அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் விஷயத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
ஒரு மனிதன் புத்தரிடம் கேட்டான்: “எனக்கு மகிழ்ச்சி வேண்டும்.”
புத்தர் கூறினார்: முதலில் “எனக்கு” என்பதை கைவிடு. அது அகந்தை!
அடுத்தது “வேண்டும்” என்பதை கைவிடு. அது ஆசை!
இதோ… இப்போது உனக்கு தேவையான “மகிழ்ச்சி” உன்னிடமே இருக்கிறது!
*****
சற்றே இடைவெளிக்குப் பிறகு ஒரு நிழற்பட உலாவுடன் இந்த ஞாயிறில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. எனது DSLR இத்தனை நாள் பயன்படுத்தப்படாமல் உள்ளேயே இருந்தது. நேற்று அதன் பயன்பாடு நீண்ட நாட்கள்… நாட்களல்ல மாதங்கள்… கழித்து! தில்லி நண்பர் ஸ்ரீபதி அவர்களின் வீட்டில் இந்த வருடம் வைத்திருக்கும் கொலுவுக்குச் சென்று அங்கே நிழற்படங்கள் எடுத்து வந்தேன். ஒரு காணொளியும் உண்டு! நிழற்படங்கள் சில ரிபீட்டு என்று சந்திரமுகி படத்தில் வருவது போல இருக்கலாம்! ஒரு அறை முழுக்க கொலு பொம்மைகள் வைத்திருக்கிறார்கள் நண்பர் வீட்டில்! தரையிலிருந்து மேலே உத்திரம் வரை பொம்மைகள்! நிறைய பொம்மைகள் செட் செட்டாக! பொதுவாக நவராத்திரி கொலு என்றால் தசாவதார செட், அஷ்டலக்ஷ்மி செட் போன்றவை தான் பல வீடுகளில் இருக்கும்! இங்கே அவை மட்டுமல்லாது, நவதுர்க்கா செட், நவ நரசிம்ஹர் செட், சப்த மஹிஷி செட், கோவர்த்தன கிரி செட், பஞ்ச நாராயணர் செட், கிருஷ்ணர் வஸ்த்ரஹரண் செட், குபேரன் செட், நவ சக்தி செட், அறுபதாங் கல்யாண செட், கிருஷ்ணரின் ராசலீலா செட், காளிங்க நர்த்தன செட், மந்தி போஜனம் செட், சுருட்டப்பள்ளி சிவன், விளக்கு பூஜா செட், திருப்பதி ப்ரஹ்மோத்ஸவம் என பல வித செட் செட்டாக பொம்மைகள் இந்த கொலுவில் உண்டு.
வாருங்கள் இந்த வருடத்தின் நண்பர் வீட்டு கொலு பார்க்கலாம் – நிழற்பட உலாவாக! கூடவே கொலுவினை முழுவதாக கண்டு ரசிக்க நண்பர் வீட்டில் எடுத்த ஒரு காணொளிக்கான சுட்டியும் உண்டு! வாருங்கள் பார்க்கலாம்!
முழுவதாக எடுத்த காணொளியினைப் பார்க்க கீழேயுள்ள சுட்டியைச் சுட்டலாம்!
என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!
வேறு ஒரு பதிவுடன் மீண்டும் சந்திக்கும் வரை...
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
படங்கள் ஒவ்வொன்றும் அழகு
பதிலளிநீக்குநிழற்பட உலா அருமை
நன்றி
நிழற்பட உலா உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அம்மாடி... ஒரு கொலு வைக்கவே மூச்சுத்தி திணறும்! இத்தனை பொம்மைகளையும் வெளியே எடுத்து, சீராக்கி, படிகள் தயார் செயிது வைத்து பின்னர் மறுபடி பாதுகாப்பாக உள்ளே எடுத்து வைத்து...
பதிலளிநீக்குமுன்னே ஒரு வாரம், பின்னே ஒரு வாரம் ஆபீஸுக்கு லீவு போடுவாரோ!
அருமை.
நிறைய வேலை வாங்கக்கூடிய விஷயம் தான் ஸ்ரீராம். ஒன்றரை நாள் இரவு முழுவதும் விழித்திருந்து எடுத்து வைத்து அலங்கரித்த கொலு இது. லீவு எல்லாம் போடுவதில்லை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கும்பகோணத்தில் எங்கள் இல்லத்தில் நாங்கள் கொலு வைத்த நாள்களை நினைவூட்டிய பதிவு.
பதிலளிநீக்குகும்பகோண நாட்களை இந்தப் பதிவு உங்களுக்கு நினைவூட்டியதில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அனைத்துப் படங்களும் அருமை. நவராத்ரி கொலு எல்லா சப்ஜெக்டிலும் வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஆர்வம் பாராட்டத்தக்கது.
பதிலளிநீக்குநிழற்பட உலா உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன். அனைத்து சப்ஜெக்டிலும் - உண்மை தான் - இன்னும் கூட பொம்மைகள் உண்டு! இடம் போதவில்லை என குறைத்து இருக்கிறார்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
புத்தரின் வாசகம் அருமை ஜி
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துகள்
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்தததாக அமைந்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்ல ஆர்வமாக வைத்திருக்குக் கொலு. இத்தனையையும் கீழே இறக்கி/அல்லது கீழே இருந்தவற்றைப் பிரித்துப் படிகள் அமைத்து பொம்மைகளை வைத்து! அம்மாடி! ஐந்து படிக்கே முடியாமல் போய்விட்டது சென்னையில் இருந்தப்போவே! 2011 கொலு முடிந்ததும் பொம்மைகளை தானம் செய்துவிட்டேன். இந்த வீட்டுக்காரர் மட்டுமில்லாமல் மற்றவர்களும் பொறுமையோடு ஆர்வமும் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து எல்லாமும் செய்திருக்கிறார்கள். அந்த ஆடலழகி பொம்மை முதலில் இருப்பது அப்படியே நம்ம வீட்டில் இருந்தவளாட்டாமா இருக்கு. ரொம்ப வருஷம் பாதுகாப்பா வைச்சிருந்தார் நம்மவர். பிள்ளையோ, பெண்ணோ உடைச்சுட்டாங்க! :)
பதிலளிநீக்குஆர்வம், நேரம் என அனைத்தும் தேவைப்படும் விஷயம் இந்த கொலு என்பது உண்மை தான். இந்த நண்பர் பார்த்துப் பார்த்து எல்லா விஷயங்களையும் செய்வார் கீதாம்மா. ஆடலழகி - :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கிருஷ்ண லீலா, கோவர்த்தன கிரி, ராஸ் லீலா, தசாவதாரம், அஷ்ட லக்ஷ்மி,கல்யாண செட், விளக்குகள் கோபுரங்களில் ஒளிர்வது, என எதைச் சொல்ல, எதை விட! எல்லாமும் அருமையாக வந்துள்ளன. அதிலும் அந்தக் கைவினைப் பொருட்களும், அந்தக் காலத்துச் சமையல் இடித்தல், திரித்தல், அரைத்தல் போன்றவற்றைச் செய்து காட்டும் பொம்மைகளும் அழகோ அழகு. இத்தனையும் தேடித் தேடிச் சேமித்திருக்கிறார்கள். நல்லதொரு கொலு. காணொளியின் பின்னணி இசை மனதைக் கவர்ந்தது.
பதிலளிநீக்குஆமாம் - தேடித் தேடி சேகரிப்பதோடு, அனைத்தையும் ஒவ்வொரு வருடமும் பாதுகாத்து வைப்பது என்பது மிகவும் சவாலான விஷயம் தான் கீதாம்மா. காணொளி நான் எடுத்தாலும், பின்னணி இசை மகள் சேர்த்தது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அனைத்தும் மிக அருமை.
பதிலளிநீக்குஇவ்வளவு பெரிய கொலுவை வைப்பர்களை பாராட்ட வேண்டும், வாழ்த்த வேண்டும்.
இன்றைய பதிவின் வழி பார்க்கக் கிடைத்த நிழற்படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குஆர்வமும், பொறுமையும் தேவையான ஒன்று - இந்த கொலுவிற்கு! தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி. அவர்களிடமும் சொல்லி விடுகிறேன் மா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அனைத்துமே அசர வைக்கிறது...! சிறப்பு...!
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அழகிய கொலு. அருமையான படங்கள். பகிர்வுக்கு நன்றி. அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான படங்கள். இவ்வளவு பொம்மைகளா? வியப்படைந்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.
நீக்கு