அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
மற்றவரை நேசிப்பது தவறு இல்லை. இன்னொருவரை வெறுத்து விட்டு நேசிப்பது தான் தவறு.
இந்த வாரம் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு குறும்படம் வெளிநாட்டுக் குறும்படம் தான் – ஆங்கிலத்தில் சப் டைட்டில்கள் உண்டு! மொழி தெரியாது என்ற கவலை வேண்டாம்.
பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் ஒருவர் – தனது வயது முதிர்ந்த தாயை தினமும் பள்ளிக்கு அழைத்து வந்து, அவர் பாடம் எடுக்கும் வகுப்பிலேயே ஒரு ஓரத்தில் அமர்த்திவிட்டு பாடம் எடுக்கிறார். அவரது தாய்க்கு அல்சைமர் நோய் தாக்கி இருப்பதால் எதுவும் நினைவில்லை. இன்னமும் தனது மகன் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான் என்ற அளவில் தான் அவரது நினைவு இருக்கிறது! இப்படி அந்த ஆசிரியர் தனது உடல்நிலை சரியில்லாத தாயை பள்ளிக்கு அழைத்து வருவது பல மாணவர்களின் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. தனது பிள்ளைகளை வேறு பள்ளிக்கு மாற்றிவிடலாமா என்று கூட யோசிக்கிறார்கள். கடைசியில் என்ன நடக்கிறது என்பதை இந்த குறும்படத்தில் பார்க்கலாம். எனது நண்பர் ஒருவரின் தாயாருக்கு இப்படி அல்சைமர் நோய் தாக்கியது. அவர் மிகவும் கஷ்டப்பட்டார். தனது மகனைப் பார்த்து “நீ யாரு? எதுக்கு என் வீட்டில் இருக்கிறாய்?” என்று கேட்டதாகச் சொல்வார். அவர் பற்றிய நினைவுகள் இந்தப் படம் பார்க்கும்போது எனக்கு தோன்றியது. இந்த குறும்படம் நன்றாகவே இருக்கிறது. பாருங்களேன்!
காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என இணையம் அடம் பிடிக்கலாம்! அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்!
நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
கல்வி கற்பதை விட, இந்த உயர்ந்த பன்பைக் கற்கிறார்களே அந்த மாணவர்கள்... அது சிறப்பு.
பதிலளிநீக்குஉயர்ந்த பண்பைக் கற்கும் மாணவர்கள் - சிறப்பான விஷயம் தான் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வரேன் அப்புறமா!
பதிலளிநீக்குமுடிந்த போது வாருங்கள் கீதாம்மா. பதிவு இங்கேயே தான் இருக்கப் போகிறது!
நீக்குகண்ணீர் வர வைச்ச படம். தேர்ந்தெடுத்துப் பார்த்தவற்றைப் பகிர்வதில் மகிழ்ச்சி. மிக அழகான கருத்து. நம்ம ஊரில் விமான நிலையம், ரயில் நிலையத்தில் விட்டுட்டுப் போறவங்க பார்க்க வேண்டிய படம்!
நீக்குகுறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா. நம் ஊரில் மட்டுமல்ல, பல ஊர்களிலும் விட்டுவிட்டுச் செல்லும் மனிதர்களும் உண்டே!
நீக்குதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கொடிய நோய்களில் ஒன்று அல்சைமர் நோய். உணர்வுகளாய் வெளிப்பட்டுள்ள விதம் அருமை. அல்சைமர் நோய் என்றாலே எனக்கு முதலில் நினைவுக்கு வருபவர், நான் அதிகம் மதித்த தலைவர்களில் ஒருவரான, யாசர் அராபத்.
பதிலளிநீக்குயாசர் அராஃபத்! குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி அவர்களுக்கும் இந்தப் பிரச்சனை இருந்தது என படித்திருக்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
அருமையான படம்
பதிலளிநீக்குஇக்கால இளைஞர்கள் பார்க்க வேண்டிய படம்
நன்றி ஐயா
குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இந்தியாவில் சுற்ற முடியவில்லை. அதனாலே தாய்லாந்தில் சுற்றுகிறீர்கள் போல.
பதிலளிநீக்குவரிசையாக தாய்லாந்து காணொளிகள்.
இந்தியாவாக இருந்தால் தாய் என்றாலும் மனநல காப்பகத்தில் கொண்டு போய் சேர்த்து விடுவார்கள்.
இணைய வழி சுற்றல் தானே! எங்கே வேண்டுமானாலும் நினைத்த மாத்திரத்தில் சென்று விட முடியுமே!
நீக்குஇந்தியாவாக இருந்தால் - சோகம் தான் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தாய்ப்பாசத்தை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறது குறும்படம்.
பதிலளிநீக்குகுறும்படம் உங்களுக்கும் பிடித்த விதமாக அமைந்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான குறும்படம்.
பதிலளிநீக்குகுழந்தைகளும் பாட்டி பாட்டி என்று தேடுவதும் குழந்தைகளுக்கு தன் ஆசிரியரின் அம்மா மேல் பாசம் வந்து விட்டதை சொல்கிறது. அந்த குழந்தைகளும் இனி தங்கள் அம்மாவிடம் அன்பும் பாசமாக இருப்பார்கள்.
எல்லோரிடமும் அன்பு செலுத்துவதை அதுவும் வயதானவர்களிடம் அன்பு செலுத்த கற்றுக் கொண்டார்கள் குழந்தைகள்.
குறும்படம் உங்களுக்கும் பிடித்தமானதாக இருந்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாரம் ஒருமுறை குறும்பாடங்கள்... நன்றி ஜி...
பதிலளிநீக்குகுறும்பாடங்கள் - வார்த்தை விளையாட்டினை ரசித்தேன் தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கானொளி அருமையாக இருந்தது. நன்றி
பதிலளிநீக்குகாணொளி உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி ரமேஷ்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவாசகம் அருமை. குறும்படம் நன்றாக உள்ளது. தாய் பாசத்தின் சிறப்பை உணர்த்தும் படம். குழந்தைகளுக்கு பள்ளி பாடங்களோடு, அன்னையை பாதுகாக்கும் பணியை அவர் கற்றுத் தந்தது சிறப்புத்தான். அதை புரிந்து கொள்ளாத பெற்றோர்களை என்ன சொல்ல... அவர் அன்னையை காணாமல், தவித்து இறுதியில் கண்டதும் பாசத்தில் உருகி விடும் நேரம் கண்ணீரை வரவழைத்து விட்டது தாய், மகன் இருவருமே நன்றாக நடித்துள்ளனர். இப்படியான அருமை மிகுந்த படங்களை கண்டெடுத்து எங்களுடன் பகிர்ந்து வரும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம்.
நீக்குவாசகமும் குறும்படமும் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.