புதன், 7 அக்டோபர், 2020

வாசிப்பை நேசிப்போம் – அந்தமானின் அழகு – பாரதி கண்ணம்மா

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு! புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு… எளிதில் வெற்றி பெறுவாய்! 

***** 

“வாசிப்பை நேசிப்போம்” – எனும் முகநூல் குழுமம் பற்றி சென்ற வாரங்களில் ஒன்றிரண்டு பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தது நினைவிருக்கலாம். ”வாசிப்பை நேசிப்போம்” குழுவினர் தற்போது நடத்திக் கொண்டிருக்கும் #Reading_Marathon2020 என்ற தொடர் வாசிப்பு போட்டியில், பயணம் குறித்த போட்டி நடந்த வாரத்தில் என்னுடைய சில மின்னூல்களை குழுமத்தில் அறிமுகம் செய்திருந்தார்கள். அப்படியான அறிமுகங்களை உங்களுக்கான தகவலாகவும், எனக்கான ஒரு சேமிப்பாகவும் இங்கேயும் பகிர்ந்து வருகிறேன். இந்தப் போட்டியில் எனது “அந்தமானின் அழகு” மின்னூலை பாரதி கண்ணம்மா அவர்கள் அறிமுகம் செய்திருக்கிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி. பாரதி கண்ணம்மா அவர்கள் செய்த அறிமுகம் கீழே! 




#பயணம் 
புத்தகம்: அந்தமானின் அழகு 
ஆசிரியர்: வெங்கட் நாகராஜ் 

இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குச் சென்று வந்த பயணம் அனுபவம் குறித்த நூல் இது. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் குழுமத்தில் மொத்தம் 572 தீவுகள் உண்டு. அவற்றில் மக்கள் வசிப்பது 37 தீவுகள் மட்டுமே. நமது இருபது ரூபாய் நோட்டின் பிற்பகுதியில் அந்தமான் தீவுகளில் ஒன்றான நார்த் பே தீவின் படம் தான் இடம்பெற்றுள்ளது. 

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பார்க்க வேண்டிய இடங்கள்: 

போர்ட் பிளேர் தீவு: 

செல்லுலர் சிறை, கார்பின்ஸ் கோவ் கடற்கரை, கடல்வாழ் உயிரினங்கள் காட்சியகம், போஸ் தீவு, நார்த் பே தீவு, அருங்காட்சியகம், சிடியா டாப்பு, பாம்புத் தீவு 

ஸ்வராஜ் த்வீப் தீவு: 

காலா பத்தர் கடற்கரை, ராதாநகர் கடற்கரை, எலிஃபண்ட் கடற்கரை, விஜய் நகர் கடற்கரை 

ஷகித் த்வீப் தீவு: 

இயற்கை பாலங்கள் , லஷ்மண்பூர் கடற்கரை, சீதாபூர் கடற்கரை,பரத்பூர் கடற்கரை, ராம்நகர் கடற்கரை 

பாராடாங்க் தீவு: 

அலையாத்திக் காடுகள், சதுப்பு நிலக் காடுகள், சுண்ணாம்புக் குகைகள், கிளித்தீவு 

அந்தமான் நிக்கோபார் தீவுகள் எல்லா நாட்களிலும் சூடாகவே இருப்பதால் தொப்பிகள், கூலர்ஸ் பயன்படுத்தலாம். தீவுகளில் வாங்கும் பொருட்களுக்கு கண்டிப்பாக ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் பொருட்கள் விமான நிலையத்தில் பரிசோதனையின் போது பறிமுதல் செய்யப்படும். 

செல்லுலர் சிறை: 

அந்தமானின் சிறைச்சாலை, செல்லுலர் சிறைச்சாலை, காலபானி எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் சிறைச்சாலை தற்போது சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. சிப்பாய் கலகத்தை அடுத்து 1857 ஆம் ஆண்டிலிருந்தே அந்தமான் தீவிற்கு கைதிகள் அனுப்பி வைக்கப்பட்டாலும் இந்தச் சிறையானது 1906 ல் தான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இச்சிறையில் மொத்தம் 693 தனித்தனிச் சிறைகள். சிறைச்சாலையில் மாலை நேரத்தில் light and sound show நடைபெறுகிறது. 

அந்தமான் தீவுகளில் நிறைய water sports activities உண்டு. Scuba diving, snorkeling, glass boat ride எனப் பல ... 

-      பாரதி கண்ணம்மா 

***** 

வாசிப்பை நேசிப்போம் முகநூல் குழுவில் எனது மின்னூலை அறிமுகம் செய்திருக்கும் பாரதி கண்ணம்மா அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ”அந்தமானின் அழகு” மின்னூலை அமேசான் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் – கிண்டில் அன்லிமிட்டட் கணக்கு இருப்பவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்கள் ரூபாய் 100/- செலுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே செல்லலாம்! 

இன்றைய பதிவு வழி உங்களுடன் சில தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி. பதிவு பற்றிய உங்களுடைய கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்! நாளை மீண்டும் வேறோரு பதிவுடன் சந்திக்கும் வரை… 

நட்புடன், 


வெங்கட் நாகராஜ் 
புது தில்லி.

14 கருத்துகள்:

  1. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அழகாக விமர்சனம் செய்திருக்கிறார். திரு. பாரதி கண்ணம்மா அவர்கள். தங்களுக்கும் வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. இருவருக்கும் வாழ்த்துக்கள். விமர்சனம் நன்றாக செய்து இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. அன்பு வெங்கட்,
    சில பல காரணங்களால் பதிவுகளை
    வாசிக்காமல் இருந்திருக்கிறேன்.
    மன்னிக்கவும்.
    பாரதி கண்ணம்மாவுக்கு
    அழகான நூலை உணர்ந்து படித்து விமரிசனம்
    செய்ததற்கு வாழ்த்துகள்.
    நூலின் சிறப்பு எங்களுக்குத் தெரிந்ததே.
    இன்னும் நிறைய எழுத ஆசிகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /சில பல காரணங்களால் பதிவுகளை வாசிக்காமல் இருந்திருக்கிறேன்/ பரவாயில்லை வல்லிம்மா. சில சமயம் இப்படி அமைந்து விடுகிறது. நானும் தொடர்ந்து சில நாட்கள் பதிவுலகம் பக்கம் வராமல் இருந்திருக்கிறேன்!

      வாழ்த்தியமைகு நன்றிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. ஒவ்வொரு பகுதிக்கு சென்று
    அந்தமானின் அழகின்படி
    அனைத்து இடத்தையும்
    ரசித்து விட்டோமா...?

    என்று
    எங்களுக்கு வாய்ப்பு
    இனி
    உண்டா ஜி...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /எங்களுக்கு வாய்ப்பு இனி உண்டா ஜி...?/ வாய்ப்பு கிடைக்கும்... கிடைக்க வேண்டும்! நல்லதே நடக்கும் என நம்பிக்கை கொள்வோம் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. இனிய வாழ்த்துக்களும் மனம் நிறைந்த பாராட்டுக்களும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி மனோம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....