ஒரு பரபரப்பான
வெள்ளிக்கிழமை மாலை நேரம். அந்த வாரத்தின் மீதமிருந்த எல்லா வேலைகளையும் முடிக்க
வேண்டிய சூழலில் பிரிவிலிருந்த அனைவருமே அவரவர் இருக்கையில் வேலைகளைக் கவனித்துக்
கொண்டிருந்தார்கள். அப்படியான சூழலில் தான் மாலா தொலைந்து போனது தெரிந்தது. முதல்
நாள் வரை இருந்த மாலா, வெள்ளிக்கிழமை அன்று இல்லை!
அந்தப்
பிரிவில் மொத்தமே ஐந்து பேர் தான். அவரவருக்குக் கொடுத்திருக்கும் வேலையைச் சரி வர
செய்வதே போதும் போதும் என்றாகி விடும். ஒருவர் விடுமுறையில் சென்று விட்டால் அவரது
வேலையும் மற்றவர்கள் தலையில் விழுந்து விடும்! குறிப்பாக என் தலையில் விழுவதற்கான
வாய்ப்புகள் அதிகம்! அன்றைக்கும் அப்படித்தான் – இரவு பீஹார் செல்லும் இரயிலில்
புறப்பட வேண்டிய லல்லன் என்பவர் சற்று சீக்கிரம் சென்று விட, அவரது வேலையும் என்
தலையில் விழுந்தது. Technical Operations என்பதுதான் எங்கள் பிரிவின் பெயர்.
அப்படி என்ன டெக்னிகலான விஷயத்தினை நாங்கள் கவனித்தோம்? சொல்கிறேன்!
இந்தியா
முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கருத்தடை அறுவை
சிகிச்சைகள், கருத்தடைக்கான புதிய புதிய உத்திகள் போன்றவற்றை நாடு முழுவதும்
செயல்படுத்த வேண்டிய பிரிவு. அது. இது போன்ற விஷயங்களைக் கவனிக்கும் பிரிவில்
மருத்துவர்கள் அல்லாதவர்கள் பணி புரிந்தாலும், மேலதிகாரிகளாக இருப்பவர்கள்
மருத்துவர்களாகவே இருப்பார்கள். எங்கள் பிரிவிற்கும் அப்படி மூன்று மருத்துவர்கள்
தான் படிப்படியாக அதிகாரிகளாக இருந்தார்கள். நான் அந்தப் பிரிவில் இருந்த போது
தான் இந்தியாவிற்கு புதிய முறையான No Scalpel Vasectomy எனும் ஆண்களுக்கான அறுவை
இல்லா கருத்தடை சிகிச்சை நடைமுறைக்கு வநதது! இந்தியா முழுவதும் இருக்கும்
மருத்துவர்களுக்கு இந்த சிகிச்சை முறைக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. சில பயிற்சி
சமயங்களில் நானும் சென்றதுண்டு! கணக்கு வழக்குகளைப் பார்க்க என்பதையும் சொல்லி
விடுகிறேன்!
பலவிதமான
கருத்தடை சாதனங்கள் பற்றிய தகவல்களும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் அங்கே வரும்.
அதைத் தவிர நிறைய வழக்குகள் – குறிப்பாக நஷ்ட ஈடு கேட்டு வழக்குகளும் அங்கே வரும்.
எதற்காக நஷ்ட ஈடு? சிலருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பிறகும், சிகிச்சையை
மீறி குழந்தை பிறந்து விட, அக்குழந்தையை வளர்க்க அரசாங்கம்/அறுவை சிகிச்சை செய்த
மருத்துவர் நஷ்ட ஈடு தர வேண்டும் என வழக்கு போடுவார்கள் – 90-களிலேயே அவர்கள்
கேட்கும் நஷ்ட ஈடு 25-30 லட்சங்களாக இருந்தது! குழந்தையை வளர்க்க காசு கேட்டு
வழக்கு பதிவு செய்வார்கள்! அந்த வழக்கில் மத்திய அரசாங்கத்தினையும் ஒரு பிரதிவாதியாகச்
சேர்த்து இருப்பார்கள்! அந்த வழக்குகளைப் படிப்பது ஒரு பொழுதுபோக்காகக் கூட
இருந்தது – பல ஸ்வாரஸ்ய வழக்குகள் அதில் வரும்!
அந்தப்
பிரிவிற்கு வரும் அனைத்து கடிதங்களையும் பெற்று அதனை ஒரு நாட்குறிப்பில் வரிசைக்
கிரமப்படி, தேதி, எங்கிருந்து அந்த கடிதம் வந்தது, யாருக்கு எழுதப்பட்டிருக்கிறது,
எந்த அலுவலருக்கு அந்தக் கடிதம் கொடுக்கப்பட்டது என்ற குறிப்புகளை எழுதவேண்டியது
ஒரு அலுவலரின் வேலை – அந்த வேலையைப் பார்த்தது லல்லன்! பிரிவிற்கு வரும் எல்லாக்
கடிதங்களையும் அவர் படித்து அதன் சாரத்தினை நாட்குறிப்பில் எழுதி வைக்க வேண்டிய
அவர் ஒழுங்காக எழுதி இருந்தால் எந்த நேரத்திலும் எந்த கடிதம் பற்றியும்
கண்டுபிடித்து விடலாம்! பல கடிதங்களுடன் உபகரணங்களும் எங்களுக்கு அனுப்புவார்கள். உதாரணமாக
காப்பர்-டி – ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் அளவு வேறு படும் என்பதால் பல நாடுகளில்
பயன்படுத்தப்படும் காப்பர்-டி சாதனங்களை இணைத்து கடிதங்கள் வரும்.
தொலைந்து போன
மாலா என்று தலைப்பில் சொல்லி விட்டு மாலாவைப் பற்றிய கவலையில்லாமல் வேறு எதை எதையோ
எழுதுகிறாயே என்று நீங்கள் நினைத்திருக்கலாம்! அந்த விஷயத்திற்கு தான் வருகிறேன்.
Contraceptives என பல விஷயங்கள் இங்கே இருக்கின்றன. அப்படி ஒரு விஷயம் தான் Beads
Method அல்லது Cycle Beads Method என்பது. எந்த நாட்களில் உறவு கொள்ளலாம், எந்த
நாட்களில் உறவு கொள்ளக்கூடாது என்பதைச் சொல்லும் ஒரு முறை. அதற்காக 32 மணிகள் கோர்த்த
மாலை [ஹிந்தியில் மாலா!] ஒன்று உண்டு! அந்த முறை பற்றி, தாங்கள் தயாரிக்கும் மணி
மாலை பற்றிய கடிதத்துடன் ஒரு மாதிரி மாலையையும் அனுப்பி வைத்திருந்தது ஒரு தனியார்
நிறுவனம். ஒரு சிகப்பு, சில வெள்ளை மற்றும் சில பிரவுன் மணிகள் அந்த மாலையில்
இருக்கும்!
கடிதங்களை நாட்குறிப்பில்
பதிவு செய்த லல்லனுக்கு மாலையைப் பார்த்ததும் ஒரு ஆசை! அழகா இருக்கே, இந்த மாலையை
நம் மனைவி கழுத்தில் அணிந்து கொள்ளக் கொடுத்தால் சந்தோஷப் படுவாளே என நினைத்து
கடிதத்தை மட்டும் அதைச் சேர வேண்டியவருக்கு அனுப்பி விட்டு மாலையைச் சுட்டு
விட்டார். அன்றைக்கு மாலை பீஹார் செல்லும்போது அதை எடுத்துக் கொண்டு போய்விட, மாலை
அந்த இருக்கைக்கான பணியும் சேர்த்து செய்து கொண்டிருந்த என்னை மேலதிகாரியான மருத்துவர்
[ஒரு வடகிழக்கு மாநில பெண்மருத்துவர்!] என்னை அவரது அறைக்கு அழைத்தார்!
கடித்தத்தில் மாலா இணைத்திருப்பதாக எழுதி இருக்க, மாலா என்னிடம் வரவே இல்லையே,
இதைப் பற்றிய கோப்பில் எழுதும்போது உயரதிகாரிகள் கேட்பார்களே எனக் கவலையுடன்
கேட்டார்!
அப்போது தான்
லல்லனின் திருவிளையாடல் எங்களுக்குத் தெரிந்தது. அவர் ஊரிலிருந்து திரும்பி
வந்ததும் இந்த மாலா பற்றியும், அது எதற்கு என்றும் சொல்லி, எங்கே அந்த மாலா எனக்
கேட்க, அவர் ஒரு அசட்டுப் புன்னகையை பதிலாகத் தந்தார். ஆனால் அவர் வரும் வரை அந்தக்
கடிதத்தினை, அதற்கான வேலையைச் செய்யாமல் இருக்க முடியாது என்பதால், அந்த
நிறுவனத்தினரை தொடர்பு கொண்டு, Attachment lost in transit என்பதாகச் சொல்லி வேறு
ஒரு மாலாவை வரவழைத்தோம்! அதன் பிறகு கடிதங்களுடன் வரும் எந்தப் பொருளையும்
கேட்காமல் எடுத்துக் கொண்டு போகக் கூடாது எனச் சொன்னதோடு, அவரை எப்போதும் அந்த
மாலையை வைத்துக் கிண்டல் செய்து கொண்டே இருப்போம்!
அலுவலகத்தில்
இப்படி விதம் விதமான அனுபவங்கள் உண்டு! அவ்வப்போது அந்த அனுபவங்களை பகிர்ந்து
கொள்கிறேன். வேறு ஒரு ஸ்வாரஸ்ய அனுபவத்தோடு உங்களை சந்திக்கும் வரை….
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
உழைக்கும் கைகளே...
பதிலளிநீக்குஉருவாக்கும் கைகளே...
உலகைப் புது முறையில்
உண்டாக்கும் கைகளே!...
அன்பின் இனிய மே தின நல்வாழ்த்துகள்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.
நீக்குஉழைப்பாளர் தினத்தில் உங்கள் அலுவலக அனுபவம் பொருத்தம்.
பதிலளிநீக்குஉழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.
பதிவு நல்ல மர்ம கதை போல ஆரம்பம் இருந்தது, முடிவு சிரிப்பு.
இப்படியும் மனிதர்கள் என்று வியக்க வைத்த பதிவு.
இப்படியும் சில மனிதர்கள்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நான்கூட ஆர்யமாலாவைப்பற்றி சொல்லப் போகின்றீர்கள் என்று கற்பனை செய்து விட்டேன்.
பதிலளிநீக்குஇனிய உழைப்பாளர் தின வாழ்த்துகள் ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குமாலா என்றதுமே யூகித்தேன்.
பதிலளிநீக்குகுட்மார்னிங்.
இங்கு மாலா என் மாலா டி போன்ற மாத்திரைகள் புழக்கத்தில் உண்டு, சமீபத்தில் இந்தப் பெயரில் வரும் மாத்திரைகளை தடை செய்து விட்டதாய்த் தகவல்.
வேறு பெயர்களில் வருகிறது என நினைக்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நல்ல சுவாரசியமாக இருந்தது. இந்த மாலா பற்றி நானும் கேள்விப் பட்டிருக்கேன். ஆனாலும் ஸ்ரீராம் அந்தத் துறையிலேயே இருப்பதால் அவருக்குப் புரிந்த அளவுக்கு எனக்குப் புரியவில்லை. மாலானு ஒண்ணு இருக்கு என்னும் அளவுக்குத் தெரியும். இஃகி,இஃகி, நல்ல நகைச்சுவையான காரக்டர் தான்! எதைப் பார்த்து ஆசைப்படுவது என்றே வியவஸ்தை இல்லை போல!
பதிலளிநீக்குஎல்லாவற்றுக்கும் ஆசைப்படு ந்னு சொன்னதை படிச்சிருப்பார் போல!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
சுவாரசியான அனுபவம்தான்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குவெங்கட்ஜி நீங்கள் செய்த டெக்னிகல் வேலை மிகவும் சுவாரசியமான ஒன்று. படிப்பதற்க்கு நகைசுவையாக இருந்தது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!
நீக்குதெரியாத விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்கு'தொலைந்துபோன மாலா' என்ற தலைப்பைப் பார்த்ததும் யாருடைய மாலையோ காணாமல் போய்விட்டதுபோலும் என நினைத்து படித்தால் நீங்கள் வேறொரு மாலா பற்றி எழுதியிருக்கிறீர்கள். சுவையான அனுபவம்.மே நாள் நல் வாழ்த்துகள்! தொடர்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குஉங்கள் அலுவலக அனுபவம் , உங்கள் வேலைகள் பற்றிய விளக்கங்கள் எல்லாமே சுவாரஸ்யம்! தொடர்ந்து எழுதுங்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குஉங்கள் வேலை பற்றி சிறிது தெரிந்து கொண்டேன்
பதிலளிநீக்குஇது பழைய அனுபவம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
ஹா! ஹா! மாலா நல்லா இருக்கே. அமேசானில் கிடைக்குமா. லல்லனிடம் ஒண்ணு கேட்டு சொல்றீங்களா.
பதிலளிநீக்குஇப்ப எதுக்கு அது உங்களுக்கு!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
தொழிலாளி தின வாழ்த்துகள் ஜி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஆகா அருமையான தகவல், பதிவு அருமை...லல்லன்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குலல்லன்கள் எல்லா இடத்திலும்... ஹாஹா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கஸ்தூரி ரெங்கன்.
ஸ்வாரஸ்யம். என் கணவரும் மதர் & சைல்ட் ஹெல்த் டிபார்ட்மெண்டில் சில காலம் புரிந்தார்,மஸ்கட்டில். அப்போது அவர் ஒருவர் மட்டுமே அங்கு ஆண்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா.
நீக்குசுவாரஸ்யமாக சொல்லியிருந்தீர்கள்! நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்கு