வியாழன், 13 ஆகஸ்ட், 2020

தனியே தன்னந்தனியே - அவயாம்பா - கதை மாந்தர்கள்

 


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

பழி சொல்ல பத்தாயிரம் பேர் வருவான்; ஆனா வாழ வழி சொல்ல ஒத்த பய வர மாட்டான்; நம்ம வாழ்க்கையை நாமதான் வாழ்ந்தாக வேண்டும்!





”ஏண்டா அம்பி, ஏதோ கொரோனாவாமே, உலகத்தையே ஆட்டிப் படைச்சுண்டு இருக்குன்னு சொல்றாளே! கரோனா செருப்பு தான் நான் கேள்விப்பட்டு இருக்கேன்! இது என்னடாப்பா கொரோனா! அப்படி பொல்லாத ஒரு வியாதியா அது! எல்லாரையும் பிடுச்சு ஒரு உலுக்கி உலுக்கிண்டு இருக்கே!” அவயாம்பா பாட்டி அங்கலாய்த்தாள் சுப்புணியிடம்! 

”பாட்டி அது பத்தி சொன்னா உங்களுக்கென்ன புரியவா போறது! சும்மா நீங்க பாட்டுக்கு கிருஷ்ணா ராம கோவிந்தான்னு பகவான் பேரைச் சொல்லிண்டு இருந்தாலாவது போற வழிக்கு புண்ணியம் கிடைக்கும்! என்னத்துக்கு நீங்க இந்த வயசுல கொரோனா ஜபம் பண்ணிண்டு இருக்கேள்!” சுப்புணி வேகமாகச் சொல்லி அங்கிருந்து நகர்ந்து விட நினைத்தாலும் அவயாம்பா பாட்டி, சுப்புணியை விடுவதாக இல்லை! 

”ஏண்டா அம்பி இப்படி அலுத்துக்கற! ஏதோ நாலு இடம் போறவனாச்சே, உங்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு தானே இந்த பாட்டி கேட்கிறேன்! அப்படி என்ன தலை போற வேலை உனக்கு! எனக்கு பதில் சொல்லிட்டுப் போலாமே! அதை விட்டுட்டு போற வழிக்கு புண்ணியம் தேடச் சொல்லிண்டு இருக்கியே! அதெல்லாம் வேண புண்ணியம் தேடிண்டாச்சு இந்த எண்பத்தியஞ்சு வயசுக்கு! எப்படா கூப்பிடுவான்னு தான் காத்துண்டு இருக்கேன்!” அவயாம்பா பாட்டி சொல்ல, சுப்புணி வேறு வழியின்றி விளக்கமாச் சொன்ன பிறகே அவனை விட்டாள் பாட்டி. 

”அது என்னடா இப்படி ஒரு நிலைமை நம்ம மனுஷாளுக்கு! ஒரேயடியா ஊரையே காலி பண்ற அளவுக்கு இப்படி ஒரு மஹாமாரியா! என் வயசுக்கு இப்படி ஒரு வியாதியைப் பத்திக் கேள்விப்பட்டதே இல்லையே! உலகத்துல ரொம்பவே அநியாயம் அதிகரிச்சுப் போயாச்சு! பூமி மேலே கட்டிடமாக் கட்டிண்டே போறா! பூமி பாரம் அதிகரிச்சுண்டு போறது! கோடிக்கணக்குல இருக்க மக்கள் தொகையை பூமித்தாய் எப்படிதான் தாங்குவா! ஆறு பொண்ணப் பெத்த எனக்கே பாரம் தாங்காம திண்டாடி இருக்கேனே! அந்த மனுஷன் ஆறு குழந்தைகளைக் கொடுத்துட்டு போய்ச் சேர்ந்தபிறகு, குடும்ப பாரம் தாங்காம நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு நினைக்காம இருக்க முடியல!” சொல்லியபடியே நினைவில் மூழ்கினாள் அவயாம்பா பாட்டி! 

”பதினைஞ்சு வயசுல கல்யாணம்! இருபத்தி ஐந்து வயசுக்குள்ள ஆறு பெண் குழந்தைகள் பிறந்தாச்சு! அவரும் போய்ச் சேர்ந்துட்டார்! அப்ப இருபத்தி ஆறு வயசு தான் எனக்கு! ஆறு பொண் குழந்தைகளை வச்சுண்டு எப்படி இருக்கப் போறேன், குழந்தைகளை எப்படி கரையேத்தப் போறேன்னு மனசு தவிச்சுப் போகும் ஒவ்வொரு நாளும்! ஏதோ அவர் பங்குக்கு நிலம் நீச்சுன்னு கொஞ்சம் இருந்தது – அதிலிருந்து சாப்பாட்டுக்கு அரிசி வந்துடும்! அப்பளம் இட்டு, பக்ஷணம் பண்ணி அதை வித்து தலையால தண்ணி குடிச்சு தானே அத்தனை பொண்களையும் வளர்த்து கல்யாணமும் பண்ணி வைச்சேன்! இதோ இப்பவும் ஏதாவது ஒரு பொண் கூட தான் ஜாகை! மாப்பிள்ளைகளும் நல்லவங்களா அமைஞ்சதால இருக்க முடியறது! இல்லைன்னா கஷ்டம் தான்! இப்ப கூட ஏதாவது ஒத்தாசை பண்ணிண்டு தானே இருக்கேன்! போற வரைக்கும் உழைக்கணும்! நம்மால யாருக்கும் தொந்தரவு இருக்கக் கூடாதுன்னு தான் அந்த பரமாத்மா கிட்ட வேண்டிண்டு இருக்கேன்!” 

”அடேய் சுப்புணி, யாரோ வந்துருக்காங்க பாரு! மாநகராட்சிலருந்து வந்து இருக்காங்களாம்! என்னன்னு கேளு!” என்று அவயாம்பா பாட்டி கொஞ்சம் இருமிக் கொண்டே கூப்பிட்ட போது, “பாட்டிம்மா என்ன இருமறீங்க? உடம்புக்கு ஏதும் பண்ணுதா, ஜொரம் ஏதும் இருக்கா?” என்று வரிசையாகக் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார் மாநகராட்சியிலிருந்து வந்தவர். “அதெல்லாம் ஒண்ணுமில்லடாப்பா! நான் நல்லாதான் இருக்கேன்! உள்ளே என்னமோ தாளிக்கறா போல! அதான் கமறல்!” என்று பாட்டி சொன்னாலும், மாநகராட்சியிலிருந்து வந்தவர் “உடம்பப் பார்த்துக்கோங்க பாட்டிம்மா! ஜொரம் வந்தா உடனே சொல்லுங்க! பரிசோதனை பண்ணிடலாம்!” என்று சொல்லிச் சென்ற பிறகு பாட்டிக்கு உடம்பெல்லாம் உதறல்! என்னடா இது சோதனை! அந்த கொரானா நம்மளையும் புடிச்சுண்டுடுத்தா என்ன! என்று பயந்தபடியே இருந்தார். 

இரண்டு நாட்களில் பாட்டிக்கு உடம்பு அதிகமாகப் படுத்த, சுப்புணி தான் தெரிஞ்ச டாக்டர் கிட்ட அழைச்சுண்டு போனான்! வழியிலேயே மாநகராட்சியிலிருந்து வந்தவர் பார்க்க, ”என்ன பாட்டிம்மா! உடம்புக்கு முடியலையா? வாங்க அரசாங்க ஆஸ்பதிரில இலவசமா பரிசோதனை செய்துடலாம்!” ”சோதனை முடியும் வரை பாட்டிம்மா ஆஸ்பத்திரியில் தனிமையில்! அழைத்துக் கொண்டு போன சுப்புணியையும் தனிமையில் - வேறிடத்தில்!! பாட்டிம்மாவுக்கு ஆஸ்பத்திரில தனிமையில் இருப்பு கொள்ளல! யாரிடம் கேட்டாலும் பதிலே கிடைக்கல! இரண்டாவது நாள் தான் தெரிஞ்சுது அவயாம்பா பாட்டிக்கு – கடைசில அந்தக் கொரோனா தன்னையும் பிடித்துக் கொண்டதென்று! ”ஏண்டாப்பா, கடைசில என்னை இப்படி தனியா அடைச்சு வச்சுட்டீங்களே! போற காலத்துல, ஆறு பொண்ண பெத்தும், ஒருத்தரும் இல்லாம பண்ணிட்டீங்களே, புலம்பிக்கொண்டே இருந்தார் அவயாம்பா பாட்டி! தனிமையே அவரை கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டிருந்தது! மருத்துவமனை ஊழியர்கள் என்னதான் பேசினாலும் கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு குறைந்தது பாட்டியிடமிருந்து! 

நாலே நாள் தனிமையில் இருந்த அவயாம்பா பாட்டி இப்போது இல்லை! மருத்துவமனையிலிருந்து நேரடியாக எலெக்ரிக் க்ரிமேட்டோரியம் தான்! அதுவும் நாலே நாலு சொந்தக்காரங்களுக்கு தான் அனுமதி – அதுவும் தூரத்துலருந்து தான் பார்க்லாம்! யாரோ ஒரு மாநகராட்சி ஊழியர் பட்டனைத் தட்ட 1000 டிகிரி செல்ஷியஸ் சூட்டில் கரைந்து போனார் அவயாம்பா பாட்டி! காத்திருந்த பெண்ணுக்குக் கிடைத்தது ஒரு சிறிய பெட்டியில் பாட்டியின் சாம்பல் மட்டுமே! 

சுப்புணியிடம் கேள்வி கேட்க இனிமேல் அவயாம்பா பாட்டி இல்லை! 

நண்பர்களே, இன்றைய பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

நட்புடன் 


வெங்கட் நாகராஜ் 
புது தில்லி

38 கருத்துகள்:

  1. வழி - பழி...   வாசகம் ரைமிங்கா நல்லா இருக்கு.

    அவயாம்பா கதை சோகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      கதை - சோகம் தான். இன்றைக்கு பலரின் நிலை இப்படித்தான் இருக்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. உண்மை நிலை இது தான்... மிகவும் வேதனையான காலம் இது சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதார்த்தமான சோகக் கதை.
      கொராணாவால் இறந்த உடல்களால் பாதிப்பு இல்லை என்று சொல்லும் சுகாதார அமைப்பு ஏன் இறந்தவர்களை இப்படி வேகமாக எரிக்கிறார்கள் என்பது புரியலை.
      காரணத்தை சொல்லலாம் என்றால் சொல்லுங்கள் ஐய்யா.

      நீக்கு
    2. வேதனையான காலம் தான் கீதா சகோ. இதுவும் கடந்து போகும் - போக வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. சோகம் தான் பல வீடுகளில் இப்போது.

      இறந்த உடல்களால் பாதிப்பு இல்லை - என்று சொன்னாலும் இப்படியான முடிவுகள் - தொற்று பற்றி மனதில் இருக்கும் பயம் தான் அரவிந்த் - என்னைப் பொறுத்த வரை! கூடுதலாக பரவக் கூடுமோ என்ற எண்ணமும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. அவயம்மா கதைதான் யதார்த்த நிலை..சொல்லிச் சென்றவிதம் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை யதார்த்தம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.

      நீக்கு
  4. யதார்த்தத்தை உங்கள் நடையில் கூறிய விதம் அருமை. படித்து முடித்தபோது நம் பாட்டி நம்மை விட்டுப் போனது போல இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யதார்த்தம் - உண்மை முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. அவயாம்பா பாட்டியின் கதை மனதை கலக்கி விட்டது. ஆறு பெண்களை பெற்று வளர்த்து, கடைசியில் கொரோனாவால் யாருமற்ற நிலையில் முடிவு... கதை என்று ஒதுக்க இயலா சூழ்நிலை உண்மை நிலை சுடுகிறது பயம்+தனிமை. கொரானாவின் பலமோ? இந்த கால கட்டங்கள் விரைவில் நலமாக இறைவனை பிரார்த்தித்துக் கொண்டேயிருப்போம். வேறு வழி தெரியவில்லை. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      அவயாம்பா பாட்டி - மனதைக் கலக்கிய நிகழ்வு தான் கமலா ஹரிஹரன் ஜி.

      பிரார்த்தனை செய்வது தவிர வேறு வழியில்லை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. மனதில் கலவரம் உண்டுபண்ணும் யதார்த்தமான கதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதைய பல நிகழ்வுகள் கலவரத்தினையே உண்டாக்குகின்றன நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. கொரோனாவின் கொடுமைகள் இதுபோல் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொரோனாவின் கொடுமைகள் - நிகழ்ந்தவண்ணமே இருக்கின்றது கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. சோகமான நிகழ்வு - என்றே தெரியவில்லை... எனது பக்கத்து வீட்டு அம்மா இதே போல்... இறக்கும் முன்னே death certificate கொடுத்த கொடுமை...

    சமீபமாக ஆள் பிடிக்கும் வேலை சில ஊர்களில் நடக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறக்கும் முன்னரே இறப்புச் சான்றிதழ் - வேதனை.

      ஆள் பிடிக்கும் வேலை - நானும் கேள்விப்பட்டேன். உண்மையா பொய்யா என்று தெரியவில்லை! உண்மையாக இருக்கக் கூடாது என்றே நினைக்க வேண்டியிருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. நிதர்சனத்தை அழகா சொல்லி இருக்கீங்க, மனசு கனத்து போச்சு. Good write up Anna

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிதர்சனம்! உண்மை அப்பாவி தங்கமணி.

      //Good Write up// மிக்க நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. வேதனை தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. வாசகம் அதானே! சரிதானே..

    அவயாம்பா பாட்டியின் கதை மனதை அழுத்திவிட்டது. ரொம்பவே. என்ன சொல்ல என்று தெரியவில்லை ஜி..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      அவயாம்பா பாட்டியின் கதை - மனதை அழுத்தும்படியான நிகழ்வு தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. கதை மனதை கனக்க வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதை கனக்க வைத்து விட்டது - உண்மை தான் கோமதிம்மா - நில நிகழ்வுகள் மனதை விட்டு விலகுவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. 'பழி சொல்ல பத்தாயிரம் பேர் வருவான்; ஆனா வாழ வழி சொல்ல ஒத்த பய வர மாட்டான்; நம்ம வாழ்க்கையை நாமதான் வாழ்ந்தாக வேண்டும்!' இந்த வரிகள் அருமை. அவயாம்பா பாட்டியின் நிலைதான் எல்லோருக்குமே. என்ன ஆகும்னு தெரியலை. முடிவு எப்பொன்னும் தெரியலை.மனநிலையே மாறிப்போயிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஞானசேகரன்.

      என்ன ஆகும்னு தெரியல! முடிவு எப்போன்னும் தெரியலை! அதே தான். விரைவில் சூழல் சரியாக வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசையும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. இது கற்பனையா அல்லது நிஜமா என்று தெரியவில்லை. இருந்தாலும் வாழ்க்கை முழுவதும் கஷ்ட்டப்பட்ட அவயாம்பா பாட்டி கடைசியில் தனிமையில் செத்திருக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையல்ல நிஜம் பானும்மா!

      தனிமையில் செத்திருக்க வேண்டாம் - அதே தான்! ஆனாலும் சூழல் இப்படியாகவே இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. இது கதை இல்லை நிஜம். நமது இப்பொழுது வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  16. பாட்டி பாவம். இறுதியில் இப்படித் தனிமையின் வேதனையில் மறைந்தது வாசித்ததும் மனதை மிகவும் வருத்திவிட்டது. இப்படியும் மரணங்கள் தற்போது கேட்க கேட்க வேதனைதான் மிஞ்சுகிறது.

    வாசக வரிகள் மிக அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டி பாவம் தான். முடிவு இப்படி இருந்திருக்க வேண்டாம்!

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. அன்பு வெங்கட்,
    வாசகம் மிக அருமை.
    உண்மைதான் பண்டம் செய்த பிறகு பழி சொல்வோர் அதிகம்.
    வழி சொல்பவர் தான் இல்லை.

    பாவம் பாட்டி.
    அவருக்கு யார் கொண்டு வந்து கொடுத்தார்களோ.
    யதார்த்தம் என்றாலும் வலிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      பாவம் பாட்டி - கொடுத்தது யாரென்று தெரியவில்லை! ஆனால் கிடைத்தது அவருடைய முடிவுக்கு வழிவகுத்துவிட்டது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. என்ன சொல்ல! இன்று பலரின் நிலை அது தான். பிடிஓ ஒருத்தர் இறந்தவரை உறவினர்கள் உடலை வாங்க மாட்டேன்னு சொல்லிக் கடைசியில் அரசே தகனம் பண்ணி இருப்பாங்க போல! கண்ணெதிரே இன்னும் எத்தனை கொடுமைகளைப் பார்க்கப் போகிறோமோ! நினைக்கவே கவலையும், பயமுமாகத் தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலருடைய நிலையும் இப்படித்தான் இருக்கிறது. இன்னும் எத்தனை கொடுமைகளோ! அவனே அறிவான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....