக வேலையை விட்டு நிறுத்தி விட்டார்கள். மால்கள் திறந்த பிறகு வேலைக்கு வந்தால் போதும் என்று சொல்லிவிட, அவருக்குக் கிடைத்து வந்த சம்பளம் இப்போது இல்லை! 33000 ரூபாய் மாத வருமானத்தில் நடந்த குடும்பம் இப்போது அதில் பாதிக்கும் குறைவான வருமானத்தில் தான் நடத்த வேண்டும். இப்போது சீதா அவ்வளவாக பேசுவதில்லை! அப்படியே பேசினாலும் பேசும் ஒரே விஷயம் – கணவருக்கு வேலை ஏற்பாடு பண்ணித் தர முடியுமா? 

கீதா – தில்லி நண்பர் ஸ்ரீபதி அடிக்கடி ஒரு வார்த்தையைச் சொல்வார் – ரொம்பவே பெருமை பீற்றிக் கொள்கிற நபர் பற்றி – அப்படியான நபரை “TPT” என்றே அழைப்பார். விரிவாக்கம் என்ன தெரியுமா? தற்பெருமை தக்காளி! எப்போதுமே தன் பெருமைகளையும், தன் வீட்டுப் பெருமைகளையும், கணவரின் பெருமைகளையும் பேசிக் கொண்டே இருப்பார். கீதா அலுவலகத்தில் பணிபுரிய, அவரது கணவர் ஒரு துணிக்கடையை வாடகை கட்டிடத்தில் நடத்திக் கொண்டிருந்தார். எல்லாம் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. தீதுண்மி வந்த பிறகு பல நாட்கள் கடை திறக்க முடியவில்லை! திறந்தாலும் பெரிதாக வியாபாரமோ, வருமானமோ இல்லை! வாடகை மட்டும் மாதா மாதம் 30000-ரூபாய்க்கு மேல் கொடுக்க வேண்டியிருக்கிறது! வேறு வழியின்றி கடையை மூடி விட்டார். இன்னும் எத்தனை நாளைக்கு இந்த மந்த நிலை இருக்கும் என்று தெரியாததால், பட்டப்படிப்பு படித்திருக்கும் கணவரை ஏதாவது வேலைக்குப் போகச் செல்லக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இரண்டு நாட்கள் முன்னர் பார்த்த போது அவர் கேட்ட கேள்வி - கணவருக்கு வேலை ஏற்பாடு பண்ணித் தர முடியுமா? 

ராதா: ஒரு அலுவலகத்தில் துப்புறவுப் பணியாளராக வேலை செய்கிறார் ராதா. காலை எட்டு மணிக்குள் அலுவலகம் வந்து விட வேண்டும் – அலுவலகம் திறப்பதற்கு முன்னரே, அவருக்கான பகுதி முழுவதையும், அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய வேண்டும் – நடைபாதைகள், கழிப்பறை என பெண்டு நிமிர்த்தும் வேலை! மாதம் முழுவதும் வேலை செய்தே ஆகவேண்டும் – சனி, ஞாயிறு அலுவலக விடுமுறை என்பதால் வாரத்தின் ஐந்து நாட்கள் வேலை – விடுமுறை நாட்களில் வேறு சில வீடுகளில் பகுதி நேர வேலை! ராதாவின் வருமானம் மாதத்திற்கு அதிக பட்சமாக ரூபாய் 12000/- மட்டுமே! கணவர், இரண்டு மகன்கள், மாமியாரும் இவருடன். கணவர் வேறு ஒரு தனியார் நிறுவனத்தில் துப்புறவுப் பணியாளராக இருக்கிறார். தனியார் நிறுவனம் தீதுண்மி காலத்தில் மூடப்பட, இவரை வேலையை விட்டு நிறுத்தி விட்டார்கள். எல்லாம் சரியான பிறகே வரச் சொல்லியதோடு, வேலையில்லாத நாட்களில் சம்பளம் இல்லை! 12000 ரூபாய் சம்பளத்தில் ஐந்து பேர் வாழ வேண்டும்! சூழல் சரியில்லா இந்தச் சூழலில் கணவர் குடியை நாடி, தினம் தினம் குடிக்கக் காசு கேட்டு ராதாவை தொந்தரவு செய்து கொண்டிருக்கிறார். சென்ற வாரத்தில் ஒரு நாள் ராதாவை பார்த்தபோது “அண்ணே, கணவருக்கு வேலை ஏற்பாடு பண்ணித் தர முடியுமா? என்பதே முதல் வார்த்தைகளாக இருந்தது. 

சீதா, கீதா, ராதா என பலரது வாழ்க்கையில் இப்போது சூறாவளிக் காற்று அடித்துக் கொண்டிருக்கிறது. தீதுண்மி விரைவில் ஒழிந்தால் தான் இவர்கள் வாழ்க்கையில் மீண்டும் ஒளிக் கீற்றாவது திரும்பும்! இப்போது ஒரே இருட்டு தான்! மூன்று பேரில் ஒருவருக்காவது வேலை ஏற்பாடு செய்து கொடுக்க முடிந்தால் எனக்கு மகிழ்ச்சியே! இப்போதைய சூழலில் வேலை கிடைப்பது கடினமாகவே இருக்கிறது! விரைவில் இந்தப் பிரச்சனை தீர வேண்டும் என்பதே எல்லோருடைய வேண்டுதல்களும்! 

இன்றைய பதிவில் பகிர்ந்து கொண்ட தகவல் பற்றிய எண்ணங்களையும், கருத்துகளையும் பின்னூட்டமாகச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

நட்புடன் 



வெங்கட் நாகராஜ் 
புது தில்லி

30 கருத்துகள்:

  1. கடினமான சூழல்.. எவரையும் குற்றம் சொல்ல இயலாது.. கடக்கத்தான் வேண்டும்...

    விரைவில் அனைவருக்கும் அவரவர் பிரச்னைகள் தீர்வதற்கு வேண்டிக் கொள்வோம்...

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடினமான சூழல் தான். விரைவில் சூழல் சரியாக வேண்டும் என்பதே அனைவருடைய ஆசையும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  2. இந்த வைரஸ் பிரச்சனையால் எண்ணிலடங்கா தொந்தரவு. லோயர் மிடில் கிளாஸில் உணவுக்கே பிரச்சனை. இதுனாலத்தான் இ.பாஸ் பற்றில்லாம் கவலைப்படாமல் எங்கயாவது ஏதாவது செய்து பிழைக்கப்பார்க்கிறார்கள்.

    Expect the unexpected - என்பதை வாழ்க்கையிலும் கடைபிடிக்கலைனா ரொம்பவே கஷ்டம்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Expect the unexpected - உண்மை.

      நிறைய பேருக்கு பிரச்சனைகள் இருக்கிறது. சில வெளியே தெரிகின்றன. பல தெரிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. உண்மை தான் ஜி.எம்.பி. ஐயா. பல இடங்களில் இப்படியே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. உண்மைதான் ஜி இந்தியா முழுவதும் இப்படி பல குடும்பங்களின் சூழல் மாறி விட்டது. இறைவனே தீர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல குடும்பங்களில் இன்றைய நிலை இப்படித்தான். நல்லதொரு தீர்வு கிடைக்க பிரார்த்தனை செய்வது ஒன்று மட்டுமே வழியாக இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  5. எதிர்பாராத சிக்கலான சூழல் இது.
    விளும்புநிலை மனிதர்களுக்கு வேலை கிடைப்பது ஒரு பிரச்சனை என்றால். கிடைத்தாலும், பொதுப் போக்குவரத்து இல்லாமல் இவர்களின் சம்பளத்திற்கு வேலைக்காக பயநிப்பதும் பிரச்சனை.
    விரைவில் தொற்று தீரவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்பாராத சிக்கலான சூழல் - உண்மை தான் அரவிந்த். யார் இப்படி நடக்கும் என எதிர்பார்த்திருக்க முடியும்.

      போக்குவரத்து இல்லாத சூழலில் தினம் தினம் அலுவலகம் சென்று வருவதும் கடினமாகவே இருக்கிறது பலருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. தீதுண்மி - புது வார்த்தை கற்றுக் கொண்டேன் இன்று :). வாஸ்தவம் தான், இன்னக்கி எல்லா பக்கமும் நிலமை மோசமா தான் இருக்கு. Hope this ends soon and things get back to normal

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய வார்த்தை - :) இப்படி சில வார்த்தைகள் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கிறது அப்பாவி தங்கமணி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. அனைவருக்குமே..சிரமம் தான்... விரைவில் தீநுண்மியையும் கடப்போம்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்குமே சிரமம் தான் - உண்மை தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. உலகம் இயல்பு நிலைக்குத் திரும்ப இறைவனைப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்தனை செய்வது தவிர வேறு வழிவகை ஒன்றுமே இல்லை எனத் தோன்றிவிட்டது முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. வாசகமும், பதிவும் என்ன நடந்தாலும் மனம் தளராமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டும் என்கிறது. அனைவருக்கும் கஷ்டமான சூழ்நிலை. மன உறுதியுடன் கடப்போம்.
    விரைவில் அனைத்தும் சரியாக வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா..

      விரைவில் சூழல் சரியாக வேண்டும் - இதுவும் கடந்து போகும்! என்பது தான் இப்போதைக்கு நம் சிந்தனை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. சிரமமான நேரம். நல்ல நேரம் விரைவில் வரவேண்டும் என்று இறைவனை பிராத்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் சிரமமான நேரம் தான் இராமசாமி ஜி. நல்லதே நடக்கட்டும் என இறைவனைப் பிரார்த்திப்போம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. வெகு நிதர்சனமான பதிவு. என்றும் காக்கும் கடவுள் இப்பொழுதும் காப்பான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காக்கும் கடவுள் இப்போதும் காக்கட்டும்.... அதே தான் எல்லோருடைய விருப்பமும் வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    வாசகம் உண்மை. கொஞ்சம் குறைந்த வருமானத்தில் இருப்பவர்களின் நிலை கஸடமானதுதான்.. எப்போது இந்த தொற்றுக்கு ஒரு முடிவு வரப் போகிறது என உள்ளது. அனைவரையும் இறைவன் காத்தருள வேண்டுமென பிரார்த்தித்துக் கொண்டேயிருப்போம். மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம் - நன்றி.

      குறைந்த வருமானம் கொண்டவர்களின் நிலை கடினம். மத்திய வர்க்கத்தினர் பலரும் கூட கஷ்டத்தில் தன் இருக்கிறார்கள். பெரும்பாலான மக்களுக்கு கடினமே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. இப்போதைய காலக் கட்டத்திற்கு மனதில் நிறுத்த வேண்டிய வாசகம். வேலை இழப்புகள் சமூகத்தை மிகவும் பாதித்துள்ளது. சீக்கிரமாக இந்நிலைக்கு முடிவு வரப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் - உங்கள் கருத்திற்கு நன்றி ராமலக்ஷ்மி.

      வேலை இழப்புகள் மிகவும் அதிகமாகவே இருக்கிறது - எனக்குத் தெரிந்த பலர் நிலை இப்படித்தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. காலை எழுந்தவுடனே வேலை பற்றிய கவலையே அனைவரையும் பாடாய்படுத்துகிறது.. இதிலிருந்து விரைவில் மீள "கொரானா go go" என்கிற மந்திரத்தை அனைவரும் 108 தடவை உச்சரிக்கும்படி மத்திய மந்திரி ஒருவர் (பெயர் நினைவில் இல்லை) பொதுமக்களை கேட்டுக்கொண்டதாக செய்தியில் படித்த ஞாபகம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலருக்கும் கவலையான சூழல் தான் சிவா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. பல குடும்பங்களிலும் இதே நிலை தான். ஆனால் இந்தச் சமயத்திலும் விடாமல் குடிப்பவர்களை என்ன சொல்வது? கொஞ்சமானும் யோசிக்க வேண்டாமா? விரைவில் நிலைமை சரியாகப் பிரார்த்திப்பதைத் தவிர்த்து வேறே வழியில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யோசிப்பதே இல்லை - இப்படி குடிப்பவர்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....