திங்கள், 16 மே, 2022

வாசிப்பனுபவம் - ஆதி வெங்கட் - நீலமலைப் பயணம் - ஞா. கலையரசி - உலக புத்தக தினம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட ருபின் பாஸ் நிழற்பட உலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

'மனிதனுக்குக் கற்பனை சக்தி மிச்சமிருக்கும்வரை, இந்த மாய உலகம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கும் - வால்ட் டிஸ்னி.


******


 

உலக புத்தக தினம் (23 ஏப்ரல் 2022) அன்று முகநூலில் எழுதிய ஒரு வாசிப்பனுபவம். இன்று இங்கேயும் ஒரு சேமிப்பாகவும், முக்நூலில் நட்பு வட்டத்தில் இல்லாத நண்பர்களுக்காகவும்.

 

புத்தக வாசிப்பு இல்லாமல் என் அன்றாடப் பொழுதுகள் நகர்வதில்லை. வாசிப்பு நம் சிந்தனைகளை வளர்க்கவும், நம்மை பக்குவப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. நல்லதொரு நண்பனாகவும், நம் வழிகாட்டியாகவும் விளங்குகிறது.

 

சுட்டிப்பெண்ணாக அம்புலிமாமாவில் ஆரம்பித்து காமிக்ஸ், நீதிக்கதைகள், வார இதழ்கள், மாத இதழ்கள், பொட்டலம் கட்டி வரும் காகிதங்கள் என்று என் புத்தக வாசிப்பும் என்னுடன் வளர்ந்து கொண்டிருக்கிறது. திருவரங்கம் வந்தது முதல் என் வாசிப்பு இன்னும் விரிவடைந்தது என்று சொல்லலாம். 

 

அரசு நூலகம், வாடகை நூலகம், அண்டை வீட்டு இரவல் என்று நான் வாசித்த நூற்றுக்கணக்கான புத்தகங்களும், எழுத்தாளர்களின் விரிவடைந்த வட்டமும் என்னை மேம்படுத்திக் கொள்ள மிகவும் உதவியது.

 

அச்சு நூல்கள் மட்டும் அல்லாமல் மின் நூல்களும் வாசித்து என்னைக் கவர்ந்த நூல்களின் வாசிப்பனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். உலக புத்தக தினமான இன்று நான் வாசித்துக் கொண்டிருப்பது ஞா. கலையரசி அவர்கள் எழுதியுள்ள 'நீலமலைப் பயணம்' என்ற மின்னூல்!

 

ஆதவன், கவின், இனியன், கதிர், ஆதிரை இவர்கள் தான் இந்தக் கதையின் நாயகர்கள். நான்கு சிறுவர்களும் ஒரு சிறுமியும் என இணைந்து நீலகிரி மலையில் உள்ள அரிய வகைத் தாவரமொன்றை கண்டுபிடிப்பதற்காக அரசு சார்பாக பயணம் மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்களைச் சொல்கிறது இந்த நூல். 

 

விளையாட்டுத்தனம் ஒருபுறம் இருந்தாலும் மிகவும் பொறுப்புணர்வுடன் செயல்படுகிறார்கள். இதற்கு முன்பு ஆகாயக் கோட்டைக்குச் சென்று திப்பு சுல்தானின் புதையலைக் கண்டுபிடித்து அரசிடம் ஒப்படைத்தவர்கள் ஆயிற்றே!

 

நம் வருங்காலத் தலைமுறையினருக்கும் வாசிப்புப் பழக்கத்தை உண்டாக்குவோம். எங்கள் வீட்டில் என்னவருக்கும், மகளுக்கும் வாசிப்பில் மிகுந்த ஆர்வமுண்டு. மகள் பெரிய புத்தகங்களையும் விரைவில் வாசித்து விடுவாள். வாசித்ததைப் பற்றி என்னிடமும் பகிர்ந்து கொள்வாள். 

 

அன்றாடம் இரண்டு பக்கங்களாவது வாசிப்போம் என்று உறுதி கொள்வோம்.

 

*******

 

எங்களது இல்லத்திலிருந்து, நானும், என்னவரும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  

 

சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...

 

மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

20 கருத்துகள்:

  1. கவின் என்கிற பெயர் கோமதி அக்காவின் பேரனையும், ஆதிரை எனும் பெயர் நம் அதிராவையும் நினைவூட்டுகிறது.  சிறுவர்களுக்கான கதை எப்போதுமே சுவாரஸ்யம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  2. புத்தக வாசிப்பு நம்மை மேம்படுத்தும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. ஞா. கலையரசி அவர்களது வலைத் தளம் ஒன்று உள்ளது.. சிறப்பாக எழுதுவார்.. நூல் விமர்சனம் நன்று..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரது வலைத்தளம் பார்த்திருக்கிறேன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துறை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  4. நல்லதொரு நூல் அறிமுகத்திற்கும் வாசிப்பு குறித்த சிந்தனைகளுக்கும் மிக்க நன்றி மேடம்.
    மலைப்பயணம் குறித்த நூல்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
    விரைவில் வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பு அனுபவம் குறித்த தங்களது எண்ணங்கள் சிறப்பு. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி அரவிந்த்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. நூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  6. குழந்தைகளுக்கான புத்தகம் ஆஹா சுவாரசியமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நல்ல அறிமுகத்திற்கு மிக்க நன்றி ஆதி.

    //புத்தக வாசிப்பு இல்லாமல் என் அன்றாடப் பொழுதுகள் நகர்வதில்லை. வாசிப்பு நம் சிந்தனைகளை வளர்க்கவும், நம்மை பக்குவப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. நல்லதொரு நண்பனாகவும், நம் வழிகாட்டியாகவும் விளங்குகிறது.//

    நல்ல விஷயம் ஆதி. ஆமாம் உங்கள் கருத்தை டிட்டோ செய்கிறேன்.

    எனக்கு வாசிக்கக் கிடைத்த வாய்ப்பு மிக மிக மிக அரிது. சின்ன வயதிலும் சரி அதன் பின்னும் சரி. சமீபகாலமாகத்தான் கணினி என் கையில் அதனால் புத்தகங்கள் இணையத்தில் (இலவசமாகத்தான் தற்போதைக்கு) வாசிக்கும் வாய்ப்பு கிடைத்த போது, வேலைப் பளு, என்றாலும் தினமும் கொஞ்சமேனும் வாசித்து விட வேண்டும் என்று வைத்திருக்கிறேன். சில வாசிக்கவும் செய்கிறேன் சிறு கதைகள் என்று. வாசித்ததைப் பகிர எழுத நேரம் கிடைப்பதுதான் மிகவும் சிரமமாக இருக்கிறது. வலைத்தளங்களில் வரும் கதைகளைத் தவிர்த்து (சில எழுத்தாளர்கள் தங்கள் வலைத்தளங்களிலேயே பகிர்ந்திருக்கிறார்கள்) சில இலவசமாக வாசிக்க, மனதை வேறு உறுத்துகிறது.

    உங்கள் பணிகளுக்கு இடையில் நீங்கள் இவ்வளவும் செய்வது நல்ல விஷயம் ஆதி, பாராட்டுகள். வாழ்த்துகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது விரிவான கருத்துக்களை பகிர்ந்து கொண்டது சிறப்பு. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. நூல் விமர்சனம் அருமை. இந்த டிஜிட்டல் உலகத்தில் புத்தக வாசிப்பு நமது குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  8. புத்தகத்தின் பெயரே நன்றாக உள்ளது. நல்லதோர் அறிமுகம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  9. சிறப்பான நூல் மதிப்புரை. நூலாசிரியருக்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  10. நாவலின் வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி வெங்கட்ஜி. இங்குக் கருத்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....