அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
NOT ALL STORMS COME TO DISRUPT YOUR LIFE,
SOME COME TO CLEAR YOUR PATH.
******
நதிக்கரை நகரங்கள் என்ற தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின் பகுதிகளுக்கான சுட்டி கீழே!
1. நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.
2. நதிக்கரை நகரங்கள் - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.
3. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள்.
4. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.
5. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி.
6. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட்.
7. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - காலை உணவு.
8. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட்.
9. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.
10. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.
11. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.
12. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.
13. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி
நதிக்கரை நகரங்கள் தொடரில், நீண்ட இடைவெளி வந்து விட்டது. தொடர் குறித்து நீங்கள் மறந்தே போயிருக்கலாம்! இப்படியான இடைவெளி விட்டதற்கு வருந்துகிறேன்! நதிக்கரை நகரங்கள் குறித்த தொடரில் இதுவரை பதிமூன்று பகுதிகளில் பயணம் ஆரம்பித்தது குறித்தும், கோமதி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் நைமிசாரண்யம் குறித்தும் பார்த்துக் கொண்டிருந்தோம். இதோ இந்தப் பகுதியிலும் நைமிசாரண்யம் குறித்தே பார்க்க இருக்கிறோம். தொடரின் சென்ற பகுதியில் ஹனுமான் Gகடி என்ற பெயரில் அழைக்கப்படும் ஹனுமனின் கோவில் குறித்து பார்த்தோம். நைமிசாரண்யம் குறித்த வேறு சில தகவல்களை பார்க்கலாம்.
ஒன்றல்ல இரண்டல்ல பத்து......
இராவண வதம் முடித்த ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்திருந்ததாம்..... அதனைப்போக்க பல புண்ணிய நதிகளில் நீராடியதோடு யாகங்களும் செய்தாராம். நைமிசாரண்யத்தில் தான் அவரது தோஷம் நீங்கியது என்றும் கோமதியாற்றங்கரையில் தான் அவர் பத்தாவது அஸ்வமேதயாகம் செய்தார் என்பதும் அங்கே சொல்லப்பட்ட தகவல். அந்த பத்தாவது அஸ்வமேத யாகம் செய்த கோமதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது Dhதசாஷ்வமேத Ghகாட். அங்கே ஒரு அழகான கோவில் அமைத்து இருக்கிறார்கள். அந்த கோவிலில் இருந்த பிரதம பூஜாரியுடன் பேசிக் கொண்டிருந்த போது, இந்த இடம் குறித்த தகவல்கள் பத்ம புராணத்தில் இருப்பதாகச் சொன்னார். ஸ்ரீராமர், சீதா தேவி மற்றும் லஷ்மணன் ஆகிய மூன்று பேருக்கும் அந்தக் கோவிலில் சன்னதி அமைத்திருக்கிறார்கள். கூடுதலாக சிவபெருமானின் அவதாரமாகக் கருதப்படும் சித்தேஷ்வர் மஹாதேவ் சன்னதி ஒன்றும் அமைந்திருக்கிறது. அங்கே சில நிமிடங்கள் நின்று நிதானித்து இறைவனைத் துதித்து வந்தோம்.
ஒவ்வொரு இடத்திற்கும் சில மகிமைகள்..... இந்த இடத்திற்கு பத்தாவது அஸ்வமேத யாகம் என்று சொன்னாலும், ஒரு விஷயம் இங்கே சொல்ல வேண்டும் - வாரணாசி என அழைக்கப்படும் காசி மாநகரிலும் இதே பெயரில் ஒரு Gகாட் உண்டு - அதுவும் பிரதான படித்துறைகளில் ஒன்று. அங்கேயும் நான் பலமுறை சென்றிருக்கிறேன். இந்த நதிக்கரை நகரங்கள் பயணத்திலும் நான் அந்த படித்துறைக்குச் சென்று இருந்தேன். அங்கே தான் ஒவ்வொரு நாள் மாலையிலும் கங்கை நதிக்கு ஆரத்தி எடுப்பார்கள். இந்த முறை சென்ற போது கிடைத்த அனுபவம் அலாதியானது. அது குறித்த தகவல்களை வாரணாசி குறித்துப் பார்க்கும் போது சொல்கிறேன் - அதுவரை சற்றே காத்திருங்கள். இப்போதைக்கு நைமிசாரண்யம் குறித்து மட்டும் பார்க்கலாம்.
ஆக்ரோஷமான செல்லம்....
அடுத்த பகுதியில் வேறு சில தகவல்களுடன் உங்களை சந்திக்கிறேன். தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே.
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
தகவல்கள் சுவாரஸ்யம். நைமிசாரண்யத்தில் நான் நீங்கள் சொல்லும் இடங்கள் பார்த்தேனா என்று நினைவில்லை! பாதல் அழகு. மெல்ல கைநீட்டினால் நட்பாய் அருகில் வந்தால் பயமின்றி தொடலாம்.
பதிலளிநீக்குமெல்ல கை நீட்டினால், நட்பாய் அருகில் வந்தால் பயமின்றி தொடலாம் - ஹாஹா... ஒரு முறை அதன் உறுமல் கேட்ட பிறகு நட்பு பாராட்ட முடியவில்லை ஸ்ரீராம். தங்கள் கருத்திற்கு நன்றி.
நீக்குசெல்லம் பயங்கரமாக இருக்கிறது ஜி
பதிலளிநீக்குதங்கள் கருத்திற்கு நன்றி கில்லர்ஜி.
நீக்குசுவையான தகவல்கள்
பதிலளிநீக்குதங்கள் கருத்திற்கு நன்றி அரவிந்த்.
நீக்குநல்ல செல்லம்...
பதிலளிநீக்குதங்கள் கருத்திற்கு நன்றி தனபாலன்.
நீக்குகசாஸ்வமேதgகாட்- நைமிசாரண்யம் - கேள்விப்பட்டதில்லை.
பதிலளிநீக்குபிரகாஷ் சிங் பாதல் ஐ நினைவுபடுத்திவிட்டீர்கள்
தங்கள் கருத்துரைக்கு நன்றி நெல்லைத் தமிழன். பஞ்சாப் மாநில தலைவர் எனக்கும் நினைவுக்கு வந்தார்.
நீக்குநாய் சைவம் என்பதால் தொடையைத் கடிக்காதா?
பதிலளிநீக்குஹாஹா... நல்ல கேள்வி நெல்லைத் தமிழன்.
நீக்குநினைவிருக்கிறது ஜி உங்கள் தொடர்.
பதிலளிநீக்குஎத்தனை இடங்கள் அதற்கான புராணக் கதைகள்.
“இந்த விபரீத விளையாட்டு வேண்டாம்டே கைப்புள்ள, தொப்புள சுத்தி 32 ஊசி போடுவாங்க தெரியும்ல!” என்று ஒரு கிலியுடன் கூடிய குரல் எனக்குள் எழுந்தது!//
ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன்....Bபாdhதல் .செல்லம் அழகு!!!!
கீதா
செல்லம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குநைமிசாரண்யம் தொட்ர் தொடர்வது மகிழ்ச்சி.
பதிலளிநீக்கு.Bபாdhதல் .செல்லம் விவரம் அருமை.
உறவினர் வீட்டில் வளரும் இரண்டு செல்லங்களை பற்றி அவர்கள் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டது நினைவுக்கு வருது.
அவன் பக்கத்தில் வந்து மோந்து பார்ப்பான், நீங்கள் பேசாமல் இருந்தால் ஒன்று செய்ய மாட்டான் என்று.
தொடர் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குஅழகுச் செல்லம். ஆபத்தையும் தரலாம். :)
பதிலளிநீக்கு