சில
வாரங்களுக்கு முன்னர் என் மகன், மருத்துவப் படிப்பு படிக்கும்போது மண்டையோடு
மற்றும் எலும்புகளை வீட்டிற்குக் கொண்டு வந்தது பற்றி எழுதி இருந்தேன். இன்றைக்கு
அதே சமயத்தில் என் மகன் என்னை முட்டிக்கு முட்டி தட்டிய கதையைப் பற்றி
பார்க்கலாம்!
என் மகனின்
இரண்டாம் வருட மருத்துவப் படிப்பு படித்துக் கொண்டிருந்த போது நடந்த சம்பவம்
இது. வார இறுதி என்பதால், எனக்கு அலுவலகம்
விடுமுறை. வீட்டு வேலைகளை முடித்து விட்டு, தொலைக்காட்சியில் ஏதோ திரைப்படம்
ஒன்றினைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மகன் வேறு ஒரு அறையில் படித்துக்
கொண்டிருந்தான். கையில் ஏதோ ஒரு பொருளையும் புத்தகத்தினையும் எடுத்துக் கொண்டு
ஹாலுக்கு வந்து நான் அமர்ந்து இருந்த சோஃபாவின் அருகே வந்து கீழே அமர்ந்து
கொண்டான். அவன் கையிலிருந்த பொருளைப் பார்த்து, “இது என்னடா, இதன் பெயர் என்ன?”
என்று கேட்க, “அம்மா, இது Knee Hammer” மா. “சரிப்பா, நீ படி... நான் வேணும்னா
டி.வி.யை நிறுத்திடறேன்” என்று சொல்ல, “இல்லைம்மா, நீ பாட்டுக்கு பார்த்துட்டு
இரு!” என்று சொல்லி விட்டான். திரைப்படமும் சுவாரஸ்யமாக இருக்க, நானும் பார்த்துக்
கொண்டிருந்தேன்.
அப்போது, என்
மகன், “அம்மா, இந்த Knee Hammer வைத்து உன்னை டெஸ்ட் செய்யவா?” என்றான். “எப்படி
டெஸ்ட் செய்வாய்?” என்று கேட்க, “இதோ இந்த Knee Hammer-ஆல் தசையும் எலும்பும்
இணையும் TENDON என்ற இடத்தில் அடித்தால் ஏற்படும் Reflex வைத்து நரம்புகள் ஒழுங்காய் இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளலாம்” என்று சொல்லி,
உதாரணமும் சொல்ல ஆரம்பித்தான். “முழங்காலில் Knee Hammer வைத்து அடிக்க,
கிடைக்கும் Reflex வைத்து L2, L3 லெவல் பற்றித் தெரிந்து கொள்ளலாம்” என ஏதோ
மருத்துவ மொழியில் எங்கெங்கே அடித்தால் எந்தெந்த லெவல் தெரியும் என்று அடுக்கிக்
கொண்டே சென்றான். “அம்மா, ப்ளீஸ்... உன்னை டெஸ்ட் செய்யறேனே...” என்று ஆர்வமாய்
கேட்ட போது, “வலிக்கற மாதிரி அடிக்கக் கூடாது” என்ற கண்டிஷன் உடன் சரி என்று
சொன்னேன்.
“சேச்சே,
வலிக்கற மாதிரி அடிக்க மாட்டேன் மா... நீ பாட்டுக்கு டி.வி. பார்த்துட்டு இரு,
நான் உன்னை சோதனை செய்து பார்க்கிறேன்” என்று சொல்லி, சோதனையைத் தொடர்ந்தான். நான்
டி.வி. பார்த்துக் கொண்டிருக்க, அவன் முழங்காலில் தட்டித் தட்டிப் பார்ப்பதும்,
புத்தகத்தினைப் படிப்பதுமாக இருந்தான். சில சமயங்களில், அடித்து விட்டு, “அம்மா
வலிக்குதா?” என்று கேட்டு, முட்டியில் தட்டுவதைத் தொடர்வான். முட்டியில்
தட்டுவதும் படிப்பதும் தொடர்ந்து கொண்டிருந்தது. முட்டியில் தட்டுவது பலமாக
இருந்து, முட்டி வலித்தால், “டேய் வலிக்குது....” என்று சொல்ல, “சாரிம்மா, சாரி...
எனச் சொல்லி, முட்டியில் தடவிக் கொடுத்து, நீ பாட்டுக்கு டி.வி. பாரு” என்று
சொல்லி தட்டுவதைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.
முழங்கால்களில்
தட்டியது முடிந்த பிறகு, அம்மா, உன் முழங்கைகளில் இப்போது சோதனை செய்யப் போகிறேன்
என்று சொன்ன போது, எனக்கு “மைல்டா” ஒரு டவுட்! நம்மால முடியலையே என்று என்
வீட்டுக்காரர் மகனிடம் சொல்லி இப்படி முட்டிக்கு முட்டி தட்டுகிறாரோ என்று!
மகனிடம் கேட்டே விட்டேன்! “அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லைம்மா, நான் ரொம்ப மெதுவா,
உங்களுக்கு வலிக்காத மாதிரி தானே தட்டுகிறேன். “முழங்கையில் முன்புறம் தட்டினால்
C2, C3, C4 லெவலும் பின்னால் தட்டினால், C5, T1 லெவலும் தெரியும்மா, உனக்கு வலிக்காத
மாதிரி தட்டறேன்...” எனச் சொல்லி தட்டுவதைத் தொடர்ந்தான். நான் திரைப்படம்
பார்த்து முடிக்கும் வரை இந்த முட்டிக்கு முட்டி தட்டுவதும் தொடர்ந்தது! அடி பலமாக
விழும்போது மட்டும் எச்சரிப்பதும் தொடர்ந்தது! அன்றைக்கு அவனிடம் மாட்டிக்கொண்ட
சோதனை எலி நான் தான் என்று நினைத்துக் கொண்டேன்.
மற்றொரு நாள்
காலை வேளை நான் சமையல் அறையில் மும்மரமாக சமைத்துக் கொண்டிருக்க, என் கணவர் சோதனை
எலியாக ஆனார்! ஆனால் அவரை முட்டிக்கு முட்டி தட்டவில்லை! [அட... அப்படி அவரையும்
தட்டி இருந்தால் நல்லா இருந்திருக்கும்! என்று மனது சொல்கிறது] அவருக்கு வேறு
சோதனை! Opthalmoscope வைத்து அவரின் கண்களை சோதித்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது
இந்த மாதிரியான சோதனைகள் எங்களை வைத்துச் செய்வதும் தொடர்ந்தது! முட்டிக்கு முட்டி
தட்டிய மகன் இப்போது, MD முடிக்கப் போகிறார்! இந்த நிகழ்வுகளை இப்போது நினைத்தால்
சிரிப்பு தான்!
இந்த இனிய
நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. மீண்டும் வேறு சில நினைவுகளுடன் சந்திக்கும்
வரை....
நட்புடன்
சுதா த்வாரகநாதன்
புது தில்லி
இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!
பதிலளிநீக்குமுட்டிக்கு முட்டி தட்டி ஹா ஹா ஹா ..
வீட்டில் மருத்துவம் படிக்கும் அதுவும் ஆர்வம் அதிகமுள்ளவர்கள் இருந்தால் அவ்வளவுதான் நாம் தான் கினி பிக். ஹா ஹா ஹா ஹா ஹா என் மகன் கால்நடை மருத்துவம் படித்த போது முதல் வருடம் மனித உடற்கூறுகள் விலங்குகள் உடற்கூறுகள் வித்தியாசம் என்ன என்பது வரும்..மனித உடற்கூறு ஜாயின்ட்ஸ் பற்றி சோதனைக்கு நான்...கூடவே ஒரு பைரவி அது நம் வீட்டிலேயே தான் கிடந்தது என்பதால் அது, என்று வைத்துக் கொண்டு... ஹா ஹா
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
நீக்குசுதா ஜி உங்கள் மகனுக்கும் இப்போது அதை நினைத்தால் இனிய தருணமாக நினைவாக இருக்கும் சிரித்துக் கொள்வாராக இருக்கலாம்...
பதிலளிநீக்குஎம் டி முடித்து உங்கள் மகன் நல்ல மருத்துவராக சிறந்து விளங்க வாழ்த்துகள்!
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
நீக்குகுட்மார்னிங்.
பதிலளிநீக்குமருத்துவப் படிப்பில் முட்டிக்கு முட்டிக்குத் தட்டும் சோதனையா? ஹா.. ஹா.. ஹா... என் தங்கையின் மகன் இப்போது மருத்துவம் படித்துக்கொண்டிருக்கிறார். நல்லவேளை அவர் அப்படி எல்லாம் அவர் வீட்டில் சோதனை செய்ததாகத் தெரியவில்லை!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்கு//முட்டிக்கு முட்டி தட்டிய மகன் இப்போது, MD முடிக்கப் போகிறார்! இந்த நிகழ்வுகளை இப்போது நினைத்தால் சிரிப்பு தான்!..//
பதிலளிநீக்குஇனிமையான நாட்கள்.
மகனுக்கு வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குசொன்ன விதம் சுவாரஸ்யமாக இருந்தது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குஹா... ஹா... ரசித்தேன்...!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குரொம்ப அருமையான அநுபவம், ரசிக்கும்படி இருந்தது. வாழ்த்துக்கள் விக்னேஷ்க்கு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரங்கராஜன் ஜி.
நீக்குஉங்கள் சந்தோஷம் எங்களையும் தொற்றிக் கொள்கிறது. வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.
நீக்குபடிக்க ரசனை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குஇந்த மாதிரி முட்டிக்கி முட்டி தட்டு வாங்குவதிலும் சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்குமிக அருமை. சுதா அவர்களின் வர்ணனை அழகு. எம்டி முடிக்கப் போகும் நல்ல டாக்டருக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநகைச்சுவையுடன் எழுதும் கலை அனைவருக்கும் வந்து விடாது. நீங்கள் தொடர்ந்து
எழுத வேண்டும்..
வெங்கட்டுக்கு என் நன்றிகள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
நீக்குarumai.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ருக்மணிம்மா.
நீக்குஅம்மாவுக்கே முட்டி முட்டியா ...அப்போ எங்க நிலைமை ?
பதிலளிநீக்குஹாஹா... பயம் வேண்டாம். நல்ல மருத்துவர் அவர்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கஸ்தூரி ரெங்கன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅருமையான சொற்களுடன் கூடிய பதிவு. நல்ல கற்பனைத் திறத்துடன் உண்மைச் சம்பவத்தை மிகவும் அழகாக எழுதியுள்ளார் சகோதரி சுதா த்வாரகநாதன். அவருக்கும் அவர் பையனுக்கும் அன்பான வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குஅருமையாக எழுதி இருக்கார். முட்டிக்கு முட்டி தட்டினாலும் வலிக்காமல் தட்டினாரே! அதுவே பெரிய விஷயம். ஒரு முறை எங்க மருத்துவர் என்னை முட்டிக்கு முட்டி தட்டியதில் நான் அலறிய அலறலில் அவர் மருத்துவத்தையே விடலாமானு யோசிக்கிறாரோனு தோன்றியது! :)))))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
நீக்கு