புதன், 21 டிசம்பர், 2022

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி மூன்று

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட ஆலும்மா டோலுமா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

ENJOY THE LITTLE THINGS, FOR ONE DAY YOU WILL LOOK BACK AND REALISE THEY WERE THE BIG THINGS.

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி மூன்று


 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம்விதி ஒன்று ; விதி இரண்டு

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா?

 

அதற்கு முன், சென்ற பகுதியில் இக்கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளதாக நான் குறிப்பிட்ட  தொன்மையான நூல்களில் ஒன்றான திருக்குறள் குறித்து சற்று சிந்திப்போம். 

 

அதில், வாழ்வின் அடிப்படை அறங்களை அறத்துப்பால் பகுதியிலும், அதன் அடுத்தபடியான சிக்கலான கோட்பாடுகளை பொருட்பாலிலும் காமத்துப்பாலிலும் விளக்கப்பட்டு தெளிவாக வரிசைப்படுத்தியிருப்பதைக் காணலாம். 

 

இதிலிருந்து, சிறு வயதில், அறத்துப்பால் அடிப்படையில் நமக்கு கற்பிக்கப்படும் அறங்களின் அடிப்படையிலேயே, வாழ்வின் நுணுக்கமான விதிகள் கடைபிடிக்கப்படுவது நம் தொடர் வளர்ச்சியை உறுதி செய்யும் என்னும் புரிதலோடு அடுத்த விதியைப் பார்க்கலாம். 

 

மூன்றாம் விதி சொல்வது, "உன் உண்மையான நோக்கங்களை மறைத்துக்கொள்". 

 

மூல நூலில், இதை "CONCEAL YOUR INTENTIONS" என்கிறார் எழுத்தாளர். 

 

வெளிப்படையாக இருந்து, நம் எண்ணங்களை எல்லாரிடமும் எப்போதும் திறந்து வைக்க முடியுமா என சிந்தித்தால், இவ்விதி சொல்ல வருவது மெல்ல புரியத் தொடங்கும். 

 

ரானுவம், அரசியல் உள்ளிட்ட சிக்கலான உயர்மட்டப் பணிகளில் இருப்பவரிடையே இவ்விதி மிக உக்கிரமாகச் செயல்படுவதைக் காணலாம். 

 

எல்லா உள்கட்சிப் பூசல்களிலும், பதவியைப் பிடிக்கும் ஆசையை மறைத்து, ஒரு தலைவரை மற்றொருவர், எதிர்கட்சியின் பினாமி என பழிபோடும் அரசியலில் இவ்விதி செயல்படுவது தெளிவாகத் தெரியும். 

 

தற்போதைய ருஷ்ஷிய-உக்ரைன் போரில், சீனாவின் பழைய ஆயுதங்களை பிரிட்டன் உக்ரைனுக்குக் கொடுக்க, அவற்றின் தொழில்நுட்ப ரகசியங்களை சீனா ருஷ்ஷியாவிற்கு வழங்கி பிரிட்டனை பழிவாங்கிய அதிர்ச்சி நிகழ்வு, இவ்விதியின் மற்றோர் நடைமுறை உதாரணம் ஆகும். 

 

இவ்விதி, எளிய மக்கள் வாழ்வில், நேர்மறையாகச் செயல்படுவதை பின்வரும் என் சொந்த அனுபவத்தால் விளக்குகிறேன். 

 

சென்ற மாதம், என் "Bluetooth Ear phone" திடீரென்று பழுதடைய, அதன் ஆறுமாத உத்தரவாதச் சீட்டில் "Warranty" விற்ற தேதி, 2022 ஜனவரிக்குப் பதிலாக 2021 ஜனவரி என அச்சிடப்பட்டிருப்பது கண்டு அதிர்ந்தோம். 

 

உடனே, அதை வாங்கிய என் அக்கா மீது அன்னை கோபப்பட எத்தனிக்க, நான் வேறொரு சமயத்தில், தேதியைச் சரியாகப் பார்த்து அலைச்சலை மிச்சப்படுத்திய அம்மாவின் சமயோஜித புத்தியைப் புகழ்ந்து தள்ளினேன். 

 

இதனால், பணத்தை அஜாக்கிரதையால் விரையம் செய்ததாக எழுந்த அம்மாவின் கோபம் உடனே மட்டுப்பட, அக்காவின் மனமும் பெரிதாகப் பாதிப்படையாமல் இதன் தீர்வை நோக்கிச் சிந்திக்கத் தொடங்கியது. 

 

உடனே, பொருளின் உற்பத்தித் தேதி ஆகஸ்டு 2021 என இருப்பதையும், அதற்கு முன்னால் ஜனவரி 2021 என விற்பனைத் தேதி இருப்பது தவறு என கடைக்காரரிடம் வாதிடும் சாத்தியம் இருப்பதையும் தமக்கை கண்டறிந்து அவ்வாறே, இதன் மாற்றுப் பொருளை இலவசமாகவே வாங்கிவிட்டார். 

 

மேற்சொன்ன உதாரணத்தில், என் நோக்கம், அப்பொருள் மீண்டும் வாங்கப்படுவது மட்டுமே என்பதும், விழித்திறன் சவால் கொண்ட எனக்கு, உத்தரவாதச் சீட்டின் விவரங்களை கடைக்காரரிடம் எடுத்துச்சொல்ல அக்காவின் தயவு தேவை என்பதும் வெளிப்படை. 

 

அந்நோக்கத்தை, இவ்விதி சொல்வதுபோல் சொற்களால் திறையிட்டு மறைத்து, அன்னையை பாராட்டி, தமக்கை மீதான அவர் கோபத்தையும் மடை மாற்றிவிட்டேன். 

 

இதனால், எவரும் புண்படுத்தப்படாமல், பிறர் தம் தவறுகளை நயமாகச் சுட்டிக்காட்டி, அவர்கள் உதவியைப் பெறும் சாத்தியம் இவ்விதியில் இருப்பதை அறியலாம். 

 

இதுபோல், எந்தெந்தச் சூழ்நிலைகளில், எவ்விதி பயன்படுத்தப்பட்டால், பிறர் ஆதரவோடு நம் வலிமை பெருகும் என்பது நூலின் அடுத்தடுத்த விதிகள் குறித்த விவாதங்களில் தெளிவாகிவிடும். 

 

நம் பேச்சாற்றலால், நம் நோக்கங்களை மறைத்து, நம்மை எளியவர்களாகக் காட்டி, மக்களைத் திசைதிருப்ப இந்நூல் பல வரலாற்று உதாரணங்களுடன் கூறுகிறது. 

 

அத்தகைய பேச்சாற்றல் எப்படி இருக்கவேண்டும் என அறிய, நூலின் அடுத்த விதியை அடுத்த பாகத்தில் சுவைக்கலாம். 

 

நூல் குறித்த விவாதம் தொடரும். 

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

12 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்லி இருக்கும் சம்பவம் சுவாரஸ்யம்தான்.  நெகட்டீவ்வ் நல்ல ப்ளஸ்ஸாய் மாறும்.  ஆனால் அதற்கும் இன்றைய விதிக்கும் சம்பந்தம் இருக்கிறதா தெரியவில்லை அர்விந்த்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் விதிக்கும் நான் குறிப்பிட்ட உதாரணத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்த ஐய்யத்தை எழுப்பியதற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
      சரியான நோக்கத்திற்காக எண்ணங்களை மறைத்து வேறு விதமாக செயலாற்றக்கூடிய அவசியமும் சில சமயம் இருப்பதையும், வெளிப்படையாக இருப்பதற்கான சாத்தியம் எப்போதும் இருப்பதில்லை என்பதையும் இவ்வுதாரணம் மூலம் உணர்த்த முயன்றேன்.
      படிப்படியாக, என் சொந்த உதாரணங்களை பகிர்வதை விடுத்து, மிகப்பெரும் ஆளுமைகளின் அணுபவங்களை அடுத்தடுத்த விதிகளில் பொருத்தி விளக்கவே இனி முயலவிருக்கிறேன்.
      அப்போது, விதிகள் மேலும் தெளிவாக எடுத்துக்காட்டப்படும் என நம்புவோம்.

      நீக்கு
  2. concealing intentions is fair only at certain times, because denying your opponent an equal opportunity for becoming stronger is bad as per Indian ethics and morality. For example, winning an election is open intention which cannot be concealed. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thank you very much for Sharing your views dear jayakumar sir. Every law suits in some situations. we can apply these laws as per our interest.
      Regarding election, law 39 talks about avoiding free lunch. at that time, we shall discuss about freebees in elections and the real intention of people giving something as free in many areas.

      நீக்கு
  3. அலசல் சிறப்பாக இருக்கிறது தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

    பதிலளிநீக்கு
  5. இது வரையான லா எல்லாமே கிட்டத்தட்ட எல்லாமே ஒரு பாயின்டை நோக்கித்தான் செல்கிறதோ அரவிந்த்? அதாவது ஒவ்வொரு சூழ்நிலையையும் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி நமக்கு ஏற்றாற் போல் மாற்றிக் கொள்வது என்பதான win win situation?

    இந்த விதி பொதுவாகவே எங்கும் சொல்லப்படுவதுதான்...ஊரறிய தண்டோரா போடாதே என்று எங்கள் வீட்டுப் பெரியவர்கள் சொல்லுவதும் நினைவுக்கு வருகிறது. அதாவது conceal your intentions அப்படியான கோணத்தில் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அதாவது இங்கு நீங்கள் சொல்லியிருப்பதை வைத்து எங்கள் வீட்டில் சொல்லப்படுவதைச் சொல்கிறேன். ஒரு செயல் திட்டம் அல்லது நல்ல நோக்கம், அதை எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. அப்படிச் சொல்லும் போது சிலர் ஆதரவு கொடுப்பார்கள் சிலர் நம் உறுதியை, நம் நல்ல எண்ணத்தை, அசைத்துப் பார்க்கும் அளவு பேசி நம் confidence ஐ கீழே இறக்குவது போன்று பேசுவார்கள். எனவே செயலில் குறிக்கோளாக இருக்க வேண்டுமே அல்லாமல் சொல்லித் திரியக் கூடாது என்று சொல்வாங்க. இன்னும் ஒரு படி மேல போய் அவங்களுடைய ஒரு வித மூட நம்பிக்கை, 'ஏய் சொல்லாத திருஷ்டிப் பட்டுடும்' என்று. சொன்னா நடக்காது என்பதான வாக்குகள்.

    எனக்கு என்னவோ இப்படியான கோணத்திலும் இந்த விதியைப் பார்க்கலாமோ என்று தோன்றுகிறது அரவிந்த்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கீதா மேடம்.
      முக்கியம் செயல்பாட்டிலேயே உள்ளது.
      அது குறித்து ஒன்பதாம் விதியில் விரிவாக விவாதிக்கப்படும்.
      சொல் குறித்து அடுத்த விதியில் விவாதிக்கப்படும்.
      விதிகளை, நம் அணுபவங்களோடு பொருத்திச் சிந்திக்கையில் மிகவும் சுவாரசியம் கூடும்.
      தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி மேடம்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. ஆம் மைய்யா.
      எனக்கும் நம் முப்பால் நூல் மிகவும் பிடித்தது.
      அது குறித்த சில உதாரணங்களும், அடுத்த சில விதிகளில் பொருத்தமாக விவாதிக்கப்படும்.
      தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி ஐய்யா.

      நீக்கு
  7. தொடர்வதற்கு மிக்க நன்றி மாதேவி மேடம்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....