அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
விட்டுக்கொடுப்பதும் மன்னிப்பதும் தான் வாழ்க்கை; ஆனால் வாழ்க்கையின் போராட்டமே, யார் மன்னிப்பது, யார் விட்டுக்கொடுப்பது என்பது தான்.
******
யாரிவள் தொடரின் முந்தைய பகுதிகள் அனைத்தும் இந்தச் சுட்டி வழி படிக்கலாம்.
அன்றாட வாழ்வு சகஜமாக சென்று கொண்டிருக்கும் போது சட்டென்று நமக்கோ, குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ உடல்நலனில் ஏற்படும் மாற்றம், வேதனையையும், குழப்பத்தையும் கூட்டி கலவரப்படுத்தி விடும். அப்படியொரு நிலை தான் அவளுக்கு உண்டாயிற்று! என்னவென்றே தெரியாத நிலை!
கண்கள் வறண்டு போயும், இடது கண்ணால் ஒருபுறம் பார்க்கும் போது உலகமே சுழல்வது போலவும் இருந்தது! இவர்கள் பகுதியில் உள்ள கண் மருத்துவர் சொன்னதும் குழப்பமாக இருந்தது! அதனால் வேறொரு பிரபலமான கண் மருத்துவமனைக்குச் சென்றும் பார்த்தாள்!
பலவிதமான சோதனைகளை முடித்த பின்னால், அங்கும் தலையில் ஏதேனும் இரத்தக்கட்டி இருக்கலாம் என்று சொல்லி நியூரோவிடம் காண்பிக்கச் சொல்லவும், அன்றே நியூரோவிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு சென்று பார்த்தாள்! இவளிடம் பல்வேறு கேள்விகளை கேட்ட பின்னர் அவர் சில டெஸ்ட்டுகளுக்கு எழுதிக் கொடுத்தார்!
MRI, MRV, CT, EMG என எல்லாவற்றையும் செய்து பார்த்த பின்னால் நரம்புகளுக்கு மூன்று வாரத்திற்கான மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார். இந்த டெஸ்ட்டுகள் எல்லாம் செய்த போது தான் ஒரு விஷயம் தெரிய வந்தது! அதற்கும் இந்த இரண்டிரண்டாக தெரிந்த காட்சிகளுக்கும் சம்பந்தமில்லை!!
இவள் பிறந்த போதே இவளுடன் பிறந்திருக்கிறது! இதுவரை தலையில் எந்த ஸ்கேனும் எடுத்து பார்த்ததில்லை! அதனால் இவளுக்கோ இவளின் வீட்டினருக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை! ஒட்டிப் பிறந்தது! ஆறாம் விரல் போன்றது! என்றும் அதன் பின்னர் நியூரோ ஒவ்வொரு முறையும் சொன்னார்!
Arachnoid cyst! இது சகஜமாக ஏற்படுவது தான்! அதனால் பெரிதாக ஒன்றும் பிரச்சினையில்லை! மருந்துகளும் தேவையில்லை! தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்! அவ்வளவு தான் என்றும் சொன்னார்! அதன் பின்னர் அவளுக்குள் இந்த நிலை குறித்து சற்றே தெளிவும், வாழ்வின் மீது விரக்தியும் ஏற்படத் தொடங்கியது! கணவனின் அருகாமையை மனம் நாடியது!
மூன்று வார மருந்தில் கண்களின் பார்வையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு பிரச்சினை முற்றிலும் குணமானது! அவ்வப்போது மருத்துவரை சென்று பார்த்து வரலானாள்! சில நாட்களிலேயே அப்போதிருந்த மனநிலையிலிருந்து மாறி அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டாள்!
எது வந்தாலும் சந்தித்துக் கொள்ளலாம்! கடமைகள் நிறைய இருக்கிறதே! அதை நோக்கிச் செல்ல வேண்டும்! இன்னும் வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் எவ்வளவோ இருக்கிறதே! இதற்கே துவண்டு விட்டால் எப்படி?? என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு செயல்படலானாள்!
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
கண்களுக்கு பெரிய ஆபத்தில்லை என்பது ஆறுதலளிக்கும் செய்தி.
பதிலளிநீக்குநல்ல காலம் வேறு எதுவும் இல்லை குண்டு போட்டது போல் இருந்தது புஸ்வானமாகி ஹப்பா.
பதிலளிநீக்குஒவ்வொரு சவாலையும் கடப்பதுதான்...கடந்த பின் இதற்கா இப்படி சஞ்சலமடைந்தோம்....இனி எது வந்தாலும் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையும் பிறக்கும்தான்...
சவாலே சமாளிதான் இல்லையா ஆதி!
கீதா
நம்பிக்கையே வாழ்க்கை... இதுவும் கடந்து போகட்டும்...
பதிலளிநீக்குதொடர்ந்து முகநூலில் படித்து வந்தாலும் மீண்டும் இங்கேயும் படிச்சேன். சிலவற்றில் சில நிகழ்வுகளில் என்னுடைய வாழ்க்கையையே திரும்பப் பார்த்தாப்போல் ஓர் எண்ணம்.
பதிலளிநீக்குசவால்களை கடந்து வந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்கு