ஞாயிறு, 12 மே, 2019

ப்ரயாக்ராஜ் - கும்பமேளா – நிஷானா - நிழற்பட உலா – பகுதி மூன்று



சென்ற பகுதியில் வெளியிட்ட படங்களில் ஒன்றாக சில பக்தர்கள் சிகப்புத் துணியால் சுற்றப்பட்ட மூங்கில் கழியை எடுத்துக் கொண்டு போவது போன்ற மேலுள்ள படத்தினை வெளியிட்டு இருந்தேன். அது என்ன என்று சிலருக்குத் தோன்றியிருக்கலாம்! ஆனால் பின்னூட்டத்தில் கேட்காமலும் விட்டிருக்கலாம்! ஆனால் அது என்ன வழக்கம் என்று நான் சொல்லத்தான் போகிறேன்!
 
ப்ரயாக்ராஜ் நகரின் சுற்றுவட்டார கிராமங்களில் இருக்கும் பக்தர்கள் Bபdடே ஹனுமானின் தீவிர பக்தர்கள். தாங்கள் செய்யும் எல்லா விஷயங்களுக்கும் முன்னதாக ஹனுமனின் ஆசியை நாடுபவர்கள். அவர்கள் செய்ய நினைத்த விஷயம் நடந்து முடிந்தால் ப்ரயாக்ராஜ் நகருக்கு வந்து அங்கே சயன கோலத்தில் இருக்கும் Bபdடே ஹனுமானை தரிசித்து, தாங்கள் நினைத்த காரியத்தினை நடத்திக் கொடுத்த ஹனுமனுக்கு நன்றி சொல்லும் விதமாய் செய்யும் ஒரு விஷயம் தான் இந்த நிஷான்/நிஷானா! நன்றி சொல்லும் ஒரு குறியீடாகச் செய்யும் ஒரு விஷயத்தினை தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

தாங்கள் நினைத்த காரியம் கைகூடிய பிறகு, கிராமத்திலிருந்து ஒரு நீண்ட மூங்கிலை, சிவப்புத் துணியால் சுற்றி, அதன் மேல் முனையில் ஒரு முக்கோண சிவப்பு துணியாலான கொடியைக் [நடுவே ஸ்வஸ்திக் வரையப்பட்ட] கட்டி, அதனை அவர்கள் ஊரிலிருந்து சுமந்து வருவார்கள். அந்தக் கொடி மண்ணில் படாமல் சுமந்து கொண்டு வந்து நேரே கங்கைக் கரையில் குளித்து அந்தச் சிவப்பு முக்கோணக் கொடியை தண்ணீரில் நனைத்து, பிறகு கங்கைக் கரையில் மூங்கில் கழியை நிற்க வைத்து “ஜெய் ஹனுமான்” கோஷங்கள் எழுப்பி, Bபdடே ஹனுமானுக்கு நன்றி சொல்லி, அங்கிருந்து மூங்கிலை மீண்டும் தோளில் சுமந்து வந்து Bபdடே ஹனுமானின் கோவில் வாசலில் கொடியை மட்டும் உள்ளே காண்பித்து தோள்களில் சாற்றி வைத்து ஜெய கோஷங்கள் எழுப்புவார்கள். பிறகு கோவிலின் எதிரே இருக்கும் ஒரு பகுதியில் அந்த மூங்கில் கழியை நிறுத்துவார்கள்.

வாரத்தின் ஒவ்வொரு திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் இப்படி நிஷானா எனும் வழக்கத்தினை நூற்றுக் கணக்கான கிராமத்து பக்தர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். மூங்கிலைச் சுமந்துவரும் பக்தர்களுக்கு முன்னர் அவர்களது வீட்டினர், கிராமத்தினர் நடனம் ஆடியபடியும் பாடல்களை பாடியபடியும் வருகிறார்கள். ஒரு சிலர் இப்படி நடந்து வரும்போது அவர்களுக்கு முன்னால் ஒரு சைக்கிளில் ஆம்ப்ளிஃபையர் வைத்து பக்தி பாடல்களை ஒளிபரப்ப, பின்னால் வருபவர்கள் கூடவே ஆடிக்கொண்டு வருகிறார்கள். எங்களது இந்தப் பயணம் சனிக்கிழமையில் இருந்ததால், இப்படியான ஒரு காட்சியை எங்களால் காண முடிந்தது. நிறைய மக்கள் இப்படி மூங்கில் கழிகளைக் கொண்டு செல்வதையும், கோவிலுக்கு எதிரே மூங்கில்களை வைப்பதையும் பார்க்க முடிந்தது!

விதம் விதமான நம்பிக்கைகள் ஒவ்வொரு பகுதியிலும். நம்பிக்கை தானே வாழ்க்கை! ப்ரயாக்ராஜ் நகரில் எடுத்த படங்களில், த்ரிவேணி சங்கமத்தில் குளிக்க, படகில் பயணித்த போது சில பறவைகளை படம் பிடித்தேன். அந்த காட்சிகளை இந்த மூன்றாம் பகுதியில் பார்க்கலாம்.
















































என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில நிழற்படங்களோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

28 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    மூங்கில் கம்பில் இருப்பது முக்கோண வடிவக் கொடியா? மூட்டை போன்று அதில் ஏதோ இருப்பது போல இருக்கிறதே. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நம்பிக்கை பிரார்த்தனைகள். இந்த நம்பிக்கைதான் மக்களை வழிநடத்தியும் செல்கிறது..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதம் விதமாய் நம்பிக்கைகள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  2. பறவைகள் படம் அத்தனையும் அழகு! பறக்கும் பறவைகளையும் எடுத்தது சூப்பராக இருக்கிறது வெங்கட்ஜி.

    எவ்வளவு இருக்கின்றன...படகு சென்றாலும் பயமில்லாமல் நீந்திக் கொண்டிருக்கின்றன! பழ்கிப் போயியிக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..நிறைய பறவைகள். பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  3. கீழிருந்து ஐந்தாவது படத்தில் உள்ள ஒற்றைப் பறவை செம க்யூட் தரையில் அமர்ந்திருப்பது போல் தண்ணீரின் அலைகளுக்கு ஏற்ப மிதந்து கொண்டு அது பார்க்கும் விதம் செம க்யூட்...

    அது போல தண்ணீரில் சிறகுகள் பட்டு தண்ணீர் தெறித்து பறவைகளும் பறக்கும் படங்கள் அனைத்தும் அழௌக்..ஜி மிகவும் ரசித்தேன் படங்களிய

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  4. குட்மார்னிங்.

    ப்ரயாக்ராஜில் எங்கள் பயணம் ஞாயிற்றுக்கிழமையில் அமைந்ததால் இவற்றைக் காண முடியவில்லை. கும்பமேளா சமயம் நீங்கள் சென்றிருப்பதால் நிறைய கூட்டம் இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... எப்போதும் இருக்கும் இப்பறவைகள். நேரம் பொறுத்து வெளியே வருவது மாறலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. சயன ஆஞ்சநேயருக்கு இவ்வளவு ப்ரக்யாதி உண்டு என்று நான் அவரை தரிசிக்கும்போது தெரிந்திருக்கவில்லை. புகைப்படமும் உள்ளே எடுக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சக்தி வாய்ந்த சயன ஆஞ்சநேயர். உள்ளூர் மக்களின் இதய தெய்வம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. படங்கள் எல்லாமே அருமை. ரசித்து, ருசித்து எடுத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. படங்கள் அனைத்தும் அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. படங்கள் எல்லாம் அருமை. இம்மாதிரிக் காவடி போல் எடுத்துச் செல்வதைப் பார்த்திருந்தாலும் ஏன் என்றே தெரிந்து கொள்ளவில்லை. விளக்கத்துக்கு நன்றி. பறவைகள் அருமையாக போஸ் கொடுத்திருக்கின்றன. நீர்க்காக்கைகள் தானே அவை? படகில் இருந்து எடுத்த படங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படகில் இருந்து எடுத்த படங்கள் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  10. கரையிலே இருந்தும் எடுத்திருக்கீங்கனு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரையிலிருந்து எடுக்கவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  11. நிஷானா பிரார்த்தனைபற்றி தெரிந்து கொண்டேன்.
    பறவைகள் படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  13. அன்பு வெங்கட், நீரைக் கண்டதும்
    மனம் பரவசப் படுகிறது. எல்லோருடைய பிரார்த்தனைகளையும்
    அனுமன் நிறைவேற்றி வைக்கட்டும்.
    படங்கள் உத்சாகத்தைக் கொடுக்கின்றன.
    பிரயாக் ராஜ் வளம்பெறட்டும்.
    அன்பு ஆதிக்கு அன்னையர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  14. பறவைகள் படங்கள் அனைத்தும் மிக அழகு ...

    மிக தத்ருபமாக வந்துள்ளது ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....