தில்லி chசலோ – 21 ஏப்ரல்
2019
திருவரங்கம் இரயில் நிலையம்...
ஏழு
வருடங்களுக்குப் பிறகு தில்லி chசலோ!!! முதலில் சென்னை நோக்கி பயணம்.
எல்லோரும் இட்லி
வடை சாப்பிட, நாங்கள் வீட்டிலிருந்து எடுத்து வந்த சப்பாத்தியுடன் Tomato ketchup :)
Unreserved மக்கள் எல்லாமும் reserved கோச்சில் ஏறும் வழி நெடுக நின்று கொண்டே அவர்கள்
பயணம். நம்மால் இம்மியளவு கூட நகர முடியவில்லை.
இவ்வளவு
நேரம் "ஆப் 8 நம்பர் பே பையிட்டியே" என்று சொன்ன வட இந்திய TTR ஐ காணவே இல்லை
:) இந்த கும்பலிலும் பொங்கல் வடை! ப்ரெட் ஆம்லெட்! வடே வடே!! சாய்! சாய்! என்று வியாபாரம்.
இரயிலில் இசை கேட்டபடியே… - 21
ஏப்ரல் 2019
தேன்மல்லிப்பூவே,
பூந்தென்றல் காற்றே...
இது
ஒரு காதல் மயக்கம்…
கண்ணா
உனைத் தேடுகிறேன் வா...
விழுப்புரத்தை
கடந்து கொண்டிருக்கும் வேளையில் எங்களுடன் ராஜா சாரின் இசை...
தமிழ்நாடு விரைவு வண்டியில் தில்லி
நோக்கி – 22 ஏப்ரல் 2019
தமிழ்நாடு
விரைவு ரயிலில் டெல்லியை நோக்கி பயணிக்கும் நாங்கள்...
மழைச் சாரல் - இரயில் பெட்டியின் கண்ணாடியில்..
இயற்கையை ரசித்தபடி....
ஆந்திரா
கடக்கும்போது... மழைச்சாரல் தந்த புத்துணர்வுடன் ஒரு பயணம். இரயிலில் அப்படி ஒரு தனிமை!
யாரும் யாருடனும் பேசிக் கொள்ளாமல் – திரை போட்டு மூடிக்கொண்டு பயணம்! பேசவில்லை என்றால்
கூட பரவாயில்லை – பார்க்கக் கூட முடியாமல்! ஹாஹா…
தில்லி வந்தாச்சு! - 23 ஏப்ரல் 2019
உலகப் புத்தக தினத்தில் வாசித்தவை...
தலைநகர்
இல்லத்துக்கு பத்திரமாக வந்தாச்சு. கணவர் எங்களுக்காக சமையல் செய்து வைத்து விட்டுத்
தான் ரயில்நிலையத்துக்கு வந்திருந்தார். ரசம், உருளைக்கிழங்கு பொரியல், வெள்ளரிக்காய்
பச்சடி – இதான் மெனு! அதனால் பயண அசதி தீர குளித்து விட்டு சாப்பிட்டோம்.
அவர்
அலுவலகம் கிளம்ப, அம்மாவும் மகளும் சேர்ந்து எங்களுக்கு பிடித்த திரைப்படத்தை யூட்டியூபில்
பார்த்தோம். மதிய நேரம் புத்தக அலமாரியைக் குடைந்து ஆளுக்கொரு புத்தகமாக எடுத்து வாசித்துக்
கொண்டிருக்கிறோம். இன்றைக்கு உலக புத்தக தினம் ஆயிற்றே!
தில்லி டைரி - பொக்கிஷங்கள் – 24 ஏப்ரல் 2019
பொக்கிஷங்கள்...
சில
வருடங்களுக்குப் பின் என்னவருக்காக இன்று மதிய உணவு தயாரித்து பேக் செய்து கொடுத்தேன்
:) திருமணமான புதிதில் காலையில் அவருக்காக சப்பாத்தி, சப்ஜி செய்து கொடுக்கும் போதே
எனக்கும் செய்து வைத்து விடுவேன்.அதை மதியம் தனியே அமர்ந்து விருப்பமில்லாமல் சாப்பிடுவேன்
:)
என்னவர்
அலுவலகம் செல்ல படி இறங்கியதும் பால்கனிக்கு ஓடிச் சென்று, அங்கேயிருந்து தெரு முக்குத்
திரும்பும் வரை கையசைத்தது என்று எல்லாமே இன்று நினைவுக்கு வந்து புன்னகைக்க செய்தது
:) வருடங்கள் பதினேழு உருண்டோடி விட்டன :)
அவர்
அலுவலகம் சென்றதும், மகளும் நானும் சாப்பிட்டோம். வீட்டை கொஞ்சம் சுத்தம் செய்யலாம்
என்று நினைத்து செய்ததில் நிறைய பொக்கிஷங்கள் கிடைத்தன :)
நேற்று
மாலை அருகிலிருக்கும் திருப்பதி தேவஸ்தானம் கோவிலுக்குச் சென்று திவ்யமாக தரிசித்து,
காய்கறி சந்தையில் சமையலுக்கு வேண்டிய காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினோம்.
இன்றும் மாலை தயாராக இருந்தால் கடைத்தெருவுக்குச் செல்லலாம் என்று சொல்லியிருக்கிறார்.
சாப்பிட வாங்க – மட்கா குல்ஃபி – 24 ஏப்ரல் 2019
மட்கா குல்ஃபி...
மாலை
வீட்டின் அருகே இருக்கும் கலேவா-வில் சாப்பிட்ட மட்கா குல்ஃபி! சுவை அபாரமாக! ஆனால்
விலை தான் கொஞ்சம் அதிகமோ! ஒரு மட்கா குல்ஃபி வரிகளுடன் சேர்த்து 98/-
சாப்பிட வாங்க – பனீர் பகோடாவும் கேசர் ரஸ்மலாயும் – 25 ஏப்ரல் 2019
பனீர் பகோடா...
கேசர் ரஸ்மலாய்...
நேற்றைய
தினம் கலேவாவில்! இன்று வீட்டின் அருகே இருக்கும் பங்க்ளா ஸ்வீட்ஸ் விஜயம்! பனீர் பகோடாவுடன்
கேசர் ரஸ்மலாய்! நாங்கள் ருசித்ததை நீங்களும் பார்க்க! [யாருப்பா அது காதுல புகையோட
பார்க்கறது!] சரி சரி இன்றைய பதிவில் இத்தனை உணவு போதும். மீதி அடுத்த கதம்பத்தில்
[அ] வேறு பதிவில்!
என்ன
நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?
பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....
நட்புடன்
ஆதி
வெங்கட்
குட்மார்னிங்.
பதிலளிநீக்குடெல்லி விஜயத்தை ரசித்து வருகிறீர்கள். இன்னமும் மகிழ்ச்சியாய் இருக்க வாழ்த்துகள்.
காலை வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
என்னதான் பாடல் கேட்டாலும் எவ்வளவு நேரம் கேட்கமுடியும்? பயணிகளுக்கு எப்போதுமே ராஜா இசை ரம்மியம்தான்.
பதிலளிநீக்குநீண்ட பயணம் எனில், இசை, புத்தகம், வேடிக்கை பார்த்தல், தூக்கம் என பலதும் வேண்டியிருக்கும்!
நீக்குராஜா இசை - உண்மை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
பனீர் பகோடா, கேசர் ரஸ் மலாய் கவர்கிறது. பகோடா அதிகமாய்க் கவர்கிறது! எத்தனை நாட்கள் டெல்லி?
பதிலளிநீக்குஇங்கே கிடைக்கும் பகோடாக்கள் வேறு விதம்! பனீர் பகோடா கொஞ்சம் ஹெவியாக இருக்கும்!
நீக்குஎத்தனை நாட்கள் - இன்னும் சில நாட்கள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
விடுமுறை இனிமையாய்க் கழிய வாழ்த்துகள். இவை அனைத்தும் முகநூலிலும் பார்த்து ரசித்தேன். தில்லி வெயில் பழகி விட்டது என எண்ணுகிறேன். இங்கே சூரியன் போக்குக் காட்டுகிறான்
பதிலளிநீக்குதில்லி வெயில் - புழுக்கம் இல்லை என்பதால் கொஞ்சம் பரவாயில்லை. நம் ஊரில் புழுங்கித் தள்ளுகிறது என்கிறார்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
கதம்பம் அருமை
பதிலளிநீக்குவிடுமுறை மகிழ்வாய் நகர வாழ்த்துகள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குமட்கா குல்ஃபி அழகு. ருசியில் மட்காவோடு சாப்பிட்டுவிட்டார்கள் போலிருக்கே
பதிலளிநீக்குஹாஹா.... உடைத்து தான் திறக்க வேண்டும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
விடுமுறைகள் சந்தோஷமாக கழியட்டும் சகோ.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குஅருமையான பதிவு.வெங்கட்ஜி உங்கள் துணைவியாருடனும், மகளுடனும் விடுமுறையை இனிமையாக கழிக்க வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.
நீக்குமகிழ்ச்சியான தருணங்கள் ஆதிக்கும், ரோஷ்ணிக்கும்.(உங்களுக்கும் தான்)
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மகிழ்ச்சியான விடுமுறை காலத்திற்கு.
அனைத்தையும் முகநூலில் படித்தேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குரசனையான கதம்பம்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஇன்று என்ன எங்கே பார்த்தாலும் உணவு மயம்? கீதா அக்கா பட்டர் தோசை, ஃபலூடா என்கிறார், நீங்களானால் பனீர் பகோடா, ரஸமலாய், மட்கா குல்ஃபி என்கிறீர்கள். ஆளாளுக்கு இப்படி நாக்கில் ஜலம் ஊற வைத்தால் நான் எப்படி எடையை குறைப்பதாம்?
பதிலளிநீக்குஎனிவே, ஹாப்பி ஹாலிடேஸ்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா...
நீக்கு