அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கம்ப்ளெயிண்ட் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
SIMPLICITY IS THE TRADEMARK OF GENIUS.
******
யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!
பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!
பகுதி பன்னிரெண்டு இங்கே!
பகுதி பதிமூன்று இங்கே!
பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே!
பகுதி பதினாறு இங்கே!
பகுதி பதினேழு இங்கே!
பகுதி பதினெட்டு இங்கே!
பகுதி பத்தொன்பது இங்கே!
பகுதி இருபது இங்கே!
பகுதி இருபத்தி ஒன்று இங்கே!
பகுதி இருபத்தி இரண்டு இங்கே!
பகுதி இருபத்தி மூன்று இங்கே!
பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே!
யாரிவள்! பகுதி இருபத்தி ஆறு - கனவுக்கு எல்லையேது!!
கனவு காண்பது என்பது எல்லோருக்கும் உரித்தானது! அதற்கு எல்லைகளோ, நியதிகளோ இதுவரை யாரும் கண்டுபிடித்ததில்லை! கனவு என்பது ஒரு உந்துசக்தியாக செயல்பட்டு சென்றடைய வேண்டிய எல்லைக்கு ஆற்றலாக உடன் வரும்! அதற்கென கட்டுப்பாடுகள் இல்லாததால் எப்படி வேண்டுமென்றாலும் தன் உருவத்தை மாற்றிக் கொள்ளும்!
சுட்டிப்பெண்ணுக்கு ஏழாம் வகுப்பிலிருந்து அறிவியல் பாடத்தில் கூடுதல் ஆர்வம் உண்டானது. வேதிப் பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்வது, உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி, தாவரங்களைப் பற்றிய பாடங்கள், அளவீடு முறைகள், கண்டுபிடிப்புகள் என்று அவளுக்கு அது ஒரு தனி உலகமாக தெரிந்தது. இதனால் அவளின் கனவும் மாறிப் போனது!
சமுதாயத்தில் நல்லதோர் செயல்களைச் செய்து பணியாற்றவே மிடுக்கான தோற்றத்துடன் தன் ஐ ஏ எஸ் கனவை உருவாக்கிக் கொண்டாள்! பின்பு தான் அவளுக்குத் தோன்றியது! இந்த மாதிரி சேவை எண்ணத்தை எந்தத் துறையிலிருந்தாலும் செய்யலாமே!
அறிவியலில் ஏற்பட்ட ஆர்வம் அவளை மென்மையான குணத்துடன் எளியோருக்கு சேவை செய்யும் மருத்துவராக தன்னை நினைத்துக் கொள்ள வைத்தது. அவள் கனவிற்கு வெள்ளை கோட் உடுத்திக் கொண்டாள். காட்டன் புடவை உடுத்திய கண்ணாடி அணிந்த பெண்ணாக வெள்ளைக் கோட்டுடன் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பும் எடுத்துக் கொண்டு வலம் வந்தாள்!
அவள் வயதில் ஏற்படக்கூடிய அழகுணர்ச்சியால் தன்னை அலங்கரித்துக் கொள்வதிலோ, ஆடை ஆபரணங்களைத் தேடி வாங்கிக் கொள்ளவோ ஏனோ ஈர்ப்பு ஏற்படவில்லை. மாறாக தன்னை எளிமையாகவும், அறிவில் சிறந்த பெண்ணாகவும், குணவதியாகவும் மட்டுமே பார்க்க வேண்டும் என்று விரும்பினாள்! இந்த சமூகம் அவளை காட்சிப்பொருளாக பார்க்க அவள் விரும்பவில்லை!
பெண் என்றால் அவளிடமிருக்கும் அழகும், வனப்பும் மட்டும் தான் அவளுக்குண்டான சிறப்புகளா! இல்லவே இல்லை! அவளுக்கே உண்டான இமாலய சக்தியால் அவளின் திறமைகளும், சிறப்புகளும் மட்டுமே வெளிப்பட்டு இந்த பிரபஞ்சத்தால் கொண்டாடப்பட வேண்டும்! நிச்சயமாக அதையே ஒவ்வொரு பெண்ணும் விரும்புவாள்!
இந்த அறிவியல் ஆர்வமும் தன்னைப் பற்றிய எண்ணங்களும் அவளுடன் உடன் வந்ததா! வெள்ளை கோட் கனவு பலித்ததா! எந்த விதத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள்! என்பதையெல்லாம் அவளுடன் சென்று பார்த்தால் தான் நமக்குத் தெரியும்!!!
இன்னும் என்னவெல்லாம் செய்தாள் இந்த சுட்டிப்பெண்!!
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
சிறப்பான எண்ணங்கள், இலட்சியங்கள்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
நீக்கு"காட்டன் புடவை உடுத்திய கண்ணாடி அணிந்த பெண்ணாக வெள்ளைக் கோட்டுடன் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பும் எடுத்துக் கொண்டு வலம் வந்தாள்!".. அவள் யார் ? அந்தப் படம் எங்கே ?
பதிலளிநீக்குஇது நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த பெண் ஒருவளைப் பற்றிய தொடர் சார். பிறந்தது முதல் ஒவ்வொரு நிலையிலும் அவளைப் பற்றி எழுதிக் கொண்டு வருகிறேன்.
நீக்குதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா சார்.
//இந்த சமூகம் அவளை காட்சிப்பொருளாக பார்க்க அவள் விரும்பவில்லை//
பதிலளிநீக்குஅருமை இப்படி சமூகத்தில் அனைத்து பெண்களும் நினைந்து விட்டால் பிரச்சனைகள் ஏது ?
உண்மை தான்.
நீக்குதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
அனைத்து பெண்களுக்கும் அறிந்து உணர வேண்டிய எண்ணங்கள்...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.
நீக்கு//அவளுக்கே உண்டான இமாலய சக்தியால் அவளின் திறமைகளும், சிறப்புகளும் மட்டுமே வெளிப்பட்டு இந்த பிரபஞ்சத்தால் கொண்டாடப்பட வேண்டும்! //
பதிலளிநீக்குஉண்மை. அது உங்களிடம் இருக்கிறது.
வாழ்த்துகள் ஆதி.
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குஅறிவியல் ஆர்வமும் அவளுடைய எண்ணங்களும் சிறப்பாக இருந்திருக்கிறது.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.
நீக்குஅவளின் எண்ணம் சிறப்பு
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி சார்.
நீக்குநீங்கள் நினைத்த கனவு இப்போது நனவாகி வருகிறது என்றே நினைக்கிறேன். இமாலய சக்தியால் உங்கள் திறமைகளும் சிறப்புகளும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வயதில் இல்லை என்றாலும் இதோ இப்போது!
பதிலளிநீக்கு//அவள் வயதில் ஏற்படக்கூடிய அழகுணர்ச்சியால் தன்னை அலங்கரித்துக் கொள்வதிலோ, ஆடை ஆபரணங்களைத் தேடி வாங்கிக் கொள்ளவோ ஏனோ ஈர்ப்பு ஏற்படவில்லை. மாறாக தன்னை எளிமையாகவும், அறிவில் சிறந்த பெண்ணாகவும், குணவதியாகவும் மட்டுமே பார்க்க வேண்டும் என்று விரும்பினாள்! இந்த சமூகம் அவளை காட்சிப்பொருளாக பார்க்க அவள் விரும்பவில்லை!//
அருமை! அந்த வயதிலேயே உயர்வான எண்ணங்கள்.
டிட்டோ செய்கிறேன் ஆதி. நானும் இதே எண்ணங்களுடன்தான் வலம் வந்தேன். இப்போதும் அதே எண்ணங்கள்தான்.
வெள்ளைக் கோட்// அட! இது ஒரு விதத்தில் உங்கள் உயர்கல்வி படிப்பின் போது லேபிற்குப் போட்டுக் கொள்ளும் தருணம் வந்திருக்குமே.
கீதா
கல்லூரியில் கருநீல நிறத்தில் தான் கோட்!
நீக்குதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
சிறு வயதிலேயே உயர்ந்த எண்ணங்கள், கனவுகள் அவைதான் உங்களின் உந்து சக்தியாக இயங்க வைத்திருக்கின்றன. இன்று இப்படி அழகான தொடர் எழுதிடவும், உங்களுக்கான தனித்துவ இடத்தை அடைவதற்கும்.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
துளசிதரன்
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.
நீக்கு