அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட ருபின் பாஸ் நிழற்பட உலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
THE MORE THAT YOU READ, THE MORE THINGS
YOU WILL KNOW; THE MORE THAT YOU LEARN, THE MORE PLACES YOU WILL GO.
******
தேவநாதன் நடுத்தர வயது இளைஞன்! தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் அவனுக்கு சேலத்திலிருந்து மதுரைக்கு மாற்றலாகிறது. பணியில் சேர்வதற்காக மதுரையை நோக்கி பேருந்தில் புறப்படுகிறான். நீண்ட பயணம் தான். எப்படி பொழுது போக்குவது என்ற யோசனையில் ஆழ்ந்தபடியே பயணத்தை மேற்கொள்கிறான்.
சற்று நேரத்தில் அவனருகில் வெள்ளை வெளேரென்ற நீண்ட தாடியுடனும், காவி வேஷ்டியுடனும் அமர்ந்து வந்தார் வயதானவர் ஒருவர். அவரின் பேச்சு அந்தப் பயணம் முழுவதுமே அவனுக்கு மர்மமாக இருந்தது. அவருக்கு இவன் வாழ்வில் ஏற்படப் போகும் நிகழ்வுகள் அனைத்தும் தெரிந்திருந்தது தான் ஆச்சர்யம்!
அந்தப் பேருந்து பயணத்தில் தான் அவனுடைய வருங்கால வாழ்க்கைத் துணையும் இருந்தாள்! அவளோடு எப்படி பந்தம் ஏற்பட்டது? அருகே அமர்ந்து வந்த வயதானவரால் அவன் வாழ்க்கையே மாறிப் போகிறது!!! அவர் யார்? அவன் வாழ்வில் நிகழ்ந்த அதிசயங்கள் என்ன? கிடைத்த அனுபவங்கள் என்ன? கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன?? போன்ற உங்கள் கேள்விகளுக்கான விடை அனைத்தும் சக்தியில்!
ஸ்ரீ சக்கரம் என்பது என்னவென்பதையும் அதன் சிறப்புகளைப் பற்றியும், வழிபடும் விதம் பற்றியும், நம் உடலோடு ஸ்ரீ சக்கரத்திற்கு உள்ள தொடர்புகள் என்ன என்று அனைத்தும் சக்தியில் விவரிக்கப்பட்டுள்ளது. சக்தி உபாசனையால் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் பேறுகள் அளவில்லாதது!
சமீபத்தில் டிஜிட்டல் ரூபமாக நான் வாசித்த புத்தகம் தான் சக்தி! எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் சாரின் எழுத்தில் தொடராக இந்த சக்தி வெளிவந்திருக்கிறாள். 33 அத்தியாயங்களைக் கொண்ட ஸ்வாரஸ்யமான தொடர். ஆச்சர்யங்களும், மர்மங்களும் பின்னி பிணைந்ததாக இருந்தது என்று சொல்லலாம்.
#Bynge Appல் நான் வாசித்த சக்தியை வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.
*******
எங்களது இல்லத்திலிருந்து, நானும், என்னவரும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே. முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!
சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...
மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
படிக்கத்தூண்டும் விமர்சனம்.
பதிலளிநீக்குவாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குhttps://www.hsslive.co.in/2020/12/indira-soundarajan-novels-free-pdf.html
பதிலளிநீக்குமேற்கண்ட லிங்க்கில் இவரது நாவல்கள் தரவிறக்கிக் கொள்ளக் கிடைக்கும். இந்தப் புத்தகமும் இருக்கிறது. இறக்கிக் கொண்டேன்.
கமெண்ட் மாடரேஷன் இல்லாமல் உடனே வெளியானது ஒரு ஆச்சர்யம்.
தள அறிமுகத்திற்கு நன்றி ஸ்ரீராம். பார்க்கிறேன்.
நீக்குகமெண்ட் போடுவதில் இருக்கும் சிரமங்கள் பார்த்த பிறகு, மாடரேஷனை மாற்றி இருக்கிறேன். பழைய பதிவுகளுக்கு மட்டும் மாடரேஷன் இருக்கிறது இப்போது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
ஸ்ரீராம் இந்தத் தளம் தான் நானும் சென்றது சமீபத்தில். அப்பாவுக்காகவும் தேடிய போது கிடைத்தது. அது டக்கென்று எனக்குக் கிடைக்கவில்லை கீழே அந்தச் சுட்டியைக் கொடுக்க....நீங்கள் கொடுத்திருக்கீங்க.
நீக்குகீதா
நானும் தளத்திற்குச் சென்றேன். தரவிறக்கம் எதுவும் செய்யவில்லை கீதா ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குவிமர்சனம் சிறப்பாக இருக்கிறது
பதிலளிநீக்குவாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குவிமர்சனம் நன்று...
பதிலளிநீக்குவாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குஆதி விமர்சனம் நன்று. வாசிக்கத் தூண்டுகிறது.
பதிலளிநீக்குசமீபத்தில்தான் ஒரு தளம் கண்டேன் இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் புத்தகங்கள் தரவிறக்கம் செய்யும் தளம் அதில் இதுவும் இருக்கிறது என்று நினைக்கிறேன். பார்த்த நினைவு. அந்த தளத்தில் இரண்டுதான் தரவிறக்கம் செய்து கொண்டேன்.
சமீபகாலம் முன் வரை இப்படி இலவசமாக வாசிப்பது சரியில்லை நியாயமற்றது எழுத்தாளரின் உழைப்பு, என்பதும் மனசாட்சி உறுத்தல் அப்படி நினைத்தே பல வாசிக்காமல் விட்டுவிட்டேன். ஆனால் எனக்கு இப்போதைக்கு வேறு வழியில்லை. வாசிக்கும் ஆர்வம் அந்த மனசாட்சியை முந்திக் கொண்டுவிடுகிறதே. அதுவும் இப்படியான நல்ல விமர்சனங்களைப் பார்க்கும் போது. ஆனால் மனதில் சில எண்ணங்கள், அதை நிறைவேற்றும் காலம் வர வேண்டும் இப்படிச் செய்வதையும் ஈடுகட்ட வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அக்காலம் விரைவில் வர வேண்டும்.
கீதா
பிடிஎஃப் படிப்பதில் எனக்கும் விருப்பமில்லை. கிண்டில் வழி படிப்பதுண்டு. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.
நீக்குநல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி மேடம்.
பதிலளிநீக்குஇவருடைய 90 கும் மேற்பட்ட நூல்களை கிண்டிலிலிருந்து பதிவிரக்கம் செய்துள்ளேன்.
விரைவில் வாசிக்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அரவிந்த்.
நீக்குவிமர்சனம் அருமை.
பதிலளிநீக்குவாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்திருந்தது அறிந்து மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குமர்மங்கள் ஆச்சரியங்கள் நிறைந்த நூல் படிக்க விறுவிறுப்பாகவே இருக்கும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு