செவ்வாய், 13 அக்டோபர், 2020

கதம்பம் – நூல் அறிமுக நிகழ்வு – காணொளிகள் – கொலு பொம்மைகள்

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

வாய்ப்புகள் விலகும்போது அதை எண்ணி கவலைப் படாதே... எல்லாம் நன்மைக்கே என்று தொடர்ந்து முயற்சி செய்... உனக்கான மாபெரும் வெற்றி காத்திருக்கிறது!
*****

நூல் அறிமுக நிகழ்வு: 


தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளையும், ஆஸ்திரேலிய தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் நூல் அறிமுக நிகழ்வில் நேற்று "சஹானா இணைய இதழ் ஆகஸ்ட் 2020" மின்னிதழை திறனாய்வு (review) செய்யும் வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். 

என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பைக் கொடுத்த பவள சங்கரி அம்மாவுக்கும், தோழி Bhuvana Govindக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! ஆன்றோருக்கும், சான்றோருக்கும் மத்தியில் உரையாடியது இப்போது நினைத்தாலும் 'நான் தானா!' என்று தான் தோன்றுகிறது. 

முதலில் திருவதிகை என்று ஆன்மீக நூலை திறனாய்வு செய்தார் முனைவர் இராஜேஸ்வரி அம்மா அவர்கள். அந்த நூலின் ஆசிரியர் அன்பு ஜெயா ஐயா அவர்கள். இவர்களுக்கு அடுத்தது எங்களுடையது! 

நேரலையில் உரையாடுவது என்றால் சும்மாவா!! என் வலைப்பூவிலும் (blog), முகநூலிலும் வாசிப்பனுபவங்களை எழுதியிருக்கிறேன். ஆனால்! இது வித்தியாசமான அனுபவம்! ஏறக்குறைய ஒரு வாரமாக இதற்காக தயார் செய்தேன்! என்னுடைய மனநிலை எப்படி இருந்தது என்று என்னவருக்கும், மகளுக்கும் தான் தெரியும் :) இதற்கிடையே என்னுடைய சேனலுக்கும் வீடியோ தயார் செய்ய வேண்டியிருந்தது! 

குடும்பத்தலைவி, சமையல் சேனல் ஆரம்பித்திருக்கிறேன் என்று சென்று கொண்டிருந்த வாழ்வில் புதிய பரிமாணமாக இந்த நிகழ்வை கருதுகிறேன்! இந்த நிகழ்வை யூட்டியூபில் சென்று காணலாம். சற்றே நீண்ட காணொளி – சஹானா இதழ் பற்றிய திறனாய்வு ஒரு மணி ஒரு நிமிடத்திலிருந்து (01.01.00) வருகிறது. இணைப்பு இதோ. 



ஆதியின் அடுக்களை: 

ஆதியின் அடுக்களைச் சேனலில் இந்த வாரப் பகிர்வின் இணைப்பு இதோ... 





ஸ்ட்ரெஸ் பஸ்டர் மண்டலா: 




மகளின் சேனலில் இந்த வாரம், Stress buster mandala பகிர்ந்திருக்கிறாள்... 



கொலு பொம்மைகள் – 12 அக்டோபர் 2020: 





நேற்று மகளுக்கு English guide வாங்க வெளியே சென்றிருந்தோம். இரண்டு கடைகளில் விசாரித்து இல்லையெனச் சொல்ல, வழக்கமாக வாங்கும் தாத்தாவிடம் கேட்ட போது "இரண்டு பேர் கேட்டிருக்காங்க! சொன்னா நாளைக்கு வாங்கிட்டு வரேம்மா! நூறு ரூபா அட்வான்ஸ் குடும்மா! என்றார். இருநூறு ரூபாய் கொடுத்து விட்டு வந்தேன். இன்று போய் வாங்க வேண்டும்! 

அப்போது அருகே நவராத்திரி கொலு பொம்மைகள் கடை போடப்பட்டிருந்தது! அழகான மண் பொம்மைகள்! சுற்றி வந்தேன். இந்த வருடம் எங்களுக்கு பண்டிகை இல்லையென்றாலும், வரும் வருடத்திலாவது இருக்கட்டும் என்ற நம்பிக்கையில் ஏதாவது வாங்கலாமே என்று பார்த்துக் கொண்டிருந்தேன். 

அந்த அக்காவிடம் விலையை விசாரித்துக் கொண்டும் எங்கிருந்து கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள் என்றும் கேட்டுக் கொண்டிருந்தேன். அஷ்டலஷ்மி செட் முகம் அழகாகவும், ஏறக்குறைய முக்கால் அடிக்கு குறையாத உயரத்துடனும் இருந்தது. எங்களிடம் இல்லாததால் வாங்கிக் கொண்டேன் (அதில் நானும் இருக்கிறேனே… 

அந்த அக்காவிடம் "ஃபோட்டோ எடுத்துக்கலாமா" என்று கேட்டதும், எடுத்துக்கோப்பா! "இந்த நெட்ல போட்டா வருவாங்களாமே?" என்றார். ஆமாங்க்கா! நான் போட்டு விடறேன்! உங்க பேர், ஊரும் சொல்லுங்க! என்று கேட்டு வீடியோவாகவும் எடுத்துக் கொண்டேன். 

அக்காவைப் பற்றிய தகவல்களுடன் அங்கிருந்த பொம்மைகளை வீடியோவாக எடுத்ததை என்னுடைய ஆதியின் அடுக்களைச் சேனலில் பகிர்ந்திருக்கிறேன். பார்த்து ரசிக்கலாமே! இணைப்பு இதோ. 


நேரம் கிடைக்கும் போது எல்லாவற்றையும் பார்த்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன். 

நண்பர்களே, இன்றைய பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

நட்புடன் 



ஆதி வெங்கட்

24 கருத்துகள்:

  1. சஹானா இணைய இதழ்த் திறனாய்வுக் கலந்துரையாடலுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.  காணொளி பின்னர்தான் காண வேண்டும்.

    நவராத்திரி இந்த வருடம் எப்படிப் போகப்போகிறது என்று பார்க்கவேண்டும்.

    ஆதியின் அடுக்களை சப்ஸ்க்ரைப் செய்திருந்தேன்.  ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. சென்று மிளகாய்ப்பொடி பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவராத்திரி இந்த வருடம் நன்றாகவே இருக்கட்டும்.

      சப்ஸ்க்ரைப் செய்திருப்பது தெரிந்து மகிழ்ச்சி. ஏன் வரவில்லை - நோட்டிஃபிகேஷன் ஆஃப் செய்து வைத்திருக்கிறீர்களா என்று பாருங்கள் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. படிச்சேன் முகநூலிலும். நிகழ்ச்சியை நேரில் காணாவிட்டாலும் யூ ட்யூப் மூலம் கண்டேன். கொஞ்சம் பதட்டம் கண்களில் தெரிந்தாலும் ஆதி பிரமாதமாகச் சமாளித்துவிட்டார். மகள் வேறே அருகேயே நின்று கொண்டிருந்தாள் போல! திறனாய்வுக்காகவும் நிறைய உழைத்திருக்கிறார். பொதுவில் நல்லதொரு நிகழ்ச்சி. கொலு பொம்மைகள் இங்கே வர ஆரம்பித்துவிட்டன என்பது தெரியும். ஆனாலும் நான் வெளியே செல்வதே இல்லை. இந்த வருஷம் நவராத்திரிக் கொலுவும் வைக்க முடியாது. :))))) சுண்டல் கலெக்ஷனுக்குக் கூப்பிட்டால் உண்டு. :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுண்டல் கலெக்‌ஷனுக்குக் கூப்பிட்டால் உண்டு - :) இங்கேயும் அதே தான் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. "சஹானா இணைய இதழை அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கு நன்றி நண்பரே.
    திறனாய்வு - REVIEW என்பதன் மொழி மாற்றம் என்பது எனக்கு புதிது. தங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு மின்னிதழை உங்களுக்கும் அறிமுகம் செய்து வைக்க முடிந்ததில் மகிழ்ச்சி குமார் ராஜசேகர் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வாழ்த்துகள் தொடரட்டும் காணொளி விவாதங்களும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அனைத்திலும் மேம்பட பாராட்டுகளும் வாழ்த்துகளும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. கொலு படங்கள் அருமை. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  7. You tube ல் ஆதி வெங்கட் book review பார்த்தேன். எழுதும் போது உள்ள ஆற்றல் போல்,நூல் திறண் ஆய்வு செய்வதிலும் காண முடிந்தது. Congrats.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  8. //சஹானா இணைய இதழ் ஆகஸ்ட் 2020" மின்னிதழை திறனாய்வு (review) செய்யும் வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். //

    முகநூலில் வாழ்த்தினேன், இங்கும் சொல்கிறேன். வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    கொலு பொம்மை காணொளி பார்த்தேன் லைக் செய்தேன், நன்றாக பேசினார் அதி.
    ரோஷ்ணியின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் மண்டலா நன்றாக இருக்கிறது.என் தம்பி மகளும் இப்படி வரைந்து இருக்கிறாள். வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் ரோஷ்ணிக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. You tube ல் ஆதி வெங்கட் book review பார்த்தேன். எமுத்தாற்றல் போல், பேச்சு ஆற்றலும் அருமையாக இருந்தது. குரலில் தன் முழு திறமையும் மிகுந்து இருந்தது. நல்ல செயல் . நல்ல மேடை. பலரும் பயன் அடைவார்கள். வாழ்த்துகள் ஆதி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கயல் இராமசாமி மேடம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. வாழ்த்துகள். மென்மேலும் சிறப்புறவும் வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. முகநூலில் பொம்மைகள் பற்றி மட்டும் வாசித்தேன். காணொளி இனிமேல்தான் பார்க்க வேண்டும். வாழ்த்துகள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி பானும்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....