புதன், 18 மே, 2022

பக்கபலம் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

படகு கரை சேர்வதற்கு துடுப்பு மட்டுமே உதவும் அது போல நம் வாழ்வில் கரை சேர்வதற்கு உழைப்பு மட்டுமே உதவும்.

 

******


 

ரெண்டு வட, ஒரு போளி!

 

அக்கா! இருபது ரூபாய்க்கு வட!

 

போண்டா இன்னும் போடலையா! சீக்கிரம் போட்டுக் குடுக்கா!

 

சமீபகாலமாக அந்த தள்ளுவண்டி பலகாரக்  கடையில் மாலைநேரத்தில் எப்போதுமே நல்ல கும்பல் இருக்கும்! மாலை நான்கு மணிக்கு அடுப்பை பற்ற வைத்தால் எட்டு மணி வரை எரிந்து கொண்டிருக்கும்.

 

பிறகு சாமான்களையெல்லாம் எடுத்துக் கொண்டு அவர்கள் வீட்டுக்கு கிளம்ப ஒன்பது மணியாகி விடும்.

 

கீர்த்தி தான் இந்த மாலைநேர தள்ளுவண்டி வியாபாரத்தை செய்து கொண்டு வந்தாள். அவளின் கைபக்குவத்தில் பஜ்ஜி, போண்டா, பக்கோடா, போளி என வியாபாரம் சூடு பிடித்திருந்தது. 

 

சுவை பிடித்துப் போனதால் மீண்டும் மீண்டும் வருகை தருவோர் எண்ணிக்கையும் கணிசமாக ஏறிக் கொண்டேயிருந்தது.

 

இந்த வியாபாரத்தில் கணவன் சூர்யாவும் அவளுடன் உதவிக் கொண்டிருப்பான். வாழக்காய்களை பஜ்ஜிக்கு சீவிப் போட, வெங்காயம் பச்சை மிளகாய் போன்றவற்றை நறுக்க, மாவுக் கலவை தயார் செய்ய, வாடிக்கையாளர்களுக்கு வேண்டியதை எடுத்து கொடுக்க, பொட்டலம் போட என்று பக்கபலமாக இருப்பான்.

 

மூன்றே வயதான இவர்களின் மகன் சுட்டி வாண்டு தீபக்கும் அங்கே தான் விளையாடிக் கொண்டிருப்பான்.

 

'தம்பி' ரோட்டுக்கு அந்தாண்ட போயிடாதப்பா! இங்ஙனக்குள்ளேயே விளாண்டுகிட்டு இருக்கணும். சரியா!

 

கீர்த்தி மகனிடம் சொல்லிக் கொண்டே எண்ணெயில் போண்டாக்களை போட்டுக் கொண்டிருந்தாள்.

 

மாமா! நீங்களும் தம்பியும் அக்கடான்னு வீட்டுல இருக்கலாமில்ல! எதுக்கு இங்க வந்து கஷ்டப்படறீங்க! 

 

அவன் அருகில் நின்று வாடிக்கையாளர்களுக்கு பொட்டலம் போட்டுக் கொடுத்து கொண்டே சில்லறையை வாங்கி பெட்டியில் போட்டு வைத்தான்.

 

போ புள்ள! தெனமும் நீ இங்க அனல்ல வெந்து போவியாம்! நாங்க அங்க அக்கடான்னு இருக்கிறதா! கூறுகெட்டாப்ல பேசாத!

 

குலசாமியா நீ தான் இந்த குடும்பத்த கொண்டுட்டு போற புள்ள! நாந்தான் இப்போ வெட்டியா கெடக்கிறேன்! எவ்வளவு சங்கடமா இருக்கு தெரியுமா! 

 

ஏன் மாமா அப்படியெல்லாம் நெனைக்கிறீங்க! இதுக்கு மின்ன நீங்க தான குடும்பத்துக்கு ராசாவா நின்னு தாங்குனீங்க! என்ன ஒரு ராணி மாதிரி வெச்சு பாத்துகிட்டீங்க!

 

போறாத காலம் உங்கள வேலைய விட்டு தூக்கிட்டாங்க! கொரோனாவால எத்தன பேர் அவங்களோட வேலைவெட்டி எல்லாம் போய் கெடக்கிறாங்க! தெரியுமா! நீங்க மட்டும் தானா!!

 

நல்லவேள எங்கம்மா கிட்ட கத்துகிட்ட இந்த பலகார முறையெல்லாம் தான் இப்ப நமக்கு சோறு போடுது! 

 

விடுங்க மாமா! இந்த வியாபாரத்த நல்லபடியா கொண்டுட்டு போவோம்! கடையா போட்டு விரிவுபடுத்த முயற்சி செய்வோம். 

 

சிறுதானிய பக்கோடா, கீரை வடைன்னு நிறைய யோசிச்சு வெச்சிருக்கேன். கடவுள் நமக்கு எப்போதும் துணையா இருப்பாரு மாமா!

 

அன்றைய நாளுக்கான வியாபாரத்தை முடித்துக் கொண்டு பேசிக் கொண்டே வீட்டுக்குச் சென்றார்கள். இரவு உணவையும் சாப்பிட்டு முடித்ததும்

 

கால கொஞ்சம் நீட்டு புள்ள! பிடிச்சு விடறேன்! கால்கடுக்க அடுப்பு சூட்டுல நிக்கற! வலிக்கும்ல!

 

என்னோட மாமா நீங்க எனக்கு பக்கபலமா என்னக் கொண்டாடும் போது எந்த வலியும் எனக்கு பெரிசாத் தெரியாது!

 

சரி புள்ள! வியாபாரத்த விரிவுபடுத்தணும்னு சொன்னியே நான் கூட உங்கிட்ட ரொம்ப நாளா நம்ம குடும்பத்த விரிவுபடுத்தணும்னு சொல்றேனே! அதுக்கு ஒரு பதில் சொல்லவே மாட்டேங்கிறியே! என்று கண்ணடித்தான்.

 

அட போங்க மாமா! எப்பவும் உங்களுக்கு இந்த சிந்தனை மட்டும் தானா:) படுத்து தூங்குங்க! காலைல எவ்வளவு வேலை கெடக்குது!

 

இருவரின் அன்பில் கலகலப்பான இரவுப் பொழுதாக மாறியது.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

24 கருத்துகள்:

  1. அன்பான குடும்பம். அருமையான முன்னேற்றம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை குறித்த தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. கைத்தொழில்  ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் எத்தொழில் எதுவும் தெரியாமல் இருந்திடல் உனக்கே சரியாமோ என்று தெரியாமலா சொல்லி வைத்தார் நாமக்கல் கவிஞர்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்.

      கதை குறித்த தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. குட்டிக்கதை அழகோவியம்

    இந்த சுகம் அம்பானி வீட்டில்கூட கிடைக்காது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை குறித்த தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. கதை குறித்த தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன் சார்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. கதை குறித்த தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. இன்றைய வாசகத்திற்கு ஏற்ற படம் முதல் படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை குறித்த தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. முகநூலில் படித்தேன், அருமையான அன்பான ,குடும்பத்தை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்.
    அன்பும், அக்கறையும், காதலும் வெளிபடுத்திய விதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை குறித்த தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  8. வாசகமும் கதையும் பொருத்தம்.

    ஆதி கலக்கறீங்க போங்க! சூப்பர். கதைகள் எழுதுவதில் நல்ல முன்னேற்றம் ரொம்ப நல்லா எழுதறீங்க.

    அருமையான கதை. இப்படிக் குடும்பத்தில் அன்பும் ஓருவருக்கொருவர் உதவும் பக்குவமும் இருந்துவிட்டால் வேறு என்ன வேண்டும்! குடும்பமும் தழைக்கும்!! எல்லாவிதத்திலும்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை குறித்த தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. கதை குறித்த தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி சார்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. கதை குறித்த தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. கதை குறித்த தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  12. குடும்பத்தை தாங்கும் அன்னை அவள்.இனியதோர் குடும்பம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....