அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ, அவர்கள் தான் விட்டுக் கொடுப்பார்கள், அனுசரித்துப் போவார்கள், பொறுத்துப் போவார்கள் - வேதாத்ரி மகரிஷி.
*&*&*&*&*&*&
விசிஆர் - 22 அக்டோபர் 2020:
சிறுவயதில் எங்கள் குடியிருப்பில் உள்ள ஒருவர் வீட்டில் தான் முதன்முறையாக VCRல் படம் பார்த்தேன்..Jurassic park என்று நினைவு! வாடகைக்கு டெக் எடுத்து வந்து பார்ப்பது அப்போது வழக்கம் தானே! எல்லா குட்டீஸும் அந்த வீட்டில் கூடிவிடுவோம்..🙂 அதன் பிறகு VCD, DVD ப்ளேயர்கள் வந்தன..இப்போது YouTube, Hotstar, Netflix காலம்!
இன்று மதியம் சற்றே கண்ணை அசத்திய நேரம் தெரிந்தவரிடமிருந்து அழைப்பு...🙂 (தூக்கத்தில் கல்லைப் போடத் தான் எத்தனை பேர்??) உங்ககிட்ட VCR இருக்கா? இருந்தா தாங்களேன் என்றார்! ஒரு நிமிடம் யோசித்தேன்..🙂 பிறகு தான் நினைவுக்கே வந்தது..🙂
எங்கிட்ட அதெல்லாம் இல்லை என்று சொல்லி ஃபோனை வைத்தேன். இது மாதிரி இரவல் கேட்டதெல்லாம் பெரிய லிஸ்ட்டே போடலாம்..🙂 எல்லோருக்குமே என் முகம் ஏனோ சட்டென்று நினைவுக்கு வந்து விடும்..:))
___________________
இனிப்பு இல்லாத கொண்டாட்டங்களா!!
இன்று சஹானா இணைய இதழில் என்னுடைய ஸ்வீட் ரெசிபி ஒன்று பிரசுரமாகியுள்ளது..சட்டென்று செய்ய எளிமையானது..பிரசுரித்த தோழி Bhuvana Govind க்கு நன்றிகள்!
இணைப்பு இதோ! மில்க் பேடா
_______________________
பராமரிப்பு:
ஒவ்வொரு முறை சிம்னி சர்வீஸுக்கு வரும் நபர்களும் சொல்லுவது போல தான் இம்முறையும்! எண்ணெயே யூஸ் பண்ணமாட்டீங்களா??? மோட்டார்ல கூட எண்ணெய் இல்ல! சில பேர் வீட்டுல ஃபில்டர்ல இருந்தும், மோட்டார்ல இருந்தும் சொட்டும்..சுவரெல்லாம் எண்ணெயா இருக்கும்! என்பது தான்.
மாதத்தில் இருமுறை எண்ணெயில் பொரித்தெடுப்பேன்! வருடத்துக்கு ஒருமுறை தான் சர்வீஸ்! முன்பெல்லாம் ஃபில்டர்களை நானே க்ளீன் செய்வேன்..இப்போதெல்லாம் நடுவில் நானும் செய்வதில்லை! பராமரிப்பு அவரவர் கையாளும் விதத்தில்!
நேற்றைக்கு முந்தைய நாள் எங்கள் தளத்தில் உள்ள ஒருவர் வீட்டில் பார்த்த கொலுவும் இணைத்திருக்கிறேன்.
இந்த வார காணொளிகள்:
பைனாப்பிள் ரசம்!
சென்ற வாரம் வெளியில் சென்ற போது வழியில் மாம்பழ அக்காவைப் பார்த்தேன். அவரிடம் வாங்கிய பைனாப்பிளை வைத்து ரசம் செய்து இந்த வாரம் பகிர்ந்துள்ளேன்..
மாம்பழ அக்கா!!
நம்ம வீட்டுக்கு மாம்பழ சீசனில் அருகில் உள்ள கிராமத்து தோட்டத்து பழங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்வார் இந்த அக்கா! அக்கா இப்போது புதிதாக பழக்கடை போட்டுள்ளார்.. ஆட்டோவில் போனாலும், மாஸ்க் போட்டு முகத்தை மறைத்திருந்தாலும் எப்படியாவது கண்டுபிடித்து கைகாட்டுவார்..🙂
Aarthi plates!
நவராத்திரியில் தாம்பூலத்தில் வைத்து தந்த தட்டுகள் ஒரே டிசைனில் ஒன்று போலவே ஐந்து இருக்கின்றன..🙂 என்ன செய்வது?? எவர்சில்வர் வேறு! வீணாகப் போகவும் வாய்ப்பில்லை! ஒன்றை புழக்கத்துக்கு எடுத்துக் கொண்டேன்! இரண்டை ஆர்த்தி தட்டுகளாக மாற்றலாம் என்று மகள் செய்து இந்த வார காணொளியாக பகிர்ந்துள்ளாள்..
முன்பெல்லாம் தாம்பூலத்தில் வைத்துத் தரும் ப்ளவுஸ் பிட் தான் சுற்றிக் கொண்டே இருக்கும் என்று சொல்வார்கள்.. பெரும்பாலும் மேட்சிங் இல்லையெனில் அதை யாரும் தைத்துக் கொள்ள மாட்டார்கள்..🙂 வேறு யாருக்காவது வைத்து தந்து விடுவார்கள்.. இப்படித்தான் சுற்றிக் கொண்டே இருக்கும்..🙂
அதற்கு மாற்றாகத் தான் உபயோகமான பொருளாக இருக்கட்டும் என்று இப்போது எதையாவது தருகிறார்கள். ஆனாலும் ஒரே பொருளை எத்தனை தான் பயன்படுத்துவது??? இதுவும் யோசிக்க வேண்டிய விஷயம் இல்லையா...:))
இந்த வார காணொளிகளை பார்த்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்..
ரோஷ்ணி கார்னர் - 26 அக்டோபர்:
நவராத்திரி சமயத்தில் மகள் வரைந்த துர்கா படம்…
இந்த வாரத்தின் கதம்பம் பதிவாக பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்.
கதம்பம் வழக்கம் போல நன்றாக இருக்கிறது
பதிலளிநீக்குகதம்பம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி மதுரைத் தமிழன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகமும் கதம்பமும் அருமை மேடம்.
பதிலளிநீக்குஅறிவுடன் ஆணவமும் வளர்வதால் பெரும்பாலான அறிவாளிகளும் விட்டுக்கொடுப்பதற்கு கடினப்படுகிறார்கள்.
வாசகமும் கதம்பமும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கதம்பம் அருமை..
பதிலளிநீக்குஅன்னாசிப் பழ ரசம் செய்து பார்க்க வேண்டும்..
ரோஷ்ணியின் கை வண்ணம் அருமை...
கதம்பத்தின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.
நீக்குஅன்னாசிப் பழ ரசம் செய்து பார்த்து சொல்லுங்கள்.
ரோஷ்ணியின் கை வண்ணம் - நன்றி ஐயா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கதம்பம் அருமை ரோஷ்னி ஓவியம் நன்று.
பதிலளிநீக்குநவராத்திரி படங்கள் அழகு.
கதம்பத்தின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வழக்கம்போல கதம்பம் அருமை. ரோஷ்ணிக்கு வாழ்த்து
பதிலளிநீக்குகதம்பத்தின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குரோஷ்ணி - வாழ்த்தியமைக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இன்றைக்கு VCR பயன்பாடு இருக்கிறதா என்று தெரியவில்லை... இரு நாட்களுக்கு முன் சுத்தம் செய்யும் கண்ணில் பட்டது...! 'எடுத்து பரணில் வைத்துவிடலாமா' என்று பார்த்த போது, பின்புறம் 5.1-ல் தொடர்பு...! அந்த சிக்கலை சுத்தம் செய்ய தான் அதிக நேரம் எடுத்தாலும், பிரித்து பரணில் போடவில்லை...!
பதிலளிநீக்குஓவியம் சிறப்பு... மகளுக்கு வாழ்த்துகள்...
// பைனாப்பிள் ரசம் : எப்படிச் செய்யணும் மாமூ...? // எழுத்தில் வருமா...? வராதா...?
VCR சில வீடுகளில் இன்னும் வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன் தனபாலன்.
நீக்குஓவியம் - வாழ்த்தியமைக்கு நன்றி.
பைனாப்பிள் ரசம் - வருவதற்கு வாய்ப்பில்லை! :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அன்பை பற்றிய கருத்து மாறாது. ஆனால் அறிவாளிகள் பற்றிய கருத்து aravind sir கூறியது போல் தான் உள்ளது. ரோஷ்யின் ஓவியம் அருமை 👌. சிம்னியை service செய்பவர் பார்த்து ஆச்சரியப்பட்டால் தங்கள் வேலையில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
பதிலளிநீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி கயல் இராமசாமி ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
Pine apple இங்கு கிடைப்பது கடினம். எனக்கு மிகவும் பிடிக்கும். Try பண்ண முடியாது. பின்னால் செய்து பார்க்கிறேன்.
பதிலளிநீக்குபைனாப்பிள் கிடைக்கிறதே - கோல் மார்க்கெட்டில் நிறைய பார்க்கிறேன் கயல் இராமசாமி மேடம். கிடைத்தால் செய்து பாருங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அனைத்தையும் ரசித்தேன். ரோஷ்ணி படத்துக்கு பேஸ்புக்கில் துளசி டீச்சரின் கமெண்ட்டை ரசித்திருந்தேன்!
பதிலளிநீக்குகதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கதம்பம் சிறப்பு. ஒரு முறை பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா ,'அன்பாக இருப்பது அறிவுடைமை' என்றது என்னை நிறைய யோசிக்க வைத்தது. அதற்கு விளக்கம் வேதாத்திரி மகரிஷியின் வாக்கியத்தில் கிடைத்து விட்டது.
பதிலளிநீக்குபைனாப்பிள் கேசரி செய்வேன். ரசம் ஒரே ஒரு முறை செய்தேன்.
ரோஷிணியின் ஓவியம் அழகு. ஆனால் அம்பிகை சற்று உக்கிரமாக இருப்பது போல் தோன்றுகிறதே? எனக்கு மட்டும்தானா?
பேடாவை பார்க்கும் பொழுதே சாப்பிடத் தோன்றுகிறது.
கதம்பத்தின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா.
நீக்குபைனாப்பிள் கேசரி - கேட்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது.
ரோஷ்ணியின் ஓவியம் - காளி படம் என்பதால் உக்கிரமாக இருக்கிறது.
பேடா - :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வேதாத்ரி மகரிஷி அவர்கள் வாசகம் பகிர்வு அருமை.
பதிலளிநீக்குஅன்பு அனைத்தையும் சகித்துக் கொள்ளும்.
கதம்பம் அருமை.
ரோஷ்ணி செய்த ஆரத்தி தட்டுக்கள், ஓவியம் அழகு.
வாழ்த்துக்கள்.
வாசகம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குகதம்பத்தின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அன்பு ஆதி ஆரம்ப வாசகம் அருமை.
பதிலளிநீக்குபைன் ஆப்பிள் ரசம் அருமை. இங்கே மகளும் செய்வார்.
தூத் பேடா சூப்பர்.
அழகான அலங்காரங்களோடு பார்க்கவே எடுத்துக் கொள்ளத் தோன்றுகிறது.
சிம்னி சுத்தம் செய்ய நீங்கள் ஏதாவது எண்ணேய் விட்டு வைக்க வேண்டியது தான். அன்பு
ஆதி, உங்கள் சமையலின் அருமை புரிகிறது.
அன்பு வாழ்த்துகள்.
ரோஷ்ணியின் துர்கா மாதா அருமை.
குழந்தைக்குப் பாராட்டுகள்.
அதே போல வெறும் தட்டுகளை ஆரத்தித் தட்டுகளாக்கிய
நேர்த்திக்கு வாழ்த்துகள்.
வாசகம், கதம்பத்தின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் மிக அருமை ஆதி.
பதிலளிநீக்குமில்க் பேடா சூப்பர். ரோஷினியின் கைவண்ணம் ஆரத்தி தட்டு , படம் எல்லாம் சூப்பர். பாராட்டுகள்.
பைன் ஆப்பிள் ரசம் அங்கு பார்த்த் அனினைவு. அங்கு நான் கமென்ட் போட்டேனா நினைவில்லை பார்க்கிறேன் ஆதி.
அனைத்தும்ரசித்தேன்
இனி அவ்வப்போது வலைப்பக்கம் எட்டிப் பார்ப்பேன். வேலைகளைப் பொருத்து
கீதா
வாசகம், கதம்பத்தின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
எல்லாம் முகநூலிலும் பார்த்தேன்.பைனாப்பிள் ரசம் இரண்டு நாட்கள் முன்னர் கூடச் சாப்பிட்டோம். துர்கை தான் கோபமாகவே இருக்கிறாள். பானுமதிக்கும் அப்படியே தெரிகிறது. பேடா ரொம்பப் பிடித்த இனிப்பு உணவு. கல்யாணம் ஆன புதுசில் புனாவிலிருந்து நண்பர்கள் நிறையக் கொடுத்து அனுப்புவார்கள். பேடாவும் லக்ஷ்மிநாராயண் சூடாவும்! முழுசாக முந்திரிப்பருப்புப் போட்டுச் சூடாவும் காரசாரமாக இருக்கும்.
பதிலளிநீக்குபதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இங்கே நான் யார் ரவிக்கைத்துணி கொடுத்தாலும் வாங்கி வைத்துக் கொண்டு விடுவேன். தேவை எனில் பயன்படுத்தலாம். இல்லாட்டியும் லைனிங் வைக்கப் பயன்படுகிறது. இங்கே இந்த வருஷம் யாரும் கிஃப்ட் கொடுக்கவில்லை. எல்லோருமே ரவிக்கைத்துணி தான். நானும் வாங்கவில்லை. பத்துப் பதினைந்து ரவிக்கை பிட் 100 ரூபாயில் வாங்கி வைத்திருந்ததைக் கொடுத்தேன். அதுக்கும் நான் போகலை. மாமாவே வாங்கிண்டு வந்துட்டார்.
பதிலளிநீக்குநவராத்திரி நினைவுகள் - நன்று.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
எனக்கு நான் வாங்கும் புடைவைகளின் நிறம் போலவே வைச்சுக் கொடுக்கும் புடைவைகளுக்கும் அமைந்து விடும். ஒரே நிறத்தில் சுமார் 4 புடைவைகளாவது இருக்கும்! :)))) அதிலும் பச்சை! கேட்கவே வேண்டாம். :)))))
பதிலளிநீக்குபச்சை - ரொம்பவே பிடித்த நிறம் போல! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
ரோஷினி கைவண்ணம் அருமை வாழ்த்துகள்.
பதிலளிநீக்குரோஷ்ணியின் கைவண்ணம் - வாழ்த்தியமைக்கு நன்றி மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.