அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
ஆயிரம் தோல்விகளை ஒரு விஷயத்தில் நீ அடைந்தாலும் சற்றும் சளைக்காத போராட்ட குணம் ஒன்று உன்னிடம் இருந்தால் உன் போல் வெற்றியாளன் இந்த உலகில் யாரும் இல்லை.
******
யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!
பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!
பகுதி பன்னிரெண்டு இங்கே!
பகுதி பதிமூன்று இங்கே!
பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே!
பகுதி பதினாறு இங்கே!
பகுதி பதினேழு இங்கே!
பகுதி பதினெட்டு இங்கே!
பகுதி பத்தொன்பது இங்கே!
பகுதி இருபது இங்கே!
பகுதி இருபத்தி ஒன்று இங்கே!
பகுதி இருபத்தி இரண்டு இங்கே!
பகுதி இருபத்தி மூன்று இங்கே!
பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே!
பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே!
பகுதி இருபத்தி எட்டு இங்கே!
யாரிவள்! பகுதி இருபத்தி ஒன்பது - பெண் என்னும் புதிர்
பெண் என்பவளுக்கு உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றங்களும், அவளின் வலிகளும், வேதனைகளும், குழப்பங்களும் எல்லோராலும் புரிந்து கொள்ளப்படுவதில்லை. அவள் ஒன்றும் இயந்திரமல்ல! மென்மையாக கொண்டாடப்பட வேண்டியவள்!
சுட்டிப்பெண்ணும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டு வந்தாள். அம்மா அவளிடம் சொல்ல வரும் விஷயத்தை கேட்காமலே ஓடிக் கொண்டிருந்தாள். மொட்டும் ஒருநாள் மலர்ந்தது. ஏழாம் வகுப்பு முழுப்பரீட்சைக்கு முதல் நாள் இவளும் பெரியவளானாள்!
அம்மாவிடம் எப்படி சொல்வது! என்னவென்று சொல்வது! என்று தெரியவில்லை! யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் முடியாமல், குழப்பம் மேலிட காலை எழுந்தது முதல் கழிவறைக்கு செல்வதும் வருவதுமாக இருந்தாள். ஒரு கட்டத்தில் அம்மாவுக்கு சந்தேகம் வர, இவளிடம் கேள்வி எழுப்பினாள்!
ஓரமாக உட்கார வைக்கப்பட்டு தலையில் எண்ணெய் வைத்து நலுங்கும் வைக்கப்பட்டது. ஊரில் உள்ள அத்தைகளுக்கும், மாமாவுக்கும் அப்பா தந்தியடித்து தகவல் அனுப்பினார். இவள் ஒருபுறம் அடுத்த நாள் துவங்கப் போகும் முழுப்பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்தாள்.
பரீட்சைக்கு அப்பா இவளை சைக்கிளில் அழைத்துச் சென்று விடுவார். அம்மா பின்னாடியே பள்ளிக்கு வந்து பரீட்சை முடியும் வரை மரத்தடியில் அமர்ந்து கொண்டிருந்து அழைத்துச் செல்வார். வகுப்புத் தோழிகள் இவளிடம் அம்மா ஏன் வந்திருக்கிறார்! எப்போதும் இப்படி இல்லையே! நீ தானே வருவே! என்று கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்பார்கள்..🙂 இவளுக்கும் என்ன சொல்வதென்று தெரியாது!
இவளுக்குள்ளும் நிறைய கேள்விகள்! எதனால் இப்படி! வலியும் வேதனையுமாக தனித்திருக்கும் இந்த நிலை எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை! அம்மாவின் மேல் காலைப் போட்டு கொண்டு தூங்கவும் முடியலை! ஒவ்வொரு மாதமும் இப்படித்தான் இருக்கும் என்று பேசிக் கொள்கிறார்களே! நிறைய குழப்பங்கள் உண்டானது!
தொடர்ந்து பரீட்சைக்கும் சென்று கொண்டிருந்தாள். ஒருநாள் தலையில் நீர் ஊற்றப்பட்டு பாவாடை தாவணியும், புடவையும் உடுத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டாள். அவளுக்கும் தாவணி கட்டிக் கொள்ள பிடித்திருந்தது. அதன் பின் வந்த வீட்டு விசேஷங்களிலும், பண்டிகை நாட்களிலும் பாவாடை தாவணியுடன் வலம் வந்தாள்.
சுட்டிப்பெண் இப்போது எட்டாம் வகுப்புக்கு சென்று விட்டாள். பள்ளியில் இவள் கற்றதும் பெற்ற அனுபவங்களும் இவளுடன் தொடர்ந்து சென்று பார்த்தால் தெரியும்!
இன்னும் என்னவெல்லாம் செய்தாள் இந்த சின்னப் பெண்!! தொடர்ந்து பார்க்கலாம்…
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
வலியான அனுபவங்கள்... தொடர்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி ஸ்ரீராம்.
நீக்குவாழ்க நலம்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.
நீக்குஅனுபவபாடம் தொடரட்டும்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கில்லர்ஜி.
நீக்குவலி தரும் அனுபவங்கள். இன்னொரு கோணத்தில் வெளிப்படுத்தப்படுத்த முடியாத மகிழ்ச்சியையும் அவை தருகின்றன என்பது என் எண்ணம்.
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டது சிறப்பு. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குஇந்தப் பருவம் அது ஒரு விதமான அனுபவம்தான் ஆதி. அப்போதெல்லாம் அம்மாவிடம் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள முடிந்ததில்லைதான். சில அவஸ்தைகளும் உண்டு. இப்போது அப்படியில்லை குழந்தைகள் அம்மாவிடம் எல்லாம் பகிர்ந்து கொள்ளும் அளவு சூழல் மாறியுள்ளது மிக நல்ல விஷயமாகவே படுகிறது. உங்கள் அடுத்த அனுபவங்களை அறியத் தொடர்கிறேன்.
பதிலளிநீக்குகீதா
பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டது சிறப்பு. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கீதா ஜி.
நீக்குகதைக்கேற்ற படம் அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி நாகேந்திர பாரதி.
நீக்குஅருமை... தொடர்கிறேன்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி தனபாலன்.
நீக்குசிறுமிகள் எல்லோருக்கும் ஏற்படும் புதிய அனுபவம்தான் .
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி மாதேவி.
நீக்கு👍👍👍👍👍
பதிலளிநீக்கு