ஞாயிறு, 19 மே, 2019

ப்ரயாக்ராஜ் - கும்பமேளா – சாலைக் காட்சிகள் - நிழற்பட உலா – பகுதி நான்கு


குதிரை வண்டிப் பயணம் போகலாமா?

ஒவ்வொரு ஊருக்குமென சில சிறப்புகள் இருக்கும். பல காட்சிகள் நமக்குப் புதியவையாக இருக்கும். அப்படிப் பார்க்கும்போது அவற்றை நிழற்படமாக எடுத்து வைத்துக் கொள்வது உண்டு. 


ப்ரயாக்ராஜ் நகரில் Bபராத் எனும் கல்யாண ஊர்வலங்களில், முன்னால் செல்லும் அலங்கார விளக்குகள், கேட்பவர் காதுகளைக் கிழிந்து தொங்கச் செய்யும் அளவுக்கு பாடல்களை அதிர விடும் DJ-க்கள் என வித்தியாசமாக இருக்கிறது. நிறைய கல்யாண ஊர்வலங்களைப் பார்க்க முடிந்தது. வடிவேலு படத்தில், “இது என்ன கிழவி இழுத்துக் கொண்டிருக்கிறாய். அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா” எனக் கேட்பாரே அப்படி ஒரு கிழிந்து தொங்கும் இசை!  

பல ஊர்களிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள் தங்கள் உடமைகளைத் தூக்கிக் கொண்டு நடந்தும் வண்டிகளிலும், பேருந்துகளிலும் சங்கமத்தில் குளிப்பதற்காகச் சென்று கொண்டிருக்கும் காட்சிகள், வரும் மக்களை வழிப்படுத்தவும், பல்வேறு சுற்றுலாத் தலங்களில் கூட்டமாக வரும்போது சமாளிக்கவும் செய்திருந்த பிரம்மாண்ட ஏற்பாடுகள். பல வித மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் என அனைத்துமே இங்கே பார்க்க முடிந்தது. இந்த நிகழ்வுகள் பற்றிய பல விஷயங்கள் பிரமிக்க வைத்தவை. எத்தனை பேருடைய உழைப்பு எனப் பார்க்கும்போது அவர்கள் அத்தனை பேர் மீதும் மரியாதை வருகிறது. கும்பமேளா நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் பாராட்டுக்குரியவர்கள்.

ஒவ்வொரு பகுதியிலும் விதம் விதமான நம்பிக்கைகள். நம்பிக்கை தானே வாழ்க்கை! ப்ரயாக்ராஜ் நகரில் எடுத்த படங்களில் சிலவற்றை இந்த வரிசையில் கடைசி பதிவான நான்காம் பகுதியில் பார்க்கலாம்.


அயராது உழைக்கும் தேனீ...



நகரப் பேருந்துகள் நிறையவே இருந்தன....



சாரி சாரியாக நடந்து செல்லும் பக்தர்கள் கூட்டம்....



தள்ளு வண்டியில் புளிப்பு மிட்டாய் விற்பனை..... 



மேம்பாலம் வழிச் செல்லும் போது எடுத்த படம்...



மேலே தொங்கும் என்ணிலடங்கா ஒயர்கள்.... கீழே சவுக்குத் தடுப்புகள்....



கோட்டையின் வெளிப்புறத்தில்....



Bபராத் முன் செல்லும் அலங்கார விளக்குகள்...



விளக்குகளுக்கும் கவசம்!
 
என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில நிழற்படங்களோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

30 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    படங்கள் எல்லாமே நன்றாக இருக்கின்றன.

    எப்போது ப்ரயாக்ராஜ் என்பதைப் பார்த்தாலும் முதலில் மூளை வாசிப்பது பாக்யராஜ்...அடுத்து ப்ரக்யராஜ்!! ஹா ஹா ஹாஹ் ஆ..என்னதான் ப்ரயாகை என்று தெரிந்த இடம் என்றாலும் இந்த் ராஜ் சேர்ந்ததும் டக்கென்று அப்படி வந்துவிடுகிறது இனி கான்ஷியஸாக சொல்ல்க் கொள்ள வேண்டும்..ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ரயாக்ராஜ் - பாக்யராஜ் - ஹாஹா நல்ல குழப்பம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  2. குதிரை வண்டி வித்தியாசமாக இருக்கிறது.

    பராத் அந்த அலங்கார விளக்குகள் படம் மற்றும் மேம்பாலம் வழி செல்லும் போது எடுத்த படம் மிக அழகாக இருக்கின்றது ஜி.

    பராத் பற்றி விவரங்களும் அறிந்து கொள்ள முடிந்தது. அதற்கு டி ஜே வேறா!? ஆஹா!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Bபராத் உடன் வந்த டி.ஜே.... நாராசமாக ஒலித்த பாடல்கள்! கொடுமை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  3. குட்மார்னிங்.

    ஒரு வகையில் நான் நல்லவேளை கும்பமேளாக்கூட்டத்தில் சென்று சிக்கவில்லை என்று ஆறுதலாக இருக்கிறது. அலர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம்.

      கூட்டத்தில் சிக்கி இருந்தால் கடினம் தான். கும்பலான நாட்களில் அங்கே செல்வதும் ஒரு வித அனுபவம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. கோட்டையா? ஆ... ன்ன கோட்டை? நான் பார்க்கவில்லையே.. சவுக்குத் தடுப்புகளுக்குள் நுழைந்துதான் கங்கையில் குளிக்க வேண்டியதிருந்திருக்குமா? பிழைத்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.... கோட்டைக்குள் தான் அக்ஷய் வட் இருக்கிறது. கோட்டைக்குள் புகைப்படம் எடுக்கத் தடை உண்டு.

      சவுக்குத் தடுப்புகள் - கோட்டைக்குள் இருக்கும் அக்ஷய் வட் பார்க்கச் செல்லும் வழி. குளிக்கப் போகும் வழி அல்ல!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. எல்லாப் படங்களும் அருமை. அந்த கல்யாணஊர்வலம் எதுவும் என் கண்ணில் / காதில்படாதிருந்ததும் நான் செத்த பாக்கியம் என்று நினைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணில்/காதில் படாதிருந்தது நீங்கள் செய்த பாக்கியம்! ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. குதிரை வண்டியில் இத்தனை பேரா? குதிரை பாவம்.
    அனைத்தும் அழகான படங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குதிரை பாவம் தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. படங்கள் அனைத்தும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

      நீக்கு
  10. படங்கள் அருமை. கைபேசியில் பார்ப்பதால் முழுமையாக ரசிக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா....

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  12. வண்டியில் குதிரை பாவம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குதிரை பாவம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  13. அருகில் சென்றால் தேநீ கொட்டாதோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொட்டாது என்று தான் அந்த வீட்டில் இருந்த உழைப்பாளிகள் சொன்னார்கள். சிறு வயதில் தேனீயிடம் கொட்டு வாங்கி இருக்கிறேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    அத்தனையும் அழகான படங்கள். மிகவும் நன்றாக உள்ளது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  15. வட மாநிலங்களின் டாங்கா வண்டி உட்கார்ந்து போக வசதி. நம்மூர்க் குதிரை வண்டி போல் உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே உட்கார்ந்து கொண்டு கால்களை மடக்கிக் கொள்ள வேண்டாம். முதல் முறை பார்த்தப்போ ஆச்சரியமா இருந்தது. இங்கெல்லாம் (அதாவது மதுரையில்) அப்படியான வண்டிகளை சாரட் எனச் சொல்வார்கள். கல்யாண ஊர்வலங்களில் பெண், மாப்பிள்ளை பட்டினப் பிரவேசம், மாப்பிள்ளை அழைப்பு போன்றவற்றிற்கு இத்தகைய வண்டிகள் சிறப்பான அலங்காரங்களுடன் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைநகர் தில்லியில் கூட நிறைய டாங்கா வண்டிகள் இருந்தன. இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒன்றிரண்டு மட்டும் தட்டுப்படுகின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....