செவ்வாய், 27 டிசம்பர், 2022

தலைநகர் தில்லி - என் கிட்ட மோதாதே……


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

INVEST IN GOOD FRIENDSHIP… THERE ARE NO MARKET RISKS.

 

******


 

ஒவ்வொரு நாளும் பேருந்துப் பயணத்தில் சந்திக்கும் நபர்கள், பார்க்கும் மனிதர்கள் என அனைவரிடத்திலும் ஏதோ ஒரு கதை ஒளிந்து இருக்கிறது. பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் யார் தான் இங்கே இருக்கிறார்கள்? கதை மாந்தர்கள் இல்லாத இடமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 

சமீபத்தில் பேருந்து நிறுத்தத்தில் ஒரு முதியவரை சந்திக்க நேர்ந்தது. எப்படியும் எழுபதைத் தொட்டிருப்பார் என்று பார்க்கும் போதே தெரிந்து கொள்ள இயலும். அணிந்திருந்த உடையில் ஒரு நேர்த்தி. கைகளில் ஒரு பை. அதை முதுகில் ஒரு கையில் பிடித்து தொங்க விட்டிருந்தார். மற்றொரு கையில் ஒரு குச்சி. அதை நீட்டி நிறுத்தத்தில் இருந்த அனைவரையும் மிரட்டிக் கொண்டு இருந்தார்.

 

ஓரிடத்தில் நிலையாக நிற்காமல் தொடர்ந்து நடை.. பார்க்கும் அனைவரையும் மிரட்டுவதும் தொடர்ந்து கொண்டே இருந்தது. பெரும்பாலானவர்கள் அந்த முதியவரை கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். அங்கே இரண்டு இளம் பெண்கள் முதியவரை பார்க்காமல் தங்களுக்குள் தீவிரமாக பேசிக்கொண்டிருந்தார்கள். திடீரென பெரியவர் அப்பெண்களுக்கு அருகே சென்று குச்சியைக் காண்பித்து மிரட்ட, அதிர்ந்து போன பெண்கள் ஒரு வித கூச்சலோடு  ஓட, கொஞ்சம் களேபரம்.

 

பெரியவருக்கு எதுவுமே தெரியவில்லை. அடுத்து வேறு ஒருவரை மிரட்ட நகர்ந்துவிட்டார். நல்ல வேளையாக சூழல் சரியானது. பெண்களும் சிரித்தபடியே தங்கள் பேச்சைத் தொடர்ந்தார்கள். பார்க்கும்போதே அந்தப் பெரியவரின் சூழல் குறித்த எண்ணங்கள் மனதில். என்ன பிரச்சனையாக இருக்கும், நல்ல நிலையில் இருந்து இப்படி ஆனவரை வீட்டினர் ஏன் இப்படி விட்டு விட்டார்கள்? அல்லது அவருக்கென யாரும் இல்லையோ? என பல சிந்தனைகள்……

 

நமக்கு இருக்கும் பிரச்சனைகளை மட்டுமே பெரிதென நாம் நினைக்க, நம்மை விட அதிகமாக பிரச்சினைகளை சந்திக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது அந்த முதியவர்களை போன்ற சிலரை பார்க்கும்போது உணர்ந்து கொண்டாலும் அடுத்த சில நிமிடங்களில் நம் பிரச்சினைகள் பெரிதாக தெரிய ஆரம்பித்துவிடுகிறது.

 

இதுவும் கடந்து போகும் என்பதை உணர்ந்து கொண்டால் எல்லாம் நலமே. நாளை மீண்டும் வேறு சில எண்ணங்களுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

14 கருத்துகள்:

  1. அணிந்திருந்த உடைகளில் ஒரு நேர்த்தி என்பது சில செய்திகளை சொல்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேர்த்தியான உடை இருப்பது சில செய்திகளை சொல்லிச் செல்வது எனக்கும் தோன்றியது ஸ்ரீராம். தங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  2. உலகில் 90% மக்கள் பிரச்சனையோடுதான் வாழ்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொல்றதைப் பார்த்தால் மத்த 10% பிரச்சனையைக் கிளப்புகிறார்கள்னு சொல்வதுபோல் இருக்கே

      நீக்கு
    2. பிரச்சனை இல்லாத மனிதர்கள் இல்லை தான் கில்லர்ஜி. தங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
    3. ஹாஹா... 10% மக்கள் அடுத்த 90% சதவீத மக்களுக்கு பிரச்சனைகளைத் தருகிறார்கள்! இருக்கலாம் நெல்லைத் தமிழன். தங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  3. ஒரு காலத்தில் ஆளுமையோடு இருந்தவரை வயது காரணமாக வீட்டில் மதிப்பதில்லையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தற்போது வீட்டில் மதிப்பதில்லை - இருக்கலாம்! அவர்களும் மாறாமல் இருக்கக் கூடும் நெல்லைத் தமிழன். ஒரு கட்டத்தில் ஒதுங்கி விடுவது, அடுத்த தலைமுறைக்கு வழிவிடுவதும் நல்லது என்று தோன்றுகிறது.

      தங்களது கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  4. ம்... பிரச்சனையே வாழ்க்கை என்றால் பிரச்சனை தான்...

    பதிலளிநீக்கு
  5. என்னதான் பெரியவரிடம் பிரச்சினை இருந்தாலும் வீட்டில் இருப்பவர்கள் அதை புரிந்து கொண்டு அவருக்கு ஆதரவாக இருப்பதே நலம் பயக்கும்.

    பதிலளிநீக்கு
  6. //ஒவ்வொரு நாளும் பேருந்துப் பயணத்தில் சந்திக்கும் நபர்கள், பார்க்கும் மனிதர்கள் என அனைவரிடத்திலும் ஏதோ ஒரு கதை ஒளிந்து இருக்கிறது. பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் யார் தான் இங்கே இருக்கிறார்கள்? கதை மாந்தர்கள் இல்லாத இடமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.//

    வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பிரச்சனை இருக்கும், சில பகிர்ந்து கொள்ள முடியும், சில பகிர முடியாது.அந்த மன அழுத்தமே வெளியில் இப்படி வெடிக்கிறதோ!

    பதிலளிநீக்கு
  7. அந்தப் பெரியவரைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்க்கும் போது நல்ல வேலையில் (போலீஸ் அல்லது பாதுகாப்புப் பணி அல்லது அதிகாரப் பணியில்) இருந்திருப்பாரோ என்று தோன்றுகிறது. கொஞ்சம் மன நிலை இப்போது சரியில்லையோ என்றும் தோன்றுகிறது. இதே போன்று வீட்டில் இருந்ததால் மதிப்பிழந்து இப்படியான நிலையோ? அல்லது சிலருக்கு ரிட்டையர் ஆனதும் நல்ல விதமாகப் பொழுது போக்கத் தெரியாமல் இப்படி ஆவதுண்டு... இருந்தாலும் வயதாகும் போது நாம் நம்மைச் சுற்றி உள்ள குடும்பத்தாருடன் இணக்கமாகப் போக வேண்டும். குடும்பத்தாரும் அன்புடன் இருக்க வேண்டும்.

    //நமக்கு இருக்கும் பிரச்சனைகளை மட்டுமே பெரிதென நாம் நினைக்க, நம்மை விட அதிகமாக பிரச்சினைகளை சந்திக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது அந்த முதியவர்களை போன்ற சிலரை பார்க்கும்போது உணர்ந்து கொண்டாலும் அடுத்த சில நிமிடங்களில் நம் பிரச்சினைகள் பெரிதாக தெரிய ஆரம்பித்துவிடுகிறது.//

    அதென்னவோ உண்மை!!!! உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு கண்ணதாசன் அவரின் வரிகளைத்தான் அடிக்கடி நினைத்துக் கொள்ளத் தோன்றும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. எத்தனை விதமான மனிதர்கள். காணும் போது எமது மனமும் வருத்தப்படத்தான் செய்யும் .

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....