அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
அவமானங்கள் பலரை வீழ்த்திடச் செய்கிறது. சில நேரங்களில் உயர்த்திடவும் செய்கிறது. பொறுமை மற்றும் மன உறுதியுடன் செயல்பட்டால் அவமானம் கூட வெகுமானமாய் மாறிவிடும்!
இந்த வாரமும் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு குறும்படம் வெளிநாட்டுக் குறும்படம் தான் – ஆங்கிலத்தில் சப் டைட்டில்கள் உண்டு! மொழி தெரியாது என்ற கவலை வேண்டாம். இதனை குறும்படம் என்று சொன்னாலும், இது ஒரு விளம்பரமும் கூட! McD போலவே Jollibee என்ற நிறுவனத்திற்கான விளம்பரம் – இவர்களது விளம்பரங்கள் பலவும் உண்மைக் கதைகளை வைத்தே எடுக்கிறார்கள். இன்று நீங்கள் பார்க்கப் போவதும் அப்படியான ஒரு குறும்படம்/விளம்பரம் தான்.
பள்ளியில் படிக்கும் மாணவன் – அவன் முகத்தில் ஒரு பெரிய மச்சம் – வித்தியாசமான வடிவில் மச்சம், பெரியதாகவும் இருப்பதால் சக மாணவர்கள் பலரும் அவனைக் கிண்டல் செய்து கொண்டே இருக்கிறார்கள். மாணவனை தினமும் பள்ளியில் விட்டு வரும் அவனது தாய் தைரியம் தரும் வார்த்தைகளைச் சொல்லி அனுப்புகிறாள். ஆனாலும் பள்ளி மாணவர்களின் குறும்புகளைக் கேட்க வேண்டுமா? அந்த மாணவன் தனக்கு வரும் சோதனைகளை எதிர்கொண்டு எப்படி சாதனை புரிகிறான் என்று சொல்லும், மனதைத் தொடும் இந்தக் குறும்படத்தினைப் பாருங்களேன்! Mother’s Day கொண்டாட்டமாக இந்தக் குறும்படம் வெளியிட்டு இருக்கிறார்கள்.
காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என இணையம் அடம் பிடிக்கலாம்! அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்!
நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
நலமே வாழ்க...
பதிலளிநீக்குநலமே விளையட்டும் துரை செல்வராஜூ ஐயா.
நீக்குசிறுவனாக முதலில் நடித்தவன் சோகமே உருவாக நன்றாக நடித்துள்ளான் ஜி.
பதிலளிநீக்குஆமாம் கில்லர்ஜி. அச்சிறுவனின் நடிப்பு நன்றாகவே இருக்கிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மிக அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.
நீக்குபகிர்வுக்கு நன்றி. பார்க்கிறேன். நன்றி
பதிலளிநீக்குமுடிந்த போது பாருங்கள் நாகேந்திர பாரதி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான காணொளி...பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.
நீக்குமிக மிக அருமை அன்பு வெங்கட்.
பதிலளிநீக்குஎப்படி த்தான் இவ்வளவு அழகான காணொளிகளைத் தேடி எடுக்கிறீர்களோ.
மனதுக்கு மிக இதம்.
நடிப்பும் சிறப்பு.
வாழ்த்துகள் மா.
வணக்கம் வல்லிம்மா.
நீக்குசில சமயங்களில் இப்படியான குறும்படங்கள் தொடர்ந்து பார்க்கும்போது, யூவில் தானாகவே தொடர்புடைய குறும்படங்கள் வரும். அதில் பார்க்கும் படங்களில் எது பிடித்ததோ அதைப் பகிர்வேன். இந்தக் குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவாசகம் மிக அருமையாக உள்ளது. இன்றைய குறும்படம் சிறப்பாக உள்ளது. அந்த சின்னப் பையன், மற்ற பையன்களின் அலட்சியங்களை தாங்கும் போது காட்டும் முகபாவங்களை சிறப்பாக காட்டியுள்ளார். எப்போதும் போல் வாசகத்திற்கு பொருத்தமான குறும்படம் அருமையாக உள்ளது பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குவாசகம் மற்றும் குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மிக அருமையான குறும்படம்
பதிலளிநீக்குநன்றாக நடித்து இருந்தார்கள் எல்லோரும்.
வாசகம் குறும்படத்திற்கு பொருத்தமாய் இருக்கிறது.
வணக்கம் கோமதிம்மா.
நீக்குவாசகம், குறும்படம் இரண்டுமே உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்ல குறும்படம். குழந்தைகள் பெரியவர்களானால் விவரம் வந்து வெறுப்புகள் மறைந்து திறமைகளை மதிக்காத தொடங்கி விடுகிறார்கள்.
பதிலளிநீக்குகுறும்படம் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கடவுள், தான் ஒவ்வொருவருடனும் இருக்க இயலாது என்பதால்தான் ஒவ்வொருவருக்கும் ஓர் அன்னையைப் படைத்தான் என்று கூறுவார்கள். அது இந்தக் குறும்படத்தில் மீண்டும் சொல்லப்பட்டுள்ளது.
பதிலளிநீக்குGod can not be everywhere. That's why he created mothers! உண்மை தான். அந்த அம்மா எத்தனை பொறுமையாக எடுத்துச் சொல்கிறார்கள்.
நீக்குகுறும்படம் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி கௌதமன் ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
குறும்படம் அருமை
பதிலளிநீக்குகுறும்படம் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மிகவும் அருமை...
பதிலளிநீக்குகுறும்படம் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.