சனி, 27 ஏப்ரல், 2019

காஃபி வித் கிட்டு – இரண்டு புதிர்கள் – ஒரு விரல் – மைசூர்பாக் – மனதைத் தொட்ட விளம்பரம்



காஃபி வித் கிட்டு – பகுதி – 30

முகநூலிலிருந்து ஒரு வாசகம்:



தோல்வியால் அழும்போது உங்கள் கண்ணீர்த் துளிகளை துடைத்துத் தெளிக்கும் ஒரு விரல், உங்கள் வெற்றியின் போது ஒன்றாகச் சேர்ந்து கரகோஷம் எழுப்பும் பத்து விரல்களை விட மேலானாது! [ஹிந்தி வாசகத்தின் தமிழாக்கம்….]

படித்ததில் பிடித்தது – இது யார் எழுதியது?

வாழ்க்கையில் என் லக்ஷியம் என்னவென்றால் – ஒன்றும் செய்யாமல் இருப்பதுதான்.

எனக்கு கால்நடையாய் ஊர்களைச் சுற்ற வேண்டுமென்று ஆசை. மூட்டையில்லாமல் முடிச்சில்லாமல் கண்டவிடத்தில் அகப்பட்டதைத் தின்று கையலம்பிவிட்டு வாசல் திண்ணையிலோ மரத்தடியிலோ படுத்துறங்கிவிட்டு…

மேகங்களைக் குன்றுகள் தடுத்து குடங்குடமாய் மழை கொட்டும் மலைநாட்டின் கமுகுச் சோலைகளையும் மாடுகளைப் போல் மந்தை மந்தையாய் யானைகள் மேய்வதையும் பார்க்கவேண்டும். அசைவற்ற மனதில் அமைதி நிறைந்ததாய் பார்த்தவர்கள் சொல்லிக்கொள்ளும் கன்யாகுமரியின் கடற்கரையில் ஓங்கி நிற்கும் மணற்குன்றுகளில் ஒன்றின்மேல் உட்கார்ந்துகொண்டு சூர்யாஸ்தமனத்தைப் பார்க்கவேண்டும் என்று ஒரு ஆசை.

நான் மொத்தத்தில் வேண்டுவது ஒன்றும் வேண்டாம் என்பதே.

இதனால் எனக்கு உலகத்தில் எனக்கு வெறுப்பு அல்லது ஞானப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று இல்லை. எனக்கு வாழ்க்கையில்தான் பற்று. அதைவிட்டால் வேறு நம்பிக்கையில்லை. கண்கண்டதில் நம்பிக்கையில்லை.  அதைத் தள்ளிவிட்டு காணாததைத் தேடி எப்படிப்போவேன்?

படித்ததில் பிடித்ததாக இங்கே எழுதி இருப்பது என்னைப் பற்றிய வாசகங்கள் அல்ல! இப்படி எழுதியது எந்த எழுத்தாளர் எனச் சொல்ல முடியுமா?

இந்த வாரத்தில் ஒரு பாடல் – உயிரில் தொடும்:

இசைக்கு மொழி அவசியமல்ல! எந்த மொழியாக இருந்தாலும் இனிய இசை இருந்தால் நீங்கள் இரசிக்க முடியும்! அப்படி சமீபத்தில் ரசித்த ஒரு மலையாளப் பாடல் – உயிரில் தொடும்…. கேட்டுப் பாருங்களேன்.


ரசித்த நிழற்படமும் ஒரு புதிரும்:



சமீபத்தில் பார்த்து ரசித்த ஒரு நிழற்படம் – எத்தனை அழகாக எடுத்திருக்கிறார் அந்தப் படத்தை எடுத்தவர்! அது சரி இது என்ன என்று சொல்ல முடியுமா?

மனதைத் தொட்ட ஒரு விளம்பரம்:

நிஜத்தில் இப்படியானவர்கள் இருப்பது குறைவே என்றாலும் விளம்பரத்திலாவது இப்படி ஒருவர் இருப்பது போல காண்பிப்பது மனதுக்கு மகிழ்ச்சி. மனதைத் தொட்ட ஒரு விளம்பரம் – பாருங்களேன்.



பின்னோக்கிப் பார்க்கலாம் – இதே வாரத்தில் 2010-ல்:

இதே வாரத்தில் எழுதிய ஒரு பகிர்வு. அப்போது நிறைய பேரால் வாசிக்கப்படாத ஒரு பதிவு! படிக்காதவர்கள் படிக்க வசதியாக, இங்கே அதன் சுட்டி…


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

34 கருத்துகள்:

  1. என்ன ஆச்சு எல்லோருக்கும்? எங்கே போனாலும் யாருமே இல்லை? நான் மட்டும் தான் இருக்கேனா இணையத்தில்? யாருங்க அங்கே? எல்லோரும் எங்கே போனீங்க? தனியாய் இருக்கப் பயமாய் இருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்துட்டேனே... பார்க்கவில்லையா?!!

      நீக்கு
    2. எங்கே போனாலும் யாருமே இல்லை! எல்லாம் பிஸியா இருக்காங்க போல!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
    3. வாங்க.... வாங்க....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதிவு படிச்சேன். காணொளி எல்லாம் மத்தியானமாப் பார்த்துட்டு மறுபடி வரேன். எத்தனை நாழி தனியாவே இருக்கிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  3. குட்மார்னிங்.

    ஹிந்தி வாசகத்தின் தமிழாக்கம் முன்னர் எஸ் எம் எஸ் காலத்தில் படித்த நினைவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      எஸ்.எம்.எஸ் - இப்பொழுது எல்லாம் வாட்ஸப் காலம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. படித்ததில் பிடித்தது படித்ததும் கண்ணதாசனோ என்று சந்தகேம் வந்தது. ஆனால் யார் என்று கண்டுபிடிக்கும் வாசகங்கள் //அகப்பட்டதைத் தின்று கையலம்பிவிட்டு வாசல் திண்ணையிலோ மரத்தடியிலோ படுத்துறங்கிவிட்டு…// இதுவாய் இருக்கக் கூடும். பாலகுமாரன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணதாசன், பாலகுமாரன் அல்ல.....

      எழுத்தாளர் யார் என கடைசியாக சொல்கிறேன்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. ரசித்த நிழற்படம்... காபி நுரை வழிகிறதோ? பாடலை நானும் ரசித்தேன். அந்த விளம்பரம் நீங்களே முன்னர் பகிர்ந்திருந்தீர்களோ? இங்கே பார்த்த நினைவாய் இருக்கிறதே... அல்லது வாட்ஸாப்பில் வந்ததோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காப்பி அல்ல தேநீர்... தந்தூரி சாய் படம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. பழைய பதிவு சென்று பார்த்தேன். தலைப்பு ராஜசேகர் நடித்த தெலுங்கப்படத் தலைப்பு போல இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. முகநூல் வாசகத்தை நேசித்து ரசித்தேன் ஜி

    மலையாளப்பாடல் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  8. விளம்பரம் அருமை
    ஆனால் இதுபோல் நடக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம் போல நடந்தால் நன்றாக இருக்கும்... ஆனால்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. கண்கண்டதில் நம்பிக்கையில்லை. அதைத் தள்ளிவிட்டு காணாததைத் தேடி எப்படிப்போவேன்?
    பாலகுமாரன்?
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலகுமாரன் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. மிகவும் அருமையான தொகுப்பு. மலையாள பாடல் இனிமை. ஹிந்தி கவிதை பிரமாதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  11. காணொளி விளம்பரம்னு நம்ப முடியலை! அருமை! ஆனால் அந்த வேலை செய்யும் பெண்மணியின் புடைவை தான் கண்ணை உறுத்தியது! ஹிஹிஹி, விலை ஜாஸ்திப் புடைவை! பலரும் விளம்பரங்கள், சீரியல்கள் எடுக்கையில் வீட்டு வேலை செய்யும் பெண்மணி, சமையல் செய்யும் பெண்மணி ஆகியோருக்கும் விலை உயர்ந்த புடைவை கட்டியபடியே எடுக்கின்றனர். சில சமயங்களில் வீட்டு எஜமானியின் உடையை விட விலை அதிகமாய்த் தெரியும். :)))) ஆனாலும் அர்த்தமுள்ள காணொளி. இப்படி ஒரு எஜமானி எல்லோருக்கும் கிடைச்சால் நன்றாக இருக்கும். மலையாளப் பாடலும் அருமை. பாடிய குரல்களின் மென்மை மனதைத் தொட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம் போல இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் இருப்பதில்லை.

      படவை - :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  12. ஹிந்தி டு தமிழ் அருமையான வாசகம்.

    படித்ததில் பிடித்தது சூப்பர் . மிகவும் பிடித்தது எனக்கும். எழுதியது யார் தெரியலையே...

    மலையாளப் பாட்டு நன்றாக இருக்கிறது ஜி

    விளம்பரமும் ரசித்தேன்.

    நிழற் படம் செம! ரொம்ப அழகாக எடுத்திருக்கிறார். எடுத்தவருக்கு செம ரசிப்புத் தன்மை..புகைப்படக் கலையிலும்.. அது சாக்கலேட் சாஸ் போல இருக்கிறது. அதாவது சில ஐஸ்க்ரீம், கேக்ஸ் டிப் பண்ணிக் கொடுப்பாங்கல்ல டிப் பண்ணி எடுத்ததும் கெட்டியாகிவிடுமோ அது போல இருக்கிறது..

    பின்னோக்கி போய்விட்டு வருகிறேன் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    முகநூல் வாசகம் மிக அருமை. படித்ததில் பிடித்தது நன்றாக உள்ளது. இதை எழுதிய எழுத்தாளர்களின் கற்பனை மிகவும் அழகாக உள்ளது. கருத்துக்களில் கூறுவது போல் பாலகுமாரனாக இருக்கலாம் எனத்தான் நானும் நினைக்கிறேன்.

    சாக்லெட் கலந்த திரவம் பொங்கி உருகி வழியும் நிலையில் எடுத்த அந்த நிழற்படம் மிக அழகு.

    விளம்பரம் மனதைத் தொட்டது. இதைப் போன்ற அன்பான எஜமானி கிடைக்க வேண்டும்.

    பின்னோக்கி வந்த பதிவுக்கும் படிக்கச் செல்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    தங்கள் மனைவியும், குழந்தையும் விடுமுறையில் அங்கு வந்திருப்பதாக கருத்துரைகளில் படித்தேன். குடும்பத்துடன் மகிழ்வாக பொழுதை கழிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலகுமாரன் இல்லைம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
  14. முகநூல் வாசகம் அருமை.
    படித்ததில் பிடித்தது எஸ் ரா வா? (தேசாந்திரி)
    மலையாள பட பாடலும் காட்சியும் இனிமை.
    ஏதோ சாக்லேட் பானம், அல்லது சாக்லேட். இப்படி சாக்கேட் பொங்கி வழிந்து மெஷினில் சுற்றி கொண்டு இருக்கும் அதிலிருந்து எடுத்து கொடுக்கிறார்கள் பொருட்காட்சி, மற்றும் மால்களில்.

    விளம்பரம் அருமை.
    கெட்டதை விளம்பர படுத்துவதற்கு பதில் இது போன்ற நல்ல விளம்பரங்களை அடிக்கடி காட்டினால், வேலை ஆள், வீட்டு எஜமானி நல்லறவு இருக்கும் தான்.

    அந்த காலத்தில் இது போன்ற அக்கறை உள்ள நல்ல உள்ளங்கள் உண்டு.

    பதிலளிநீக்கு
  15. லா.ச.ரா. எழுதிய அபூர்வ ராகம் எனும் கதையிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி..... முழு கதையும் படிக்க விரும்பினால் கீழே உள்ள சுட்டியில் படிக்கலாம்.

    https://azhiyasudargal.blogspot.com/2013/04/blog-post_4.html?m=1

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  16. பதிவு அருமை என்றால் வருகின்ற கமெண்ட்களை படித்தால் அது ஒரு அலாதி அனுபவமாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னூட்டங்கள் ஊக்கம் தருபவையாக இருந்தால் தான் மேலும் எழுதத் தோன்றும் இல்லையா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கஸ்தூரிரங்கன்.

      நீக்கு
  17. சிறப்பு. அருமையான தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....