வியாழன், 2 மார்ச், 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி முப்பத்தி இரண்டு - வாரணாசி - துர்கா கோவில் (எ) குரங்கு கோவில்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

DON'T JUDGE EACH DAY BY THE HARVEST YOU REAP BUT BY THE SEEDS THAT YOU PLANT - ROBERT LOUIS STEVENSON.

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.  

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.  

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட். 

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு. 

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட். 

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…

 

பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்

 

பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்

 

பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்

 

பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி

 

பகுதி இருபத்தி மூன்று - அயோத்யா ஜி - சரயு நதி அனுபவங்கள்

 

பகுதி இருபத்தி நான்கு - Bபேல் PபThத்தர் மற்றும் இரவு உணவு

 

பகுதி இருபத்தி ஐந்து - ராஜ் (dh)த்வார் மந்திர் 

 

பகுதி இருபத்தி ஆறு - கனக் Bபவன் எனும் தங்க மாளிகை

 

பகுதி இருபத்தி ஏழு - காலை உணவு - குஷி க்ளிப் - சரயு படித்துறை

 

பகுதி இருபத்தி எட்டு - ஸ்ரீ நாகேஷ்வர்நாத் ஜி எனும் சிவன் கோவில்

 

பகுதி இருபத்தி ஒன்பது - அயோத்யா ஜி - Khகாந்தானி DHதவா Khகானா

 

பகுதி முப்பது - அடுத்த நதிக்கரை நகரை நோக்கி

 

பகுதி முப்பத்தி ஒன்று - காசி விஷ்வநாத் ஆலயம் - புதிய ஏற்பாடுகள்


 


சென்ற பகுதியில் காசி விஷ்வநாத் கோவிலில் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து எழுதி இருந்தது நினைவில் இருக்கலாம். கோவில் வளாகத்தில் இருந்து வெளியே வந்து ஒரு கடையில் தேநீர் அருந்திய பிறகு எங்கள் தங்குமிடம் நோக்கி நடந்தோம்.  தங்குமிடம் வந்து அங்கேயே இருந்த உணவகத்தில் காலை உணவாக பராட்டாவும் தயிரும்! எனது பதிவுகளில் முன்னரே குறிப்பிட்டு இருந்தது போல, வட இந்தியாவில் எங்கே சென்றாலும் காலை உணவு பெரும்பாலும் பராட்டா-தயிர் தான்! மற்ற உணவுகள் - குறிப்பாக தென்னிந்திய உணவுவகைகள் கிடைக்கும் என்றாலும் அவற்றின் தரம் அவ்வளவாக நன்றாக இருக்காது என்பது தெரிந்ததால் அந்தப் பக்கமே போவதில்லை.  எப்போதும் வட இந்திய உணவு வகைகளையே மூன்று வேளைகளிலும் உண்பது வழக்கமாக இருக்கிறது.  அன்றைய நாளிலும் அப்படியே! உணவை முடித்துக் கொண்டு அறைக்குச் சென்று தயாராகி அடுத்ததாக பார்க்க வேண்டிய இடங்களுக்குச் செல்ல கீழே வந்தோம்.  




இந்தத் தங்குமிடத்தின் நுழைவாயிலில் இருக்கும் நபர், ஒவ்வொரு முறை அங்கே தங்கி இருக்கும் அதிதிகள் உள்ளே/வெளியே வரும்போதும் தலை தாழ்த்தி நமஸ்தே சொல்வார்.  எனக்கு ஏனோ அவர் ஒவ்வொரு முறை அப்படிச் செய்யும் போதும்  ஒரு படத்தில் சத்யராஜ் அப்படியான ஒரு நபருக்கு தாம் வணக்கம் வைத்து காசு வாங்கிக் கொள்வார் அல்லவா? அது நினைவுக்கு வந்தது! வெளியே வந்தால் நிறைய ஆட்டோவாலாக்களும் ரிக்ஷாவாலாக்களும் எங்களைச் சூழ்ந்து கொண்டு எங்கே போக வேண்டும் எனக் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தார்கள்.  நாங்கள் சென்று பார்க்க நினைத்த கோவில் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவு மட்டுமே.  நடந்தால் 15 முதல் 20 நிமிடங்களில் சென்று விடலாம்!  சரி நடக்க வேண்டாம் என முடிவு செய்து ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் பேசி 100 ரூபாய் கொடுத்து நாங்கள் சென்று சேர வேண்டிய இடத்திற்குப் புறப்பட்டோம்.  நாங்கள் செல்ல நினைத்த இடம் எது?  குரங்கு கோவில் என பிரபலமாக அறியப்படும் துர்கா கோவில் தான் நாங்கள் செல்ல நினைத்த இடம்.  அந்த துர்கா கோவில் குறித்து விவரமாக பார்க்கலாம்!


 

தற்போது அமைந்து இருக்கும் துர்கா கோவில் 18-ஆம் நூற்றாண்டில், பெங்கால் பகுதியைச் சேர்ந்த ஒரு மஹாராணியால் கட்டப்பட்டது என்றாலும், அதற்கு முன்னராகவும் இந்தக் கோவில் அமைந்திருக்கக்கூடும்.  வாரணாசி சந்திப்பிலிருந்து சுமார் 7 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் துர்கா கோவில் காசி நகரில் பார்க்க வேண்டிய கோவில்களில் ஒன்றாக இருக்கிறது.  கோவில் அருகிலேயே ஒரு சதுர வடிவ குளமும் உண்டு - அந்தக் குளத்திற்கு “துர்கா குண்ட்(d)” என்றே பெயர்.  துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோவிலில் அமைந்திருக்கும் துர்கா தேவியின் சிலை ஒரு மனிதனால் வடிவமைக்கப்பட்டது அல்ல என்றும், தானாகவே சுயம்புவாகத் தோன்றியது என்றும், ஒரு நம்பிக்கை.  தவிர இக்கோவிலில் குடிகொண்டிருக்கும் துர்கா தேவி வாரணாசியை பல நூற்றாண்டுகளாக பாதுகாத்து வருவதாகவும் நம்பப்படுகிறது. கோயிலின் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான குரங்குகளைக் காண முடியும் என்பதால் இந்தக் கோவிலை,  “குரங்கு கோயில்” என்ற பெயரில் அழைக்கிறார்கள்.  தவிர, இந்தக் கோவில் துர்கா தேவிக்கு உகந்த சிகப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்டு இருப்பதால் லால் மந்திர் அதாவது சிகப்பு கோவில் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.



 

சில நிமிடங்கள் சாலைகளில் இருந்த பக்தர்கள் கூட்டத்தில் முண்டியடித்து முன்னேறியது எங்கள் ஆட்டோ. சுமார் பத்து நிமிட பயணத்தில் நாங்கள் துர்கா கோவில் அருகே இருந்த சாலை சந்திப்பு வரை சென்றடைந்தோம்.  கோவில் வாசல் வரை ஆட்டோ போன்ற வாகனங்கள் செல்ல முடியாதவாறு தடுப்புகள் அமைத்திருக்கிறார்கள்.  ஆட்டோவிலிருந்து இறங்கி அவருக்குத் தரவேண்டிய காசை கொடுத்து நடக்கத் துவங்கினோம்.  கோவில் வளாகத்தில் நிறையவே மனிதர்கள் வாயிலில் அமர்ந்து கையேந்துகிறார்கள்.    உள்ளே நுழைந்தால் பக்தர்கள் வேண்டுதல் செய்து கொண்டு கட்டிய மணிகள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன.  குரங்கு கோவில் என்று சொல்லப்பட்டாலும் நாங்கள் சென்றபோது அத்தனை குரங்குகளைக் காண முடியவில்லை.  சுயம்புவாக உருவாகிய துர்க்கையம்மன் சிவப்பு நிற புடவையில் காட்சி அளித்தார்.  கோவில் வளாகத்தில் நிழற்படங்கள் எடுக்க அனுமதி இல்லை என்பதால் படங்கள் எடுக்கவில்லை.  கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே வந்த பிறகு கோபுரம் மட்டும் ஒரு படம் எடுத்துக்கொண்டேன்.  இந்தப் பதிவில் இணைத்திருக்கும் படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவையே.  


 

கோவில் தவிர துர்கா குண்ட் முந்தைய காலத்தில் கங்கை நதியின் துர்கா Gகாட் உடன் நேரடியாக இணைக்கப்பட்டிருந்தது என்றும் தற்போது அந்த இணைப்புகள் வேலை செய்யவில்லை என்றும் தெரிந்து கொள்ள முடிந்தது. தற்போது அங்கே இருக்கும் தண்ணீர் மழை நீராகவே இருக்க வேண்டும்.  ஒவ்வொரு வருடமும் நாக பஞ்சமி அன்று  இந்த குளத்தில் ஆதிசேஷன் மீது அனந்தசயனம் கொள்ளும் விஷ்ணுவின் சிலை உருவம் அமைக்கப்பட்டு சிறப்பான பூஜைகள் இங்கே நடப்பது வழக்கமாக இருக்கிறது. வாரணாசி வரும் அனைவரும் இந்தக் கோவிலுக்கும் சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தாலும் இங்கே வரும் பெங்காலிகள் எண்ணிக்கை அதிகம் என்றே அங்கே சென்றபோது எனக்குத் தோன்றியது.  பெங்காலி மஹாராணியால் அமைக்கப்பட்டாலும், இந்தக் கோவில் தற்போது வாரணாசியில் இருக்கும் ராஜ பரம்பரையினரால் பராமரிக்கப்படுகிறது. 






 

கோவிலில் துர்காதேவியின் சிறப்பான தரிசனம் கிடைத்த பின்னர் வெளியே வந்தோம்.  இந்தக் கோவிலின் அருகிலேயே இன்னும் இரண்டு கோவில்கள் உண்டு.  அவற்றையும் பார்க்க இருக்கிறோம்.  அதற்கு முன்னர் ஒரு தகவல்.  இந்தப் பயணத்தில் காசி நகரம் மட்டுமல்லாது சென்ற எல்லா இடங்களிலும் வெய்யில் பிளந்து கட்டியது. மண்டையில் சூடு அப்படியே இறங்க, கிறுகிறுவென வந்துவிட வாய்ப்புண்டு. ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்திலேயே இத்தனை அதிக அளவில் வெய்யில்...... அதனால் நீங்கள் ஏப்ரல் சமயத்தில் இங்கே பயணித்தால், காலை சீக்கிரம் எழுந்து பார்க்க வேண்டிய இடங்களை பார்த்து விடுவது நல்லது.  நடுவில் எங்கே எல்லாம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் போதிய அளவு தண்ணீர், ஜல் ஜீரா, ஆம் பன்னா, Bபேல் பத்தர் ஜூஸ் போன்ற பானங்கள் அருந்தி விடுவது நல்லது.  நாங்களும் எங்கள் பயணத்தில் ஒவ்வொரு நாளும் இந்த மாதிரி பானங்களை அருந்தி வந்தோம். அப்படி துர்கா கோவில் சென்றபோது அருந்தியது ஆம் பன்னா.... ஒரு டம்ளர் இருபது ரூபாய்.... மாங்காய், புதினா இலைகள், உப்பு போன்ற சிலவற்றை சேர்த்து தயாரிக்கப்படும் பானம் இது. ஆம் பன்னாவை அருந்தி உவகை கொண்டோம்! அதன் பின்னர் சென்ற இரண்டு கோவில்கள் எது? அந்தக் கோவில்கள் குறித்த தகவல்கள் என்ன போன்றவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  அது வரை பயணத்தில் இணைந்து இருக்க வேண்டுகிறேன்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

12 கருத்துகள்:

  1. கண்ணைக் கவரும் நிறத்தில் அழகிய கோவில்.  நாணபால் சென்றபோது மழை பெய்திருந்ததா, இல்லை, உள்ளே கழுவி விட்டிருந்தார்களா நினைவில்லை.  ஜாக்கிரதையாக அடி எடுத்து வைக்கா விட்டால் வழுக்கி விஷ வேண்டியதுதான் என்று இருந்தது!  காலையிலேயே பரோட்டா தயிரா...  ஹா..  ஹா..  ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஶ்ரீராம். காலை உணவு :)

      நீக்கு
  2. கோவில் விவரங்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது, குரங்கு கோவில் நாங்கள் போகவில்லை. பன்னா பானம் தெரிந்து கொண்டேன்.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. தகவல்கள் நன்று
    கோயில் பார்வைக்கு சட்டென சென்னை ஐகோர்ட் போலவே தெரிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. High Court - வண்ணம் காரணமாக அப்படித் தோன்றி இருக்கலாம். தங்களின் அன்பிற்கு நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  5. எனக்கு ஏனோ அவர் ஒவ்வொரு முறை அப்படிச் செய்யும் போதும் ஒரு படத்தில் சத்யராஜ் அப்படியான ஒரு நபருக்கு தாம் வணக்கம் வைத்து காசு வாங்கிக் கொள்வார் அல்லவா? அது நினைவுக்கு வந்தது!//

    எனக்கும், அவர்கள் காசு கேட்பதாகவே தோன்றும். அது போலத்தான் பார்க்கிங்க் பகுதியில் வண்டிகளை வைத்து எடுக்க்கும் போதும் அவர்களின் வணக்கம் அப்படித்தான் தோன்றும்.

    துர்கா கோயில் மிக அழகாகப் பளிச் வண்ணத்தில்! அமைப்பும், அதன் எதிரில் துர்கா குளமும் ஈர்க்கின்றன. கோயில் பற்றிய விவரங்கள் அருமை.

    ஆம் அங்கெல்லாம் வெயில் கடினம்தான், ஆம் பன்னா மிகவும் பிடிக்கும், வீட்டிலும் செய்வதுண்டு

    கீதா

    பதிலளிநீக்கு
  6. தங்கள் வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

    பதிலளிநீக்கு
  7. துர்க்கா கோவில் படம் பளிச்சிடும் வர்ணத்தில் , கட்டிடமும் அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. நல்ல தகவல்கள், துளசி மா தளத்திலும் வாசித்தேன் , ஆனால் நாங்கள் செல்லவில்லை.

    நாங்கள் நாட்கோட் தங்கியதால் அங்கு பொங்கல் இட்லியே..பெரியவர்களை அழைத்து சென்றதால் நாங்களும் வேறு உணவுக்கு செல்லவில்லை

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....