அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
உன் அன்பு எந்த இடத்தில் நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு உனக்கு இல்லை. நிராகரித்தவருக்கே என்பதை புரிந்து கொள் - புத்தர்.
*****
முகநூல் இற்றைகள் – 19 அக்டோபர் 2020:
நவராத்திரி கொலு:
நேற்றைய நாளில் எங்கள் குடியிருப்பிலேயே கீழ்த்தளத்தில் உள்ள தோழிகளின் இல்லங்களுக்குச் சென்று கொலு பார்த்து வந்தோம்! சற்றே அரட்டையுடன் நேரம் இனிமையாக கடந்தது.
மார்க்கெட்டிங் யுக்திகள்:
ஹலோ!
மேடம்! நாங்க Faberல இருந்து கால் பண்றோம்! சிம்னி சர்வீஸ் பண்ணனுமா??
(நீண்ட நாளாகவே கேட்டுக் கொண்டே இருந்தார்கள். சர்வீஸ் செய்து ஏறக்குறைய ஒரு வருடமும் ஆகி விட்டது)
சரி! நாளைக்கு அனுப்புங்க!
அட்ரஸ், பெயர் என சரிபார்த்துக் கொண்டு இணைப்பை துண்டித்தேன்.
மதியம் சற்றே ஓய்வு எடுத்துக் கொள்ளலாமே என்று படுத்தேன். அப்போது பார்த்து அலைபேசியில் அழைப்பு வர, எடுத்தால் மீண்டும் Faber-இல் இருந்து!
மேடம்! லிக்விட் வேணுங்களா??
எதுக்குப்பா?
சிம்னி க்ளீன் பண்ணத் தான் மேடம்!
ஏம்மா! சர்வீஸ் பண்ணும் போது க்ளீன் பண்ணமாட்டாங்களா???
பண்ணுவாங்க மேடம்! நீங்க க்ளீன் பண்ணத் தான் லிக்விட்!!
மொதல்ல நாளைக்கு சர்வீஸ் பண்ணச் சொல்லுமா! அப்புறம் பார்க்கலாம்! என்று துண்டித்தேன்.
அடுத்து சில நிமிடங்களில் மீண்டும் அழைப்பு. மேடம்! இன்னைக்கு அனுப்பலாங்களா!!!!!!!...:))
இன்ப அதிர்ச்சி!
நேற்று இரவு தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு.
ஹலோ! ஆதிலஷ்மி இருக்காங்களா!
நீங்க?
ஏய்! ஆதி! நான் கீதா டி!
கீதா! எப்படி இருக்கடி! எவ்வளவு வருஷமாச்சு உன்னோட பேசி.
1997 - 2000 பேட்ச். இயந்திரவியல் துறை தோழி. எங்கள் துறையில் உள்ள 60 பேரில் நாங்கள் மூன்றே பெண்கள்! நான், கீதா, உமா!
குடும்பச் சூழல், அறியாத வயது, கல்லூரிச் சூழல் என்று எவ்வளவோ பிரச்சனைகளைத் தாண்டி மூவரும் படித்து வெளியே வந்தோம். கல்லூரியில் முதல் வருடம் கொஞ்சம் பயந்தாலும் இரண்டாம் வருடத்திலிருந்து சக மாணவர்களுடன் கலாட்டா, அரட்டை என இனிமையாகவே சென்றது.
நிறைய விஷயங்களை பேசிக் கொண்டோம். ஆதி! உனக்கு ஞாபகம் இருக்காடி என்று அவள் சிலதைச் சொல்ல, நானும் சிலவற்றை ஞாபகப்படுத்த, ஆதி இன்னுமா அதெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கு? நினைவடுக்குகளில் பசுமையாக தங்கிப் போன சில நிகழ்வுகள் அல்லவா!!!
இனி தொடர்பில் இருப்போம்! என்று வைத்தேன்.
நண்பர்களே, இன்றைய பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
ஆதி வெங்கட்
இனிய சந்திப்பு மகிழ்ச்சி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குபுத்தர் வாக்கு ஆறுதல் அளிக்கிறது!
பதிலளிநீக்குகொலு அருமை. சிம்னி க்ளீன் பண்ணினார்களா இல்லையா? நட்பின் மீள் இணைப்பு மகிழ்ச்சி அளித்திருக்கும்.
புத்தர் வாக்கு - மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
புத்தர் எனக்காகவே இதெல்லாம் சொல்லி இருக்கார் போல! நானெல்லாம் நிராகரிப்பின் விளைவாக அழுதெல்லாம் இருக்கேன். இது தான் சரி.
பதிலளிநீக்குபுத்தர் வாக்கு - :) நம்மில் பலருக்காகவும் சொல்லி இருக்கிறார் கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படிச்சேன் முகநூலிலும், இங்கேயும்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
நீக்குபுத்தர் வாக்கியம் அருமை.
பதிலளிநீக்குசந்திப்புகள் தொடரட்டும்.
வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடிததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கதம்பம், புத்தர் வாக்கு, கொலு,
பதிலளிநீக்குபழைய தோழியின் சந்திப்பு எல்லாமே இனிமை.
உங்க சிம்னி சுத்தம் செய்ய வந்தாங்களா.
வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.
நீக்குசிம்னி சுத்தம் செய்ய வந்து விட்டார்கள் மா - அது அடுத்த கதம்பம் பகிர்வில்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அவருக்கென்ன..
பதிலளிநீக்குஅவர் சொல்லிட்டுப் போய்ட்டார்!...
அவஸ்தை நமக்கல்லவா!...
அவருக்கென்ன சொல்லிவிட்டார் - ஹாஹா... உண்மையில் அவஸ்தை நமக்குதான் துரை செல்வராஜூ ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கொலு அலங்காரம் அருமை..
பதிலளிநீக்குவாழ்த்துகள்..
வாழ்த்தியமைக்கு நன்றி துரை செல்வராஜூ ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குகதம்பம் அருமையாக உள்ளது. வாசகம் சிறப்பு. ரசித்தேன். உங்கள் தோழி வீட்டு கொலு மிகவும் நன்றாக உள்ளது. சிம்னி க்ளீன் பண்ண வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். உங்கள் பழைய தோழியை தீடிரென அலைபேசி மூலமாக சந்தித்துப் பேசி மகிழ்ந்தமைக்கு வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கொலு அருமை. கல்லூரி வாழ்க்கை பலருக்கு நீங்கள் சொல்வது போல் தான் நடந்திருக்கிறது. பழைய தோழியுடன் மீண்டும் பேசும் வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கும்.
பதிலளிநீக்குபதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கயல் இராமசாமி மேடம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான பதிவு. நீண்ட நாள் நண்பர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைப்பது மகிழ்சியே.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.
நீக்குசந்திப்புகள் தொடரட்டும்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்கு