சாப்பிட வாங்க – கேசர் லஸ்ஸி
- 26 ஏப்ரல் 2019
வெயிலுக்கு
இதமாய்! வயிற்றுக்கு குளுகுளு!! செம ருசி!! ஒரு டம்ளர் 75 ரூ. ஓரளவுக்கு மேல் திகட்டிப்
போகிறது :) இன்று எங்கள் காலை உணவே இது தான்.
பஞ்சு பறக்கும் தில்லி – 26 ஏப்ரல்
2019
இங்கே
இப்போ இலவம் பஞ்சு வெடித்து பறக்கும் சீசன். இந்தப் பஞ்சைப் பற்றி யாருக்கும் தெரியலை.
நம்ம ஊராக இருந்தால் பஞ்சு காயை சேகரித்து தலையணை அல்லது மெத்தையாக்கி இருப்பார்கள்.
இங்கே மரத்திலேயே வெடித்து பறந்து கண்களுக்கும், மூக்குக்கும் தொந்தரவு செய்கிறது.
சாலைகளில் எங்கும் பஞ்சுமயம் :) ஏற்கனவே மாசடைந்த தில்லி. இப்போ பஞ்சால் எல்லோரும்
முகமூடி தரித்தே செல்ல வேண்டிய சூழல் :(
இங்கே
வெப்பம் அதிகமாகத் தான் உள்ளது. 42 டிகிரி வரை செல்கிறது. ஆனால் புழுக்கம் இல்லை. திருச்சியில்
இந்த வெயில் காலத்தில் எத்தனை முறை குளித்தாலும் பயனில்லை என்னும் அளவிற்கு புழுக்கம்
இருக்கும்.
புறாக்கூட்டம் - 26 ஏப்ரல்
2019
சாலைகளில்
தானியங்களை கொட்டி புறாக்களுக்கும், இன்ன பிற பறவைகளுக்கும் உணவளிக்கும் மக்கள்.
சாப்பிட வாங்க - மீட்டா பான்
- 27 ஏப்ரல் 2019
நேற்று
இரவு உணவுக்குப் பின் மீட்டா பான் சுவைத்தோம். தாத்தா ஒருவரிடம் வாங்கினோம். ஒன்று
போல் அடுக்கிய சம்படங்களில் இருந்து வரிசையாக எடுத்து பான் தயாரிக்கத் துவங்கினார்.
பத்துக்கும் மேற்பட்ட ஐயிட்டங்களைச் சேர்த்தார். ஒன்று 30 ரூ.
பெரிதாக
இருந்தது. மாயாபஜார் படத்தில் வரும் ரங்காராவ் போல் வாயைத் திறந்தால் தான் முழுதாக
உள்ளே போட முடியும். நானும் மகளும் இரண்டு மூன்று தடவையாக கடித்தே சாப்பிட்டோம் :)
இந்த
பானிலேயே நிறைய விதம் உள்ளது. Fire paan ( பான் எரியும் போதே வாயில் போட்டு விடுவார்கள்
) mango paan, chocolate paan...அதற்கென்று ஒரு ஸ்பெஷல் கடை உள்ளதாம்..முடிந்தால் அங்கு
சென்று வந்து பகிர்கிறேன்.
இரவு உணவு - 27 ஏப்ரல் 2019
பட்டர்
நான், தால் மக்கனி, கடாய் பனீர்! இன்றைக்கு ஒரு வேளை சமையலில் இருந்து விடுமுறை!
தில்லி டைரி - பொக்கிஷங்கள் – 27 ஏப்ரல் 2019
2004ல்
கன்னியாகுமரி சென்ற போது அங்கு சங்கில் எழுதி வாங்கிக் கொண்டது :) இன்று கிடைத்தது.
சாப்பிட வாங்க – மதர் டைரி – 28 ஏப்ரல் 2019
American
Nutty Delight!!!
நம்ம
ஊர் ஆவின் போல இங்கு Mother Dairy! அவர்களின் தயாரிப்பு இது. ரோஸ் மில்க்கின் சுவை,
இடையில் மாம்பழ ஜெல்லி, சாக்லேட் சிப்ஸ், திராட்சை, முந்திரி என்று எல்லாம் கலந்த கலவை.
பிரமாதம்.
சாப்பிட வாங்க – மால்புவா ரப்டி – 1 மே 2019
கரோல் பாக் பகுதியில் புதிதாக
ஹல்திராம் உணவகம் பூசா ரோடில் திறந்திருக்கிறார்கள். அங்கிருந்து வாங்கி வந்து வீட்டில்
சுவைத்த மால்புவா! மேலே ரப்டி தூவி, ஜீராவியில் ஊறியிருந்த ரப்டியைச் சுவைத்தோம்! சுவை
ஓஹோ!என்ன நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....
நட்புடன்
ஆதி
வெங்கட்
இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி
பதிலளிநீக்குகேசர் லஸ்ஸி ஈர்க்குது. லஸ்ஸி ரொம்பவே பிடிக்கும் ஆனால் ஸ்வீட்டு ஸோ சாப்பிட முடிவதில்லை.
கீதா
மாலை வணக்கம் கீதாஜி!
நீக்குநீங்களே ஸ்வீட் என்பதால் இனிப்பு தவிர்ப்பது நல்லது தானே!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆமாம் ஆதி திகட்டிப் போகும் வெளியில் என்றால், வீட்டில் திகட்டாத அளவு போட்டு செய்யலாம். மாமியார் வீட்டில் மாம்பழம் ஒவ்வொரு சம்மரும் நிறைய காய்க்கும் என்பதால் மாம்பழ லஸ்ஸி குழந்தைகளுக்குச் செய்வோம். ரோஸ் லஸ்ஸி என்று வித விதமாய்...
பதிலளிநீக்குபங்களூரிலும் வெயில் தான் ஆனால் சென்னையை விட பெட்டர் என்றே இருக்கு.
இங்கும் புறாக் கூட்டம் அதிகமே. எங்குமே புறாக்கள்தான். கூட்டம் கூட்டமாகப்பறப்பது அழகா இருக்கும்.
பான் மட்டும் ஏனோ இதுவரை சாப்பிட்டதே இல்லை. வெற்றிலை சாப்பிடும் பழக்கம் இல்லாததாலோ என்னவோ சிறு வயதிலிருந்தே பழக்கமாகிவிட்டதாலோ என்னவோ இதுவரை வெற்றிலை போட்டதில்லை.
கீதா
புறாக்கூட்டம் தில்லியில் ரொம்பவே அதிகம் கீதாஜி! எல்லா சாலை சந்திப்புகளிலும் புறாக்களுக்கு உணவு கொடுப்பது இங்கே உள்ளவர்கள் வழக்கம் என்பதால் எந்நேரமும் புறக்கூட்டம்.
நீக்குபான் சாப்பிட்டதே இல்லையா நீங்கள் - நான் இங்கே வந்த பிறகு பழக்கமானது. ஊரில் இருந்த வரை வெற்றிலை எப்போதாவது போட்டுக் கொண்டதுண்டு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இரவு சாப்பாடு, மால்புவா ரப்டி ஈர்க்கிறது.
பதிலளிநீக்குசங்கு இனிய நினைவுகள்!
கதம்பம் சுவை!
கீதா
மால்புவா எனக்கும் பிடித்தது - ஆனால் சமயத்தில் திகட்டிவிடும்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!
குட்மார்னிங்.
பதிலளிநீக்குஓரு டம்ளர் 75 ரூபாயா? ஆம்... ஒரு அளவுக்கு மேல் திகட்டிதான் போகும்! இரண்டு வாங்கி மூன்று பேர் சாப்பிட்டிருக்கலாமோ!!!
இரண்டு வாங்கி மூன்று பேர் சாப்பிட்டு இருக்கலாமோ? லாம்! ஆனால் ஏனோ அப்படிச் செய்யவில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
பஞ்சு பற்றித் தெரியாமல் இருக்காது. ஆனால் இதை எல்லாம் அப்படி எதுத்துச் செய்ய பொறுமை இருக்காது இந்தக்காலத்தில்!
பதிலளிநீக்குபொறுமை - ஆமாம் இந்த வேலையைச் செய்ய நிறைய பொறுமை வேண்டும் - அது கிலோ என்ன விலை என்ற நிலை தான் இன்றைக்கு பலருக்கும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
இரவு உணவுப் படங்கள் கவர்கிறது! சங்கில் பெயர்... அதுவும் தேதியுடன்.. சுவாரஸ்யம்தான்.
பதிலளிநீக்குசங்கு - இப்படி சங்கில் பெயர் பொறித்துத் தருவது கன்யாகுமரி கடற்கரையில் நிறைய உண்டு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ஆதி வெங்க்ட் கூட சேர்ந்து டெல்லி போனால் இதெல்லாம் நமக்கும் கிடைச்சிருக்குமே ஹும்ம்ம்ம்
பதிலளிநீக்குநீங்கள் வரும் போது சொல்லுங்கள் மதுரைத் தமிழன். உங்களுக்கும் வாங்கித் தந்து விடலாம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அனைத்தும் முகநூலில் கண்டு மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அழகு.
பற்வைகளுக்கு போகும் இடமெல்லாம் உணவு போடுவார்கள் அங்கு உள்ளவர்கள்.
மரத்தடி, மசூதி, கோவில்கள், பார்க் என்று எல்லா இடங்களிலும் உணவு போடுவார்கள்.
காலை எழுந்தவுடன் அதை முதல் கடமையாக செய்வார்கள்.
ஆமாம் கோமதிம்மா... பறவைகளுக்கு உணவு அளிப்பது இங்கே பலருக்கு வழக்கம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வயிறும் மனமும் நிறைந்து விட்டது.,.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குலஸ்ஸியும், பானும் ஏக்கப்பட வைத்தது...
பதிலளிநீக்குபொக்கிஷம் அருமை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நீக்குஅடடே! ரம்ஜான் விரதம் இன்னைக்கு ஆரம்பிக்குதே. நாமளும் ஒருநாள் விரதம் இருக்கலாம்னு நினைச்சேன். கேசரி லஸ்ஸி, மால்புவா ரப்டின்னு படத்தைப் பாத்துட்டு, இனி விரதம் இருக்க முடியுமா தெரியலயே.
பதிலளிநீக்குஹாஹா... விடதம் லாம் நமக்கு ஒத்து வராது பத்மநாபன் அண்ணாச்சி - நல்லா சாப்பிடறது தான் நமக்கு விரதம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.