ஞாயிறு
மாலை எங்கள் பகுதியிலிருந்து மெட்ரோ பிடித்து Nizamudeen ஸ்டேஷனில் இறங்கினோம். அங்கிருந்து
E Rickshaw பிடித்து இங்கு சென்றோம். இந்த வருடத்தின் ஃபிப்ரவரி 21-ஆம் தேதி தான் இதை
துவக்கியுள்ளார்கள். South Delhi Municipal Corporation இந்த பூங்காவினை உருவாக்கி
இருக்கிறது.
Waste
to wonder என்ற போதே உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆம், தேவையற்ற உடைந்த உதிரி பாகங்கள்,
பொருட்களைக் கொண்டு உலக அதிசயங்களை உருவாக்கியுள்ளார்கள்.
சுற்றிலும்
பூந்தோட்டங்கள். நடுவே Solar panels. இங்கு எரியும் விளக்குகள் அனைத்தும் சூரிய சக்தியால்
எரிபவை. அப்படியே நடைபாதை வழியாக சென்று அதிசயங்களைப் பார்க்கலாம்.
நுழைவுக்
கட்டணம் 50 ரூ. மூன்று வயதுக்குட்பட்டோருக்கும், 65 வயதுக்கு மேற்பட்டோருக்கும் அனுமதி
இலவசம். விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் அதிகம். ஆன்லைன் மூலம் டிக்கெட் பெறும்
வசதி இல்லை என்பதால் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறது. திங்கள் அன்று இந்த
பூங்காவிற்கு விடுமுறை! மாலை நேரத்தில் விளக்கொளியில் பார்ப்பது சிறந்தது.
புதிதாக
திறந்துள்ளதால் நாங்கள் சென்ற அன்று, ஞாயிறு என்பதாலும் கும்பல் அதிகம். வரிசையில்
ஒரு மணிநேரத்துக்கு மேல் நின்றே என்னவர் அன்று நுழைவுச்சீட்டு வாங்கினார் :)
Waste
to Wonder – Great Pyramid of Giza
10800
அடி அளவு இரும்பு கம்பிகள் [பூங்காக்களில் இருந்து எடுக்கப்பட்ட துரு பிடித்த பழைய
கம்பிகளிலிருந்தும், பழைய வண்டிகளின் தகரத்திலிருந்தும்] கொண்டு சுமார் 80 நாட்களில்
தயாரான 23 அடி உயரமும், 28 அடி நீள-அகலம் கொண்டது இந்த பிரமிட் வடிவம். இதில் மொத்தம்
12 டன் அளவு பழைய பொருட்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்!
Waste
to Wonder – Leaning Tower of Pisa
Cable
wire Wheels, Automobile parts, Truck Metal Sheets, Clutch Plates, C Channels
and Angles கொண்டு தயாரிக்கப்பட்டது. மொத்தம் 9 டன் அளவுள்ள பழைய பொருட்கள் இந்த வடிவத்தினை
உருவாக்க பயன்படுத்தி இருக்கிறார்கள். தரைத் தளம் மற்றும் ஏழு அடுக்குகள் கொண்டு இத்தாலியின்
பிசா நகரில் இருப்பதைப் போன்றே அமைத்து இருக்கிறார்கள். அங்கே இருப்பது போலவே 86 டிகிரி
சாய்ந்து இருக்கிறது இங்கேயும். 39 அடி உயரம், 10 அடி அகலம் 10 அடி நீள அளவில் இந்த
உருவம் அமைந்து இருக்கிறது. மொத்த உருவமும் செய்து முடிக்க 100 நாட்கள் ஆனதாம்.
Waste
to Wonder – Eiffel Tower
பழைய
Truck Petrol Tanks, Automobile Parts, clutch plates, C Channels, Angles of 3-5
inches ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த உருவத்தினை அமைத்து இருக்கிறார்கள். மொத்தம்
15 டன் அளவு பழைய பொருட்கள் இந்த உருவத்தினை அமைக்கப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
70 அடி உயரமும், 27 அடி நீள அகலத்தில் அமைந்துள்ள இந்த உருவத்தினை அமைக்க மொத்தம்
130 நாட்கள் ஆகியிருக்கிறது.
Waste
to Wonder – Colosseum
11
டன் அளவு பழைய பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்ட இந்த உலக அதிசயத்தின் பிம்பத்தினை
உருவாக்க ஆன மொத்த நாட்கள் 100! 16 அடி உயரம், 38 அடி அகலம் மற்றும் 49 அடி நீளம்!
162 pillars, scrap from children’s park [slides, swings, see-saw], 410 car
wheels to make the arch in each pillar, gears, angles, square metal pipes,
electric poles, automobile spare parts, metal railings, metal bench ஆகியவை இதில்
பயன்படுத்தி இருக்கிறார்கள்!
Waste
to Wonder – Taj Mahal
130
நாட்கள் உழைப்பில் 16 டன் அளவு பழைய தேவையற்ற பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்டது தாஜ்மஹல்
வடிவம். 37 அடி உயரம் மற்றும் 43 அடி நீள அகலத்தில் உருவாக்கிய இந்த வடிவத்தில்
1600 சைக்கிள் ரிம்கள், பழைய பாத்திரங்கள், வாணலிகள், நட்-போல்ட், வண்டிகளின் எஞ்சின்களில்
இருக்கும் ஸ்ப்ரிங் என பலவும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
Waste
to Wonder – Statue of Liberty
17
அடி நீள அகலம் 32 அடி உயரம் கொண்ட இந்தச் சிலையை உருவாக்க சுமார் 4 டன் அளவு பழைய பொருட்களை
உபயோகித்து, கிட்டத்தட்ட 90 நாட்கள் உழைத்திருக்கிறார்கள். Angles, slides from
children’s park, tea stall benches, hand cart, electric metal wires, bike rim,
metal sheets, cycle chains, park benches பயன்படுத்தி உருவாக்கியது இந்த உலக அதிசயம்!
Waste to Wonder – Christ the Redeemer
பூங்காக்களில் இருந்த பழைய இருக்கைகளிலிருந்தும், மின்சாரக் கம்பங்கள், இயந்திர
பாகங்கள், மோட்டார் சைக்கிள்களின் செயின்களிலிருந்தும் இந்த சிலை உருவாக்கப்பட்டது.
சிலையை உருவாக்கியது வடோதரா நகரின் ஷுபம் என்ற கலைஞர். உருவாக்க சுமார் ஐந்து மாதங்கள்
ஆனதாம்.
நுழைவு
வாயிலிலேயே உணவுக் கடைகளில் வியாபாரம் அபாரமாக நடந்து கொண்டிருந்தது. மக்களும் சாப்பிட்டு
விட்டு குப்பைக்கூடை அருகிலேயே இருந்தும் வெளியே வீசிக் கொண்டிருந்தனர்.
அங்கே
எடுத்த படங்கள் இன்றைய பதிவில் உங்களுக்காக… உலக அதிசயங்கள் படங்கள் மகள் எடுத்தவை!
மற்றவை நான் எடுத்தது.
என்ன
நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?
பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....
நட்புடன்
ஆதி
வெங்கட்
இனியகாலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி!
பதிலளிநீக்குஆஹா வெல்த் ஃப்ரம் வேஸ்ட்டா?!!! பாத்தால் அப்படித் தெரியவே இல்லை இல்லையா. சூப்பரா இருக்கு அனைத்தும்..
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
நீக்குரோஷிணிக் குட்டியும் கை தேர்ந்த புகைப்படக் கலைஞராய் மிளிர்கிறாரே! வாழ்த்துகள்! பாராட்டுகள்!
பதிலளிநீக்குபடங்கள் எல்லாமே மிக அழகாக இருக்கின்றன. அனைத்தும் பிரமிப்பாகவும் இருக்கிறது. கலைஞர்களின் கற்பனை, உழைப்பு எல்லாம் அபாரம்! அனைத்துக் கலைஞர்களுக்கும், .//சிலையை உருவாக்கியது வடோதரா நகரின் ஷுபம் என்ற கலைஞர்// ஷுபம் என்ற கலைஞருக்கும் வாழ்த்துகள்! பாராட்டுகள். கற்பனை பிரமிக்க வைக்கிறது.
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
நீக்குகுட்மார்னிங்.
பதிலளிநீக்குவேஸ்ட் ஆன பொருட்களை வைத்துக் காட்டப்பட்டிருக்கும் கைவண்ணங்கள், கலைவண்ணங்கள் அபாரம். ஒவ்வொன்றையும் தத்ரூபமாக உருவாக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பர்கள்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குதங்கள் மகளும் தேர்ந்த புகைப்பட நிபுணராக உருவாகி வருகிறார்
பதிலளிநீக்குவாழ்த்துகள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்கு7 அதிசயங்களை உள்ளடக்கிய 8ஆவது வேஸ்ட் அதிசயம்!. படங்கள் நன்றாக உள்ளன.
பதிலளிநீக்குJayakumar
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.
நீக்குஅனைத்தும் அழகு...
பதிலளிநீக்குகுப்பைக்கூடையில் குப்பை போட்டால் அதிசயம்...!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குரோஷ்ணி எடுத்த படங்கள் எல்லாம் அழகு.
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குரோஷ்ணிக்கு வாழ்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குநல்ல உத்தியில் அருமையான புகைப்படங்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குஅதிசயங்களின் மாடல்கள் என்பதே சரியாய் இருக்கும் அல்லவா
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குதேவையற்ற பொருட்களை வைத்து பூங்கா அமைத்தல் என்பது அருமையான விஷயம். படங்கள் அனைத்தும் பிரமாதம்.வளரும் புகைப்பட நிபுணர் ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.
நீக்குபுகைப்படங்களும் கட்டுரையும் அருமை.ஆச்சரியமாக உள்ளது
பதிலளிநீக்குபழைய பொருட்களில் எவ்வளவு அழகிய
அதிசயங்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ருக்மணிம்மா.
நீக்குபுகைப்படங்கள் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்குஅற்புதம் ....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனு ப்ரேம் ஜி.
நீக்குஎல்லா அதிசயங்களும் அற்புதம். படங்கள் அதை விட அருமை! ரோஷ்ணி எல்லாவற்றிலும் அதிசயம் செய்து விடுகிறாள். சுத்திப் போடுங்க! :))))) நிஜம் போல் காட்சி அளிக்கும் நகல்களைச் செய்த அந்தக் கலைஞர்களுக்கும் பாராட்டுகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
நீக்கு