திங்கள், 12 அக்டோபர், 2020

மின்னூல் – ஓரிரவில்… ஒரு ரயிலில்… - பயணங்கள் பலவிதம்

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

யாரிடமும் உங்களை நிரூபிக்க முயலாதீர்கள்… இயல்பாக இருந்து விடுங்கள்… பிடித்தவர்கள் நெருங்கட்டும்… வேண்டாதவர்கள் விலகி விடட்டும்… 

******



சற்றேறக்குறைய ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் எனது புதிய மின்னூல் வெளியீடு பற்றிய தகவலுடன் உங்களைச் சந்திக்கிறேன். ஏப்ரல் மாதத்திலிருந்து தொடர்ந்து எனது பயணக் கட்டுரைகளைத் தொகுத்து மின்னூல்களாக, அமேசான் தளத்தில் வெளியிட்டு வந்திருக்கிறேன் – பல சமயங்களில் வாரம் ஒரு மின்னூல் வெளியிட்டு வந்திருக்கிறேன் – கடந்த சில வாரங்களாக பணிச்சுமை காரணமாக, இந்த வேலையைத் தொடர இயலவில்லை. இதோ மீண்டும் ஒரு மின்னூல் – அமேசான் தளத்தில் எனது 24-ஆவது மின்னூல்! கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகம் வரும்போதெல்லாம் ரயில், விமானம், பேருந்து என பலவற்றில் பயணித்திருக்கிறேன். அது தவிர தலைநகரிலும் வேறு சில இடங்களிலும் இப்படியான பயணங்களில் சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகள் என பலவற்றையும் எனது வலைப்பூவில் எழுதி வந்திருக்கிறேன். 

அப்படி எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து இதோ, இந்த வாரத்தில் “ஓரிரவில்… ஒரு ரயிலில்” என்ற தலைப்புடன், “பயணங்கள் பலவிதம்” என்ற உபதலைப்புடன் மின்னூலாக வெளியிட்டு இருக்கிறேன். சுவையான பல சம்பவங்களை, அனுபவங்களை உள்ளடக்கிய மின்னூல் இந்த மின்னூல். நிச்சயம் உங்களுக்கும் அதனைப் படிக்கும்போது நீங்கள் மேற்கொண்ட விமான/ரயில்/பேருந்துப் பயணங்களும், அவற்றில் கிடைத்த அனுபவங்களும் நினைவுக்கு வர, அவற்றை அசைபோட்டபடியே இந்த மின்னூலை மேலும் வாசிக்கலாம். 

தலைப்பு சுஜாதா அவர்களின் இதே தலைப்பில் வந்த நூலை நினைவுக்குக் கொண்டு வரலாம். அந்த நூலின் கதை நினைவில்லாதவர்களுக்காக ஒரு கதை சுருக்கம் இங்கேயும்! 

ஒரு இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செகயூரிட்டி பிரிவின் அதிகாரி அஷோக். உன் வருங்கால மனைவியை அதே ரயிலில் சந்திப்பாய் என்று சுவாமிஜி அருள் வாக்கு சொல்ல, தன் பழைய நண்பனின் தங்கையே அதே ரயிலில் காண்கிறான். பல சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேற, கதையின் தலைப்பே சொல்வது போல ஒரு ரயிலில், ஒரு ராத்திரியில் நடந்து முடியும் கதை. 
சுஜாதாவின் கதை போல என்று சொல்ல வரவில்லை. இந்த மின்னூலில் வரும் கட்டுரை, ஒரு இரவு நேர ரயில் பயணத்தில், பயணிக்கு ஏற்பட்ட அசௌகர்யங்கள், அதன் விளைவு, நிகழ்வு குறித்த சக பயணிகளின் எண்ணங்கள் ஆகியவற்றைச் சொல்லும் கட்டுரை ஒன்றை இந்த மின்னூலில் சேர்த்திருக்கிறேன் – அதனால் தான் இந்த கட்டுரைத் தொகுப்பின் தலைப்பு ”ஓரிரவில்… ஒரு ரயிலில்!” மற்றபடி சுஜாதாவின் கதைக்கும், இந்த தொகுப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை – தலைப்பினைத் தவிர! 

மின்னூலை வாசிக்க விரும்புபவர்கள் அமேசான் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து வாசிக்கலாம். Kindle Unlimited Subscription வைத்திருப்பவர்கள், இந்த மின்னூலை இலவசமாகவே தரவிறக்கம் செய்து படிக்கலாம். மற்றவர்கள் ரூபாய் 70 மட்டும் செலுத்தி, தரவிறக்கம் செய்து கொண்டு வாசிக்கலாம்! இல்லை பணம் செலுத்த விருப்பமில்லை என்றால் – சற்றே காத்திருந்தால் சில நாட்களில் ஐந்து நாட்கள் மட்டும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை தரும்போது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்! மேற்கண்ட மூன்று வழிகளில் எது உங்கள் விருப்பமோ அதைத் தேர்ந்தெடுக்கலாம்! அது உங்கள் இஷ்டம்! தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே! 


இன்னும் ஒரு தகவலும்… ஏற்கனவே சென்ற சனிக்கிழமை காஃபி வித் கிட்டு பதிவில் சொன்னது போல, ஏற்கனவே வெளியிட்ட மின்னூலான “ஹனிமூன் தேசம்” மின்னூலை வரும் புதன் கிழமை மதியம் 12.29 வரை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான சுட்டி – ஹனிமூன் தேசம்! முடிந்தால் தரவிறக்கம் செய்து, வாசித்து உங்கள் கருத்துகளை எழுதி அனுப்பினால், எனது வலைப்பூவிலும் பகிர்ந்து கொள்வேன்! 

தொடர்ந்து மின்னூல்கள் வெளியிட விருப்பம் உண்டு – நேரமும் காலமும் சரியாக இருந்தால் அடுத்த வாரமே வெளியிடும் வாய்ப்பு இருக்கிறது. வெளியிட்டால் நிச்சயம் தகவலை பகிர்ந்து கொள்கிறேன். நாளை வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை… 

நட்புடன் 



வெங்கட் நாகராஜ் 
புது தில்லி

26 கருத்துகள்:

  1. மின்னூல்கள் வெளியிடுவதிலும் சாதனை படைத்து வருகிறீர்கள்.  வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதனை - முன்னோடிகள் நிறைய உண்டு ஸ்ரீராம்!

      வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வாழ்த்துகள். இந்த அளவுக்கு பயணக்கட்டுரைகள் வேறு யாரும் எழுதி இருப்ப மாட்டார்கள். ஒரு முழுக்க்கட்டுரைத் தொகுப்பை குமுதத்திற்கு அனுப்பிப் பாருங்கள் குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் இதுபோன்ற முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி முரளிதரன். கட்டுரைத் தொகுப்பினை குமுதத்திற்கு அனுப்பி வைக்கலாம்! அடுத்த முறை அனுப்புகிறேன். யோசனைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. இன்றைய பொன்மொழி எனக்கு மனஆறுதலை தந்தது ஜி

    மின்நூலுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்மொழி - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. இன்றைய வாசகத்தைப் பின்பற்றும் முயர்ச்சியிலேயே சமீப காலங்களில் என்னால் இயன்ற வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
    விமர்சனங்களில், ஆக்கப்பூர்வமானவற்றிற்கு மட்டும் மதிப்பளித்து என்னை தகவமைக்க முயலும் அதே சமயம், வெறும் காள்ப்புகளைக் கண்டுகொள்ளாமலும் இருக்கிறேன்.
    மின் நூலுக்கு வாழ்த்துக்கள் சார்.
    நன்பர் சொல்வது போல் நாளிதள்களுக்கும் சும்மா அணுப்பிப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய வாசகம் - கடைபிடித்தால் நல்லதே அரவிந்த். நம் வேலையை நாம் செய்து கொண்டிருப்போம்.

      வாழ்த்தியமைக்கு நன்றி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வாழ்த்துகள்... தரவிறக்கம் செய்கிறேன்... நன்றி ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. இந்த சூழலில் வேலைக்குச் சென்றும், தினம் ஒரு பதிவும், மின்னூலும்... நேரத்தைக் கையாள்வதில் நீங்களும் ஒரு நிபுணர்... இதையும் கற்றுக் கொள்ள வேண்டும்... வாழ்த்துகள்...

    அப்புறம் ஒரு 100 மின்னூல் முடிந்தவுடன், அதைக் குறித்து - பிரித்து (வகை வாரியாக) - ஒரு மின்னூல் அல்லது கோப்பு (pdf) எனக்கும் அனுப்ப வேண்டும் என்பதை மட்டும் மறக்க வேண்டாம் ஜி...! ஹிஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரத்தைக் கையாள்வது - கடினமாகவே இருக்கிறது தனபாலன்.

      100 மின்னூல் முடிந்தவுடன் - ஹாஹா! பார்க்கலாம் 50-ஐ தொடுவேனா என! அப்படி 50-ஐ தொட்டால் அனுப்பி வைக்கிறேன் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. மின்னூல் சாதனைக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி நாகேந்திர பாரதி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. மின்னூல் வெளியீடுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து பற்பல மின்னூல்கள் அடுத்தடுத்து வெளியிடவும் வாழ்த்துகள். தலைப்பின் வாசகம் எனக்குனே சொன்னாப்போல் இருக்காது. நிரூபிக்கப்போய் நிறைய அடிபட்டிருக்கேன்! :))))) அந்தச் சமயங்களில் இதெல்லாம் நினைவுக்கு வரதில்லை! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கீதாம்மா.

      பல பொன்மொழிகள் நினைவில் நின்றாலும், தேவையான சமயத்தில் நினைவுக்கு வருவதில்லை என்பது உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  9. வாசகம் அருமை.
    மின்னூலுக்கு வாழ்த்துக்கள்.
    நூலின் தலைப்பு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அருமையான தொடக்க வாசகம. உங்களுடய மின்னூலுக்கு வாழ்த்துக்கள் வெங்கட் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. அன்பு வெங்கட் , பயணம் படித்த நினைவு.
    சரியாக வரவில்லை.
    மின்னூல் ஆக்கங்களுக்கு வாழ்த்துகள்.

    நல்ல முயற்சி பயனளிக்கட்டும்.
    நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு வாசகமும்

    என்னுடன் வருகிறது. மிக மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. நன்றாக உள்ளது. தங்களது புதிய மின்னூலுக்கும், மென்மேலும் மின்னூல்கள் வெளியிடவும் என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. ஆரம்ப வாசகம் அருமை!
    மின்னூலுக்கு இனிய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோம்மா.

      மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....