சனி, 25 மார்ச், 2023

காஃபி வித் கிட்டு - 164 - வாசிப்பு - சைகை மொழி - பிறந்த நாள் வாழ்த்து - VPKP - முதியோர் இல்லம் - மகிழ்ச்சி - ஆசிரியர்கள்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

"DON'T WASTE YOUR TIME IN ANGER, REGRETS, WORRIES, AND GRUDGES. LIFE IS TOO SHORT TO BE UNHAPPY." - ROY. T. BENNETT.

 

******

 

இந்த வாரத்தின் எண்ணங்கள் - வாசிப்பு  :  

 

சமீப மாதங்களில் நான் படிப்பது - இணையத்தில் வலைப்பூக்கள், முகநூல் போன்ற இடங்களில் படிப்பது மிக மிகக்குறைவு - இல்லை என்று சொல்லும் அளவுக்கு.  எனது வலைப்பூவில் தினம் தினம் வரும் பதிவுகளைப் படிக்கும் பல நண்பர்களது பதிவுகளை தொடர்ந்து படிக்காமல் இருப்பதற்கு முதலில் மன்னித்து விடுங்கள்.   பதிவு எழுத முடிகிறதே, படிக்க முடியவில்லையா என நீங்கள் கேட்கலாம்.  நியாயமான கேள்வி.  ஆனால் பதிவுகளை படிக்க முடியவில்லை.  ஆனால் படித்துக் கொண்டிருக்கிறேன் - படிப்பது இணையத்தில் - ஆனால் பாடங்கள் - எனது அலுவலகம் சம்பந்தமான பாடங்கள்! ஆம் கடந்த சில மாதங்களாக சில அலுவலக கட்டாயங்களுக்காக, அலுவலகம் சம்பந்தமாக நிறைய படிக்க வேண்டியிருக்கிறது.  அதனால் படித்துக் கொண்டே இருக்கிறேன்.  சமீபத்தில் தான் படிப்பு முடிந்திருக்கிறது.  இனிமேல் தொடர்ந்து நண்பர்களின் பதிவுகளை வாசிக்க ஆரம்பித்து விடுவேன். இதுகாறும் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த அனைத்து நல்லிதயங்களுக்கும் நன்றி.

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்: Axis Bank - சைகை மொழி

 

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக Axis Bank விளம்பரம் ஒன்று. குடியரசு தின சமயத்தில் வெளிவந்தது - ஹிந்தி மொழியில் என்றாலும் ஆங்கில sub title இருப்பதால் அனைவரும் புரிந்து கொள்ளலாம்.  பாருங்களேன். 


 

மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை எனில் கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம். 

 

Axis Bank | Republic Day #23in23 - YouTube

 

*****

 

பழைய நினைப்புடா பேராண்டி : பிறந்த நாள் வாழ்த்து

 

2014-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - பிறந்த நாள் வாழ்த்து! - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  

 

இன்று 25 மார்ச்.  இன்று ஒரு பிரபலமான பதிவரின் பிறந்த நாள். அவரின் பிறந்த நாள் பரிசாக எனது பணப்பை, வங்கி எண், அதற்கான அட்டைகள், அதைப் பயன்படுத்த தேவையான இரகசியக் கடவு எண் எல்லாவற்றையும் அவரிடம் கொடுத்திட முடிவு செய்துவிட்டேன்.

 

என்ன பரிசு வேண்டுமோ அவரே வாங்கிக் கொள்வது நல்லது.

 

”நானாக ஏதாவது பரிசினை வாங்கி அது அவருக்கு பிடிக்காது போய்விட்டால்!” என்ற எண்ணமே எனது மேற்கண்ட முடிவுக்குக் காரணம். பல சமயங்களில் இந்த மாதிரி முடிவு எடுப்பது தான் புத்திசாலித்தனம் என்று அனுபவப்பட்டவர்கள் சொல்லி இருக்கிறார்கள்!

 

அலுவலக நண்பர் ஒருவர் இப்படித்தான். அவருடைய நண்பர் ஒருவருக்கு பிறந்த நாள் பரிசாக ஒரு சட்டை எடுத்துக் கொடுத்தார். அதன் அளவு கொஞ்சம் பெரிதாக இருக்க, “நான் என்ன அவ்வளவு குண்டாகவா இருக்கேன்...  என்னை நீ கிண்டல் பண்ணிட்டே. உன் பரிசும் வேண்டாம், உன் நட்பும் வேண்டாம்! நான் இனிமே உன் கூட பேச மாட்டேன்” என்று கோபித்துக் கொண்டார். அந்த விஷயத்தினை கேட்டதிலிருந்து பிறந்த நாள் பரிசு வாங்குவதென்றாலே எனக்குக் கொஞ்சம் நடுக்கம் தான்!

 

அது சரி, யார் அந்த பிரபல பதிவர்? தெரிந்து கொள்ள மேலே சொன்ன பதிவினை மேலே உள்ள சுட்டி வழி படித்தால் தெரிந்து விடப்போகிறது!

 

******

இந்த வாரத்தின் தகவல் - VPKP: 

 

அது என்ன VPKP? வார புகைப்பட குறுங்கதை போட்டி - அது தான் VPKP! யார் நடத்துகிறார்கள்? முகநூலில் இருக்கும் மத்யமர் குழுவினர்.  வாரத்திற்கு வித்தியாசமான மூன்று படங்களைக் கொடுத்து, வார்த்தைகளின் எண்ணிக்கை இவ்வளவு தான் (250?) என்று கட்டுப்பாடும் வைத்து குழு உறுப்பினர்களை, படத்திற்குத் தகுந்தாற்போல் கதை எழுதச் சொல்கிறார்கள்.  சில வாரங்களாக இந்த போட்டிகளுக்காக வரும் கதைகளை படிக்கிறேன்.  பல திறமைசாலிகள் குழுவில் இருக்கிறார்கள் - பல கதைகள் வருகின்றன என்றாலும் ஒரு சில மிகவும் சிறப்பாக, மனத்தைத் தொடும்படி இருக்கின்றன.  முகநூலில் இருப்பவர்கள் இந்தக் குழுமத்தில் இருந்தால் இது போன்ற கதைகளை படிக்கலாம்!  அவர்கள் தரும் படங்கள் வித்தியாசமாகவே இருக்கின்றன.  அப்படி ஒரு படம் மேலே!  இந்த வலைப்பூவை வாசிக்கும் நண்பர்களும் இந்தப் படத்திற்கான ஒரு குறுங்கதையை எழுதி அனுப்பினால் இங்கே வெளியிட நான் தயார்!  நீங்க தயாரா? எழுதி அனுப்புங்களேன்!

 

******

 

இந்த வாரத்தின் முகநூல் இற்றை ஒன்று - முதியோர் இல்லம் :


 

கொஞ்சம் Controversial விஷயம் தான்.  இரண்டு பக்கங்களிலும் நியாயம் இருக்கலாம்! யாருடையது சரியான வாதம் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த வாசகம் - மகிழ்ச்சி :

 

நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி என்பது இடங்களைப் பொறுத்து அமைவதில்லை; நம்மோடு பயணிக்கும் மனிதர்களைப் பொறுத்தே அமைகிறது.

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த செய்தி - ஆறு மகள்களும் ஆசிரியர்கள் :


 

தனது ஆறு மகள்களையும் ஆசிரியர் ஆக்கிய ஒரு தாயின் கதை - தினமலர் பக்கத்தில் படித்த ஒரு செய்தி.  அந்த லடசியத் தாயை நீங்களும் வாழ்த்தலாமே.  செய்தியை கீழே உள்ள சுட்டி வழி படிக்கலாம். 

 

ஆறு மகள்களையும் ஆசிரியராக்கிய லட்சிய தாய் ராணியம்மா| rani amma | Dinamalar

 

******

 

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து….

 

15 கருத்துகள்:

  1. அலுவலகத்தில் தேர்வு எழுத வேண்டிய கட்டாயமா, சும்மா தெரிந்து கொள்ள படிப்பதா?

    கணினியில் ஸ்பீக்கர் வேலை செய்யாது.  காணொளி பின்னர் மொபைலில்தான் பார்க்க வேண்டும்.

    உங்கள் திருமதி ஆதி வெங்கட் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    படத்துக்கு கதை..   அதுவும் ரத்தினச்சுருக்கமாக..  நல்ல முயற்சி.

    மாமியார் மாமனார் அப்பா அம்மா பிரச்னை - உலகம் முழுவதுக் உள்ளது!

    வாசகம் நன்று.  மகள்களை ஆசிரியைகளாக்கிய தகவல் இரண்டு மூன்று வரங்களுக்குமுன் பாசிட்டிவ் செய்திகளில் நானும் பகிர்ந்திருந்தேன்!

    பதிலளிநீக்கு
  2. அது ஆதி என்பது தெரிந்துவிட்டது சுட்டி செல்லாமலேயே.....

    ஆதிக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! God Bless!

    மற்றவற்றிற்குப் பின்னர் வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. தங்களது துணைவியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ஜி

    அந்தப் பெண்மணிக்கு ஆண் அளித்த பதில்தான் உண்மையான தீர்வு.

    ஆறு மகள்களும் ஆசிரியர் சாதனையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகள்/மகள்கள் மட்டுமே இருக்கும் பெற்றோர் என்ன செய்வார்கள்? கில்லர்ஜி?

      கீதா

      நீக்கு
  4. தங்களின் துணைவியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்.
    இது விளையாட்டாக சொல்லப்பட்டாலும், அப்படி வங்கி அட்டை விவரங்களை கொடுத்தாலும் பெண்கள் திருப்தியடைய மாட்டார்கள். மேலும் கோபப்படுவதே நடக்கும் என்றே தோன்றுகிறது.
    பரிசு என்பது, பணத்தையும் விட, நாம் அவர்களின் விருப்பங்களை எந்த அளவு புரிந்து வைத்திருக்கிறோம் என்பதை உணர்த்தும் ஒரு வலுவான இருமுனை கூரான ஆயுதமாகவே என் அணுபவம் சொல்கிறது.
    அலுவலகத்தில் தொடர் கல்வி "Continuous learning" என்னும் முறையை அரசாங்க வேலையிலும் அமுல்படுத்திவிட்டார்கள்.
    வங்கிப்பணியிலும், நான் வாரம்தோரும் வினாடிவினாக்களை இணையத்திலேயே பூர்த்தி செய்து மதிப்பெண்கள் பெறுகிறேன்.
    மற்ற அனைத்து பகுதிகளும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  5. அலுவலக சம்பந்தமான பாடங்கள் - ஆஹா ரோஷ்னியோடு நீங்களும் படித்தீர்களா!!!

    சைகை மொழி - அருமை. தற்போது நான் அப்பாவுக்கு நான் சைகை மொழியில் சொல்வதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவருக்குச் சாதாரண சைகைகள் கூடக் கஷ்டமாக இருக்கு புரிந்து கொள்ள.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. பரிசு - நமக்குத் தெரிந்தவர் மிகவும் நெருக்கமானவர் என்றால் அவரது விருப்பம் நமக்குத் தெரிந்திருக்கும் அப்படி வழங்கும் போது அவர்களுக்கும் சந்தோஷமாக இருக்கும். ஆனால் தெரியவில்லை என்றால் அவருக்கு விருப்பமானதை வாங்கிக் கொள்ள பணம் கொடுத்துவிடுவது அல்லது Gift voucher கொடுப்பது நல்லதே.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. படத்துக்குக் கதை அதுவும் ரத்தினச் சுருக்கமாக....ஆ!! ஆனால் நல்ல விஷயம்.!

    மகிழ்ச்சி - நல்ல வாசகம்

    தன் ஆறு பெண்களும் ஆசிரியைகள் ...மகிழ்வான விஷயம். சாதனைதான். எபி யிலும் பாசிட்டிவ் செய்திகளில் வந்திருந்தது

    கீதா

    பதிலளிநீக்கு
  8. முதியோர் - அந்த ஆண் நபர் சொல்லியிருப்பதை இப்படியும் யோசிக்கலாம்....மாமனார் மாமியாரைத் தன் பெற்றோர் போல் நினைக்க வேண்டும் என்று சொல்வதையே......வேறொரு வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு வரும் பெண்ணை மாமனார் மாமியார் தங்கள் மகளைப் போல் பார்க்கிறார்களா?!!!!!

    அது போன்று, பெண்களுக்குத் தங்கள் பெற்றோரை பார்த்துக் கொள்ளும் உரிமை இருந்தாலும் கூட எத்தனைப் பெண்கள் அவர்களை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள்?!!!

    இந்தப் பிரச்சனை நீண்டு கொண்டே இருக்கும் ஒன்று, மக்கள் பக்குவம் அடையாதவரையில்

    கீதா

    பதிலளிநீக்கு
  9. வழக்கம் போல மணக்கும் கதம்பம்..தொடர வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  10. வழக்கம்போல் ரசிக்கக்கூடிய கதம்பம்!
    நீங்கள் பகிரும் விளம்பரப் படங்கள் எப்போதுமே ஸ்வாரஸ்யம்தான். இந்த விளம்பரப்படம் முடியும்பொழுது எனக்கும் எழுந்து நின்று கை தட்ட தோன்றியது.
    அதென்னவோ என்னால் போட்டிகளுக்கு எழுதவே முடிவதில்லை.
    மனைவியாக இருந்தாலும் சர்ப்ரைஸ் கிஃப்டுகள் கொஞ்சம் ரிஸ்க்தான்.
    ஆதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  11. முதலில் ஆதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள், வாழ்க வளமுடன்
    மற்றவைகளை படித்து விட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. மிக அருமையான காணொளி. ஆண் மகவுக்கு மட்டும் பெற்றொர்களை பார்க்கும் கடமை என்று இருந்தது, இப்போது காலம் மாறி விட்டது. நிறைய வீடுகளில் பெண்மகவு கூட தான் முதியோர்கள் இருக்கிறார்கள். ஆண் குழந்தை இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்!
    இரு பக்க முதியவர்களையும் பார்த்து கொள்ளும் பிள்ளைகள் இருக்கிறார்கள்.
    கணவன் தன் மனைவியின் அப்பா, அம்மாவை தன் பெற்றோராக நினைக்கலாம், மனைவி தன் கணவனின் பெற்றோர்களை தன் அப்பா, அம்மாவாக நினைக்கலாம்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....