புதன், 21 அக்டோபர், 2020

வாசிப்பை நேசிப்போம் – பாந்தவ்கர் வனம் – ராம தேவேந்திரன்

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

தவறுகளைத் தன் மீது வைத்துக் கொண்டு மௌனம் காப்பவர்களிடம் பார்த்துப் பேசுதல் வேண்டும். கோபத்தில் நாம் பேசும் வார்த்தைகளை வைத்து இறுதியில் நம்மையே குற்றவாளி ஆக்குவார்கள். 

***** 

முகநூலில் “வாசிப்பை நேசிப்போம்” இருக்கும் குழுமம் பற்றி சென்ற வாரத்தின் ஒரு பதிவில் சொல்லி இருந்தது நினைவில் இருக்கலாம். குழுமத்தில் தொடர்ந்து பல நூல்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறார்கள். அலைபேசி அலப்பறைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பலவும் வந்து புத்தகம் வாசிப்பவர்கள் எண்ணிக்கையைக் கணிசமாக குறைத்திருக்கிறது என்று தோன்றினாலும், இன்னமும் நிறைய பேர் வாசிப்பை மட்டுமே ஸ்வாசிக்கிறார்கள் என்று பார்க்கும்போது மனது மகிழ்ச்சி அடைகிறது. “வாசிப்பை நேசிப்போம்” குழுவினர் தற்போது நடத்திக் கொண்டிருக்கும் #Reading_Marathon2020 என்ற தொடர் வாசிப்பு போட்டியில் பங்கு பெறும் விதமாக எனது “பாந்தவ்கர் வனம்” மின்னூலை திரு ராம தேவேந்திரன் அறிமுகம் செய்திருக்கிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி. திரு ராம தேவேந்திரன் அவர்கள் செய்த அறிமுகம் கீழே! 

#Reading_Marathon2020 

#RM522 

#35/50 

கடிதம்/பயணம் 

நூல் : பாந்தவ்கர் வனம் 

ஆசிரியர் : வெங்கட் நாகராஜ் 

பதிப்பு : அமேசான் மின்நூல் 

ஆசிரியர் வெங்கட் நாகராஜ் பல பயன நூல்கள் வெளியிட்டுள்ளார். தனது அனுபவங்களை பகிரும் போது அந்த அனுபவங்களை படிப்பவர்களை தன் கூடவே அழைத்துசெல்லும் அருமையான மொழிநடையில் ஒவ்வொரு பயணகட்டுரையும் கொடுப்பதில் நண்பருக்கு நிகர் நண்பரே!! 


இந்த பாந்தவ்கர் வனம் மின்நூல் வழி மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் மற்றும் அதன் அருகே உள்ள சில இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார். இந்தப் பயணத்தில் வனப் பயணமும் உண்டு – அதாவது Bபாந்தவ்கர் என்ற இடத்திலுள்ள வனத்திற்கு நம்மை அழைத்து செல்கிறார். 

இயற்கை எழிலும், நர்மதை நதியில் உல்லாசப் படகுப் பயணமும், ஒரு சிறு படகில் 10 பேர் அமர்ந்து நதியில் இருக்கும் மார்பிள் பாறைகளையும் அதன் வெவ்வேறு வண்ணங்களையும் கண்டு ரசிக்க நம்மை அழைத்து செல்கிறார். 

ஜபல்பூர் வாகனத் தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்கிறார். 

நர்மதை நதியின் அமைதியான நீரோட்டத்தினை எதிர்த்து படகு செல்கிறது. இரண்டு பக்கங்களிலும் சலவைக்கல் பாறைகள் அணையாக இருக்க, நர்மதை நதி குறுகி ஓடிக்கொண்டிருக்கிறது. சில இடங்களில் மிகவும் குறுகலாக இருக்கிறது. ஓரிடத்தில் ஒரு பக்கப் பாறையிலிருந்து இன்னோர் பக்கப் பாறைக்கு குரங்கு தாவும் அளவுக்கே இருப்பதால் அந்த இடத்திற்குப் பெயரே ”பந்தர் கூத்னி". ”அமைதியான நதியினிலே ஓடம்” என்று பாடத் தோன்றியது. ஓடத்தினைச் செலுத்தும் நபர் தொடர்ந்து ஹிந்தியில், நகைச்சுவையோடு அழகிய வர்ணனை செய்ததை ரசிக்க முடிந்தது. 

ஒரு வயதான பாட்டி ஒரு சிறிய மூங்கில் தட்டில் அவர்களின் சுருங்கிய தோலைப் போன்ற தோற்றத்தையுடைய பழத்தினை விற்றுக் கொண்டிருந்தார். “இது என்ன பழம் பாட்டி?” என்று நான் கேட்க, "बेटा, एह उबला हुआ बेर हे" எனச் சொன்னார். ’என்னய்யா இது திடீர்னு ஹிந்திக்குத் தாவினா, மறத்தமிழர்களான எங்களுக்கு எப்படிப் புரியும்?’ என்று கேட்பவர்களுக்கு, “அவித்த இலந்தைப் பழம்!’. 

Bபாந்தவ்கர் விலங்குகள் பூங்கா 450 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. நான்கு பகுதிகளாகப் பிரித்து திறந்த ஜீப்பில் சுற்றுலாப் பயணிகளை அங்கு அழைத்துச்செல்கிறார்கள். 

அது சரி, ”அவர் இத்தனை புலிகளை வேட்டையாடியதற்கும், உங்கள் பயணத்தின் போது புலிகள் ஓடி ஒளிந்து கொண்டதற்கும் என்ன சம்பந்தம்?” என்று தானே கேட்கிறீர்கள்? இருக்கிறது நண்பர்களே இருக்கிறது. இத்தனை நேரம் மஹாராஜா ரகுராஜ் சிங் ஜி ஜு தியோ அவர்களின் மகன் என்றுதானே சொன்னேன், அவரின் பெயரைச் சொல்லவில்லையே! அவரது பெயரில் தான் இருக்கிறது காரணம். – அவரது பெயர் மஹாராஜா வெங்கட் ராமன் சிங் ஜி ஜு தியோ! என் பெயர் வெங்கட் ராமன். 

என நம்மையும் கூடவே அழைத்து செல்லும் விதமே மிக அழகு !!! 

நன்றி 

ராம தேவேந்திரன் 

***** 

வாசிப்பை நேசிப்போம் முகநூல் குழுவில் எனது மின்னூலை அறிமுகம் செய்திருக்கும் திரு ராம தேவேந்திரன் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ”பாந்தவ்கர் வனம்” மின்னூலை அமேசான் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் – கிண்டில் அன்லிமிட்டட் கணக்கு இருப்பவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்கள் ரூபாய் 70/- செலுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே செல்லலாம்! 

இன்றைய பதிவு வழி உங்களுடன் சில தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி. பதிவு பற்றிய உங்களுடைய கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்! நாளை மீண்டும் வேறோரு பதிவுடன் சந்திக்கும் வரை… 

நட்புடன், 



வெங்கட் நாகராஜ் 
புது தில்லி.

12 கருத்துகள்:

  1. இன்றைய வாசகம் நேற்று அப்படியே நான் யோசித்தேன் - என் சொந்த விஷயம் ஒன்றில்.  

    விமர்சனம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் - பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அருமையாக விமர்சித்து இருக்கிறார் ஜி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. வாசகமும் புத்தக விமர்சனமும் மிக அருமை சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. விமர்சனம் நன்றாக செய்து இருக்கிறார்.
    வாழ்த்துக்கள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. நன்கு லயித்து எழுதியுள்ளார். அவருக்கு நன்றி. உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....