காஃபி வித் கிட்டு – பகுதி – 32
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்றைக்கு
ஒரு மனதைத் தொட்ட விஷயத்துடன் பதிவினை ஆரம்பிக்கலாம். இந்த தட்டச்சு இயந்திரம்,
உங்கள் கணினியின் விசைப்பலகையில் உள்ளவற்றில் அதிகமாகப் பயன்படுவது எது? Space
Bar! பல முறை அதைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அதற்கான மரியாதை கிடைப்பதேயில்லை –
அதைச் சுற்றிலும் இருக்கும் மற்றவற்றில் மறைந்து கிடக்கும் வார்த்தைகளையேத் தேடிக்
கொண்டிருக்கிறோம். விசைப்பலகையில் இருக்கும் ஸ்பேஸ் பார் போன்று தான் பெற்றோர்கள்
பல வீடுகளில்...
படித்ததில் பிடித்தது – கல்யாண்ஜி கவிதை:
தினசரி வழக்கமாகிவிட்டது
தபால்பெட்டியைத்
திறந்துபார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவே
எந்தக் கடிதமும் இல்லாத
ஏமாற்றம்.
இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு
இறகு மட்டும்
எந்தப் பறவை எழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.
இந்த வாரத்தில் ஒரு மலையாளப் பாடல் – யாரும் காணாதே
ஒரு இனிமையான பாடலை இந்த வாரத்தில்
காண்போமா…
ராஜா காது கழுதைக் காது – தமிழ் பாட்டு
அலுவலகத்திலிருந்து வந்து
கொண்டிருந்தேன். விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாக
இருக்கிறது. இரண்டு மூன்று ஜோடிகளாக வந்திருந்த தமிழர்களில் ஒருவர் தனது மனைவியைப்
பார்த்து தமிழ் சினிமா பாடல்களை சத்தமாக பாடினார். அவரைக் கடந்த போது சிரித்தபடியே
கடந்தேன். பாட்டு தொடரவே திரும்பிப்பார்த்து சிரிக்க, அந்தக் குழுவில் இருந்த ஒரு
பெண்மணி, “அய்யய்யோ… பாட்டை நிறுத்துங்க…. அவங்க தமிழ் போல இருக்கு… நீங்க பாடறது
பார்த்து சிரிச்சுக்கிட்டே போறாங்க!” என்று சொல்ல, சிரித்தபடியே கடந்தேன்!
தில்லியில் யாருக்கு தமிழ் தெரியப் போகுதுன்னு சப்தமாக பாடல் பாடியபடியே சென்ற
அவரை நினைத்தால் இப்போதும் சிரிப்பு! :)
மனதைத் தொட்ட ஒரு குறும்படம்:
2017-ஆம் ஆண்டிலேயே எடுக்கப்பட்ட
குறும்படம் என்றாலும் சமீபத்தில் தான் பார்த்தேன். மனதைத் தொட்ட குறும்படம் –
மொத்தமே 3 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் சொல்லப்பட்ட ஒரு அருமையான கருத்து.
பாருங்களேன்…
இன்றைய நாளில் – 11 மே 1904 – சால்வடோர் டாலி!
இவரது பெயர் தெரிந்திருக்குமோ
இல்லையோ இவரது மீசையும், அது இருக்கும் முகத்தினையும் நிச்சயம் மறக்கவே முடியாது!
எனக்குக் கூட இந்த மாதிரி மீசை வைத்துக் கொள்ள வேண்டும் என ஆசை உண்டு! ஆனால்
வளரதான் மாட்டேங்குது! :) ஹாஹா! டாலி அவர்களது பிறந்த நாள் இன்று தான்!
இந்த வாரத்தின் கதை மாந்தர்:
சிலர் அடுத்தவர் விஷயங்களில்
மூக்கு நுழைப்பதே தலையாய கடமையாக வைத்திருக்கிறார்கள்! எங்கள் அலுவலக நண்பர்
ஒருவர் – எல்லோரிடமும் இப்படித்தான் பேசிப் பேசி மற்றவரது விஷயங்களை எப்படியாவது
கறக்க முயற்சிப்பார். பலர் எத்தனையோ முறை அவரை திட்டியும், நாசூக்காகச் சொல்லியும்
பார்த்தாயிற்று! ஆனாலும் அவர் திருந்துவதாக இல்லை! கூடப் பிறந்த குணத்தினை மாற்றவா
முடியும்! சில சமயங்கள் என்னிடம் இப்படிக் கேட்க, வாங்கிக்
கட்டிக்கொண்டிருக்கிறார்! அதனால் என்னிடம் இப்போதெல்லாம் எதுவும் கேட்பதில்லை!
அவர்கள் செய்வது தவறு என்பது புரியவே புரியாதா? இல்லை புரியாத மாதிரியே
இருக்கிறார்களா…
என்ன நண்பர்களே, இந்த வாரத்தின்
காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச்
சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
குட்மார்னிங்.
பதிலளிநீக்குஎனக்கென்னவோ தட்டச்சு இயந்திரத்தில் அதிகம் உபயோகப்படுத்துவது லெட்டர் A என்று தோன்றுகிறது! ஸ்பேஸ் பாரை விட! என் ஸ்பேஸ் பார் கோபித்துக் கொண்டுள்ளது. பெரும்பாலும் அது சரியாக மங்காது. ஏறி மிதித்தால்தான் வேலை செய்யும். என் கமெண்ட்டுகளில் அடிக்கடி அதன் விளைவுகளை நண்பர்கள் கவனித்திருக்கலாம்!!!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குகல்யாண்ஜியின் கவிதை மிக அருமை. பறவை விடு தூது! தண்ணீர் வை எங்களைப் போன்ற பேசத்தெரியா ஜீவன்களுக்கு என்று சொல்கிறதோ?
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குமனைவியைப் பார்த்து அவர் பாடிய பாடல் என்ன என்று சொல்லவில்லையே நீங்கள்...!! புதிதாகத் திருமணம் ஆனவரா/ அனுபவஸ்தரா?!!
பதிலளிநீக்குஹாஹா. பழைய பாடல் தான். அனுபவஸ்தர்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
டாலியின் படம் வேறு வகையிலும் பிரபலம்! மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரும்! கமலை மீசையை எடுக்கச்சொல்லி கமல் சொல்லும்போது கமல் இந்தப் படத்தை எல்லாம் பார்ப்பார்.
பதிலளிநீக்குஆமாம். அவர் படத்தில் பார்த்து இருக்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
கதை மாந்தரின் ஒரு மனிதர் (மனிதி!!) எங்கள் அலுவலகத்திலும் உண்டு. நான் பை வைத்திருந்தால் தாண்டிச் செல்லும்போது என்னைக் கேட்காமலேயே திறந்து என்ன இருக்கிறது என்று பார்க்காமல் இருக்க முடியாது அவரால்... எரிச்சலூட்ட்டக்கூடிய செய்கைகள்.
பதிலளிநீக்குஇப்படியும் சிலர்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ரசித்தேன் ஐயா
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஅனைத்தும் அருமை.
பதிலளிநீக்குகாணொளிகள் இரண்டும் நன்றாக இருக்கிறது, இரண்டாவது குறுபடம் கண்ணீர் துளிர்த்து விட்டது.நீங்கள் சொன்னது போல் மனதை தொட்ட குறும்படம் தான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குசெய்கின்ற வேலை பொறுத்து மாறுபடும்... இருந்தாலும் :-
பதிலளிநீக்கு1. "backspace" key
2. letter "e"
3. space bar
மற்ற அனைத்தும் அருமை...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஇனிய காலை வணக்கம் வெங்கட்ஜி இன்று லேட்...
பதிலளிநீக்குஸ்பேஸ் பார் நிறைய யூஸ்!! எனக்கு அது ரொம்ப முக்கியமாச்சே!! அது இல்லை என்றால் கஷ்டமாகிப் போகுமே.
கல்யாண்ஜியின் கவிதை அருமை மிகவும் ரசித்தேன்
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
நீக்குஇன்றைய கதம்பத்தை ரசித்தேன். ஸ்பேஸ் பார் - பெற்றோர்கள் - ஒப்புமை சரியில்லையே... பெற்றோரை இக்'னோர் செய்து அனேகமா எல்லாக் காரியங்களையும் செய்ய இயலுமே..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குபாட்டு அருமை ஜி.
பதிலளிநீக்குகுறும்படம் மனதைத் தொட்டுவிட்டது. முடியும் போது கண்ணீர். கரெக்க்டே யாரும் டிஸ்ஏபில்ட் இல்லை டிஃப்ஃபரன்ட்லி ஏபிள்ட்...
அருமையான படம்!!!
ராகாககா ஹா ஹா ஹா நான் கூட, இங்கு பங்களூரில் வீட்டுக் காம்பவுண்டில் யாருக்குப் புரியப் போகிறது என்று அப்படிப் பாட்டுப் பாடிக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டுப் பெண்மணி சிரிக்க எனக்கு வெக்கமாகிப் போச்சு...ஹா ஹா ஹாஹ் ஆ...நல்ல விதத்தில்தான்..
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
நீக்குமீசை ஹா ஹா ஹா...வெங்கட்ஜி உங்களை அப்படி நினைத்துப் பார்த்து சிரித்துவிட்டேன்...ஹா ஹா ஹா..
பதிலளிநீக்குஅடுத்தவர் விஷயத்தில் மூக்கை தேவையில்லாமல் நுழைப்பது பொறுக்க முடியாத ஒன்று...சிலர் அதை ஏனோ என்ன சொன்னாலும் உரைக்காமல் செய்வார்கள்...
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
நீக்குரசித்தேன். அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குசுவையான தொகுப்பு. மலையாள பாடல் இனிமை. குறும்படம் ஆரம்பிக்கும் பொழுதே இப்படித்தான் முடியப்போகிறது என்று தெரிந்து விட்டது
பதிலளிநீக்குஅவர் பாடிய பாடல் என்ன என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா.
நீக்குகாஃபி வித் கிட்டு அருமை. குறும்படம் மனதைத் தொட்டது.
பதிலளிநீக்குமலையாளப் பாடல் எப்பொழுதுமே இனிமை.
அந்தத் தமிழர் பாடிய பாடல் என்னவாக இருக்கும்.
அவர் பாட நீங்கள் திரும்பிப் பார்த்த காட்சி மனதிலோடுகிறது.
வாழ்வின் இனிமைகளில் முக்கியம் இசையே,.
இங்கே சத்தம் போட்டெல்லாம் பாட முடியாது. பின் தோட்டத்தில்
ரஷ்யப் பெண்மணி வினோதமாகப்
பார்ப்பார்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
நீக்குகுறும்படம் இனிமேல் தான் பார்க்கணும். கல்யாண்ஜியின் கவிதை படிச்ச நினைவு. மலையாளப் பாடல்கள் மட்டுமில்லாமல் சில ஹிந்திப்பாடல்களும் இனிமை! அருமையான தொகுப்பு! அந்த இளைஞர் மனைவியைப் பார்த்து என்ன பாடி இருப்பார்? "ராதே! உனக்குக் கோபம் ஆகாதடி!" பாடாதவரை சரிதான்! லேட்டஸ்ட் பாடலோ?
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
நீக்கு