வியாழன், 26 மே, 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி முப்பது – கோடை விடுமுறை!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட நதிக்கரை நகரங்கள் பகுதி ஒன்று  பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

இவ்வுலகில் வேரில்லாமலும் நீரில்லாமல் வளரக்கூடிய ஒரே செடி ஆசைதான். 


******

 


யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே! 

பகுதி மூன்று இங்கே!  பகுதி நான்கு இங்கே! 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

யாரிவள்! பகுதி முப்பது - கோடை விடுமுறை




சிறுவயதில் கிடைக்கும் அனுபவங்களும், பாடங்களும் மனதை விட்டு என்றுமே மறைவதில்லை. குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பசுமையாக படிந்து போய்விடுகிறது! நினைத்துப் பார்க்கவும், சொல்லி மகிழவும் காகிதமில்லா டைரியின் தாளில் கிறுக்கப்பட்ட பொக்கிஷங்களாக மாறி விடுகின்றன!


வருடந்தோறும் சுட்டிப்பெண்ணுக்கும் அவள்  தம்பிக்கும் முழுப்பரீட்சை முடிந்ததும் அம்மாவோடு பிறந்த மண்ணான வீரத்தின் விளைநிலமான சிவகங்கைக்கு கிளம்பி விடுவார்கள். ஏறக்குறைய ஒரு மாதம் போல மூவரும் சிவகங்கையில் தான் இருப்பார்கள். அப்பா தான் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து இவர்களை வழியனுப்பி விடுவார்.


பேருந்து நிலையத்தில் பல ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளும் அங்கே காத்திருக்க, ஒவ்வொன்றிலிருந்து ஒலிக்கும் ஹாரன்களின் சப்தமும், பேருந்துகள் முன்பும் பின்பும் நகர்வதும், அங்கே கடை விரித்திருக்கும் பழங்கள் மற்றும் பூ வியாபாரிகளும், நொறுக்குத்தீனிகளை தட்டுக் கூடைகளிலும், ஒயர்க்கூடைகளிலும்  எடுத்துக் கொண்டு ஏறி, இறங்கி, சுற்றி வரும் வியாபாரிகள் என அந்த இடமே மிகவும் பரபரப்பாகவும்  மக்கள் நெரிசலுடன் காணப்படும்.


இந்த மாதிரி இடங்களுக்குச் செல்லும் போதெல்லாம் இவள் மனதில் சொல்ல இயலாத பதட்டமும், பயமும் ஏற்படும். ஏனென்று தெரியாது!! தான் எங்கேயாவது தொலைந்து போய் விடுவோமோ! என்று கூட பயப்படுவாள். அப்போதெல்லாம் உடன் வரும் அப்பாவின் கையையோ, அம்மாவின் கையையோ இறுக்கமாக பற்றிக் கொண்டு விடுவாள்!


அப்பா இவளுக்காக பேருந்து நிலையத்தில் poppins, peppermint என்று வாங்கித் தருவார். இவளுக்கு ரயில் பயணங்களைப் போல பேருந்துப் பயணங்கள் அத்தனை சுவாரசியம் தந்ததில்லை! பெரும்பாலும் அம்மா மடியில் தலை சாய்த்து தூங்கி விடுவாள். குட்டித்தம்பி தான் பயணங்களை விரும்புவான். வேடிக்கை பார்த்துக் கொண்டு வருவான். இருவேறு குணாதிசியங்களைக் கொண்ட இரண்டு வாண்டுகளோடு அம்மா அந்தப் பயணத்தை மேற்கொள்வாள்!


கோவையிலிருந்து தாராபுரம், ஒட்டன்சத்திரம் வழியாக முதலில் மதுரைக்கு பயணம் செய்வார்கள். கோவையிலிருந்து உடுமலைப்பேட்டை, பழனி வழியாகவும் மதுரைக்குச் செல்லலாம். அங்கிருந்து மற்றொரு பேருந்தில் சிவகங்கைக்குச் செல்வார்கள். அங்கே இவளின் மாமா வீடும், அத்தை வீடும் உள்ளது! அந்தக் கோடை முழுவதும் இங்கு தான் வலம் வருவார்கள்.


குளுகுளுவென்று வியர்வையே அறியாத கோவையில் வசித்த இவளுக்கு இங்கு தான் காதோரம் வழியும் வியர்வை சாத்தியமானது! பாட்டியின் கைப்பக்குவத்தில் சுவைத்த பதார்த்தங்களும், மாமா அழைத்துச் சென்ற சினிமாக்களும், வாங்கித் தந்த நொறுக்குத்தீனிகளும், அத்தை வீட்டில் கிணற்றடியில் சுவைத்த நிலாச்சோறும், கேட்ட கதைகளும்  என நாட்கள் மிகவும்  இனிமையாகச் செல்லும்! தொடர்ந்து இவளின் விடுமுறை அனுபவங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாமா?? 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

16 கருத்துகள்:

  1. பள்ளிக்காலங்களில் முழு ஆண்டுப் பரீட்சை லீவு என்பது பேரின்பம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளி காலத்து விடுமுறை பேரின்பம் தான் ஶ்ரீராம். ஒவ்வொரு முறையும் அதற்காகவே காத்திருப்போம் இல்லையா?

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி

    பள்ளி முழு ஆண்டு விடுமுறை என்பது இனிமையான நாட்கள்தாம். தங்களின் அப்போதைய பயண அனுபவங்களை அழகாக சொல்லியுள்ளீர்கள். நாங்கள் அந்த சிறு வயதில் அதிகமாக எங்கும் உறவுகள் வீட்டிற்கென சென்றதில்லை. ஆனால் எங்கள் குழந்தைகளுடன் அவர்களின் பள்ளி விடுமுறைக்கென்று வருடந்தோறும் தி. லிக்கு வந்துள்ளேன். எனக்கு அம்மா வீட்டின் அன்புக்காக. குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை நாட்களை கழிக்க மாமா வீடு. நான் சிறு வயதில் தவற விட்டதை அப்போது அடைந்த திருப்தியுடன் சென்று வந்தோம். தங்களின் அனுபவ எழுத்து என் பழைய நினைவுகளை வரவழைக்கின்றன. தொடர்கிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. பதிவு வழி சொன்ன விஷயங்கள் உங்கள் நினைவுகளை மீட்டு எடுக்க உதவியது அறிந்து மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  4. ஆதி இனிமையான அனுபவங்கள்.

    அதேதான் கோடை விடுமுறை என்றாலே தனி இன்பம் தான். நாங்களும் அப்போது தாத்தா பாட்டி வீட்டுக்குச் சென்றுவிடுவோம். அங்கு அத்தையும் வந்துவிட கொண்டாட்டமாக இருக்கும்.

    எனக்கு எப்போதுமே பயணம் பிடித்த விஷயம். சிறு வயதிலேயே அதுவும் ஜன்னல் இருக்கை விரும்புவேன். வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டே. எனக்கும் பேருந்துப் பயணத்தை விட ரயில் தான் பிடிக்கும் என்றாலும் பேருந்துப் பயணத்தையும் ரசிப்பேன் அதுவும் ஜன்னல் இருக்கை கிடைத்துவிட்டால்.!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. உங்கள் நினைவலைகளை இப்பதிவு மீட்டது என்று தெரிந்து மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  5. வேரில்லாமல் நீரிலாமல் வளரக் கூடிய செடி ஆசை - ஹாஹா ஆமாம் அதுக்கென்ன ஆல மரமாகவே வளர்ந்துவிடும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆல மரமாகவே வளர்ந்து விடும் - ஹாஹா.. உண்மை. வாசகம் குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. விடுமுறை அனுபவங்கள் அருமை. எப்போது விடுமுறை என்று எதிர்ப்பார்க்கும் பருவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடுமுறை அப்போதும் இப்போதும் பிடித்ததே! தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு
  8. இளம்வயது விடுமுறை இனிய அனுபவங்கள்தான்.

    எங்களையும் அந்நாட்களை நினைக்கவைத்தது நானும் அதே ஊரில் உள்ள பெரியம்மா, அத்தைமார் வீடுகளுக்கு சென்று தங்கிவிடுவேன். மூன்று மைல் தள்ளியுள்ள பெரியப்பா வீட்டுக்கும் சென்று தங்கி விடுவேன் கொண்டாட்டம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி. தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....