அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
ஒரு விஷயத்தைச் செய்யத் தொடங்குவதற்கான ஒரே வழி, பேசுவதை நிறுத்திவிட்டு, செயலில் இறங்குவதுதான் - வால்ட் டிஸ்னி.
******
யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!
பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!
பகுதி பன்னிரெண்டு இங்கே!
பகுதி பதிமூன்று இங்கே!
பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே!
பகுதி பதினாறு இங்கே!
பகுதி பதினேழு இங்கே!
பகுதி பதினெட்டு இங்கே!
பகுதி பத்தொன்பது இங்கே!
பகுதி இருபது இங்கே!
பகுதி இருபத்தி ஒன்று இங்கே!
பகுதி இருபத்தி இரண்டு இங்கே!
பகுதி இருபத்தி மூன்று இங்கே!
பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே!
பகுதி இருபத்தி ஆறு இங்கே!
யாரிவள்! பகுதி இருபத்தி ஏழு - சனிக்கிழமை ஸ்பெஷல்!
எதைச் செய்ய மிகவும் கஷ்டமாக இருக்கிறதோ! அது தான் நம்மை முன்னேற்றும்! வாழ்விற்கான ஒளியைத் தரும்! வாழ்வில் சுவையையும் கூட்டும்! அது நாம் செய்கிற செயலாக மட்டும் இல்லாமல் தயாரிக்கிற உணவாகக் கூட இருக்கலாம்! எதைச் செய்வது கடினம் அல்லது வேலை அதிகம் என்று நினைப்போமோ அதுவே எல்லோரையும் கவர்ந்ததாக இருக்கும்!
சுட்டிப்பெண்ணின் அம்மா சனிக்கிழமை மாலைச் சிற்றுண்டியாக சேவை, குணுக்கு, பக்கோடா, பஜ்ஜி என்று எதையேனும் செய்யத் திட்டமிடுவார். சனிக்கிழமை அப்பாவுக்கும் விடுமுறையாக இருக்கும். இவர்களுக்கும் பள்ளி விடுமுறையாக இருக்கும்.
அப்பா எப்போதும் போல் அதிகாலையில் எழுந்து வாரம் முழுவதும் அலுவலகத்துக்கு தான் அணிந்து சென்ற துணிகளையும், இவளுடையதும் தம்பியுடையதுமான பள்ளிச் சீருடைகளையும் அழகாக துவைத்து உதறி உலர வைத்து விட்டு வெளி வேலைகளையோ, நண்பர்களையோ, உறவினர்களையோ பார்த்து விட கிளம்பி விடுவார்.
அப்பா வந்ததும் பத்து மணி போல எல்லோருக்கும் சாப்பாட்டை போட்டு விடுவாள் அம்மா. சாப்பாட்டுக் கடை முடிந்ததும் அப்பாவும், அம்மாவும் சற்றே கண்ணயர்ந்து விடுவார்கள். குட்டித்தம்பி க்ரவுண்டில் கிரிக்கெட் விளையாடப் போய்விடுவான். இவள் மட்டும் வீட்டிலேயே வலம் வருவாள். படிக்கவும், எழுதவும் ஏதேனும் இருந்தால் அதைச் செய்வாள்.
சிறிது நேரம் சாலையில் போவோர் வருவோரை ஜன்னலில் வேடிக்கை பார்ப்பதும், அதுவும் போரடித்தால் அவளுக்கே உண்டான சில விஷமங்களையும் செய்து கொண்டிருப்பாள்..🙂 சத்தமில்லாமல் அம்மாவின் புடவைத் தலைப்பில் அப்பாவின் வேஷ்டி அல்லது கையில் கிடைக்கும் பொருட்களை முடிச்சிட்டு வைப்பாள்..🙂 ஒன்றல்ல இரண்டல்ல வரிசையாக ரயில் வண்டி போல் அந்தப் பொருட்கள் நீண்டு கொண்டே போகும்..🙂
அம்மா தூக்கத்தில் புரண்டு படுக்கும் போதோ அல்லது முழிப்பு வந்து எழுந்திருக்கும் போது தடதடவென்று அம்மாவின் புடவையோடு உடன் வரும் அந்த ரயிலைப் பார்த்து விட்டு 'கடங்காரி! என்னடி பண்ணி வெச்சிருக்க!' என்று அம்மா இவளைத் திட்டும் போது கொப்பளித்துக் கொண்டு இவளுக்கு சிரிப்பு தான் வரும்..🙂 அதில் ஒரு சந்தோஷம்..🙂
அம்மாவைத் தொல்லை செய்கிறோமே! தூக்கத்தை கலைக்கிறோமே! என்றெல்லாம் அப்போது அவளுக்குத் தோன்றவே இல்லை! நம்ம அம்மா தானே! என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்வாள்! என்று தான் நினைத்து சந்தோஷப்பட்டாள்! அம்மா என்பவள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவள்!❤️ ❤️
இன்னும் என்னவெல்லாம் செய்தாள் இந்தச் சுட்டிப்பெண்?? தொடர்ந்து பார்க்கலாம்…
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
விளையாட தோழியர் இல்லையா அப்போது? வீட்டில் போரடித்து வளைய வரும் காட்சி கண்ணில் தெரிகிறது! அம்மாவிடம் செய்த குறும்பு புன்னகைக்க வைக்கிறது.
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி ஸ்ரீராம்.
நீக்குகுறும்புச்செயல் ரசிக்க வைத்தது....
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி கில்லர்ஜி.
நீக்குவாசகம் அருமை.
பதிலளிநீக்குஆதியின் குறும்புகளை ரசித்தேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.
நீக்குகுறும்பு அருமை...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி தனபாலன்.
நீக்குவாசகம் மிக அருமை.
பதிலளிநீக்குஹாஹா சுட்டிப் பெண் அம்மாவின் புடவைத் தலைப்பில் செய்த குறும்பு நினைத்து பார்த்துச் சிரித்தேன்.
முதல் பாராவுக்கு ஹைஃபைவ் சொல்லிக் கொள்கிறேன் ஆதி.
நம் வீட்டிலும் ஊரில் இருந்த போது சேவை விடுமுறை நாட்களில் பாட்டி செய்வார் நாங்கள் அனைவரும் உதவ வேண்டும். இப்போதும் வீட்டில் சேவை உண்டு. அது பற்றி ஒரு அனுபவப் பதிவு கூடப் போட்டிருக்கிறேன்.
கீதா
வாசகமும் பதிவு வழி பகிர்ந்த விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்தது அறிந்து மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குசிறு வயதில் விளையாடத் தோழமை இல்லையா காலனியில்? காலனியில் பிள்ளைகள் விளையாடுவார்களே. அந்த வயதில் நீங்கள் தனியாக இருந்தது கஷ்டமாக இல்லையா? உங்கள் குறும்புகளை ரசித்தேன்.
பதிலளிநீக்குவாசகம் மிக அருமை. உண்மைதான்.
துளசிதரன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.
நீக்குநல்ல குறும்பு பெண்தான்.:)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு