ஞாயிறு, 5 மே, 2019

ப்ரயாக்ராஜ் - கும்பமேளா – முகங்கள் - நிழற்பட உலா – பகுதி இரண்டு


இந்த முகம் வேறு ஒரு பதிவிலும் வந்த முகம்!
 
Bபdடே ஹனுமான் – ப்ரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமம் நடக்கும் இடத்தில், கரையோரமாக உல்லாசமாக ஒரு பள்ளத்தினுள் படுத்திருப்பவர் தான் இந்த Bபdடே ஹனுமான். மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பதால் இங்கே சாதாரண நாட்களிலேயே அதிக அளவில் கூட்டம் இருக்கும். கும்பமேளா சமயத்தில் என்றால் கேட்கவா வேண்டும் கூட்டத்திற்கு? ஆயிரக் கணக்கில் இருந்த பக்தர்கள் கூட்டத்தினைத் தாண்டி Bபdடே ஹனுமான் தரிசனம் செய்ய வேண்டுமெனில் நம்மிடம் நிறைய நேரமும் பொறுமையும் இருக்க வேண்டும். நாங்கள் இம்முறை சென்ற போது வெளியிலிருந்தே தான் ஹனுமனை நினைத்து வணங்கினோம். இந்த Bபdடே ஹனுமான் பற்றிய சில தகவல்களை இன்றைய பதிவில் பார்க்கலாம்! கூடவே இந்த ப்ரயாக்ராஜ் பயணத்தில் எடுத்த சில புகைப்படங்களும். முதலில் Bபdடே ஹனுமானின் கதையைப் பார்க்கலாம்.

உத்திரப் பிரதேசத்தின் கன்னோஜ் நகரத்தினைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு அளவில்லாத சொத்து.  ஆனால் அவருக்குப் பின் அவற்றை கட்டிக்காக்க, அனுபவிக்க ஒரு மகவு இல்லாதது அவருக்குப் பெரும் குறை.  சங்கடங்களை தீர்க்க வல்ல ஹனுமனுக்கு ஒரு கோவில் எழுப்பினாலாவது தனக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விந்த்யாசல மலையில் ஒரு கோவில் எழுப்ப முடிவு செய்தார் கன்னோஜ் வியாபாரி.

மலையிலிருந்து பெரிய கல்லாகத் தேர்வு செய்து பெரிய ஹனுமான் விக்ரஹமும் தயார் ஆனது.  Bபdடே ஹனுமான் விக்ரஹத்தினை கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்கு முன் புண்ணிய நதிகளில் நீராட்ட முடிவு செய்தார் வியாபாரி.  ஒவ்வொரு நதியாகச் சென்று நீராட்டிய பிறகு அவர் கடைசியில் வந்தது அலஹாபாத்தின் சங்கமத்திற்கு – கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடமாயிற்றே. அங்கே நீராட்டினால் சிறப்பன்றோ.

கங்கைக் கரையில் விக்ரஹம் படுத்த நிலையில் இருக்க, மாலை நேரம் ஆகிவிட்டபடியால், அன்று சங்கமக் கரையிலேயே உறங்கி அடுத்த நாள் பயணத்தினை தொடர முடிவானது.  அடுத்தது விந்த்யாசல மலையில் விக்ரஹத்தினை கொண்டு சேர்த்து கோவிலை எழுப்ப வேண்டியது தான் பாக்கி.  தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்று சொல்வார்கள்.  அதுதான் இங்கேயும் நடந்தது. அன்று உறக்கத்தில் கன்னோஜ் வியாபாரியின் கனவில் ஹனுமான் எழுந்தருளி தான் கங்கைக் கரையிலேயே கோவில் கொள்ள விரும்புவதாகச் சொல்ல, வியாபாரியும் அப்படியே செய்ய முடிவு செய்தாராம்.  அங்கே கோவில் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்வதற்காக கன்னோஜ் திரும்புகிறார்.  அங்கே கங்கைக் கரையில் படுத்த நிலையில் ஹனுமார்.

நெடு நாட்கள் பயணத்திற்குப் பிறகு வீடு திரும்பிய அந்த வியாபாரி தனது சொந்த வேலைகளில் ஆழ்ந்து விட, சில மாதங்களில் வியாபாரியின் மனைவி அழகான ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள். கோவில் கட்ட நினைத்த வியாபாரியும் தனது கோரிக்கை நிறைவேறிய காரணத்தினாலோ என்னமோ, கோவில் கட்டுவதை அடியோடு மறந்து விட்டார் போலும்!  கங்கைக் கரையில் படுத்த நிலையில் இருந்த ஹனுமன் கால ஓட்டத்தில் மண்ணுக்குள் மண்ணாய்! சில காலத்திற்குப் பிறகு கங்கையில் புனித நீராட வந்த ஒரு சாமியார் குளிப்பதற்கு கங்கையில் இறங்குமுன் தன்னுடைய திரிசூலத்தினை பூமியில் ஊன்ற ஏதோ கல்லில் மோதும் சத்தம் வர, அந்த இடத்தினைத் தோண்டினால் அங்கே ‘Bபdடே ஹனுமான்’ அவரை நோக்கி மந்தஹாச புன்னகை வீச, அவருக்கு அங்கேயே கோவில் எழுப்ப முடிவு செய்தார்கள்.

படுத்த நிலையில் இருக்கும் ஹனுமான் சிலையை நேராக நிற்க வைத்து கோவில் எழுப்ப எவ்வளவு முயற்சி செய்தும் முடியவில்லையாம்.  அதனால் அதே நிலையில் பூமிக்குள் ஒரு தொட்டி போல கட்டி அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தார்களாம்.  தற்போது கோவில் சுற்றி பல கட்டுமான பணிகள் செய்யப்பட்டு விட்ட்து.  பக்தர்களும் சங்கமத்தில் நீராடி இங்கே ஹனுமனின் தரிசனம் கண்டு செல்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் கங்கை கரை புரண்டு ஓடும்போது ஹனுமனின் கால் வரை தண்ணீர் வந்து செல்லுமாம்.  ஹனுமனின் பாத கமலத்தினை கங்கையே பூஜித்துச் செல்கிறாளோ!

ப்ரயாக்ராஜ் நகரில் எடுத்த படங்களில் சில மனிதர்களின் முகங்களை இந்த இரண்டாம் பகுதியில் பார்க்கலாம்.


எங்கள் படகோட்டிகளில் முதலாமவர்!


இரண்டாம் படகோட்டி...


 பறவைக்கு உணவு - படகில் வியாபாரம்!


த்ரிவேணி சங்கமத்தில் குளியலுக்குப் பிறகு...




எத்தனை முகங்கள்... ப்ரயாக்ராஜ் நகரில் மக்கள் வெள்ளம்!




அந்தப் பையில அப்படி என்னதான் இருக்கு !



பாத்து சூதானமா நடடா பெண்ணே...!


குங்கும வியாபாரி!


வெங்காயம், தக்காளி வெட்டிப் போட்டு பொரியும் சேர்த்து மேலாக எலுமிச்சை பிழிந்து கொஞ்சம் காலா நமக் சேர்த்து ஒரு குலுக்கு குலுக்கினா ரெடி... - சாப்பிடலாமா?


ரிக்‌ஷால இருக்க நம்ம யாரோ ஃபோட்டோ எடுக்கறாங்களே...


கடைசியில் எல்லாம் ஒரு பிடி சாம்பல் தான் போ!


எங்களையும் ஃபோட்டோ புடிப்பீங்களா? 
நேயர் விருப்பமாக எடுத்த ஃபோட்டோ!


அட நம்ம கூட வந்தவங்கல்லாம் எங்கப்பா போனாங்க...


ஹலோ என்ன ஏன் ஃபோட்டோ எடுக்கறீங்க?


பக்திப் பரவசத்தில் ஒரு முகம்... 

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில நிழற்படங்களோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

36 கருத்துகள்:

  1. படங்கள் அனைத்தும் ஸூப்பர் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகிர்ந்து கொண்ட படங்களை ரசித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. படங்கள் அனைத்தும் அருமை...
    அழகு... தங்களால் இனிய தரிசனம்..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகிர்ந்து கொண்ட படங்களை ரசித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. கேள்விப் படாத அனுமன் கோயில். ஆனால் நம்மவர் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். எப்படி விட்டோம்னு தெரியலை! ஆஞ்சி கூப்பிடறாரானு பார்க்கலாம். படங்கள் எப்போவும் போல் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோட்டைக்கு அருகிலேயே இருக்கிறது இந்த ஹனுமன் கோவில். மிகவும் பிரபலமான கோவில் தான் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. படே என்பதை எப்படி உச்சரிக்க வேண்டுமெனக் குறிப்பிட்டிருப்பது நன்று. படுத்த நிலையில் அருள்பாலித்திருக்கும் அனுமன் பற்றிய தகவல்கள் அறிந்தோம். சாமானிய மனிதர்களின் படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படுத்த நிலையில் அருள் பாலித்திருக்கும் ஹனுமன் - எனக்குத் தெரிந்து இந்த இடத்தில் மட்டும் தான். உங்களுக்கும் பதிவு பிடித்திருந்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அந்த அனுமனைத் தரிசித்திருக்கிறேன். நம்ம ஊர் மாதிரி சிலை நேர்த்தியாக இல்லை என்று ஞாபகம். இங்கு வெளியிட இப்போது பகிர்ந்துகொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேர்த்தியாக இல்லை - நம் ஊர் சிலையுடன் இங்கே இருக்கும் சிலைகளை ஒப்பீடு செய்ய முடியாது! இரண்டும் வேவ்வேறு மாதிரி...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. அந்த அனுமனின் படம் இங்கே வர விரும்பவில்லை போல...
    உங்கள் படங்கள் அற்புதம்.
    இன்னும் கொஞ்சம் போட்டோஷாப் செய்தால் உலகத்தரம்..
    மகிழ்வு பயணச்சித்தரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக நான் ஃபோட்டோஷாப் பயன்படுத்துவதில்லை நண்பரே.

      அனுமனின் படம் - முந்தைய பதிவொன்றில் இணையத்திலிருந்து எடுத்து வெளியிட்டு இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கஸ்தூரி ரெங்கன்.

      நீக்கு
  7. போட்டோக்கள் நன்றாக உள்ளன. பொதுவாக எல்லா வட இந்தியர் கண்களும் மிகச் சிறிதாக உள்ளன. ஆகையால் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியவில்லை. சிரிப்பதும், குறும்பு மற்றும் மகிழ்ச்சியைக் காண்பிப்பதிலும் கண்களில் காண முடியவில்லை.
    உங்களுடைய தனித்தன்மை போர்ட்ரைட் எனப்படும் போட்டோக்கள். ஒரு சில படங்களில் மட்டுமே போட்டோ எடுக்கப்படுவரின் உணர்ச்சிகள் தெளிவாய் இருக்கின்றன.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. கும்பமேளா படங்கள் அனைத்தும் அருமை. உங்கள் கேமரா வழியாக எங்களை பிரயாக்ராஜ் அழைத்து சென்றதிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேமரா வழி ப்ரயாக்ராஜ் பயணம் - மகிழ்ச்சி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. படங்கள் எல்லாம் அருமை.
    அனுமன் கதை நன்றாக இருக்கிறது.எங்கு விருப்பமோ அங்கு இருந்து விடுகிறார்.
    முதல் படம் முன்பு வந்தது அது போல்
    கடைசியில் பிடிசாம்பல் சொல்லும் படமும் பழசு இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கு விருப்பமோ அங்கே இருந்து விடுகிறார்! உண்மை.

      ஆமாம். ஒன்றிரண்டு படங்கள் முன்னரும் பகிர்ந்து இருக்கிறேன் கோமதிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. கும்பமேளா படங்களில் அகோரிகள் மற்றும் திகம்பர சாமியார்கள் இல்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அகோரிகள், திகம்பர சாமியார்கள் - அவர்கள் எல்லா நாட்களிலும் அங்கே வருவதில்லை. அதற்கென்று சில நாட்கள் உண்டு. அப்படியே எடுத்திருந்தாலும் இங்கே பகிர்ந்து கொள்ளவா முடியும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  12. என்னுடைய பயணக்கட்டுரையில் படே ஹனுமான் பற்றிய விவரங்கள் வரும்போது இந்தப் பதிவின் சுட்டி கொடுத்து விடவேண்டியதுதான்!

    வணக்கம் வெங்கட். இன்று நான் வேறு மதம்!

    தாமதம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேறு மதம் - தாமதம்! :)))

      பதிவின் சுட்டி - மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. அடேங்கப்பா... கங்கை கரைபுரண்டு ஓடும்போது இவ்வளவு தூரம் தண்ணீர் வருமா? ஆச்சர்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கங்கை கரை புரண்டு ஓடும் காட்சி - ஒரு முறை பார்த்ததுண்டு ஸ்ரீராம். பிரம்மாண்டம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. பல்வறு முகங்கள் படங்கள் மிகவும் சுவாரஸ்யம். நின்று நிதானித்து படங்கள் எடுத்திருக்கிறீர்கள். நான் அவசர அவசரமாக படங்கள் எடுத்துத் தள்ளி இருக்கிறேன். உங்கள் படங்களை பார்த்தல் நான் எடுத்த படங்களை வெளியிடவே கைகள் தயங்கும் போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நின்று நிதானித்து எடுத்த படங்கள் அல்ல! போகிற போக்கில் எடுத்தவை தான். முகங்களை எடுக்கும்போது அவர்களிடம் அனுமதி கேட்டு எடுத்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக வரலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  15. "ஹனுமனுக்கு ஒரு கோவில் 'அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  16. சங்கர மடம் அருகே ஹனுமான் காட்டில் குளிக்குமிடத்தில் சாக்கடை நீர் வரும்போது கங்கை பற்றிய மதிப்பே போய் விட்டது நான்சொல்வது 2004ல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி.எம்.பி. சார்... நான் உங்களிடத்தில் இருந்திருந்தால், நதியை மதிக்கத் தெரியாத ஊர் மக்களோ அல்லது அதற்குக் காரணமானவர்களிடமோதான் மதிப்பு போயிருக்கும். அப்பாவி கங்கை நதி மீது அல்ல. அம்மாவைக் கவனிக்காமல் தெருவில் விரட்டிவிடுகிறான் மகன். அம்மா கிழிந்த அழுக்கான உடையுடனும், எண்ணெய் இல்லாத தலையுடனும் இருக்கிறாள். எனக்கு மகன் மீதுதான் வருத்தம் வரும். அம்மா மீது மதிப்பு குறையாது. ஹாஹா.

      நீக்கு
    2. கங்கையின் குற்றமல்லவே... :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
    3. உண்மை தான். மனிதர்களின் தவறுக்கு கங்கை என்ன செய்ய முடியும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  17. ஹனுமான் கதை, படங்கள் எல்லாமே சிறப்பு.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதாஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....