காஃபி வித் கிட்டு – பகுதி – 29
முகநூலிலிருந்து ஒரு வாசகம்:
உயரத்தில் இருக்கிறோம் என ஆட்டம்
போடாதே. தவறி விழ நேர்ந்தால், தரையில் இருப்பவனை விட உனக்கே பாதிப்பு அதிகம்!
இந்த வாரத்தில் ஒரு பாடல் - கலங்க்:
ஒரு சமயத்தில் ராஜேந்தர் பாடல்களை
அவற்றின் பிரம்மாண்ட செட்டுக்காகவே பார்த்தவர்கள் உண்டு. இந்தப் பாடலும் அப்படி
ஒரு பிரம்மாண்டம்… மொழி புரியாவிட்டாலும் பார்க்கலாம். பாடலும் இனிமையான பாடல்
தான். பாருங்களேன்.
கரப்பான் பூச்சி கதை – சுந்தர் பிச்சை
''ஒரு நாள் ஹோட்டல் ஒன்றில் அமர்ந்து
காபி குடித்து கொண்டு இருந்தேன். எனக்கு சற்று தள்ளி இருந்த டேபிளில் ஒரு நண்பர்கள்
குழு அமர்ந்திருந்தது. அவர்களுக்குள் பேசியபடி உணவருந்திகொண்டிருந்தனர்.
அப்போது எங்கிருந்தோ ஒரு கரப்பான் பூச்சி
பறந்து வந்து ஒரு பெண்ணின் தோள் மீது அமர்ந்தது. உடனே, அந்த பெண்மணி கத்தி கூச்சலிட்டபடி
எழுந்தார். அதிர்ச்சியில் உறைந்த முகத்துடணும், நடுங்கும் குரலுடனும் பதறியபடி கைகளை
வீசி ஆடியபடி எழுந்து கரப்பான் பூச்சியை தட்டி விட முயற்சி செய்தார். சற்று நேர முயற்சிக்கு
பிறகு அதை தட்டி விட்டுவிட்டார்.
ஆனால், அந்த பூச்சி கீழே விழாமல் அவர்
பக்கத்தில் இருந்த மற்றொரு பெண்ணின் மீது போய் அமர்ந்து விட்டது. அந்த பெண்மணி இவரைவிட
அதிக குரலில் கத்தியபடி அந்த பூச்சியை விரட்ட முயற்சித்தார். சிறிது நேர முயற்சியில்
வெற்றியும் பெற்றார்.
மீண்டும் அந்த பூச்சி பறந்து மற்றொருவர்
மீது அமர்ந்து கொண்டது. இந்த முறை அது அமர்ந்த இடம் அந்த ஹோட்டலின் சர்வர் ஒருவரின்
தோள்பட்டை. அந்த பெண்களின் செயல்களுக்கு நேர் எதிராக எந்த பதட்டமும் இன்றி அந்த கரப்பான்பூச்சியின்
நடமாட்டத்தை கவனித்து சரியான நேரத்தில் அதனை தன் கை விரல்களால் பிடித்து வெளியே எறிந்தார்.
இதனை பார்த்த நான் சிந்திக்க தொடங்கினேன்.
அந்த பெண்களின் செயல்களுக்கு காரணம் அந்த கரப்பான் பூச்சியா? இல்லை. அந்த பெண்களின்
பயந்த சுபாவம் தான், அவர்களை பதட்டப்பட செய்து உள்ளது. அதே நேரம் அந்த சர்வரின் தீர்க்கமான
பதட்டமில்லாத சிந்தனையால் அவரால் சரியாக அந்த பூச்சியை பிடிக்க முடிந்தது.
அப்போது தான் எனக்கு புரிய தொடங்கியது.
நம்மை வெளியில் நடக்கும் எந்த நிகழ்வும் நம் கட்டுபாட்டில் இருக்கும் வரை நம்மை பாதிக்காது.
நம்மால் எந்த சூழலையும் எதிர்கொள்ள முடியும். அதற்கு தேவை மனக் கட்டுப்பாடு தான். எந்த
ஒரு விஷயம் குறித்தும் உடனடியாக முடிவு எடுப்பதைவிட சிந்தித்து முடிவு எடுப்பது தான்
பயன் தரும்" என்றார்
ரசித்த நிழற்படமும் ஒரு ஹிந்தி கவிதையும்:
என்ன ஒரு மகிழ்ச்சி இவள்
முகத்தில்! ஹிந்தியில் எழுதி இருக்கும் வாசகத்தின் தமிழாக்கம்….
ஒரு சாதாரண ரொட்டி/சப்பாத்தி
சாப்பிட்டதில் ஊற்று போல் பொங்கி வரும் இந்த மகிழ்ச்சி… உங்கள் பிஸ்ஸா/பர்கரில்
கிடைத்திடுமா என்ன…
பின்னோக்கிப் பார்க்கலாம் – இதே நாளில் 2010-ல்:
வலைப்பூவில் எழுத ஆரம்பித்த
நாட்களில் “தலைநகரிலிருந்து” என்ற தலைப்பில் தலைநகர் விஷயங்களை எழுதிக்
கொண்டிருந்தேன். அப்படி இதே 20 ஏப்ரலில் எழுதிய ஒரு பதிவு…
ஷிக்கஞ்சி, Gகோலாகரி மற்றும்
குதுப்மினார் பற்றி எழுதி இருக்கிறேன்! வாசிக்காதவர்கள் வாசிக்கலாமே!
என்ன நண்பர்களே, இந்த வாரத்தின்
காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச்
சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!
பதிலளிநீக்குகாஃபிவித் கிட்டுவில் ஆரம்பமே அழகான வாசகத்துடன்!
கீதா
காலை வணக்கம் கீதாஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கரப்பான் பூச்சி - சுந்தர்பிச்சை வாட்சப்பில் வந்தது. நல்ல தத்துவம். மீண்டும் இங்கு வாசித்து ரசித்தேன்.
பதிலளிநீக்குகாணொளி பாடல் அப்புறம் கேட்கிறேன் ஜி
கீதா
ஆமாம் - இந்த கரப்பான்பூச்சி கதை சிலர் முன்னமே படித்திருக்கலாம். நான் படித்தது இது தான் முதல்!
நீக்குகாணொளி முடிந்த போது பாருங்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!
குட்மார்னிங்.
பதிலளிநீக்குசுவையான கதம்பம்.
வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ரொட்டி- பிசா, பர்கர் - கவிதை ரசிக்க வைத்தது.
பதிலளிநீக்குசுந்தர் பிச்சையைப் பாருங்கள். படிப்பினை கற்றுக்கொள்கிறார். மற்றவர்களாயிருந்தால் இவ்வளவு உயர்ந்த ஹோட்டலுக்குள் கரப்பான் எப்படி வந்தது என்று போராட்டம் தொடங்கி இருப்பார்கள்!
கவிதை உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.
நீக்குமற்றவர்களாக இருந்தால் - ஹாஹா... நிச்சயம் போராட்டம் தான். எதிர்ப்பு தான். அடுத்தவர்களின் குறைகளைச் சொல்வது மிகச் சுலபம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நிழற் படமும் அந்தக் கவிதையும் அசத்தல். மிகவும் ரசித்தேன் ஜி.சூப்பர் மெசேஜ் அதில்...
பதிலளிநீக்குகீதா
கவிதையின் அர்த்தம் சொல்ல நினைத்தேன் நீங்களே சொல்லிருக்கீங்க ஜி
நீக்குபழைய பதிவும் பின்னர் வாசித்துவிட்டு வ்ருகிறேன் ஜி
கீதா
கவிதை உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!
ஹிந்தி படிக்கத் தெரியாதவர்களுக்கும், படிக்கத் தெரிந்த சிலருக்கும் புரியாது என்பதால் தமிழாக்கமும் கொடுத்து விட்டேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!
கரப்பான்பூச்சியை அவர் கையாண்ட விதத்தினை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டால் பிரச்சனையே இல்லை.
பதிலளிநீக்குகையாளும் விதம் தான் முக்கியமானது. எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
கவிதையும் அந்தக் குழந்தையும் மனதைத் தொட்டார்கள். சுந்தர் பிச்சையின் பார்வையின் மாறுபட்ட கோணமும் சிந்திக்க வைத்தது. பொதுவாக அத்தனை பெரிய ஓட்டலில் இப்படிக் கரப்பு நடமாடும்படி அசுத்தமாக வைத்திருப்பதைத் தான் அனைவரும் சொல்லுவார்கள். எல்லாம் நன்றாக இருக்கிறது. பழைய பதிவைப் படிக்கவில்லை என்றே நினைக்கிறேன். அதையும் நீங்க போட்டிருக்கும் "கலங்க்" பாடலையும் மத்தியானமாக் கேட்கணும். :))))
பதிலளிநீக்குகவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குகலங்க் பாடல் நன்றாகவே இருக்கிறது. முடிந்த போது பாருங்கள்.
முகநூல் வாசகம் அருமை ஜி
பதிலளிநீக்குகாணொளியை இரசித்தேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குகரப்பான் பூச்சி தத்துவம் அருமை. குழந்தையின் மகிழ்ச்சி நமக்கும் தொற்றி க் கொள்கிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா...
நீக்குகரப்பான் பூச்சி தத்துவம் அருமை. குழந்தையின் மகிழ்ச்சி நமக்கும் தொற்றி க் கொள்கிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா...
நீக்குமனக் கட்டுப்பாடு சிறப்பு....
பதிலளிநீக்குஅந்த மகிழ்ச்சியான புன்னகை... ஆகா...!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குபடிப்பதற்கு ரசிக்கும்படி இருந்தது.சுந்தர் பிச்சையின் தத்துவம் சிந்தனையை தூண்டியது.ஹிந்தி கவிதை பிரமாதம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!
நீக்குஅதென்ன பெண்களுக்கும் கரப்பான் பூச்சிக்கும் பகைன்னு தெரில. எல்லா பெண்களும் கரப்பான் பூச்சிக்கு பயப்படுறாங்க!!
பதிலளிநீக்குஹாஹா... பலருக்கும் பயம் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!
அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குபாடல் இனிமை, காட்சி அருமை.
சுந்தர் பிச்சை கதை, முகநூல் வாசகம் , குழந்தையின் சிரிப்பு அனைத்தும் அருமை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகாஃபி வித் கிட்டு அருமையாக இருந்தது. முதல் செய்தி, முகநூல் செய்தி உண்மையை உணர்த்தியது. (செய்தி கூட அல்ல.! நல்ல அறிவுரை..)
காணொளி பாட்டு, பிரம்மாண்டமான செட்டுடன் மொழி புரியாவிடினும், பாடல் இனிமையாக உள்ளது.
கரப்பான் பூச்சி கதை எதற்கும் பதட்டப்படாத நிலை உடலுக்கும், மனதிற்கும் நல்லதென்பதை உணர்த்தியது.
நிழற்படமும், கவிதையும் ரசித்தேன். இந்தப் படம் உங்கள் பதிவிலேயே ஒருமுறை பார்த்ததாக நினைவு.
பழைய பதிவுக்கும் இப்போதுதான் சென்று பார்த்து கருத்திட்டு வந்தேன். மிகவும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குகலங்க் படத்தை எப்போது போய் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கையில் அந்தப்படத்தில் வரும் மிக அருமையான பாடலைப்போட்டிருக்கிறீர்கள்! ரசித்துப்பார்த்தேன்/கேட்டேன். மிகவும் நன்றி!
பதிலளிநீக்குஅந்தக்குழந்தையின் புகைப்படம் மிக அழகு! ஒரு தேர்ந்த ஓவியனின் ஓவியத்தையே தோற்கடிக்கும் புகைப்படம்! அத்தனை தெளிவாக, உடனேயே வரைய வேண்டுமென்ற தாக்கத்தை ஏற்ப்டுத்துகிறது!
கலங்க் படம் நான் பார்க்கவில்லை. பொதுவாக படங்கள் பார்ப்பது குறைவு தான்.
நீக்குஆஹா.... உங்கள் கைவண்ணத்தில் குழந்தையை ஓவியமாகக் காண ஆவல். வரைந்து உங்கள் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லது எனக்கு அனுப்பி வைத்தால் காஃபி வித் கிட்டு பதிவொன்றில் பகிர்ந்து விடுகிறேன்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
காஃபி வித் கிட்டு செய்திகள் அனைத்தும் அருமை வெங்கட்ஜி.
பதிலளிநீக்குகரப்பான் பூச்சி கதையிலிருந்து சுந்தர் பிச்சை கற்ற தத்துவம் சிறப்பு.
துளசிதரன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
நீக்குகுழந்தையின் சிரிப்பும் அப்படமும் மிக அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குஅதில் சொல்லப்பட்டிருக்கும் கவிதை என்ன யதார்த்தம் இல்லையா?
துளசிதரன்
ஆமாம் யதார்த்தமான கவிதை. உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
கலங்க் படப் பாடல் மிக நன்றாக இருக்கிறது வெங்கட்ஜி! நேற்று கேட்டுவிட்டு சொல்ல முடியவில்லை
பதிலளிநீக்குகீதா
பாடல் உங்களுக்கும் பிடித்திருந்ததா? மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!
மகிழ்ச்சி - உண்மையான மகிழ்ச்சி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
நீக்கு