செவ்வாய், 9 ஏப்ரல், 2019

கதம்பம் – நரஹரி - இந்த வாரம் கொஞ்சம் அதிகமோ? – கழுத்தணி – இட்லி தினம்


அன்பு சூழ் உலகு - இரட்டிப்பு மகிழ்ச்சி – 25 மார்ச் 2019



பிறந்தநாளுக்கு நேரில் வாழ்த்து சொல்ல தம்பதி சமேதராய் Rishaban Srinivasan சாரின் வருகை. அன்பளிப்பாக அவருடைய நரஹரி புத்தகம்!!





வாங்க சாப்பிடலாம் - ஒரே கல்லில் இரண்டு மாங்காய் - 28 மார்ச் 2019



இன்றைய மெனு!!

பீர்க்கங்காய் கூட்டும், அதன் தோலில் துவையலும்!!

இதே போல் செளசெள தோலிலும், பரங்கிக்காயில் விதையோடு ஒட்டிய சதைப்பகுதியிலும் துவையல் அரைக்கலாம்.

வாங்க சாப்பிடலாம்!

மாங்காய் தொக்கு – 29 மார்ச் 2019



இன்றைக்கு செய்த மாங்காய் தொக்கு! இன்னும் கொஞ்சம் நாள் தயிர் சாதத்துடன மாங்காய் தொக்கு தான்!

மார்க் நினைவுபடுத்திய விஷயம் – அப்பள பஜ்ஜி - 31 மார்ச் 2019



அம்மா சனிக்கிழமையில் தான் இந்த பஜ்ஜி, சேவை, குணுக்கு எல்லாம் செய்வார். அப்பாவுக்கும் எங்களுக்கும் விடுமுறை என்பதால் காலை 10 மணி போல சாப்பாட்டை போட்டு விடுவார். அப்பா தூங்கி எழுந்த பின் மாலைச் சிற்றுண்டிக்குத் தான் இந்த வகையறா எல்லாம்.

பஜ்ஜி என்றால் எல்லோருக்குமே பிடிக்கும் இல்லையா!! எல்லோரும் சாப்பிட்ட பின் பார்த்தால் பஜ்ஜிக்காக நறுக்கிய காய்கறிகள் தீர்ந்திருக்கும். அப்போது அம்மா தனக்காக மீந்த மாவில் இந்த பஜ்ஜியை செய்து சாப்பிடுவார். அதிலும் எங்களுக்காக கொஞ்சம். இப்படி பஜ்ஜியில் ஆரம்பித்து எங்களுக்காக தியாகம் செய்தது எவ்வளவோ!!!

அப்படி செய்து தந்ததில் எனக்குப் பிடித்ததில் இதுவும் ஒன்று. மகளிடம் சொன்னதிலிருந்து அவளுக்கும் பிடித்துப் போனது. இன்று அம்மாவை நினைத்துக் கொண்டே இந்த உளுந்து அப்பள பஜ்ஜியை செய்தேன்.

இட்லி தினம் – 30 மார்ச் 2019



இன்றைக்கு இட்லி தினமாம்! பதிவுலகில் இட்லி என்றாலே நினைவுக்கு வருவது ATM என அழைக்கப்படும் அப்பாவி தங்கமணி அவர்கள் தான். இப்போதெல்லாம் பதிவுகளே எழுதுவதில்லை! நான் செய்த சில இட்லிகள். ரவா இட்லி, கொள்ளு இட்லி, தவா இட்லி மற்றும் காஞ்சிபுரம் இட்லி, சாம்பார் இட்லி மற்றும் பொடி இட்லி!

ரோஷ்ணி கார்னர் – கழுத்தணி – 30 மார்ச் 2019



மகள் சில்க் த்ரெட்டில் செய்த கழுத்தணி!

என்ன நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....

நட்புடன்

ஆதி வெங்கட்


36 கருத்துகள்:

  1. காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி!

    ரிஷன் அண்ணா தம்பதியாய் வந்து உங்களை வாழ்த்தி கொடுத்திருக்கும் பரிசு வாவ்! சூப்பர்!

    யம்மாடியோவ் இன்று இம்புட்டு சாப்பாடா!!!!!! ஹா ஹா ஹா

    எல்லாமே நல்லாருக்கு.

    ரோஷிணி குட்டி மீண்டும் ராக்ஸ்!!! ரொம்ப அழகா இருக்கு கழுத்தணி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதாஜி!

      உணவு இன்று கொஞ்சம் அதிகம் தான்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. கதம்பம் மணத்தது சகோ வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  3. குட்மார்னிங். நரஹரி படிச்சாச்சா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை ஸ்ரீராம் வாங்க குட்மார்னிங்க்!

      கீதா

      நீக்கு
    2. காலை வணக்கம்.

      நரஹரி இன்னும் என் கைக்கு வரவில்லை. திருவரங்கத்தில் இருக்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. ப்ரயாக்ராஜிலிருந்து ஸ்ரீராம் ரிப்போர்ட்டிங்! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  4. தோல் சட்னி, துவையல் பக்கம் சென்றதில்லை. மாங்காய்த் தொக்கு கவர்ச்சியாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோல் துவையல் நன்றாகவே இருக்கும் ஸ்ரீராம். முயற்சித்துப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. நானும் பூஷணி சதை, சௌ சௌ தோல் பீர்க்கங்காய் தோல் துவையல் செய்வதுண்டு. நீங்க பீர்க்கங்காய் தோலை ரொம்ப அழகா கட் செஞ்சுருக்கீங்க ஆதி.

    பஜ்ஜி பார்க்கவே யம்மியா இருக்கு. அதே போல மாங்காய்த்தொக்கு.

    இட்லி வாவ் போட வைக்கிறது. பேசாம உங்க வீட்டுக்கு வந்து டேரா போட்டுற வேண்டியதுதான்!!!!!!!

    அனைத்தும் அருமை!! இம்புட்டு சாப்பாடா என்று சும்மா சொன்னேன்.

    எல்லாமே நல்லாருக்கு சூப்பரா இருக்கு. ரசித்தேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்து பகுதிகளையும் ரசித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  6. உங்க ஃபுட் டிஸ்ப்ளே ரொம்ப நல்லாருக்கு ஆதி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  7. ஹை.. நரஹரி..

    இனிய நாளாகட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ரிஷபன் ஜியின் வருகை... Dhதன்யனானேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  8. மாங்காய் தொக்கு - இந்த மாதிரி புகைப்படத்தை எல்லாம் போட்டு எங்கள் சாபத்தை வங்கிக்காதீங்க..

    அப்பள பஜ்ஜி - புதிதாக கேள்விபடுகிறேன்.

    தங்களின் இனிய மகளுக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பள பஜ்ஜி - செய்து பாருங்கள். நன்றாகவே இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  9. //பீர்க்கங்காய் கூட்டும், அதன் தோலில் துவையலும்!!// - சமீபத்தில்தானே இதனை எங்கேயோ 'காசி ஆர்கனைசர்' செய்து பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அங்கே பீர்க்காங்காய் தோசை கூட கிடைத்ததே! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  10. //நறுக்கிய காய்கறிகள் தீர்ந்திருக்கும். அப்போது அம்மா // - அம்மா மட்டுமல்ல. பல சமயங்களின் மனைவியும் அப்படித்தான். நல்லா கூர்ந்து கவனித்தீங்கன்னா, அவங்க பசங்களுக்காக அவங்க நிறைய தியாகம் செய்வதை (ஓய்வு, கடும் உழைப்பு, செய்துதந்துவிட்டு அவங்க பிடிக்கலைனோ இல்லை வேண்டாம்னோ சொன்னா, வேறு செய்துதருவது போன்றவை) நாம் கண்கூடாகப் பார்க்கலாம் (நமக்கு நற நறவென கோபம் வரும்...பசங்க, அந்த உழைப்பை மதிக்காம வேண்டாம் என்று சொல்லும்போது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபம் வரும்.... உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  11. மாங்காய் தொக்கு ஸ்ஸ்ஸ்... யப்பா...! புகைப்படம் எடுப்பதற்குள் இரு விரல்களால் ருசித்தது யார்...? ஹிஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரு விரல்களால் ருசித்தது யார்! ஹாஹா.... நல்ல அவதானிப்பு! ஆனால் அப்படி எடுத்திருக்க வாய்ப்பில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  12. இம்மாதிரி கழுத்தணி கள்தான் மோஸ்தர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  13. அனைத்தும் முகநூலில் ரசித்தேன், இங்கும் ரசித்து படித்தேன்.
    பீர்க்கங்காய் தோலில் துவையல் செய்வது முதன் முதலில் என் மாமியாரிடமிருந்து கற்றுக் கொண்டேன்.
    சவ் சவ் தோலிலும் இது போல் துவையல் செய்யலாம்.
    மருந்து அடிக்காத காயாக இருக்க வேண்டும்.
    பீர்க்கங்காய் தோட்டத்தில் போட்டது என்று சொல்லி கொடுப்பதில் செய்வேன். கடைகளில் வாங்கினால் செய்ய மாட்டேன்.

    ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது பல காய்கறிகளில் மருந்து தான் பிரதானமாக இருக்கிறது! :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  14. இந்த மாதிரி தோல் துவையல்களுக்கு கவர்ச்சிகரமாக வேறு பெயர் கொடுத்தால் தேவலை.
    நானும் மாங்காய் தொக்கு செய்திருக்கிறேன். நீங்கள் அது தீரும் வரை, (சீக்கிரம் தீர்ந்து விடும்.) அதுதான்.
    ப்ரெட்டில் மாங்காய் தொக்கு ஸ்பெரெட் பண்ணி சாப்பிட்டிருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ரெட் ஸ்லைசில் ஊறுகாய் ஸ்ப்ரெட் செய்து சாப்பிட்டதுண்டு. செமையாக இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா...

      நீக்கு
  15. எல்லாமே முகநூலில் பார்த்தவையே!

    ரோஷிணி செய்த சில்க் த்ரெட் நெக்லஸ் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  16. முகநூலிலும் பார்த்த நினைவு இருக்கு. அப்பாவிக்கு அடுத்தடுத்துக் குடும்பத்தில் உறவினர்கள் இழப்பு. வளர்த்த அத்தை தீபாவளி சமயம் இறக்கத் தொடர்ந்து அவர் பாட்டியும் மகளைத் தேடிப் போனதில் அப்பாவி ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறார். ஈடு செய்ய முடியா இழப்புக்கள். காலம் தான் அவர் மனதைத் தேற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஈடு செய்ய முடியா இழப்புகள்... ஆண்டவன் அவருக்கு மன அமைதியைத் தரட்டும்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  17. வீட்டு வேலைகள் அழைக்கின்றன. இனி மதியம் தான். இன்னும் சிலர் பதிவுகளுக்குப் போகவே இல்லை. போகணும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடமை முக்கியம். முடிந்த போது விடுபட்ட பதிவுகளைப் படியுங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....