செவ்வாய், 14 மார்ச், 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி முப்பத்தி ஐந்து - வாரணாசி - தென்னிந்திய உணவும் அய்யர் கஃபேவும்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

JUST BECAUSE A PERSON SMILES ALL THE TIME, DOESN’T MEAN THEIR LIFE IS PERFECT. THE SMILE IS A SYMBOL OF HOPE AND STRENGTH.

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.  

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.  

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட். 

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு. 

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட். 

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…

 

பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்

 

பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்

 

பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்

 

பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி

 

பகுதி இருபத்தி மூன்று - அயோத்யா ஜி - சரயு நதி அனுபவங்கள்

 

பகுதி இருபத்தி நான்கு - Bபேல் PபThத்தர் மற்றும் இரவு உணவு

 

பகுதி இருபத்தி ஐந்து - ராஜ் (dh)த்வார் மந்திர் 

 

பகுதி இருபத்தி ஆறு - கனக் Bபவன் எனும் தங்க மாளிகை

 

பகுதி இருபத்தி ஏழு - காலை உணவு - குஷி க்ளிப் - சரயு படித்துறை

 

பகுதி இருபத்தி எட்டு - ஸ்ரீ நாகேஷ்வர்நாத் ஜி எனும் சிவன் கோவில்

 

பகுதி இருபத்தி ஒன்பது - அயோத்யா ஜி - Khகாந்தானி DHதவா Khகானா

 

பகுதி முப்பது - அடுத்த நதிக்கரை நகரை நோக்கி

 

பகுதி முப்பத்தி ஒன்று - காசி விஷ்வநாத் ஆலயம் - புதிய ஏற்பாடுகள்

 

பகுதி முப்பத்தி இரண்டு - வாரணாசி - துர்கா கோவில் (எ) குரங்கு கோவில்

 

பகுதி முப்பத்தி மூன்று - வாரணாசி - சங்கடங்கள் தீர்க்கும் ஹனுமன்

 

பகுதி முப்பத்தி நான்கு - வாரணாசி - துள்சி மானஸ் மந்திர்



Dhதஷாஸ்வமேத Gகாட் செல்லும் வழி…

 

சென்ற பகுதியில் சொன்னது போல, காலையிலிருந்து சில கோவில்கள் பார்த்து விட்டு தங்குமிடம் திரும்பி மதிய உணவை தங்குமிடத்திலேயே இருந்த உணவகத்தில் உண்டு கொஞ்சம் ஒய்வு எடுத்துக் கொண்டோம்.  எங்கள் தங்குமிடம், Dhதஷாஸ்வமேத Gகாட் பகுதியில் தான் இருக்கிறது என்பதை முன்னரே சொல்லி இருந்தேன்.  ஆனால் சொல்லாமல் விட்ட விஷயம் ஒன்று உண்டு! அந்த விஷயத்தினையும் இன்றைய பதிவில் சொல்லி விடுகிறேன். வடக்கே சிவன் கோவில்கள் எங்கே சென்றாலும் “Bபம் Bபோலே..... ஹர் ஹர் மகாதேவ்…  போன்ற முழக்கங்கள் எழுப்புவது வழக்கம். அங்கே பல வருடங்கள் இருந்து விட்ட எங்களுக்கும் இந்த முழக்கங்கள் செய்வது வழக்கமாக இருக்கிறது. காசி விஸ்வநாதர் குடிகொண்டு இருக்கும், அனைவருக்கும் படி அளக்கும் அன்னபூரணியும் இருக்கும் வாரணாசி நகர் வந்து சேர்ந்த பிறகு எங்கே பார்த்தாலும் இந்த முழக்கங்கள் தான். எங்களது நாளை தங்குமிடத்தின் அருகே இருக்கும் Dhதஷாஸ்வமேத Gகாட் சென்று கங்கையில் புனிதநீராடிய பின்னரே எங்கள் கோவில் உலாவை துவங்கினோம்.  

 

சற்றே ஒய்வு எடுத்த பிறகு நகர் வலம் வரலாம் என்று புறப்பட்டோம்.  எங்களது அன்றைய திட்டம் மாலை வரை நகர் வலம் வருவது தான்.  மாலை நேரத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு இருப்பதால் அது வரை கால் போன போக்கில் ஒரு உலா தான்.  வாரணாசி நகர் - எண்ணற்ற வட இந்திய உணவகங்கள் இருந்தாலும், சாலையோரக் கடைகளில் இட்லி, தோசை போன்றவை கிடைக்கிறது. அந்தக் கடைகளில், வட இந்தியர்கள் மட்டுமல்லாது காசிக்கு வரும் எண்ணற்ற தெலுகு தேசத்தவர்களும் புகுந்து விளையாடுகிறார்கள். இரண்டு இட்லி, தோசை என அனைத்தையும் புரச/ஆல இலைகளில் செய்யப்பட்ட தொன்னைகளில் போட்டு மேலே சாம்பார் அல்லது சட்னி ஊற்றி தருகிறார்கள். சாலை ஓரங்களில் இருக்கும் கடைகள் என்பதால் நின்றபடியோ, அங்கே இருக்கும் ஒன்றிரண்டு இருக்கைகளில் அமர்ந்தோ சாப்பிடுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இப்படியான நிறைய கடைகளை வாரணாசி நகரில் பார்க்க முடிந்தது.









 

மாலை நேரம் அப்படியே உலாத்திய போது பார்த்த ஒரு பதாகையில் "அய்யர் கஃபே" என்று ஆங்கிலத்திலும், அய்யர் காபி என தமிழிலும் எழுதி இருக்க, உள்ளே நுழைந்து காஃபி இருக்கிறதா என்று கேட்டோம் - ஃபில்டர் காஃபி மற்றும் இன்ஸ்டன்ட் காஃபி இரண்டுமே இருந்தது. 20 ரூபாய்க்கு ஃபில்டர் காஃபி! உள்ளே பார்த்த போது மிகவும் பழமையான கடை என்று தோன்றியது. கடை உரிமையாளரிடம் பேச்சுக் கொடுத்தேன். மூன்று தலைமுறைகள் கடந்து நடக்கும் கடை என்றும், தாத்தா  L.R. சுப்ரமண்ய அய்யர் காலத்தில் ஆரம்பித்து, அவரது மகன் S. பாலகிருஷ்ண அய்யர் தொடர்ந்து நடத்திய இந்த உணவகம் தற்போது மூன்றாம் தலைமுறையில் திரு ராமச்சந்திர அய்யர் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

 

தொடங்கி 90 வருடங்களுக்கு மேலாக ஆகிவிட்ட இந்த உணவகத்தில் இட்லி, வடை,  தோசை, ஊத்தப்பம், உப்புமா, போன்ற பல தென்னிந்திய உணவுகள் கிடைக்கின்றன. கிடைக்கும் உணவு வகைகள் மற்றும் விலைப்பட்டியல் படமாக இணைத்து இருக்கிறேன். ஒரு வாரமாக வட இந்திய உணவு சாப்பிட்டதால், மாறுதலுக்காக தென்னிந்திய உணவு சாப்பிடலாம் என அடுத்த நாள் (ஞாயிறு) காலை அங்கே சென்ற போது தெரிந்தது கடைக்கு அன்று விடுமுறை என! முதல் நாள் (சனிக்கிழமை) மாலை காஃபி மட்டுமே குடித்தோம் என்பதால் உணவின் தரம் குறித்து ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஃபில்டர் காஃபி, கொடுத்த விலைக்கு சுவை ஓகே! அதுவும் காசி நகர் வரை வந்து நமக்கு ஃபில்டர் காஃபி கொடுப்பதால் அதிகம் குறை சொல்லக் கூடாது!

 

காசி சொம்பு...... 


 

நம் ஊரில், பல வீடுகளில், சின்னதும் பெரிதுமாக தாமிரத்தில் காசி சொம்பும் பித்தளையில் சிறு அன்னபூரணி விக்ரஹமும் இருக்கும். யார் காசி சென்று வந்தாலும் அவரவர் வீட்டிற்கும் உறவினர்கள் மறறும் நண்பர்கள் வீடுகளுக்கும் இப்படி காசி சொம்பு, காசி கயிறு மற்றும் அன்னபூரணி விக்ரஹம் வாங்கி வருவது நீண்ட நெடும் காலமாக இருந்து வரும் பழக்கம். எங்கள் வீட்டில் கூட இப்படி சின்னதும் பெரிதுமாக சில சொம்புகளும் சிலைகளும் உண்டு. ஹரித்வார், ரிஷிகேஷ் நகரங்களில் கூட இப்படியான சொம்பில் கங்கை நீரை நிரப்பி, ஒழுகா வண்ணம் தட்டு அடித்து தருவார்கள் என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஊர்களில் பிளாஸ்டிக் அரக்கன் கோலோச்சத் தொடங்கி விட்டான். வரும் பயணிகள்/பக்தர்கள் அனைவரும் இப்படியான பிளாஸ்டிக்கில் விதம் விதமான குப்பிகள் வாங்கி கங்கை நீரை நிரப்பி எடுத்துச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். 

 

ஆனால் இன்றைக்கும் காசி நகருக்கு வரும் பல பக்தர்கள் டஜன் கணக்கில் காசி சொம்புகளையும் அன்னபூரணி சிலைகளையும் வாங்கி எடுத்துச் செல்கிறார்கள். அங்கே இந்த காசி சொம்பு தயாரிப்பதும் சிலை தயாரிப்பதும் பெரிய அளவில் நடைபெறும் தொழில். 70 ரூபாய்க்கு ஆறு சொம்பு தண்ணீர் அடைத்து விற்பனை செய்வார்கள். இந்த சிறு அளவு சொம்புகள், தாமிர சொம்புகள் அல்ல! அவை தகரத்தால் செய்யப்பட்டு மேலே முலாம் பூசப்பட்டவை. அது மட்டுமல்லாது தகரத்தில் கங்கை நீரை நிரப்பி வைத்தால் துரு பிடித்து ஓட்டை ஆகிவிடும் என்பதால் மிகச் சிறிய பிளாஸ்டிக் கவர்களில் தண்ணீர் நிரப்பி சீல் வைத்து சொம்பின் உள்ளே வைத்து தகடுகளால் மூடி விடுவார்கள். பலருக்கும் இது தெரியாது! 

 

இன்னும் பல இடங்களில் சொம்புகளை தகரத்தில் செய்து விற்று வருகிறார்கள் என்பதால் முன் அனுபவம் பெற்ற சிலர், கடையிலியே, ஹிந்தியில் Chசும்பக் என அழைக்கப்படும் காந்தத்தினைக் கேட்டு வாங்கி பரிசோதனை செய்து கொள்வதும் உண்டு! முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக இப்படிக் கேட்டு பரிசோதித்த, ஒரு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முதியவரை ஒரு கடையில் பார்த்தேன். மேலே இருக்கும் மூடி Chசும்பக் - இல் ஒட்டிக் கொண்டது! கடைக்காரர் மூடி தகரம், சொம்பு மட்டும் தான் தாமிரம். இந்த விலைல இப்படித்தான் என்றார்.... 

 

நம்பிக்கை தானே எல்லாம் - நம்பிக்கை வைத்து பல இடங்களிலிருந்தும் பயணம் செய்து வரும் பக்தர்களால் பல மக்கள் பிழைக்க முடிகிறது - காசி சொம்பு விற்பனை செய்பவர்களையும் சேர்த்து! பயணம் நமக்கு நல்ல பல விஷயங்களை அள்ளித் தருகிறது… நம்மால் பலருக்கு உதவவும் முடிகிறது. ஆதலால் பயணம் செய்வோம். இந்த பயணத்தில் பார்த்த இடங்கள், கிடைத்த அனுபவங்கள் குறித்த இடுகைகள் தொடரும்… ஆதலால் இந்தப் பயணத்தில் இணைந்திருக்க வேண்டுகிறேன் நண்பர்களே. 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

31 கருத்துகள்:

  1. அய்யர் காபி பாலைவனச்சோலை!  படத்தில் இருப்பவர் கொஞ்சம் எம் எஸ் வி சாயலில் இருக்கிறார்!  நாளைக்கு சண்டே கடை உண்டா என்று ஒரு வார்த்தை முன்னரே கேட்டிருந்திருக்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞாயிறு கடை திறந்திருக்குமா என்று கேட்டு இருக்கலாம் - லாம்! பொதுவாக உணவகங்கள் விடுமுறை அளிப்பது இல்லை என்ற எண்ணம் தான் ஸ்ரீராம். தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  2. திரிவேணி சங்கமத்தில் நாங்கள் சேகரம் செய்த கங்கை நீரை வாரணாசியில் ஒரு கடையில் சொம்பில் அடைத்துத் தந்தார்கள்.  அவர்களே கங்கை நீர் இருக்கும் சொம்புகளை விற்பதாகவும், எங்கள் விருப்பம் என்றால் நாங்கள் சேகரம் செய்திருக்கும் நீரை நிரம்பித் தருவதாகவும் சொன்னார்கள்.  அப்படியே செய்திருப்பார்கள் என்று நம்பிக்கைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேகரம் செய்த கங்கை நீரை அடைத்துத் தருபவர்கள் - இப்படியான கடைகள் இங்கே மட்டுமல்ல, ஹரித்வார், ரிஷிகேஷ் போன்ற இடங்களிலும் உண்டு ஸ்ரீராம். அதே நீரை அடைத்துத் தருவார்கள் என்று நம்பிக்கை தான்!

      நீக்கு
  3. நாமே நல்ல செம்பு வாங்கி கொடுத்தால் கங்கை நீர் அடைத்து தருவார்கள் .
    நகரத்தார் சத்திரத்தில் நல்ல காசி செம்புகள் கிடைக்கும், நம்பி வாங்கலாம்.
    எங்கள் மாமனார் வீட்டில் பெரிய , சிறிய காசி செம்புகள் உண்டு. எங்கள் வீட்டிலும் உண்டு.
    நாங்கள்1978ம் வருடம் காசி போன போது காப்பி கிடைப்பது கஷ்டமாக இருந்தது. காப்பி கிடைத்தாலும் நன்றாக இருக்காது.
    பயணக்கட்டுரை மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் கோமதி அம்மா. முன்னரே தெரிந்த கடைகள் என்றால் ஓரளவுக்கு நம்பலாம். பல சிறிய கடைகள் ஏமாற்றவே முயற்சி செய்கிறார்கள் என்பது கண்கூடு.

      பயணக்கட்டுரை உங்களுக்கும் பிடித்து இருந்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  4. சொம்பில் உள்ள வியாபார சூட்சுமம் ஆச்சர்யமாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வியாபார சூட்சுமம் - புதியதாக ஒரு விஷயம் உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  5. எனக்கும் தான் ..,,, சொம்பில் இருக்கும் வியாபார சூட்சுமம் ஆச்சர்யம் நண்பரே. மற்றபடி நீங்கள் எழுதிய விதம் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி குமார் ராஜசேகர்.

      நீக்கு
  6. காசி சொம்பு...... நல்ல தகவல்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அனு ப்ரேம் ஜி.

      நீக்கு
  7. நாளை மறுநாள் இந்த ஐயர் கடையைத் தேடுகிறேன். க்வாலிடிக்கு கம்பெனி பொறுப்பில்லைனு ஜகா வாங்கிட்டீங்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யர் கடை தேட வேண்டிய அவசியம் இருக்காது நெல்லைத்தமிழன். பெரிய தூணில் நந்தி இருக்கும் இடத்திலிருந்து தஸாஸ்வமேத் காட் செல்லும் வழியில் உங்கள் வலது பக்கம் இருக்கிறது - கொஞ்சம் உள்ளே இருக்கும் என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.

      நீக்கு
  8. அய்யர் காப்பி கடை அதுவும் 'பில்டர் 'கேட்கவா வேண்டும் சுவைத்திருக்கும்.

    காசி செம்பு பற்றி அறிந்து கொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி. தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  9. காசி சொம்பு பற்றிய தகவல்கள் பயனுள்ளவை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. காசி விஸ்வநாதர் குடிகொண்டு இருக்கும், அனைவருக்கும் படி அளக்கும் அன்னபூரணியும் இருக்கும் வாரணாசி நகர் வந்து சேர்ந்த பிறகு எங்கே பார்த்தாலும் இந்த முழக்கங்கள் தான்.//

    எனக்கு இதைக் கேட்க ரொம்பப் பிடிக்கும்....மனதில் காசிவிஸ்வநாதர் அன்ன பூரணி, அயோத்யாஜி.....கங்கை, அது போன்று இமயமலை...மிகவும் ஆசை உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி. தங்களின் ஆசைகள் நிறைவேறட்டும்.

      நீக்கு
  11. மாலை நேரத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு இருப்பதால்//

    கங்கா ஆரத்தி தான் என்று நினைக்கிறேன்.

    நகர்வலம் மிகவும் பிடிக்கும். நகர் என்றில்லை கிராமங்கள் என்றாலும் ஊரைச் சுற்றி வருவது பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியும். கடைசியில் சொல்லியிருப்பது போல் பயணங்கள் பல விதத்தில் உதவுகின்றன

    ஐயர் கடையில் இருக்கும் புகைப்படங்களில் வலப்பக்கம் இருப்பவர் எம் எஸ் வி போலவே இருக்கிறார். இடப்பக்கம் இருப்பவர் கன்னட தேசத்தில் இருந்த கிரீஷ் கர்னாட் போல கொஞ்சம் தெரிகிறார்!!

    காசிச் சொம்பு பற்றிய விஷயங்கள் இப்படியும் பிழைப்பு என்று எண்ண வைத்தது. சென்று வந்தவர்கள் சொல்லியிருக்காங்க ஆனால் இது வரை நம் வீட்டில் இருந்தவை எல்லாம் நல்லதாகவே இருந்தன...ஆனால் எல்லாம் தீர்ந்துவிட்டன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எம்.எஸ்.வி. போலவே இருக்கிறார் - ஸ்ரீராமும் இதையே சொல்லி இருக்கிறார் கீதா ஜி.

      பதிவு குறித்த தங்களது கருத்துக்கள் கண்டு மகிழ்ச்சி. மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  12. நாங்க 98 ஆம் வருஷம் போனப்போ இன்டக்ஷன் ஸ்டவ் எல்லாம் புழக்கத்தில் வரலை. ஆகவே காஃபி பவுடர், சர்க்கரை,ஹார்லிக்ஸ் எடுத்துப் போயிருந்தோம். நாங்க தங்கி இருந்த ஸ்வாமிமலை கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின் வீடு இருக்கும் தெருவிலேயே ஒரு பால் கடை. காலை ஐந்தரைக்குத் திறந்துடுவாங்க. அங்கே போய்ப் பாலை வாங்கிக் காய்ச்சிக் கொண்டு வந்துடுவேன். எங்க அறைக்கு வந்ததும் காஃபி பவுடரையும், சர்க்கரையும் தனித்தனியான தம்பளர்களில் போட்டுப் பாலை ஊற்றினால் காஃபி தயார். சாஸ்திரிகள் வீட்டிலேயே காஃபி கேட்டால் கொடுத்தார்கள். ஆனால் ஒரு உத்தரணி தான். அதுவே அப்போப் பதினைந்து ரூபாய். கேட்டால் பசும்பால், ஃபில்டர் கிகாக்ஷன் என்றெல்லாம் சொல்லுவாங்க. ஆகவே சாப்பாடு, மற்றக் காரியங்கள் அங்கே வைத்துக் கொண்டு காஃபி, பால் எல்லாம் வெளியே உள்ள கடைகளில். ராத்திரியில் நல்ல மலாய் பால் சாப்பிட்டு வருவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது காசி அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டது நன்று. மனம் நிறைந்த நன்றி கீதாம்மா.

      நீக்கு
  13. இந்தக் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுக்குத் தெரிந்த செட்டியார் கடையிலேயே காசிச் செம்புகள் கிடைத்தன. சாஸ்திரிகள் ஆளை அனுப்பி வாங்கிக் கொடுத்தார். இன்னமும் வைச்சிருக்கோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசிச் செம்புகள் - தெரிந்த இடத்தில் வாங்குவது சிறப்பு. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  14. காசி சொம்பு குறித்த தகவல்கள் அறுமை சார்.
    திருச்செந்தூரில் உள்ளதுபோல் ஒரு மனி ஐய்யர் கடை காசியில் இருந்தால் ரொம்ப சிறப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருச்செந்தூர் மணி அய்யர் கடை - தகவல் நன்று. திருச்செந்தூர் சென்று பல வருடங்கள் ஆகிவிட்டன அரவிந்த். தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  15. நாங்க ஃபிஜியில் இருக்கும்போது அங்கே கோவில் குருக்களா தமிழ்நாட்டுலே இருந்து வந்த குருக்கள், மூணு பெரிய ட்ரம்களில் கங்கை நீர், கப்பல் வழி வரவழைத்தார். நம்மவர்தான் பாத்திரக்கம்பெனியில் சொல்லி சின்னதா செம்பில் சொம்பு செய்து கொடுத்தார். அதுலே கங்கை நீர் நிரப்பி, ஈயத்தால் ஸீல் செஞ்சு அங்கே விற்பனை ஆச்சு. குருக்களுக்கும் ஒரு வருமானம் ஆச்சு. அதுவரை கங்கை நீர் என்னும் சமாச்சாரம் தெரியாத ஃபிஜி மக்களுக்கு முதல்முறையா கங்கையை அறிமுகப்படுத்தியவர் சாமித்தாத்தான்னு மகள் அழைக்கும் நம்ம சுந்தரேசகுருக்கள்தான். நம்மிடமும் கங்கை இருக்காள். இப்பப்பாருங்க.... இங்கே இந்தியக் கடைகளில், சின்ன ப்ளாஸ்டிக் பாட்டில்களில் கங்கா ஜல் விற்பனையில் இருக்கு !

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....