அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
ஒரு பறவை மரத்தின் கிளையில் அமரும்போது அது எந்த நேரத்திலும் முறிந்து விடும் என்ற பயத்தில் அமருவதில்லை; ஏன் என்றால், பறவை நம்புவது அந்தக் கிளையை அல்ல! அதன் சிறகுகளை மட்டுமே!
எந்தவொரு பதிவு/கதை/கவிதை/கட்டுரையாக இருக்கட்டும்! அதற்கு நீங்கள் வைக்கப் போகும் தலைப்பு மிகவும் முக்கியமானது! தலைப்பைப் பார்த்து மட்டுமே நூலை வாங்கும் சிலர் உண்டு! படித்தவுடன் கவரும் விதமாக தலைப்பினை வைப்பது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை! நண்பர் கில்லர்ஜி அவரது பதிவுகளுக்கு வைக்கும் தலைப்பினைப் போலவே அவரது இரண்டாவது மின்னூலிற்கு வைத்திருக்கும் தலைப்பு கண்களை, கருத்தினைக் கவரும் விதமாக அமைந்திருக்கிறது – என்ன தலைப்பு? ரம், ரம்மி, ரம்பா!!! படிக்கும் போதே ஏதோ ஜிவ்வென்று உங்களை உள்ளே இழுப்பது போல தோன்றுகிறது அல்லவா! அது ரம்மா, ரம்மியா இல்லை ரம்பாவா? அல்லது மூன்றுமேவா? எதுவாக இருந்தாலும் உள்ளே, மின்னூலினுள்ளே, அதன் தலைப்பு உங்களை இழுப்பது உறுதி!
இந்த மின்னூல் வழி அவரது கவிதைகளை நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் நூலாசிரியர் கில்லர்ஜி அவர்கள். முன்னுரையாக அவர் குறிப்பிட்டதிலிருந்து இந்தக் கவிதைத் தொகுப்பு – ”என் எண்ணங்களில் உதித்த கவிதை மட்டுமல்ல, மண்ணுள் மறைந்த என்னவளுக்கான எமது பூமாஞ்சலியும் கூட” என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்! சின்னச் சின்ன வரிகளில் கூட நம் நெஞ்சைத் தொட்டுவிடக்கூடிய கவிதை வரிகள் அவருடையது! மின்னூலின் அறிமுகப் பகுதியில் குறிப்பிட்ட சில கவிதை வரிகளில் மிகவும் தொட்டது இந்த இரண்டு வரிகள்!
விலைமாதரின் விசும்பல்!
இரவே நீ விடிந்து விடு!!
அவ்வளவு தான் அவ்வளவே தான்! இரண்டு வரிகள், ஆறே வார்த்தைகள் – ஆனால் அந்த வார்த்தைகள் சொல்லும் விஷயம் மிகப் பெரியது! எத்தனை துயரம் அப்படியான விலை மாதர்களின் வாழ்க்கையில்! 99.99% பெண்கள் விரும்பி இந்தத் தொழிலுக்கு வருவதில்லை – அவர்கள் அனைவருமே இதில் தள்ளப்பட்டவர்களே!
”அன்னை” என்ற தலைப்பிட்ட ஒரு கவிதையிலிருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு!
என் அசைவிற்கு உயிர் கொடுத்த அன்னையே
என் உயிர் உள்ளவரை மறவேன், உன்னையே
உனக்காக, தகனமும் கொடுப்பேன் என்னையே!
…
என் உணவுக்கு நீ கொடுத்தது, ரத்தமே
நீ உறங்கும்போதும் கொடுத்தேன் சத்தமே
எனக்காக, சகித்துக் கொண்டாய் நித்தமே!
”எழுச்சியோடு, எழுந்திரு பெண்ணே” என்ற கவிதை வழி பெண்களை அழைத்து வீரம் கொண்டு எழுந்திட வேண்டிய அவசியத்தினைச் சொல்கிறார்! அந்தக் கவிதையிலிருந்து பிடித்த வரிகள் சில!
வஞ்சக உலகமடி பெண்ணே
வஞ்சகர்கள் கவ்வட்டும் மண்ணே
வலையை வீசுவார்கள் முன்னே
வலையை கிழித்து எறி பெண்ணே!
பஞ்சமில்லை! கவிதையிலிருந்து சில வரிகள் உங்களுக்காக!
எங்கள் நாட்டில், கட்சிகளுக்கு பஞ்சமில்லை.
பட்டினிச்சாவின் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை.
எங்கள் நாட்டில், அரசியல்வாதிகளுக்கு பஞ்சமில்லை.
இலவச அரிசியை, நம்பி வாழ்பவர்களுக்கும் பஞ்சமில்லை!
இரையாக இறைவா… என்ற கவிதை பற்பல எண்ணங்களைத் தூண்டும் விதமாக இருந்தது. யானை, குதிரை, காளை, பசு, ஆடு, நாய், ஒட்டகம், கழுதை, கோழி, சேவல், மயில், குயில், புறா, காகம், பூனை, கிளி, பல்லி, மீன், சிங்கம் என ஒவ்வொன்றாகச் சொல்லி, அதுவாகப் பிறந்திருந்தால் எப்படி இருந்திருப்பேன் என்று சொல்லிய ஆசிரியர், கடைசியாகச் சொன்னது…
ஆனால் என்னை புழுவாக பிறக்க வைத்து, பாவங்களைச் செய்து முடித்த பாழாய்ப் போன மனிதனின் பாழும் உடம்பை இரையாக தின்ன வைத்து விட்டாயடா… இறைவா நான் என்ன பாவம் செய்தேன்… போன பிறவியில் மனிதனாக பிறந்தேனா?
எல்லா கவிதைகளையும் இங்கே குறிப்பிட முடியாது என்பதால், மின்னூலில் எனக்குப் பிடித்த சில வரிகளை மட்டுமே இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மொத்தம் ஐம்பது கவிதைகள் கொண்ட இந்த மின்னூல் அமேசான் கிண்டில் வெளியீடாக வந்திருக்கிறது. மின்னூலின் விலை ரூபாய் 49/-. அமேசான் அன்லிமிட்டட் கணக்கு வைத்திருப்பவர்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். தரவிறக்கம் செய்து கொள்ள கீழேயுள்ள சுட்டியைச் சுட்டலாம்!
நண்பர்களே, இன்றைய பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
நல்லதொரு வாசகம். எப்பவோ எஸ் எம் எஸ் காலத்தில் படித்தது!
பதிலளிநீக்குகில்லர் ஜியின் புத்தக விமர்சனம் நன்று. எடுத்துக் காட்டி இருக்கும் வரிகளும் சிறப்பு. வாழ்த்துகள் கில்லர் ஜி.
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குவாழ்த்தியமைக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அன்பின் கில்லர் ஜி அவர்களது கைவண்ணத்துக்கு ஒரு வணக்கம்...
பதிலளிநீக்குசிறப்புடன் தாங்கள் பதிவு செய்ததில் மகிழ்ச்சி...
பதிவு உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.
கில்லர்ஜியின் மின்னூல் விமர்சன அறிமுகம் நன்று
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் அருமை தன்னம்பிக்கை ஊட்டுகிறது.
பதிலளிநீக்குகவிதை நூலுக்கு மகுடம் சூட்டியது போன்ற விமர்சனம். மனம் நிறைந்த நன்றி ஜி
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அவரின் சொல்லாடல் தனி ரகம்... பல இடங்களில் வியக்க வைக்கும்...
பதிலளிநீக்குஇனிய நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்...
வியக்க வைக்கும் சொல்லாடல் - உண்மை தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவாசகம் மிக அருமை. ரசித்தேன்.
சகோதரர் கில்லர்ஜி அவர்களின் எழுத்து வன்மை என்றுமே பாராட்டத்தக்கது. அவரது இரண்டாவது மின்னூலில் நீங்கள் தேர்ந்தெடுத்து தந்த கவிதை வரிகளுக்கு உண்டான விமர்சனங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது. உங்கள் இருவருக்குமே என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துக்களும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
வாழ்த்துகளுக்கும் பாராட்டியமைக்கும் நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கில்லர்ஜி சார் எழுதிய புத்தக அட்டைப் படத்தை பார்க்கும் போது கிளு கிளு என்று இருக்கிறது.ஆனால் அவரின் கவிதைகள் உணர்ச்சிகரமாக இருக்கிறது
பதிலளிநீக்குஉணர்ச்சிகரமான கவிதைகள் - உண்மை தான் அன்பு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மிகவும் சிறப்பான வாசகம்!
பதிலளிநீக்குநூல் விமர்சனம் மிக அருமை!
கில்லர்ஜிக்கு இனிய வாழ்த்துக்கள்!!
வாசகமும் நூல் அறிமுகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குதேவகோட்டை ஜி யின் கவிதை நூல் விமர்சனம் மிக அருமை.
தேர்ந்து எடுத்து கொடுத்த கவிதைகள் மிக நன்றாக இருக்கிறது.
ஜிக்கு வாழ்த்துக்கள்.
உங்களுக்கு நன்றி.
வாசகமும் நூல் அறிமுகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தன்னம்பிக்கையை குறிப்பிடும் அருமையான வாசகம்.
பதிலளிநீக்குநூல் அறிமுகமும் எடுத்துக் காட்டப்பட்ட கவிதைகளும் சுவையாகவும் சிந்தனையை தூண்டுபவையாகவும் உள்ளன.
நிச்சயம் நூலை படிக்கிறோம் ஐய்யா.
கில்லர்ஜி சாருக்கு வாழ்த்துக்கள்.
வாசகமும் நூல் அறிமுகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆரம்ப வாசகம் வழக்கம் போல அருமை .திரு கில்லர்ஜீயின் புத்தக மதிப்பீடும் நன்றாகவே உள்ளது
பதிலளிநீக்குவாசகமும் புத்தக மதிப்பீடும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அபயா அருணா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் செம வெங்கட்ஜி. இந்த வாசகம் ஏற்கனவே அறிந்தது இதன் விவரம் பதிவில் எழுதியிருக்கிறேம்ன் இனிதான் முடிக்க வேண்டும். இங்கு மீண்டும் வாசகத்தை ரசித்தேன்.
பதிலளிநீக்குகில்லர்ஜி எழுதிய நூலுக்கான விமர்சனம் நன்று. இரண்டு ஜி க்களுக்கும் வாழ்த்துகள்!
கீதா
வாசகமும் புத்தக அறிமுகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் அருமை. கில்லர்ஜி கவிதைகள் சிந்தனையை தூண்டியது.
பதிலளிநீக்குவாசகமும் எடுத்துக் காட்டிய கவிதைகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் மிக அருமை
பதிலளிநீக்குகில்லர்ஜியின் நூல் பெயரே வித்தியாசமாக இருக்கிறதே அவர் பதிவின் தலைப்புகள் போல.
கில்லர்ஜி கவிதைகள் சிறப்பாக எழுதுவார். இங்கு பகிர்ந்திருக்கும் கவிதைகளும் அருமை.
கில்லர்ஜி க்கு வாழ்த்துகள். அறிமுகத்திற்கு மிக்க நன்றி வெங்கட்ஜி
துளசிதரன்
வாசகம், நூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.
நீக்குநூல் பெயரே வித்தியாசம் - உண்மை!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மீசைக்கார நண்பர் கில்லர்ஜியின் எழுத்தை வாசிப்பதே தனி சுகம்
பதிலளிநீக்குநண்பருக்கு வாழ்த்துகள்
மீசைக்கார நண்பரின் எழுத்தை வாசிப்பதே தனி சுகம் - உண்மை கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாழ்த்துகள் சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி - கில்லர்ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குநண்பர்களின் நூல்களை உடனுக்குடன் படித்து மதிப்புரை எழுதும் உங்களுடைய ஆர்வம் வியக்க வைக்கிறது.
பதிலளிநீக்குகில்லர்ஜியின் எழுத்து நடையை ரசிக்காத வாசகர்கள் எவருமேயில்லை. ஏதோ ஒருவிதத்தில் நம்மை கட்டிப்போட்டு விடுகிறார், எழுத்துக்களால். தேர்ந்தெடுத்து கவிதைகளைப் பகிர்ந்த விதம் அருமை.
அவர் தொடர்ந்து நூல்களை வெளியிட வாழத்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.
//ஏதோ ஒரு விதத்தில் நம்மை கட்டிப்போட்டு விடுகிறார் எழுத்துகளால்!// உண்மை முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.