செவ்வாய், 16 ஏப்ரல், 2019

கதம்பம் – ஸ்பாஞ்ச் கேக் – பழையது – ஜீபூம்பா – ஆட்டோவுக்கு கூரை - நோட்புக்



ஸ்பாஞ்ச் கேக் - தோசைக்கல்லில் – 2 ஏப்ரல் 2019



My first cake!! Eggless and without oven!!

இதுவரை மைக்ரோவேவ் வாங்கும் எண்ணமே வரவில்லை :) கேக், குக்கீஸ் எல்லாம் செய்யணும் என்றால் oven இருந்தால் தான் முடியும் என்ற எண்ணத்தை YouTube மாற்றியது. ஏகப்பட்ட கேக் ரெசிபிகளை பார்த்து, முதல் முயற்சியாக இந்த ஸ்பாஞ்ச் கேக். அதுவும் தோசைக்கல்லில்!

வெயிலுக்கு இதமாய் - 3 ஏப்ரல் 2019



அடிக்கிற வெயிலுக்கு இதற்கு ஈடு இணை உண்டா!!!

பழையது மோர் விட்டு கரைத்தது+ போன வருடத்து மாவடு+சின்ன வெங்காயம்.

பெரும்பாலும் என் காலை உணவு பழையதோ இல்லையென்றால் சத்துமாவு கஞ்சியோ தான்.

ரோஷ்ணி கார்னர் – 5 ஏப்ரல் 2019

தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன் classwork note காணாமல் போனது :( வீட்டில் தான் இருக்கும் என மகள் சாதிக்க, நானோ ஸ்கூலில் தான் விட்டுட்டு வந்திருப்ப! என சாதிக்க... தேடாத இடமில்லை!!

வீட்டையும் வாரம் ஒருமுறை சுத்தம் செய்து அடுக்கி வைத்துக் கொண்டேயிருப்பதால் எது எங்கிருக்கும் என்று எனக்கு அத்துப்படி.

கடைசியில் நான் எவ்வளவோ எடுத்துச் சொன்ன பின்னர் தான், யாரோ எடுத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை ஒத்துக் கொண்டாள் :)

மாற்று வழியை யோசித்தோம். புத்தகத்தையும், ஹோம்வொர்க் நோட்டையும் வைத்து சமாளிக்கலாம். இல்லாததை தோழி ஒருவரிடம் சொல்லி ஃபோட்டோ எடுத்து வாட்ஸப்பில் அனுப்பி விடச் சொன்னோம்.

ஆக, இதை வைத்து அந்த தேர்வை சமாளித்தோம். அப்பாடா! வரும் வருடம் முதல், முதலிலிருந்தே இன்னொரு காப்பி எடுத்து வைத்து கொள். இல்லையென்றால் நீ ஹோம்வொர்க் செய்யும் நேரத்தில் நான் எழுதி வைக்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.

ஜீ பூம் பா!!!!

இன்று காலை தேர்வுக்கு கிளம்பும் நேரத்தில் தலையில் வைத்து பின்னும் ரிப்பனை காணவில்லை :) தேடாத இடமில்லை :) dustbin உள்பட :)

ஒருநாள் சமாளிச்சுக்கோ!! சாயங்காலம் வாங்கலாம் என்றால் ம்ம்ம்ம்ஹூம்ம் :) ஒத்துக்க மாட்டாங்க என்கிறாள். தேர்வுக்கே போகமாட்டாளோ என்ற பயம் எனக்கு.

சோதனையோ சோதனை!!

அப்புறம் எப்பவோ வாங்கிய ஒரே ஒரு புது ரிப்பன் கிடைத்தது. அதை இரண்டாக கட் பண்ணி bow எல்லாம் போடாமல் அவிழ்ந்து வரா வண்ணம் வைத்து பின்னி அனுப்பியுள்ளேன் :)

வரும் வருடம் முதல் ஆறு ஜோடியாவது வாங்கி வைக்க வேண்டும் :)

கோடைக்கு இதமாய்… - 6 ஏப்ரல் 2019



இன்று பயணம் செய்த ஓலா ஆட்டோவில்.

ஓட்டுனர் ரத்தினவேலிடம் கேட்டேன். புதுவிதமா ஓலைப் பின்னியிருக்கீங்களே. வேற எங்கேயும் நான் பார்த்ததில்லை என்றேன்.

இந்த வருஷம் தான்க்கா யோசிச்சு போட்டேன். ”குளுகுளுன்னு இருக்குமேக்கா” என்றார்.

ஆமாங்க. நல்லாருக்கு. உங்க ஐடியாவா இது என்றேன். ஆமாம்க்கா என்றார்.

பின்னோக்கிய பயணம் – 16 ஏப்ரல் 2012



கோவை2தில்லி வலைப்பூவில் இதே நாளில் ஏழு வருடங்களுக்கு முன்னர் எழுதிய ஒரு பதிவு – வாசிப்பனுபவமாக வெளியிட்ட பதிவு!


இதுவரை வாசிக்காதவர்கள் வாசிக்கலாமே!

மழையே மழையே வா வா!!! – 08 ஏப்ரல் 2019

நேற்று இரவு புழுக்கத்தையும் வெயிலின் தகிப்பையும் எண்ணி உறக்கமின்றி புரண்டு கொண்டிருந்த போது, தூரத்தில் சமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதலின் பொருட்டு செல்பவர்களின் வேட்டுச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது.

முன்பெல்லாம் பூச்சொரிதலின் போது சிறு தூறலாவது இருக்கும். தாயே!! உனக்கு எங்கள் மீது கோபமோ!!! இயற்கையை அழித்துக் கொண்டே வருகிறோம்! மனிதர்களின் மனதிலும் நிறைய வக்கிரங்கள்!! இதையெல்லாம் மன்னித்து மழையைத் தருவாய் தாயே!!!

மகளிடம் இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். ம்ம்ம்... என்று கேட்டுக் கொண்டிருந்தவள், சற்று நேரத்தில் உறங்கிப் போக, நானும் மனதில் பலதும் யோசித்துக் கொண்டே நித்திரையில் ஆழ்ந்தேன்.

காலையில் எப்போதும் போல் வானொலியை வைத்து விட்டு, கடவுளிடம் ஒரு நிமிடமாவது பிரார்த்திப்பது என் வழக்கம். கண்ணை மூடி கையை கூப்பியதும்.

மழையே மழையே வா வா!!
மண்ணை நனைக்க வா வா!!

என்ற கூட்டு பிரார்த்தனை வானொலியில்.

அதுவே இன்று என் பிரார்த்தனையாகவும் ஆனது.

நீங்களும் சொல்லுங்களேன்.

மழையே மழையே வா வா!
மண்ணை நனைக்க வா வா!!!

என்ன நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....

நட்புடன்

ஆதி வெங்கட்

48 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி அண்ட் ஆதி.

    ஆதி கே செய்ய மைக்ரோ வேவை விட பெஸ்ட் ஓடிஜி...ஓவன் டோஸ்டர் க்ரில்லர். ஆனால் அதுவும் இல்லாமல் குக்கரிலேயே நன்றாக வரும். குக்கீஸ் சில வகை கேக் கூட தோசைக் கல்லில் செய்யலாம்.

    நீங்க செஞ்சுருக்கறது சூப்பரா இருக்கு. ரொம்ப அழகா வந்துருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. தேடுதல் படலம் ஹா ஹா ஹா எங்க வீட்டுல இன்னமும் தொடருகிறது. இப்பலாம் நான் க்ளீனிங்க் செய்வது என்றால் வீட்டவர் ஒத்துக் கொண்டால் மட்டுமே. இல்லை என்றால் நான் அடுக்கி வைக்க சில சமயம் அடுக்கி வைத்ததை நான் மறக்க ஹா ஹா ஹா ஹா ...அதனால் அதது எப்படி கலைந்து இருந்தாலும் இருக்கனும் அதுதான் ஈசியாம்...சரினு பில் எல்லாம் கலைந்து கிடந்தாலும் கண்டு கொள்வதில்லை. என் ஏரியாக்களை மட்டுமே பார்த்துக் கொள்வது...என்று ஆகிப் போனது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... பல வீடுகளில் இப்படித்தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  3. மழையே மழையே வா வா!..
    மண்ணை நனைக்க வா வா!...


    எல்லாருக்கும் ஆகட்டும் மழை...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  4. கேக் எல்லாம் வீட்டில் செய்ததே இல்லை! காலையில் பழையது சாப்பிட்டு பல வருடங்கள் ஆகின்றன.

    குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழையதும் ஊருகாயும்.... என்னவொரு சுவை இல்லையா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. பொருட்கள் காணாமல் போகும் காட்சிகள் எங்கள் வீட்டில் சர்வ சகஜம். நானே ஒரு மறதி நோயாளி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. ஓலா ஆட்டோ தகவல் பேஸ்புக்கில் படித்தேன். அவரை மனதாரப் பாராட்டுவோம். என்ன ஒரு ஐடியா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. தமிழ்நாட்டில் மழை பொழிய இறைவனை வேண்டுவோம். தென் தமிழகத்தில் மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக வேதர்மேன் தகவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் ரொம்ப வேண்டினால், 2015 டிசம்பர் மாதிரி ஆகிடப்போகுது.

      இலவசம் கொடுப்பதற்குப் பதில் ஏரிகளை, கண்மாயை தூர் வாரிவைக்கக்கூடாதா? மழை வெளுத்துக்கட்டும்போது தண்ணீர் வேஸ்ட் ஆகாமல் இருக்குமே

      நீக்கு
    2. மழை - நல்லது. அதீத அளவாக இல்லாமல் தேவையான அளவில் பொழியட்டும்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. குளம், ஏரிகளை தூர் வாரலாம்! ஆனால் அதில் எல்லாம் அரசியல்வாதிகளுக்கு விருப்பமில்லை. அவை தண்ணீர் இல்லாமல் வறண்டு போனால் தான் அங்கே பிளாட் போட்டு விற்க முடியும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  8. முகநூலிலும் பார்த்தேன், படித்தேன். மழை நல்லபடி பொழிய அந்த மாரியம்மன் தான் கருணை செய்ய வேண்டும். பிரார்த்திப்போம். இந்த வருஷம் வெயிலை விடச் சூடு , வெப்பம் அதிகம் தெரிகிறது. அதன் தாக்கத்திலிருந்து நல்லபடியாக விடுபட்டுக் கோடை நல்லபடிக் கழியவும் மாரியம்மன் தான் அருள் புரியணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோடை நல்லபடிக் கழிய மாரியம்மன் அருள் புரியட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  9. குக்கர் கேக் எல்லாம் எண்பதுகளில் முயன்றது. பிஸ்கட்டுகள் கரி அடுப்பில் சீனாச்சட்டியில் மணல் நிரப்பி மேலே ஒரு தட்டு வைத்துச் செய்திருக்கேன். அதெல்லாம் ரொம்பவே வேலை வாங்கும் என்றாலும் அப்போதெல்லாம் ஓர் ஆர்வம். குழந்தைகளுக்கு விதம் விதமாய்ப் பண்ணிக் கொடுக்கணும் என. பின்னால் பஜாஜ் அவன் வாங்கியும் செய்திருக்கேன். கடைசியில் பெண் கல்யாணம் ஆகிப் போய்ப் பையரும் அம்பேரிக்காவில் படிக்க/வேலைக்கு என்று போய்விட அவன் தூங்க ஆரம்பித்தது. நம்மவருக்குப் பொறுக்காதே! உடனே தானம் செய்து விட்டார். :( இப்போல்லாம் இதெல்லாம் பண்ணுவதே அரிதாகி விட்டது! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவையில்லாமல் இருப்பதை நானும் இப்படி யாருக்காவது கொடுத்து விடுவேன். அவர்களாவது பயன்படுத்தட்டுமே என்று தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  10. இங்கே பழையதுக்கு இரண்டு பேருமே போட்டி என்பதால் சமயங்களில் நிறைய வைச்சுடுவேன். குக்கர் கேக்கில் முடிந்தால் பாதாம், முந்திரி, கிஸ்மிஸ் பழங்கள் சேர்க்கலாம். அல்லது டுட்டி ஃப்ரூட்டி சேர்க்கலாம். நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழையதுக்குப் போட்டி! நல்ல விஷயம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  12. கேக்கைப் பார்த்தா ஜொள்ளு ஊறுது. எப்பிடி செஞ்சீங்க. போட்டிருக்கலாமே. அனைத்தும் அருமை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணையத்தில் பார்த்து செய்தது தான் சகோ.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

      நீக்கு
  13. ஆட்டோவில் கூரை ஸூப்பர் ஐடியா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  14. ஆட்டோவில் கூரை மிகவும் பிரமாதமான சிந்தனை. ஆட்டோ ஓட்டுனருக்கு ஒரு 'ஓ' போடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

      நீக்கு
  15. ஆட்டோ மேல கூரை அழகு செம ஐடியா!!

    நாங்களும் கூட்டுப் பிரார்த்தனையில் இணைகிறோம். ஆம் மழை வேண்டும்.

    கதம்பம் அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  16. ஓலா ஆட்டோ சூப்பர்...

    மழையே மழையே வா வா...!
    மண்ணை நனைக்க வா வா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  17. வண்ணத்துப்பூச்சியின் கோபம் பார்க்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது படியுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  18. தோசைக்கல்லில் ஸ்பாஞ்ச் கேக் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  19. என் மனைவி வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி படித்ததாக்ச் சொன்னார் மாடி மேற்கூயைஒ வைட் சிமெண்ட் போட்டு மெழுகி விட்டால் வெப்பமே தெரியாதாம் என் புவையின் எண்ணங்களி அவன் இல்லாமல் கேக் பேக்கலாம் என்று பதிவிட்டிருந்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலதிகத் தகவல்கள் சிறப்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  20. அனைத்தும் அருமை. முகநூலில் படித்து மகிழ்ந்தேன்.மீண்டும் இங்கும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  21. //மழையே மழையே வா வா!!
    மண்ணை நனைக்க வா வா!!//
    மழை வருதாமே! குடையை தேடி வச்சுக்கிட்டீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடையைத் தேடி வச்சுக்கிட்டீங்களா... ஹாஹா... குசும்பு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  22. மழை வேண்டும் ஆம்.

    ஆட்டோவின் மேல் ஓலைக் கூரை வெயிலுக்கு நல்ல ஐடியாவாக இருக்கிறதே.

    கதம்பம் அனைத்தும் அருமை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  23. நேற்று சொல்ல விட்டது.

    பழையது ஆம் எங்கள் வீட்டிலும் உண்டு காலை நீராகாரம் என்று சாப்பிடுவதுண்டு.

    ஆட்டோ மேல் ஓலையைப் பார்த்த யாரேனும் ஓலைத் தட்டி செய்து கார், ஆட்டோக்களுக்கு விற்கவும் தொடங்கலாம்.....ஆட்டோக்காரருக்கு ராயல்டி கொடுப்பாங்களா?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீராகாரம் - சிறப்பு. உடம்புக்கு நல்லது.

      ராயல்டி - ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....